Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை யுத்தத்தின் பாடங்கள் எவை? மேற்கின் இராஜதந்திரம் வலுவிழந்து செல்கிறதா?

Featured Replies

இலங்கை யுத்தத்தின் பாடங்கள் எவை? மேற்கின் இராஜதந்திரம் வலுவிழந்து செல்கிறதா?

- TIME கட்டுரை

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அமைக்கப்பட்ட, 'உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு' போன்ற தோற்றத்தையே சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கொண்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். அத்தோடு இனமுரண்பாடு சூழ்ந்திருந்த நாட்டின் ஒரு தலைமுறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உதவும் பாரிய திட்டமாகவே இதனைச் சிறிலங்கா அரசாங்கம் பெரிதுபடுத்திக் காட்டுகின்றது. உண்மையில் 'கற்றுக்கொண்ட பாடங்கள்' மிகவும் வேறுபட்டவை.

இவ்வாறு ரைம் வலைப்பக்கத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் நோர்வே அறிக்கையையும் முன்வைத்து எழுதப்பட்டுள்ள விரிவான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் முக்கியமாக பகுதிகளை இங்கே தருகிறோம்.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவினால் (LLRC) உருவாக்கப்பட்ட இறுதி அறிக்கை சிறிலங்கா ஜனாதிபதியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.11.11) கையளிக்கப்பட்டுள்ளது. 2002 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கான காரணிகளை ஆராய்வதும், 2009இல் முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டச் சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறலைக் கண்டறிவதும் அறிக்கையின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது, முற்றுமுழுதான இராணுவத் தீர்வு மூலம் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் உண்மையான விலையினை எடுத்துக்காட்டுகின்றது. பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் விட்டுக்கொடுப்பு என்பனவே அவையாகும். விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக வெற்றிகொண்டமையின் விளைவாக ராஜபக்ச அரசாங்கம் புகழின் உச்சத்தில் இருக்கின்றபோதும் அரசியல் மீள் நல்லிணக்கம் தொடர்பான உண்மையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய தேவையை ராஜபக்ச அரசாங்கத்திற்கு அது இல்லாமல் செய்துள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் எந்த இலக்கையும் எட்டவில்லை. இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக இறுதிக்கட்டத்தில் நடந்திருக்கக்கூடிய சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் விசாரிக்கப்பட வேண்டுமென மட்டும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவங்கள், பொறுப்பானவர்கள் பற்றிய எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. நல்லிணக்க ஆணைக்குழு பிரித்தானியாவின் சனல் 4இனால் ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம் தொடர்பாக எந்தவித ஆய்வுகளையும் முன்னெடுக்காது, அதனை 'முற்றிலும் சோடிக்கப்பட்ட ஒன்று' எனக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்துபவர்களுக்கு என்ன நேரும் என்பது தொடர்பாக தெளிவான செய்தியைச் சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியில் சிறிலங்கா படைத்தரப்பினை வழிநடத்திய ஜெனரல் சரத் பொன்சேகா மீது 'பொய்ப் பிரச்சாரத்தை' முன்னெடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சரணடைவதற்கு ஒப்புக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கட்டளையிட்டதாக ஒரு நாளிதழுக்கு பொன்சேகா வழங்கிய செவ்வி தொடர்பாகவே வழக்குத் தொடரப்பட்டது. இவ்வாறான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என கோத்தபாய தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளார்.

தமது சமாதான முன்னெடுப்புகள் தோல்வியுற்றமை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அண்மையில் நோர்வேயினால் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போதான நோர்வேயின் முயற்சிகள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் பேசப்படுகின்றது. மேற்கூறப்பட்ட அதே சம்பவம் தொடர்பாக நோர்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

'17ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட இரவு, விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலிதேவன் ஆகியோர் நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கத் தூதரகம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சந்திரநேரு (கொழும்பிலிருந்து தமிழ் அரசியலாளர்) ஆகிய தரப்பினரைத் தொடர்பு கொண்டு, சரணடைவதற்கான தமது விருப்பினைத் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற அவசர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரின் முன்னரணை நோக்கி நடந்து செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் முன்னரணைச் சென்றடைவதற்குச் சற்று முன்னர் இறுதித் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. சில மணிநேரங்களில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதான அறிவிப்பு வந்தது.'

