Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவருக்கு இப்போது தண்டனை மற்றவர்களுக்கு தண்டனை ஒத்திவைப்பு

Featured Replies

ஒருவருக்கு இப்போது தண்டனை மற்றவர்களுக்கு தண்டனை ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள், சரத் பொன்சேகாவை குற்றவாளியாகக் கண்டுகொள்ள, ஒரு நீதிபதி சரத் பொன்சேகா குற்றவாளி அல்ல என்று தனது தீர்ப்பை வழங்கி னார். ஜனநாயகத்தின் அடிப்படையில் மூன்று நீதி பதிகளில் இரண்டு நீதிபதிகள் குற்றவாளியயன தீர்ப்பு வழங்கியதன் காரணமாக சரத்பொன்சேகாவுக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர் தலில் மகிந்த ராஜபக்­ அமோக வெற்றியீட்டினார். அவரின் பதவியேற்பு அவரின் 60 ஆவது பிறந்த நாளன்று இடம்பெற்றது. இதன் பின்னர் வன்னி யுத்த வெற் றியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தலைமையிலான அரசு ஈட்டிய போது, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்து வன்னிப் போரின் வெற்றியை - விடுதலைப்புலிகள் தோற்கடிக் கப்பட்ட செய்தியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.இவையயல்லாம் நடந்து முடிய மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்.இத் தேர்தலில் மகிந்த ராஜபக்­வும் சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர்.

முடிபு, மகிந்த ராஜக்ஷ­வுக்கு ஜனாதிபதிப் பதவியும் சரத் பொன்சேகா வுக்கு சிறைவாசமும் கிடைத்தது. ‘இதில் அதிசயமான உண்மை யென்ன வெனில் நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் 66ஆவது பிறந்த நாள் அன்று சரத் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்வது! போர் வெற்றியை அறிவித்தவர் 3 ஆண்டு சிறைத்தண்டனையை ஏற் றுக் கொள்கிறார் என்றால், ஊழ்வினையின் விளையாட்டு பலமாக இருக்கின்றது என்று கருத வேண்டியுள்ளது. வன்னிப் போரின்போது அங்கே...இங்கே... அந்த...இந்த ... என்று குண்டுகளைக் கொட்டி அப்பாவிகளின் உயிர்களைப் பலியயடுத்த பாவம் சரத் பொன் சேகாவை விடுவதாக இல்லை. அப்படியானால் சரத் பொன்சேகா வுக்கு மட்டும்தான் அப்படியா? என்று நீங்கள் கேட்கலாம். ஒருபோ தும் இல்லை.

வன்னி மக்களின் அவலத்தில் யார்யாரெல்லாம் பங்கேற்றார்களோ அவர்களுக்கு எல்லாம் தண்டனை உண்டு. ஆனால், அதற்கான காலம் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25378

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மூண்டு வருசத்துக்குள்ள பொன்சேகாவிற்கு பால் ஊத்திடுவாங்கள்.

தமிழீழ தமிழ் அப்பாவிகளின் சாபத்தின் பலன் இது.

இந்த மூண்டு வருசத்துக்குள்ள பொன்சேகாவிற்கு பால் ஊத்திடுவாங்கள்.

தமிழீழ தமிழ் அப்பாவிகளின் சாபத்தின் பலன் இது.

ஆமாமா ...வருவாய்ங்க..!

நெனைப்புத்தான் பொழைப்பை கெடுக்கும்,,,!!

நன்றி உணர்ச்சி, தமக்காய் உழைத்தவர்களின் மீதான தீராத காதல்... இதெல்லாம் இல்லாம போக ...தமிழன் என்ன சிங்களவனா?

உள்ளே இருக்குற பொன்சேகாவுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆனா... அதுவே மஹிந்த ஆட்சிக்கு சங்கு ஊதும்!

எத்தனை பிரிவுகளாய் தமக்குள் அடிபட்டாலும்,, தமிழன் என்று வந்துவிட்டால், அவனுக்கு பொது எதிரி நாங்கதானே!

எத்தனை ஒற்றுமையா நாங்க இருக்குறதா காட்டிகிட்டாலும், சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் நாங்க அவங்க ,, தோழர்கள்தானே... !!

எம்மை போல சந்தர்ப்பவாதிகளை ...

எதிரிகளாய் பெற சிங்களவன் கொடுத்து வைத்தவன்!!

Edited by அறிவிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.