Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழில்துறை சிதைவை எதிர்நோக்கும் வன்னி

Featured Replies

வன்னியில் முக்கியமான தொழிற்றுறைகள் விவசாயம் கடற்றொழிலும். நடந்த போர் இந்தத் தொழில்களையும் இந்தத் துறையினரையும் முற்றாகவே சிதைத்துவிட்டது. இப்பொழுது வன்னியில் ஒரு மீன்பிடித்துறைகம் கூட இல்லை. மீனவர்கள் தங்கள் தொழிலுக்கும் வாழ்வுக்குமாக சேகரித்து வைத்திருந்த எந்தப் பொருளுமே மிஞ்சவில்லை.

அதைப்போலவே விவசாயிகளும் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர். பெரும்பாலான விளை நிலங்கள் போர் அணைப்பரப்பாகவும் கண்ணிவெடிப் பகுதிகளாகவுமே இருக்கின்றன. ஆனால் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த இரண்டு தரப்பினர்களுக்கும் உதவிகள் ஓரளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தவிர, மிகக் குறைந்த வட்டி வீதத்தில் தாராளமான கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் நிச்சயமாக மக்கள் இழந்தவற்றுக்கு ஈடாகாது. என்றாலும் கிடைக்கப்பெற்ற உதவிகள் முக்கியமானவை. விவசாயிகளைப் பொறுத்தவரையில் பல வகையான உதவிகள் பல வழிகளினூடாக கிடைத்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கே உள்ள எட்டு கமநலசேவைகள் நிலையங்களுக்கும் சுமார் 100 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த உழவு இயந்திரங்கள் அங்கே உள்ளன. இதைத் தவிர கமக்கார அமைப்புக்களுக்கும் உழவு இயந்திரம், இரண்டு சக்கர உழவு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவசாய உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர தனிப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் மானிய அடிப்படையிலும் இலவசமாகவும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வாறே மருந்து தெளிகருவி உள்ளிட்ட பலவகையான உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய உள்ளீடுகளான உரம், விதைநெல், போன்றவை கூட இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அல்லது மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவிகளை விவசாய விரிவாக்க நிலையம், கமலநல சேவை நிலையம், உணவு விவசாய ஸ்தாபனம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன. இதனால் முன்னரையும் விட அதிகளவான பரப்பளவில் நெற்பயிர்ச்செய்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். மற்றும்படி உரிய வரையிலான விவசாய மேம்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.

விவசாயிகளிடம் பெரும் வளர்ச்சி ஏற்படவில்லை. வன்னியில் அனேகமான வீடுகளில் புதிய விவசாய உபகரணங்கள் தாராளமாகக் கிடக்கின்றன. ஆனால், அவர்களுடடைய விவசாய ஈடுபாடு மிகக் குறைவாகவே உள்ளது. அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் நன்கொடை என்ற வகையில் வழங்கப்படுகின்ற உதவிகளை பெரும்பாலானவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

அதற்கப்பால் அவர்கள் அந்த உதவிகளைக் கொண்டு விவசாயத் தொழிலை மேம்படுத்தவோ தங்களுக்கான தொழிலொன்றை உருவாக்கிக் கொள்ளவோ முயற்சிப்பதாகத் தெரியவில்லை. வழங்கப்பட்ட உதவிகளில் அல்லது உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களில் 40வீதத்திற்கு குறைந்தளவிலேயே பெறுமானமாக்கப்பட்டுள்ளன. ஏனையவை துஸ்பிரயோகமாக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

இவற்றுக்கு என்ன காரணமென்றால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டம் இல்லை என்பதே. மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்படவும் இல்லை. ஒருங்கிணைப்பும் ஒழுங்கிணைப்பும் சரியாக இருக்குமானால், ஒரு மூலத்திட்டம் வகுக்கப்பட்டிருக்குமானால் இந்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயச் செய்கையை மிகத் துரித கதியில் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மேற்கொண்டிருக்க முடியும். மேலும் பலர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்கக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அத்தகைய ஒரு திட்டம் எந்தத் தரப்பினாலும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

எனவே, வழங்கப்படும் உதவிகள் எல்லாம் மணலில் ஊற்றப்பட்ட நீரைப்போல எங்கோ சென்று மறைந்துவிடுகின்றன. இதேவேளை , பல்வேறு வேலைத்திட்டங்களின் மூலமாக குளங்கள் ஆழப்படுத்தப்படுகின்றன. வாய்க்கால்கள் சீரமைக்கப்படுகின்றன. இவையெல்லாம் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டே செய்யப்படுகின்றன. வன்னியில் பாசன நீர், ஊற்று நீர் (கிணற்று நீர்) மழைநீர் (மானாவாரிச் செய்கை) போன்றவற்றின் மூலம் எவ்வளவு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியுமென்ற கணக்கெடுப்பு அவசியம்.

தொடர்ந்து பொருத்தமான இடங்களில் காலநிலைமைக்கேற்ற வகையில் உரிய பயிர்களை தேர்வு செய்யவேண்டும் என்ற அறிவுறுத்தல் அவசியம். மேலும் பயிர்பராமப்பு, விளைச்சல், சந்தைப்படுத்தல் போன்றவற்றிலும் அறிவும் வாய்ப்புகளை இனங்காட்டுதலும் தேவை. குறிப்பாக விவசாயச் செய்கையை அதிகரிப்பதற்கான ஒரு விசேட திட்டம் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி வகுக்கப்படவேண்டும். விவசாயிகள் புதிய முறையில் இலாபகரமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம் என்ற விளக்கங்கள் பரப்புரை செய்யப்பட வேண்டும்.

