Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் 2011 கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிரந்தர இடத்தை பெறுவதகு, காணியின் விலை அதிகம்.

மார்க்கம் நகரில் ஒரு ஏக்கர் For Sale: $895,000/acres

காணியின் விலை   900,000$

Business Park Development Land For Sale. The Subject Property Is Located Between Elgin Mills Rd And Major Mackenzie With Prime Exposure And Frontage On Hwy 404. The Subject Property Is Designated Business Park Area Permitting: Industrial, Office, Medical, Hotel, Trade & Convention Centres, Banquet Halls, Restaurants / Retail Stores. Buttonville Airport And Hwy 407 Located Within Minutes South Of The Property. **** EXTRAS **** The Subject Land May Be Severed Into 5, 10 Or 15 Acre Parcels.

http://www.realtor.c...Key=-1739084906

இதற்கான சோலைவரி, இந்த நிலம் ஒரு இலாபகரமற்ற நிறுவனமாக பதியப்படின் குறைவாகவும், ஒரு வியாபார நோக்கத்துடன் பதியப்படின் அதிகமாகவும் இருக்கும்.

ஓரளவுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நிலத்தை மலிவாக பெறுவது நல்லது. ஆனால், அதிலும் சிக்கல்கள் உள்ளன.

தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாக மார்க்கம் நகரிலேயே இருக்கும் எனில் அங்கேயே வாங்கலாம். இல்லை எனில், 401 அருகாமையாக வாங்கலாம். கிழக்குப் பக்கமாக.....குறைந்தது 2 ஏக்கர் காணியாவது வேண்டும். அத்தோடு நிர்மாணச் செலவுகள், வரி போன்றவற்றை நிவர்த்தி செய்ய, மக்களிடமும், வாடகைக்கு விடுவதினூடகவும், கலைநிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதினூடகவும், வங்கிக்கடன் பெறுவதூடகவும் நிறைவு செய்ய முடியும்.2004 இல் இருந்து இத்தனை காலம் என்று பார்த்தால் கூட கிட்டத்தட்ட 7 இலட்சம் இடத்துக்காக மட்டும் செலவு செய்திருக்கின்றோம். சட்ட ஒழுங்குகள், விதிகளை அவதானித்து செயற்படுத்துவதோடு, குறைந்தபட்ச உத்வேகம், வெளிப்படைத்தன்மையும் அவசியமாகும்.

Edited by தூயவன்

  • Replies 53
  • Views 5k
  • Created
  • Last Reply

அதுவும் சரி வரல்லைன்னா....... அமெரிக்காவின் வெள்ளைமாளிகைக்கு பக்கத்தில் ஐந்தாறு ஏக்கரை வளைத்துபோடுவோம்!

அதுவும் வேலைக்கு ஆகலைன்னா,,,

ஐரோப்பா பாராளுமன்ற வளாகத்தில் ,,+காணி வாங்கி இதெல்லாம் செய்வோம்!

அப்பிடியே பட்டைய கெளப்புவோம்!கெளப்பிகிட்டே இருப்போம்!

ஆனா,, ஒண்ணு,,

ஏற்கனவே ,, இறுதி யுத்தம்வரை சேர்த்த காசையே ஆட்டைய போட்டுட்டானுவ எல்லாருமேனு மக்கள் பீல் பண்ணிகிட்டு இருக்காங்க...

அந்த ஆட்டைய போட்டதுல, நாலு மாவீரர் நாளாக்கி, அத் அப்புறம் ஒண்ணாக்கி...

வருவார் ,,, வரமாட்டார் என்னு வசனம் பேசினாலும், இதுக்காவது, கொஞ்சம் செலவளிக்குறானுவளேன்னு, ஹாப்பியா இருங்க... !!

காணி வேற வாங்க போயி , காணி வருதோ இல்லியோ, எதிர்காலத்துல அதுகணக்கு வழக்கு பத்தி விசாரிக்கபோய்... கண்டிப்பாய் காலில ஆணி வரும்!!

உங்க உணர்வுகள கொச்சைபடுத்துறது நோக்கமில்ல பங்காளி...

இந்த செலவுகளை, அங்கவீனாய்போன தாயக மாவீரர் குடும்பங்களுக்கு செலவிடுங்க ,,,

உறுதியான மாவீரர் வளாகம்

,நாங்க&நீங்க மனசில நெனைக்கிறதவிட ,, பெரிசா உருவாகலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியுத்தம் வரை சேர்த்த காசை அனைவரும் அபகரித்தார்கள் என்று சொல்வது விளக்கம் இல்லாமல் சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஆதரிப்பது போல ஆகிவிடும். ஒரு சிலர் தப்பு செய்கின்றார்கள் என்றால் அதற்காக எல்லோரையும் எழுந்தமானமாகச் குற்றம் சாட்டமுடியாது. கணக்குக் காட்டச் சொல்லி கேட்கின்றார்கள். எந்தவொரு நாட்டிலும் நிதி திரட்டல் என்பது தவறான குற்றம். அது அனைவருக்கும் தெரியும். அதைப் பகிரங்கமாக ஏற்கவோ, அறிவிக்கவோ அவர்களால் முடியாது. இப்படியான சூழலில் எந்த அமைப்பும் நிதி சேர்த்தது, சேர்க்கவில்லை என்று சொல்வது எல்லாம் இருதலைக் கொள்ளி எறும்பு தான். ஆனால் இதைச் சிலர் தங்களுக்கு இலபகமாகவும் , தங்களின் சுயதேவையும் பூர்த்தி செய்யவும் பாவிக்கின்றார்கள்.

---------------------------------------

மண்டபம் கட்டுதல் என்பது ஒவ்வொரு வருடமும் இத்தனை ஆயிரங்களைச் செலவளிப்பதன் பார்க்க, சொந்தமாகக் கட்டலாம் என்ற எண்ணத்தில் கேட்கப்பட்டது. அடுத்த வருடமும் இதே அளவு செலவு வரத் தான் போகின்றது... இரண்டாவது இவ்வாறு கட்டப்பட்ட மண்டபத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கூடத் தாயகமக்களுக்கு அனுப்பலாம். அது யாருக்கும் பாதிப்பில்லாமல் வந்து சேரக் கூடியாது. ஒவ்வொருவருடமும் யாரிடமோ பழங்களை வாங்கிப் பாவிப்பதை விடச் சொந்தமாக நாங்களே மரத்தை நட்டு பழம் பறிப்பது என்பது இலாபகரமானது.

உங்க எண்ணம் உயர்வானது... ஆனா

அது சாத்தியமாக புலப்படும் வழிகள் மிக மிக அருகலானது..!!

எது எப்டியோ...

உங்க எதிர்பார்ப்புக்கள் சரியா நிறைவேற,, என்னோட பிரார்த்தனையும் ,, சகோதரா! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.