Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடி மாவீரர்களை வணங்கித் துதிப்போம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karthigai-poo_150article.jpg

அன்பார்ந்த கனடாவாழ் தமிழீழ மக்களே!

எங்களுக்காய், தமிழீழ மண்ணுக்காய் தமிழீழத் தேசியத்துக்காய் தம் உயிர் ஈந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வான தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள், வழமை போல, தமிழ் தேசியச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கனடியத் தமிழரின் கட்டமைப்புகளினால், நவம்பர் 27, 2011 அன்று, நான்கு நிகழ்வுகளாக ரொரன்ரோவிலும், மற்றும் மொன்றியலில் ஒரு நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (Canadian Tamils Rememberance Organization - CTRO), வழமை போல முன்னெடுக்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளானது கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), கனடா தமிழ் மகளிர் அமைப்பு, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆகிய கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் எழுச்சியாக கனடா தமிழர் சமூகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அனவருக்கும் அறியத் தருகின்றோம்.

1989 ஆம் அண்டு முதல், மாவீரர் திலகங்களை வணங்கித்துதிக்கும் நவம்பர் 27 நினைவெழுச்சி நிகழ்வைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்ற போட்டி நிகழ்வுக்கான முயற்சியானது, சிறிலங்கா அரசின் தமிழரை பிரித்தாளும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதோடு, கனடாவாழ் தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கான நடவடிக்கையாகவும் அமைகின்றது. போட்டிக்கு நடத்தப்படவுள்ள இவர்களின் நிகழ்வுக்கும் எமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதைக் அறியத் தருகின்றோம்.

தாயகத்தில் திட்டமிட்டு மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்ததொழித்த சிறிலங்கா அரசின் செயற்பாடுகள், புலம்பெயர் மண்ணிலும் தொடர்வதற்குத் துணைநிற்கும் இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகின்றது. இவ்வகையான திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒற்றுமையைச் சிதைக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய உணர்வுள்ள எவரும் துணைநிற்க மாட்டார்கள் என்பது உறுதி.

முன்னைய ஆண்டுகளின் நவம்பர் 27 இல் தேசிய நினைவெழுச்சி நாள் எவ்வகை உணர்வோடு இடம்பெற்றதோ, அத்தகைய உணர்வு கலந்த எழுச்சியோடு வணக்கத்துக்குரிய நிகழ்வாக இந்த ஆண்டும் நிகழும் என்பதை தெரியத் தருகின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (CTRO)

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தமிழ் இளையோர் அமைப்பு (TYO)

கனடா தமிழ் மகளிர் அமைப்பு

கனடியத் தமிழர் விளையாட்டுத் துறை

தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா

http://www.seithy.com/breifNews.php?newsID=51776&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையும் நேரு அண்ணா மாவீரர் தின உரையைத் தலைவர் பாணியில் வாசிப்பாரா??

தமிழர் தாயகத்தில் போரினால் பெற்றோர்களை இழந்த 80ஆயிரம் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் 16 இருந்து 17 ஆயிரம் பேர் மாவிரர்களுடைய அல்லது மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.இதில் 8ஆயிரம் பேர் கல்வியை முற்றாக நிறுத்திவிட்டார்கள்.அதிலும் 4ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேர் வரை ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள்.கிழக்கு மாகாணத்தில் மட்டும் 1800 குழந்தைகள் அதுவும் மாவிரர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்141 குழந்தைகள் அநாதரவான நிலையில் பிச்சை எடுக்கிறார்கள்.

இந்த உரியவர்கள் கடந்த இரண்டு வருடத்தில் இந்தக் குழந்தைகளுக்காக என்ன செய்தார்கள்?எந்தவித சித்தரவதையும் அச்சுறுத்தலும் இல்லாத ஐரோப்பிய சிறைகளில் இருந்த தங்களது சகாக்களின் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதி திரட்டிய இவர்கள் இந்தக் குழந்தைகளின் நலனுக்கக மாவிரர் குடும்ப நிதியம் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கலாம் அல்லவா?

இன்றைக்கு இந்த உரியவர்களிடம் இருக்கும் பேராட்டத்தின் பேரால் சேர்த்த சொத்துக்கள் இந்தக் குழந்தைகளின் பசிப் பிணியை தீர்க்கப் போதாதா?அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டப் போதாதா?