முக்கியமாக விவசாயிகள் மட்டத்திலான கருத்தரங்குகளும் விளக்கக்கூட்டங்களும் விரிவுரைகளும் செயன்றைப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். நீண்டகாலமாகப் போர்ச்சூழலுக்குள் வாழ்ந்த மக்களுக்கு வெளிச் சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் அதிகமாகத் தெரியாது. விவசாயத்துறைகளிலும் ஏராளம் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய அறிதல்களை இந்த வன்னி விவசாயிகள் அறிய வேண்டியது இன்றைய அவசியமாக உள்ளது.

எனவேதான் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் மாவட்ட ரீதியான விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நீர்ப் பயன்பாடு, நிலப்பயன்பாடு, தொழில் வாய்ப்பு உள்ளூர் உற்பத்திப் பெருக்கம் என பல நன்மைகளை பெறக்கூடியதாகவும் இருக்கும். வன்னி என்பது விவசாயத்தின் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பெரும்பகுதி. ஆனால் கடந்த காலங்களில் அது ஒரு போர்ப்பரப்பாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை மாற்றி மீண்டும் வன்னியை ஒரு விவசாயப் பரப்பாக பசுமை கொண்ட நிலப்பகுதியாக மாற்றியமைக்கவேண்டிய அவசியள்ளது. வன்னி மக்கள் தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சுயபொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படவேண்டும். இதற்குச் சாதகமாக தற்போது வழங்கப்பட்டுவரும் உதவிகள் அமைகின்றன. விவசாய மேம்பாட்டையும் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனையும் கருத்திற் கொண்டு பல தரப்பினராலும் செய்யப்படுகின்ற உதவிகளை பயனுடையதாக்க வேண்டுமென்பதே முக்கிய நோக்கமாக இங்கே வலியுறுத்திக் கூறப்படுகிறது.

ஆகவே, இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களும் உரியவர்களும் கவனம் கொள்வது அவசியம். ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இதுவரையிலும் வகுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருங்கமைக்கப்பட்ட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் வழங்கப்பட்டிருந்த உதவியை வைத்துக்கொண்டு சுயபொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் முன்னேற்றத்தைக் கண்டிருக்க முடியும்.

இங்குள்ள மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களை நிதானப்படுத்திக் கொள்ளடியாத ஒரு நெருக்கடிச் சூழலிலேயே மீண்டும் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் அவர்களை ஒழுங்கமைத்து மீண்டும் தொழிற்றுறையில் மேம்படுத்தவேண்டிய பொறுப்பு துறைசார்ந்தவர்களுக்கே உரியது.

அவ்வாறு இந்த விவசாயிகள் ஒழுங்கமைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டு விவசாயச் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் வழங்கப்பட்ட உதவிகள் பயனுடையதாக அமைந்திருக்கும். அதேவேளை, அதிகளவானோருக்கான வேலை வாய்ப்புகளும் கிடைத்திருக்கும். அதையும் விட முக்கியமானது, இந்த உதவிகள் ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்கும்தான் கிடைக்கும். ஆகவே கிடைக்கின்ற உதவிகளைப் பெறுமதியாக்குதவற்கே நாம் சிந்திக்க வேண்டும்.

http://akkinikkunchu.com/new/

புலிகளின் ஆட்சியின் கீழ் வன்னியில் பல தொழில்க்கட்டுமானங்களை நிறுவினார்கள், இருந்ததை வளர்த்தார்கள். இன்று ஆக்கிரமிப்பாளர்களால் திட்டமிட்டு பொருளாதார வலு அழிக்கப்பட்டு, மறுக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் போருக்கு பின்னரான அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசமும் புலம்பெயர் சமுதாயமும் ஏமாற்றப்பட்டுகின்றது/ பணம் கறக்கப்படுகின்றது.

ஒரு காணி / காவல்துறை உட்பட்ட அரசியல் தீர்வு பெறுவதன் மூலமே தாயக மக்களின் பொருளாதார வாழ்வை வளர்க்கலாம்.

இந்த கட்டுரையின் சாரமசம் வன்னிக்கு தேவையானதை விட மேலதிக உதவிகள் வளங்கபட்டிருக்கின்றன. வழமையான சோம்பேறி தமிழ் விவசாயிகள் தொலில் ஈடுபட ஆயத்தம் இல்லை.

ஆகவே "குறிப்பாக விவசாயச் செய்கையை அதிகரிப்பதற்கான ஒரு விசேட திட்டம் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி வகுக்கப்படவேண்டும்". இந்த விவசாயிகளுக்கு உதவி அளிக்க வரும் தொண்டு நிறுவனகளுக்கு இவர்களுக்கு விவசாயம் செய்ய தெரியாது என்பதை அறியாமல் இவ்வளவு உபகரணகளையும் வீணாக்கி விட்டார்கள். ஏனவே எல்லாத்தரப்பினருக்கும் சிங்களத்தில் எப்படி விவசாயம் செய்யலாம் என்பது பற்றி படிப்பிப்பது அவசியம்.

ஆனாலும் புலம் பெயர் மக்களுக்கு நல்லதொரு செய்தி. வன்னியில் எற்கனவே கொடுக்க பட்ட மூலதனத்தை பயன் படுத்துகிறாகள் இல்லை. எனவே ராசபக்சாக்களோ அல்லது அடிவருடிகளோ இனிமேல் புலத்து மக்களை வன்னியில் முதலிடும்படி கேட்க முடியாது. அப்படி கேட்டு எதாவது திரிகள யாழில் வந்தால் இந்த்த திரியை பதிலாக அதற்கு இணைத்து விடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.