Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்க 100 வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பம்

Featured Replies

இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்க 100 வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க இலங்கை அரசாங்கம் முன்வந்த போதிலும் இதுவரை சுமார் 100 பேர் மாத்திரமே விண்ணப்பித்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இலங்கைப் பல்கலைக்கழங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை ஒரு சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருத்துவ மற்றும் பல் மருத்துவ பாடநெறிகளுக்கு கட்டணமாக வெளிநாட்டு மாணவர்களிடம் 12,000 அமெரிக்க டொலர் அறவிடப்படுகிறது. தாதியியல் போன்ற துணை மருத்துவ பாடநெறிகளுக்கு 10,000 டொலர்களும் சட்ட பாடநெறிக்கு 5000 டொலர்களும் முகாமைத்துவ பாடநெறிக்கு 4000 டொலர்களும் பொறியியல், கட்டிடவடிவமைப்பு பாடநெறிக்கு 8000 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படுகின்றன.

வெளிநாட்டு மாணவர்களின் பிரதிபலிப்பு குறித்து உயர் கல்வி அமைசசின் செயலளார் சுனில் ஜயந்த நவரட்னவிடம் கேட்டபோது, இதுவரை சுமார் 100 வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடநெறிகளுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தளவு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கை அனுமதிவழங்க முன்வந்தமை இதுவே முதல் தடவை என அவர் கூறினார்.

ஆரம்பத்தில் மாணவர் பிரதிபலிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் பின்னர் அது முன்னேற்றமடையும் என அவர் தெரிவித்தார். அதேவேளை, இலங்கை தனியாக 100 வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப் பாட நெறிகளுக்கான புலமைப்புரிசில் வழங்குவதாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் 5 மாணவர்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/30511--100-.html

  • தொடங்கியவர்

இந்த கள்ளக்கூட்டம் நல்ல ஒரு இணையத்தளத்தையும் வடிவமைத்துள்ளது - ஏமாற்ற http://www.studyinsrilanka.com/index.html

சில பாடத்திட்டங்களில் இறுதியாண்டு மேலைத்தேய நாடுகளில் வழங்கப்படும் என குறிப்பிடப்படுள்ளது.

அதில் கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா கூட அடங்கும்.

http://www.studyinsrilanka.com/higher_education.htm

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆபிரிக்க மாணவர்களை நினைக்கப் பாவமாக இருக்கின்றது!!! :wub:

  • தொடங்கியவர்

தமிழர்களை தாயகத்தில் இன்றும் தரப்படுத்தல் மூலமும் ஒடுக்கும் சிங்கள அரசு, தன்னை ஒரு உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் நிறைந்த நாடாக ஏமாற்றுவித்தை காட்டுகின்றது. அதேவேளை அரசியல்வாதிகள் உட்பட வசதிகள் படைத்த சிங்களவர்கள் தமது பிள்ளைகளை மேற்குலகத்திற்கு அனுப்பியே கல்விகற்க வைக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.