Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட் - யாதவன்

Featured Replies

மகிந்தர் கீத்ரோவுக்கு வந்தபோது நேரடி ஒலிபரப்பின் மூலம் மக்களை விமான நிலையத்துக்கு அணிதிரட்டிய அந்த வானொலியின் உயிரோ(டையை)ட்டத்தை வழிமறித்து ‘செக்’ வைப்பதுடன் மகிந்த கும்பலின் ஒப்பிரேசன் ஒக்ஸ்போட்டின் முதலாவது அத்தியாயம் உருளத் தொடங்கியது.

இருக்கின்ற ஒரே ஒரு ஒலி ஊடகத்தை தினமும் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. தேசிய விடுதலைப் போராட்டம் பற்றியும் தேசியத் தலைமையை பற்றியும் மற்றைய ஊடகங்களை கொண்டு சிங்களம் செய்யப்போகின்ற விசக்கருத்துகளை முறியடிக்கும் ஒளி, ஒலி ஊடகம் பெரிதாக இல்லை என்ற நிலையை சிங்களமும் அதன் ஏவலாளிகளும் உருவாக்கியாயிற்று. அடுத்து முப்பதுவருடத்துக்கும் மேலான விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையும், அதன் வீரர்களும் காட்டிய மாசுமருவற்ற தியாகமும், அர்ப்பணிப்பும் அவ்வளவு எளிதில் எமது மக்களின் மனதைவிட்டு மறைந்துபோய்விடக்கூடியது அல்ல. சிங்கள ஆக்கிரமிப்பிலிந்து விடுவிக்கப்பட்டிருந்த தமிழர் நிலங்களில் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி காட்டியிருந்த நிர்வாக அமைப்பின் சீர்மையும், அழகும், சமனான பார்வையும் இன்னும் பலபல வருடங்களுக்கு தமிழ் மக்களின் நெஞ்சுக்குள் இருந்தே தீரும். இது சிங்களத்தின் ஆட்சியாளர்களுக்கு நன்கே தெரியும்.

இந்த நினைப்புகளும், மீண்டும் ஒரு தமிழர்களின் நிர்வாகத்துக்கான ஏக்கமும் இருக்கும் வரைக்கும் எந்தவொரு பிரிப்பு வேலைகளையும் தமிழர்களுக்குள் செய்வது சாத்தியமே இல்லை என்பதும் துட்டகைமுனுவின் வழித்தோன்றல்களுக்கு தெளிவாக தெரிந்திருந்தது.முதலில் மக்களின் மனதை சிதைப்பதன் மூலம்தான் எந்தவொரு பிரிப்பையும் இனி செய்யமுடியும் என்று அடுத்தகட்டத்துள் மகிந்த கும்பலும் அதன் புலனாய்வும் இறங்கியது.

‘ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட்’டில் சுடுகலன்களோ, வெடிபொருள்களோ இல்லை. முழுக்க முழுக்க உளவியல் யுத்தம்தான் ‘ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட்’. உளவியல் யுத்தத்துக்கு மிகமுக்கியமானது ஊடகம். இரத்திரனியல் ஊடகம், அச்சு ஊடகம், ஒலி ஊடகம், ஒளி ஊடகம், குறுஞ்செய்திகாவி என்பனதான் தற்போதைய உளவியல் யுத்தத்தின் மிகமுக்கிய களங்கள்.

ஓப்பிரேசன் ஒக்ஸ்போர்ட்டின் முக்கிய நோக்கங்களான புலம்பெயர்தமிழ் சமூகத்தின் விடுதலை உணர்வை, விடுதலைப் பலத்தை பிரிப்பது, சிதைப்பது, ஒன்றுமே இல்லாமல் செய்வது என்பனவற்றை நிறைவேற்றுவதற்கு ஊடகங்களையே அந்த திட்டம் பெருமளவில் சார்ந்து நிற்கிறது. உளவியல் யுத்தம் ஒன்று ‘ஒப்பிரேசன் ஒக்ஸ்போ£ட்’டின் ஊடாக புலம்பெயர் தமிழ் சமூகம் மீது மறைமுகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Psychological Warfare என்பதும் அதன் சுருக்கமான அடையாளமாக PSYWAR என்பதும் மிகவும் நுணுக்கமான அதிர்வுகளை மனங்களுக்குள் ஏற்படுத்திவிடக்கூடியதாக நவீனமுறைகளில் இப்போது உலக அளவில் நடைமுறையில் வந்திருக்கின்றன. நோகமலேயே ஆளை கொல்லுவது போன்றது இது.

