Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலின் தலை விதியா?

Featured Replies

காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலின் தலை விதியா?

பிரித்தானிய மக்களின் மனநிலைக்கும் அமெரிக்க மக்களின் குணவியல்புக்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு. இவ்வாறு இனத்திற்கு இனம், சமயத்திற்கு சமயம், மொழிக்கு மொழி வேறுபட்ட குணவியல்புகளை உடைய மக்களைக் காண முடியும். குணவியல்புகள் வேறுபடுவதிலும் மாறுபடுவதிலும் வாதப்பிரதி வாதங்கள் தேவையற்றவை. குணவியல்புகள் வேறுபட்டிருந்தாலும் சரியான தீர்மானங்களை எடுப்பதில் ஒற்றுமைப்பாடு அவசியம். இந்த விட யத்தில் ஈழத்தமிழ் மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.

எதையெடுத்தாலும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமல் அதனை எதிர்ப்பதில் இன்பம் காணும் இயல்பு எங்களுடையதாகிவிட்டது. இனப்பிரச்சினை தொடக்கம் ஊரில் உள்ள சனசமூக நிலையப் பிரச்சினை வரை இப்படியான எதிர்ப்புவாதத்தைக் காண முடியும். இதன் விளைவு இருப்பதையும் இழப்பதாகவும் - எதனையும் பெறமுடியாததாகவும் போய் விடுகின்றது. இந்த நிலைமையின் தொடர்ச்சியான போக்கை இனப்பிரச்சினையிலும் நாம் காண முடியும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நாம் விரும் பினாலும், அது யாரால் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு விடுகின்றது தமிழ் மக்கள் பெரும் அவலத்தை அனுப வித்து வருகின்றனர். எனவே அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் எங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், தமிழ் மக்களை நாங்கள் மட்டுமே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விடுகின்றோம். அதனால் காப்பாற்ற முடியாமல் மக்களை அவலத்திற்குள் தள்ளி விடுகின்றோம். யார் குற்றினாலும் அரிசியாக்கினால் போதும் என்ற மனநிலை எங்களிடம் அறவே இல்லாமல் போனதன் காரணமாக சாதாரண மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

எதற்கும் விமர்சனம்; எதற்கும் இரட்டைக் கருத்து; எதற்கும் அகடவிகடம் என்ற மனித நேயமற்ற சிந்தனை எங்கள் மனங்களை ஆக்கிரமித்து விட்டதன் காரணமாக சுயநல சிந்தனையில் இருந்து மீளமுடியாமல் உள்ளோம். இப் பெரும் துயரத்திற்கு மூல காரண மாக இருப்பது பதவியாசையாகும். மக்கள் எங்களை தூக்கி யெறிந்து விடுவார்களோ என்ற ஏக்கத்தின் காரணமாக மக்கள் பணியைவிட தத்தம் செல்வாக்கை மக்கள் மத்தியில் காப்பாற்றுவதிலேயே முழுக் கவனம் செலுத்தப்படுகின்றது. இதனை நினைக்கும் போது வேதனை தாளமுடியவில்லை.

சில சமயங்களில் மாற்ற முடியாத தலைவிதி என்று கூட நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஓ! காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலுக்கான தலைவிதி என்றால் அதனை மாற்றுவது யார்? அதுபோலத் தான் எங்கள் நிலைமையுமா?

http://www.valampurii.com/online/viewnews.php?ID=24884

  • கருத்துக்கள உறவுகள்

காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலின் தலை விதியா?

சில சமயங்களில் மாற்ற முடியாத தலைவிதி என்று கூட நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஓ! காகத்தின் கூட்டில் முட்டையிடுவது தான் குயிலுக்கான தலைவிதி என்றால் அதனை மாற்றுவது யார்? அதுபோலத் தான் எங்கள் நிலைமையுமா?

http://www.valampuri...ws.php?ID=24884

உண்மை தான் அகூதா!

உங்கள் மனநிலையும் ஏக்கமும் எனக்கு நன்றாகப் புரிகின்றது! ஏனெனில் எனது மன நிலையும் இதுவே!

அண்மையில் சில புலத்து இளசுகளின் தற்கொலைகளை நினைத்துப் பார்த்தபோது, ஒரு வேளை எங்கள் வாழ்க்கை முறையும், நாங்கள் அவர்கள் மேல் வைக்கும் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்களும், அவர்களை அப்படியான முடிவுகளை எடுக்கப் பண்ணுகின்றதோ என்று கூட நினைத்துப் பார்த்தேன்!

எங்கள் பெரும்பாலானோரின் மன நிலையிலோ, வளர்ப்பு முறையிலோ எம்மை அறியாமலேயே,எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கின்றது!!!

தவறு தான் என்று அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வரும் வரை, இந்தத் தவறுகள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.