நம்பிக்கை ஓளியும் யாழ்கள உறவுகள் சிலர் சேர்ந்து உருவாக்கிய நேசக்கரம் செய்ததில் 100ல் ஒரு பங்காவது இந்த உரியவர்கள் செய்திருக்கிறார்களா? நேசக்கரத்தக்குக்கு நெருக்கடி கொடுத்ததும் நம்பிக்கை ஒளியை துரோகள் ஆக்கியதும் தானே இவர்கள் செய்த வேலை.

'மாவிரர்கள் புனிதமானவர்கள்.'

அவர்களுடைய புனிதத்தை கெடுக்காதீர்கள்

'மாவிரர் தினத்தோடு விளையாடாதீர்கள்' என்று ஓங்கி உரத்துக் கத்தும் இவர்கள் அந்தப் புனித்தை மதித்திருக்கிறார்களா?

ஓரு மாவிரனின் பெற்றோர் தனது பிள்ளைக்கு மனமுருகி அஞ்சலித்து சமர்ப்பணம் செய்யும் பூவை திருட்டுத்தனமாக எடுத்துவந்து இன்னொரு மாவிரனின் பெற்றோருக்கு விற்பதற்கு பெயர் தான் புனிதமா?

ஓரு பூவை 2 யுரோவுக்கு அல்லது பவுண்சுக்கு மாவீரரின் பெற்றோருக்கு விற்று காசாக்கிக் கொண்டு அது போராட்டுத்துக்கான நிதி சேகரிப்பு என்று நியாயப் படுத்த தெரிந்த இந்த உரியவர்களுக்கு போராட்டத்துக்கு தங்களது பிள்ளைகளையே கொடுத்த மாவிரர்களின் பெற்றோர்களிடம்; ஒரு நூறு யுரோ அல்லது பவுண்ஸ் கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் தந்திருப்பார்கள் என்பதில் ஏன் நம்பிக்கையில்லாமல் போனது?

சுரி 2009 முள்ளிவாயக்கால் வரை தான் நிதி தேவைப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 2009,2010 மாவிரர் தினங்களிலும் இதே தவறைத்தானே அதாவது அஞ்சலித்து வைத்த புவை திரும்ப எடுத்து விற்கும் வேலை தானே செய்யப்பட்டது.தாயகத்தில் இருந்து வந்து இதில் கொண்டு இந்தத் தவறை தட்டிக் கேட்ட மாவிரர் குடும்பங்களை துரோகிகள் குழப்பவாதிகள் என்று தானே இந்த உரியவர்கள் முத்திரை குத்தினார்கள்!

மாவீரர்கள் என்பவர்கள் தேசத்தின் சொத்து.அதேபோல மக்களே புலிகள் புலிகளே மக்கள். இது தான் உண்மை. வுpடுதலைப் புலிகள் இயக்கம் என்பது தனி ஒரு பிரிவுக்கு சொந்தமானதல்லது.அது தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் பொதுவானது. தேசியத்தலைவர் என்று சொல்கிற போது அவர் தனி ஒரு பிரிவினருடைய தலைவர் அல்ல! அவர் தமிழ் மக்களுடைய தலைவர்! மக்களை பிளவு படுத்தவும் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் துரோகி பட்டம் கொடுக்கவும் அவர்களது படங்களையும் விபரங்களையும் ஊடகங்களில் வெளியிட்டு எதிரிக்கு காட்டிக் கொடுக்கவும் யாருக்கும் உரிமை இல்லை! அது எந்த விதத்திலும் தேசியச் செயற்பாடும் இல்லை.

ஏனவே மாவிரர்கள் வியாபாரப் பொருட்கள் அல்ல!இன்றைய காலகட்டத்தில் யார் அனைவரையும் ஓரணியில் இணைத்து மாவீர்களது நினைவுகளை உண்மையாக நினைவு கூர முற்படுகிறார்களோ எவரொல்லாம் மாவீரர் குடும்பங்களை பராமரிக்க வேண்டும் அவர்களது குழந்தைகளக்கான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனை கொண்டிருக்கிறார்களே அதற்காக உழைக்கிறார்களோ அவர்கள் நடத்தும் மாவிரர் நிகழ்வுகள் தான் உண்மையான மாவிரர் நிகழ்வாக இருக்கும்

மாவிரர்களுடைய சுவரொட்டிகளை கிழித்தெறியும் உரியவர்களுக்கும் மாவிரர்களுடைய துயிலும் இல்லங்களை சிதைத்து அழித்த சிங்கள் பேரினவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த முறையும் நேரு அண்ணா மாவீரர் தின உரையைத் தலைவர் பாணியில் வாசிப்பாரா??