நவீனமுறைகளில் இந்த உளவியல் யுத்தமுறையை Psychological Operations - PSYOP என்று வருகிறது. இந்த உளவியல் யுத்த முறையானது காலத்துடன் மிகவேகமான பரிணாம மாற்றமடைந்து வந்துகொண்டே இருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட வரலாற்று தகவல்களின்படி உலகை தனது ஆளுகைக்குள் கொண்டுவர படை நடாத்திய மசிடோடினிய சக்ரவர்த்தி மகா அலெக்ஸ்சாண்டரும், மங்கோலிய சக்ரவர்த்தி ஜென்கிஸ்கானும் இத்தகைய உளவியல் யுத்தமுறைகளை தமது வெற்றிகளுக்காகவும், வெற்றி பெற்ற இடங்களை தொடர்ந்து தக்க வைப்பதற்காகவும் செயல்படுத்தி இருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்களும், மின்சார ஊடகங்களும் இல்லாத அந்த பொழுதில் வெறும் வாய் வழியான செய்திகளை எதிரிப்படைகளுக்குள் செல்ல விட்டு அதன்மூலம் அவர்களின் மனோ உறுதியை நொருக்கி வெற்றிகளை குவித்ததற்கு ஏராளம் சான்றுகள் சரித்திரமெங்கும் நிறைந்து கிடக்கின்றன. இரண்டாம் உலகயுத்தத்தின்போது 18 செப்டெம்பர் 1939 லிருந்து 30 ஏப்ரல் 1945 வரையான காலத்தில் ஜேர்மனியின் கம்பேர்க் நகரத்தில் இருந்து ஒலிபரப்பபட்ட Germany Calling என்ற ஒலிபரப்பு இங்கிலாந்து, அமெரிக்க, கனடிய, அவுஸ்திரேலிய படைகளிடத்திலும், இங்கிலாந்து மக்கள் மத்தியிலும் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்கள் ஏராளம். மத்திய அலைவரிசை மூலம் இங்கிலாந்தையும் குறுகிய அலைவரிசை மூலம் அமெரிக்காவையும் சென்றடைந்த இந்த வானொலி கிட்லரின் உளவியல் யுத்த முறைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். எங்களுடைய தாயகம் இந்தியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1987-1990 வரையான பொழுதில் இந்திய புலனாய்வாளர்களாலும் அவர்களின் ஈழத்து கைக்கூலிகளாலும் நடாத்தப்பட்ட ‘அன்புவழி’, ‘வெற்றிமாலை’ என்ற வானொலியும் உளவியல் யுத்தத்தை எமது மக்கள் மீது திணித்த ஒரு ஊடகமாகும்.

மகிந்தரின் புலனாய்வுபிரிவும் இந்த வழிமுறையை கைக்குள் எடுத்தது. நீங்கள் உங்கள் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி நகர்த்துவீர்களானால் ஒரு விடயம் உங்களின் நினைவுக்குள் மின்னலடிக்கும். ஐரோப்பாவின் தமிழ் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு ஒரு செய்தி மகிந்தரின் ஓட்டத்துக்கு (03 டிசம்பர் 2010) பின்னர் மனதுக்குள் விதைக்கப்பட ஆரம்பமானது. தேசியக்கொடி பிடித்ததால்தான் இங்கு 2009 களில் நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியை சந்தித்தன என்பதில் ஆரம்பித்து தேசியத் தலைவரின் இருப்பையும் அவரின் போராட்ட ஆளுமையை சிதைப்பதில் முடிக்கும் கலந்துரையாடல்களும், விவாத அரங்குகளும் நடாத்தப்பட ஆரம்பித்தன. சுயவிமர்சனம், ஜனநாயக ரீதியான கருத்துக்களம் என்ற பெயர்களில் இனிப்பை தடவி அதனு£டாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் உளவியல் சிதைவுக்குள் அகப்பட்டு இருக்கும் மக்கள் மீது கொடும் விசம் இந்த ஊடகங்கள் மூலம் செலுத்தப்பட்டது. ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற தோழர் மாவோவின் வாசகங்களுக்கு பின்னால் ஆயிரமாக புலம்பெயர் சக்தி பிரிய வேண்டும் என்ற ஆலகால விசம் இருந்தது. தேசிய உணர்வின் மையமான தேசியக்கொடியின் அருமையும் அதன் விவாதத்துக்கு இடமற்ற பேராண்மையும், இறைமையும் கேள்விக்குறியாக்கப்பட்டது.

தேசியக் கொடிக்கு புலிக்கொடி என்ற பெயர்மாற்றம்கூட இந்த ஊடகங்கள் மூலமாக செய்யப்பட்டது. தேசியக் கொடி என்பது வெறும் துணியும் அதன்மீது வரையப்பட்ட நிறங்களும் அல்லவே. அது ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளம். தமிழீழ தேசியத்தின் அடையாளம்.எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வல்லமை கொண்டது தேசிய கொடி. அந்த தேசிய கொடியின் பாவனையை முடக்குவதன் முழு நோக்கம் எதுவாக இருக்க முடியும்?

எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும், முள்ளிவாய்க்கால் ஒன்று கூடலிலும் தேசியக்கொடி சுமப்பவர்கள் என்றும் அதனை விரும்பாதவர்கள் என்றும் இரண்டு பிரிவுகளை மிகச் சுலபமாக எமக்குள் புகுத்திய இந்த ஊடகங்களின் பிlரிப்புவேலைகளும் சிதைப்புகளும் இன்னும் தொடர்கின்றன.

http://www.lankasri.com/ta/link-3m4340SdMgb6eEIcQ372.html

Psychological Warfare என்பதும் அதன் சுருக்கமான அடையாளமாக PSYWAR என்பதும் மிகவும் நுணுக்கமான அதிர்வுகளை மனங்களுக்குள் ஏற்படுத்திவிடக்கூடியதாக நவீனமுறைகளில் இப்போது உலக அளவில் நடைமுறையில் வந்திருக்கின்றன. நோகமலேயே ஆளை கொல்லுவது போன்றது இது.

நன்றி இணைப்புக்கு.

போராடினால் தான் வாழ்கை என்ற நிலைமை எமக்கு. எமது போராட்டத்தின் நியாயம் அண்மையில் நெதர்லாந்து நீதிமன்றில் வெளியானது, அதாவது ' புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல' என. இது சிங்களத்திற்கு ஒரு உள ரீதியான தோல்வி. அதை நாம் பரப்புரை ரீதியாக அது ஒரு 'விடுதலை அமைப்பு' என்ற கட்டத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.

இப்படி ஒவ்வொரு வழியிலும், தேவைதான இடங்களில் தந்திரோபாயமாக, போராட வேண்டிய தேவை எமக்குள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.