இதனையும் ஏனைய மனித உரிமை மீறல்களையும் மறுப்பதற்குரிய வலிமை சிறிலங்கா அரசாங்கத்திடம் உண்டு. ஏனெனில் புவிசார் அரசியல் வலுச்சமநிலை கிழக்கை (ஆசியா) நோக்கி வலுவாகத் திரும்பியுள்ளது - இது இலங்கைத் தீவின் போரினால் உலகின் ஏனைய தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள இரண்டாவது பாடமாகும்.

நோர்வேயின் அறிக்கை மிக நீளமானது. ஆனால் அதில் கையாளப்பட்டிருக்கும் ஆய்வு முறைமை மற்றும் இந்த விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சுயவிமர்சனம் ஆகியவற்றிற்காக அது முழுமையான வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியது.

சமாதான முன்னெடுப்பின் தோற்றமும் வீழ்ச்சியும் இலங்கைத்தீவின் அரசியலில் ஒரு மைல்கல் என்பதற்கு அப்பால், மேற்குலகத்தின் செல்வாக்குச் சரிவைக் காட்டும் உலக வரலாற்றின் ஒரு பகுதியாகவும் உள்ளது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவைப் பொறுத்தமட்டில் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார, அரசியல், மற்றும் படைத்துறை உதவிகளின் முக்கியத்துவம் குறைவடைந்து வந்துள்ளது.

நோர்வேயின் அறிக்கையின்படி, சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன சிறிலங்காவின் முக்கிய வர்த்தக உறவு நாடுகள். ஆனால் இலங்கையில் பல பில்லியன் பெறுமதியான உட்கட்டுமான முதலீடுகளில் சீனா விரைந்து ஈடுபட்டு வருகின்றது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மட்டத்திலிருந்து எழும் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா புறக்கணிக்க முடியும். ஏனெனில் ஐ.நாவில் போர்க்குற்ற விவகாரம் எழுப்பப்படும் பொழுதெல்லாம் தனது பக்கத்தில் சீனாவையும் ரஸ்யாவையும் சிறிலங்கா வைத்துள்ளது. இந்தியாவும்கூட இறுதிக்கட்டப் போரின் போது, இரட்டை இராஜதந்திரத்தைக் கையாண்டதாக நோர்வேயின் அறிக்கை குறிப்பிடுகிறது.

சிறிலங்கா படைத்தரப்பிற்கு ராடார் மற்றும் புலனாய்வுத் தகவல்களை இந்தியா வழங்;கியது. இந்திய ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது என்ற அரசியல் உணர்வு சார்ந்த சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக தாக்குதற் படைக்கருவிகளை வழங்கவில்லை என டெல்லி தெரிவித்து வந்துள்ளது. ஆனாலும் வேறு நாடுகளிடமிருந்து சிறிலங்கா ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை இந்தியா எதிர்க்கவில்லை.

விடுதலைப்புலிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்று இந்தியா விரும்பியிருக்கவும் வாய்ப்பில்லை. மேற்குலக நாடுகளின் அழுத்தங்களைப் பொருட்படுத்தாது போரை முடிக்குமாறு மேற்குலகம் அல்லாத நாடுகள் சிறிலங்காவிற்கு கூறியதாக இலங்கையைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவர் சாட்சியளித்துள்ளார்.