நல்ல காலம் கடந்தமுறை நான் தப்பிவிட்டேன்.

நிகழ்வு அரங்கத்திற்குள் போகவில்லை.

இப்படியான கொடுமைகள் அரங்கேறுமாக இருந்தால்

இந்த முறையும் மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்திவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

தேசிய மாவீரர் நாள் தொடர்பாக பாரிஸ் லாசப்பல் பகுதியல் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் இன்று தமிழ் தேசியத்தக்கு எதிரான விசமிகள் சிலரால் கிழித்தெறியப்பட்டுள்ளது;. இதற்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழு தனது கடுமையான கண்டத்தை தெரிவித்துள்ளது.

தேசியத் தலைவரின் படத்தையும் மாவீரர் நினைவுத்தூபியையும் தாங்கியிருக்கும் வண்ணம் அமைந்திருந்த இந்த சுவரொட்டிகளை கிழிந்தெறிந்த இந்த நபர்கள் சிறீலங்கா அரசு எமது தாயகத்திலே எமது மாவிரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை தகர்தெறிந்து அழித்தொழித்த ஈனச் செயலை புலத்தில் அவர்கள் சார்பில் தொடர்ந்திருப்பதாக தேசிய மாவீரர் நாள் எற்பாட்டுக் குழு தனது கண்டனத்தில் தெரிவித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவுகளே!!!

யேர்மனியிலும் முன்சன்கிளட்பாக் நகரில் ஒழுங்குசெய்யப்பட்ட மாவீரர் தின சுவரொட்டிகளை டோட்முண்ட் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் கிழித்துவிட்டார்கள்.(சிங்கள ராணுவம் தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை உடைத்து எறிந்ததற்கும் புலம்பெயர் தேசத்தில் இவர்கள் செய்திருக்கும் வேலைகளிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது) இவர்கள் தான் தேசியம் பேசுகின்றார்கள். மாவீரர் தினம் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை. நான் தனியே கூட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியும்.

இன்று கூட தீபம் தொலைக்காட்சியில் வந்த ஜெயானந்தமூர்த்தியும், ராஜமனோகரனும் கதைத்த விடையங்களைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.அவர் சொல்கின்றார் தலைவரால் கட்டிவளர்க்கப்பட்ட விதிமுறைகளை மீறிவிட்டார்கள் என்று. யார் மீறியது என்று தெரிந்தும் தெரியாதது போல் கதைத்துவிட்டுப் போய்விட்டார்கள். மாவீரர் நாள் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தலைமைச் செயலகமே மாவீரர் அறிக்கையை வழங்குவது வழக்கம். அந்த விதிமுறைகளிற்கு முரணாக அனைத்துலகச் செயலகம் 2010ம் ஆண்டே புதிதாக அறிக்கை தயாரித்து வெளியிட்டதன் மூலம் கோத்தபாயாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டார்கள். இதிலிருந்து ஒன்றுமட்டும் புரிகின்றது . புலம்பெயர் தமிழர்களை அடக்கி ஆளவேண்டுமென்று இன்னும் நினைக்கின்றார்கள்.

Edited by Barath

இது என்ன ஒற்றுமை தேடி அடிபடும் புதிய சர்ச்சை?

