Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ9 பாதை மூடப்பட்டிருந்த காலம், திறக்கப்பட்டதன் பின்னரான நிலைமை

Featured Replies

மூடப்பட்டபோது முழுத்துன்பமும் எங்களுக்கு திறக்கப்பட்டபோது பெரும் பயன் அவர்களுக்கு

ஏ9 பாதை மூடப்பட்டிருந்த காலம், அந்தப் பாதை திறக்கப்பட்ட தன் பின்னரான நிலைமை என்பவற்றை மிக உன்னிப்பாக அவதானித்தால் இரண்டு விடயங்கள் எமக்குப் புரியும். அதில் ஒன்று ஏ9 பாதை திறக்கப்பட்ட தன் பின்னர் அதன் பெரும்பாலான அனுகூலங்களை தென்பகுதி மக்களே அனுபவித்து வருகின்றனர். அதே நேரம் ஏ9 மூடப்பட்டிருந்த போது முழுத் துன்பமும் வட பகுதி மக்களுக்குரியதாக இருந்தது.

பாதை மூடப்பட்டிருந்த போது துன்பத்தை அனுபவித்த மக்களே பாதை திறக்கப்படும் போது ஏற்படக்கூடிய நன்மைகளை அனுபவி ப்பவர்களாக இருந்திருக்க வேண்டுமாயினும், துரதிர்ஷ்டவசமாக வட பகுதி மக்களுக்கு அந்தப் பொசுப்பு இல்லாமல் போயிற்று. இதற்கு எமது இளம் சமூகம் சரியாக வழிப்படுத்தப்படாமையே முக்கிய காரணமாகும். பட்டம் பெற்ற இளைஞர்களாயின் அவர்கள் அரச பணி தவிர வேறு எதனையும் செய்வதற்கு தயாரில்லை.அது போல உயர்தரம் படித்தவர்களோ கெளரவமான வேலையில்லையேல் சும்மா இருக்கலாம் என்ற நினைப்போடும் உள்ளனர்.

ஆக; அரச நியமனம், கெளரவமான வேலை என்ற கனவோடு காலம் கழிகின்றது. இதனால் எங்கள் மனித வளம் வீணாகி - விரயமாகிப் போக நீண்ட நாளில் வேலையில்லாத விரக்தியும் தவறான நட்புகளும் எங்கள் இளம் சமூகத்தின் எதிர்காலத்தையே சின்னா பின்னமாக்கி விடுகின்றது. ஆனால், தென்பகுதி இளைஞர்களோ றம்புட்டான் பழத்தை வட பகுதிக்கு கொண்டு வந்து அதனை பண மாக்கிக் கொள்ள இன்னொரு பகுதியினர் கட்டில், மேசை, கண்ணாடி என்று வீட்டுத் தளபாடங்களை தோளில் சுமந்து லாப மீட்ட, இன்னு மொரு தரப்பு எங்கள் பகுதி செப்பையும், இரும்பையும் கிலோவுக்கு கணக்கிட்டு கொழும்புக்கு எடுத்துச் சென்று பெரும் இலாபமடை கின்றனர்.

இது தவிர மரக்கறி, உடுபுடைவை, தளபாடம், சமையல் அறைப் பாத்திரங்கள் என்பவற்றின் வியாபாரத்தை வட பகுதியில் உள்ள ஆலயங்களிலும் வெற்றுக் காணிகளிலும் நடத்தி எங்கள் தேட்டத்தை அற்புதமாக தம்வசமாக்கிக் கொள்கின்றனர். இவற்றுக்கு மேலாக சிங்கள இளைஞர்கள் இல்லாத கட்டிட வேலைகள் வட பகுதியில் இல்லையென்றாகி விட்டது. மேசன் தொழில் முதல் மாபிள் பதித்தல் கண்ணாடி பொருத்துதல், வர்ணம் பூசுதல் இப்படி கட்டுமானப் பணிகளும் வீதிகள் பாலங்கள் அமைத்தலும் சிங்கள இளைஞர்களுக்கே வேலை வழங்குவதாக இருக்க, எங்கள் இளம் சமூகத்தில் ஒரு பகுதியினர் பியர் போத்தலோடு குந்தியிருந்து குடித்துவிட்டு போத்தலை வீதியில் அடித்து நொருக்கி மகிழ்கின்றனர். என் செய்வோம்! எங்கள் இளைஞர்களை வழிப்படுத்த, நெறிப்படுத்த அமைப்புகள் உருவாகினாலன்றி இவர்களை காப்பாற்ற வேறுவழியில்லை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=24943

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலங்களுக்கு முன்பு (இருநூறு ஆண்டுகளுக்கு) அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் தன்னம்பிக்கை, அழிக்கப் பட்ட மாதிரித் தமிழ் மக்களின் தன்னம்பிக்கையும், படிப படியாக அழிக்கப் பட்டு வருகின்றது!

இன்று, அவுஸ்திரேலிய மத்திய அரசால் அழிக்கப் படும் சலுகைகளைப் பெறுபவர்கள், வெள்ளையருடன், பூர்வீக குடிகள் கலந்து பிறந்த அவர்களின் வாரிசுகளே! 12.5% பூர்வீக ரத்தம் இருந்தால், நீங்கள் விசேட சலுகைகளுக்குத் தகுதியானவர் ஆகலாம்!

தூய பூர்வீகக் குடிகள், பலருக்கு இன்னும் சரியாக எழுதப் படிக்கவே தெரியாது!

இவர்களது இன்றைய நிலை இது தான்!

அரசாங்கம் வழங்கும் வேலையில்லாதவர்க்கான பணத்தை எடுப்பது!

அவ்வளவத்தையும் அன்றே குடித்து முடிப்பது!

பொழுது போகா விட்டால், மனுசிக்கு நாலு சாத்துச் சாத்துவது!

என்று தான் இவர்களது வாழ்வு போய்க்கொண்டிருக்கின்றது!

அத்தி பூத்தது போல, அருமையாக சிலர் விளையாட்டுக்களிலும் படிப்பிலும் சிறந்து வருவதுண்டு!

அவர்களும் பெரும்பாலும். கலப்புக்கலேயன்றித் தூய இனமல்ல!

இந்த நிலையை நோக்கியே நாம் சென்று கொண்டிருக்கின்றோம் போல் உள்ளது!

தங்கள் பதிவுக்கு நன்றிகள், அகூதா!

AboriginalDrinkingSession.jpg

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.