இது என்ன தீபாவழி கொண்ட்டாமா யராவது எதையாவது எதிர்க்க? இது மாவீரர் தினம் தானே?. யார் எங்கே கூடினால் என்ன? யாரும் தங்களுக்கு விருப்பமான இடத்தில் சென்று வணத்தை செய்து விட்டு போகட்டுமே. ஏன் உலகம் முழுதும் ஒரே ஒரு வணக்கம் தான் இருக்க வேண்டும் என்றோ அல்லது நாடு முழுவதற்கும் ஒரு வணக்கம் தான் இருக்க வேண்டுமென்றோ அல்லது ஊருக்கு தன்னும் ஒரு வணக்க தலம் தான் இருக்க வேண்டுமென்றோ வாதாடுவான். அவர்களை விட்டு விடுங்கள் அவர்களுக்கு விருப்பமான இடத்தில் கொண்டாடட்டும். பணத்தை நேசக்கரம் போன்ற அமைப்புகளுக்கு வீட்டில் வைத்தே கொடுத்து விட்டு மக்கள் வஞ்சகமில்லாமல் தாங்கள் விரும்பிய இடத்தில் சென்று வணக்கத்தை தெரிவிக்கட்டும்.

மலையாளத்தார் தமது மாண்புமிக்க அரசன் மகாபலியை தோற்கடித்த கொண்டாட்ட நாளான தீபாவழியையும் கொண்டாடி ஓணத்தையும் கொண்டாடுகிறார்களில்லையா? அது அவர்கள் விருப்பம். நமக்கென்ன அதில்?

கறுப்பன் கிருஸ்ணன் தெற்கே தொடர்ந்து முன்னேறி வரும் ஆரியப்படையெடுப்பகளை நிறுத்த விரும்பினான். அவர்களை எதிர்த்து தனது படைகளை சிதைக்காமல் ஏதோ இருந்த மாமி உறவுக்குகாறி ஒருத்திக்கு பிறந்த ஆரியப்பிள்ளைகளை அவர்களின் மற்ற ஆரிய பிள்ளைகளுடன் சிண்டு முடிந்து அடிபட விட்டான். போர் நிச்சயமாக நடக்க வேண்டும் என்பதற்ங்காக கறுப்பி கிருஸ்ண வேணியை (பாஞ்சாலி) அருச்சுனன் மணம் முடிக்க போனால் தான் அருச்சுனனனுடன் சுயம்வரத்தில் போட்டியிட மாட்டேன் என்று வாக்கு கொடுத்தான். போர்க் கதையை வியாசன் (இன்னொரு கறுப்பன்) எழுதி வைத்தான். இன்று ஏதோ குழம்பிபோன ஆரியர்கெல்லாம் கிருஸ்ணன் அல்லவா முதன்முதல் கடவுள். இந்த ஆரியர் எல்லோரும் கும்பிட்டும் இன்னமும் கூட கிருஸ்ணன் பெயர் கிருஸ்ணன்(அதாவது வட மொழியில் கறுப்பன்)தானே. யாராவது ஆரியரிடம் கிருஸ்ணனை கும்பிடக்கூடாது என்று சொன்னதுண்டா. அரசாங்கம் மாவிரர் நாள் கொண்டாடினால் என்ன விட்டால் என்ன?

இந்த முரண்பாட்டால் கந்தையை இழுத்து முட்டப்போர்த்து ஏற்கனவே இத்துபோயிருக்கும் கந்தல் ஒற்றுமையையும் கிழிப்பதாகிறது.

ஒற்றுமையாய் நடத்தினால் நல்லது. ஆனால் இல்லாத ஒற்றுமைக்காக அடிபடுவதை தவிர்ப்பது இன்னும் நல்லது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.seithy.com/breifNews.php?newsID=51833&category=TamilNews

பார்க்கமுடிந்தவர்கள் பார்க்கவும்.

தேசிய மாவீரர் நாள் தொடர்பாக பாரிஸ் லாசப்பல் பகுதியல் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் இன்று தமிழ் தேசியத்தக்கு எதிரான விசமிகள் சிலரால் கிழித்தெறியப்பட்டுள்ளது;. இதற்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழு தனது கடுமையான கண்டத்தை தெரிவித்துள்ளது.

தேசியத் தலைவரின் படத்தையும் மாவீரர் நினைவுத்தூபியையும் தாங்கியிருக்கும் வண்ணம் அமைந்திருந்த இந்த சுவரொட்டிகளை கிழிந்தெறிந்த இந்த நபர்கள் சிறீலங்கா அரசு எமது தாயகத்திலே எமது மாவிரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை தகர்தெறிந்து அழித்தொழித்த ஈனச் செயலை புலத்தில் அவர்கள் சார்பில் தொடர்ந்திருப்பதாக தேசிய மாவீரர் நாள் எற்பாட்டுக் குழு தனது கண்டனத்தில் தெரிவித்திருக்கிறது.

ரொறன்ரோவிலும் ஜனநாயகவாதி ஒருவர் தேசியத் தலைவரின் படத்தை இப்படிக் கிழித்திருக்கிறா. இவர்கள்தான் 2009இல் பட்டாடை உடுத்தி தேசியத்தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள். கிழித்தது மட்டுமின்றி அந்தக் கடைக்காரருடனும் வாக்குவாதப் பட்டிருக்கிறார்.

சிங்கள அரசின் முதல் இலக்கான மாவீரர் தினத்தின் மக்கள் பலத்தை குறைதல் எனும் திட்டத்துக்கு , இம்முறை சிங்கள அரசு எதிர்பாராத வகையில் தமிழர்களின் பிரிவு தாமாகவே ஆதரவு வழங்கி உள்ளது . அதைதான் அனைத்துலக கட்டமைப்பு என்ற ஒரு விடுதலைப் இயக்க புலத்து பிரிவொன்று , தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC ) என்ற பெயரில் ஐந்து இடங்களில் நடாத்துவதாக அறிவித்தமை கூறி நிற்கிறது . சென்ற வருடம் வரை மாவீரர் நினைவேந்தல் அகவத்தின் பின்னால் நின்று சக்தி வழங்கிய அதே பிரிவினர் இன்று அந்த மாவீரர் தின அகவத்தின் இருக்கும் பழைய உறுபினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அதே நபர்களை சிங்கள உளவாளிகள் என திரிபு படுத்தி தெரிவித்து வருகின்றமை தவறே.

http://www.seithy.com/breifNews.php?newsID=51941&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பான உறவுகளே!!!

யேர்மனியிலும் முன்சன்கிளட்பாக் நகரில் ஒழுங்குசெய்யப்பட்ட மாவீரர் தின சுவரொட்டிகளை டோட்முண்ட் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் கிழித்துவிட்டார்கள்.(சிங்கள ராணுவம் தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை உடைத்து எறிந்ததற்கும் புலம்பெயர் தேசத்தில் இவர்கள் செய்திருக்கும் வேலைகளிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது) இவர்கள் தான் தேசியம் பேசுகின்றார்கள். மாவீரர் தினம் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை. நான் தனியே கூட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியும்.

இன்று கூட தீபம் தொலைக்காட்சியில் வந்த ஜெயானந்தமூர்த்தியும், ராஜமனோகரனும் கதைத்த விடையங்களைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.அவர் சொல்கின்றார் தலைவரால் கட்டிவளர்க்கப்பட்ட விதிமுறைகளை மீறிவிட்டார்கள் என்று. யார் மீறியது என்று தெரிந்தும் தெரியாதது போல் கதைத்துவிட்டுப் போய்விட்டார்கள். மாவீரர் நாள் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தலைமைச் செயலகமே மாவீரர் அறிக்கையை வழங்குவது வழக்கம். அந்த விதிமுறைகளிற்கு முரணாக அனைத்துலகச் செயலகம் 2010ம் ஆண்டே புதிதாக அறிக்கை தயாரித்து வெளியிட்டதன் மூலம் கோத்தபாயாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டார்கள். இதிலிருந்து ஒன்றுமட்டும் புரிகின்றது . புலம்பெயர் தமிழர்களை அடக்கி ஆளவேண்டுமென்று இன்னும் நினைக்கின்றார்கள்.

முன்சன்கிளட்பாக்கில் எந்த காலத்தில் மவீரர்தினம் நடந்தது? டோட்முண்டில்தான் வழமைய நடைபெறுவது, ஒருதடவை வந்த சனத்துக்கு இடம் கானாமல் அதைவிட பெரிய கோலில் எசனில் நடைபெற்றது, முன்சன்கிளட்பாக் கோல் 1000 சனத்தை கொள்ளுமா? 100பேர் கொள்ளும் கோலை எடுத்து மாவீரதினத்தை மலினப்படுத்த வேண்டாம். உணர்வு பூர்வமான விடயங்களில் தைலையிடாது ஒதுங்கி இருப்பதே அனைவரூக்கு நல்லது.

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.