போர் முடிவுற்றதிலிருந்து, தமிழ் மக்களின் கவலைகளைக் கருத்திலெடுக்குமாறும் ஒரு அரசியல் தீர்வு நோக்கிச் செயற்படுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

ஆனாலும் விடுதலைப் புலிகளை அழித்தபோது ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கிய இந்தியா, மகிந்தவின் போர்க்குற்ற நடவடிக்கைகளை வெளிவரும் போது அவரைக் கைவிடுமெனவும் எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய வகிபாகம் உண்டு. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் துணைச் செயலர் Robert Blake பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளதோடு, தமிழ் அரசியல் கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழவின் அறிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டுமென கடந்த செப்ரெம்பர் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்த போது பிளேக் கோரியிருந்தார். அறிக்கை நம்பகத்தன்மை அற்றதாக இருப்பின் மாற்றுப் பொறிமுறை அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். வேறுவழியில் சொல்வதானால் சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை.

தற்பொழுது ஆணைக்குழவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசியாவின் பெரும் சக்திகளான சீனாவுடனும் இந்தியாவுடனும் ஒட்டுறவாடும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் தனது இராஜதந்திர மூலதனத்தை பயன்படுத்துவது பயனுடையதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.

எது நடப்பினும், 3வது பாடத்தையும் சிறிலங்கா தருகின்றது: முற்றுமுழுதான மேற்கத்திய கருத்தியலாக பார்க்கப்படுகின்ற 'மனித உரிமை' என்ற சொல்லாடல் அதன் உளரீதியான வலுவை இழந்துள்ளது. சிறிலங்காவைப் போல் எந்த நாடும் இரட்டை இராஜதந்திரத்தைக் கையாளவில்லை. மேற்குலக அரசாங்கங்கள் அல்லது ஊடகங்கள் ராஜபக்ச மீது விமர்சனங்களை முன்வைக்கும் போதும், அவற்றைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்த ராஜபக்ச தவறவில்லை.

மேற்குலகின் தலைமையிலான இராஜதந்திர அழுத்தங்களும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் பர்மாவில் வலுவாக தொழிற்படத் தொடங்கியிருக்கலாம். ஆனால் புதிய ஆசிய நூற்றாண்டில் இந்த 'மாதிரி' இனிமேல் செல்லுபடி ஆகாது. எது நடக்கப் போகின்றது என்பதற்கான பதிலை மேற்குலகத்திற்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பதிலைக் கண்டறியும் வாய்ப்பினைச் சிறிலங்கா வழங்கியுள்ளது.

இவ்வாறு இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f5814cdd-4cae-46ac-a888-74f6b58bc66e

  • தொடங்கியவர்

The Real Lessons of Sri Lanka's War: A Global Power Shift and the End of Human Rights - Posted by Jyoti Thottam

The Norwegian government also recently released a report on its role in the failed peace process and its attempt to intervene toward the end of the war. Here is what the report says about the same incident:

"In the night between 17 and 18 May, Nadesan (head of the LTTE Political Wing) and Pulidevan (head of the LTTE Peace Secretariat) contact the Norwegians as well as the UK and US embassy, the ICRC, and Chandra Nehru (a Tamil politician in Colombo) indicating their last-minute willingness to surrender. Following hasty negotiations with presidential advisor and brother Basil Rajapaksa, they are told to walk across the frontline with a white flag. The last phone conversation is held shortly before their departure. Hours later they are reported shot."

http://globalspin.bl...t#disqus_thread

Edited by akootha

மேற்குலகால் காட்டப்படும் இந்தத் தந்திரங்கள் எல்லாம் சும்மா தமிழரின் காதுகளில் சுற்றப்படும் பூக்கள். ஏனைய நாடுகளில் மேற்கொண்ட அழுத்தங்களில் ஒரு வீதமேனும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவில்லை. அப்படி நடந்திருப்பின் சிறிலங்கா இந்நேரம் சுருண்டு விழுந்திருக்கும். தமிழரைப் பொறுத்தவரையில் மேற்குலகத்திற்கு மனிதாபிமானமாவது மண்ணாங்கட்டியாவது.

  • தொடங்கியவர்

மேற்குலகம் ஓரளவிற்கு என்றாலும் சில மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, மேற்கொள்ளும். ஆனால், இந்தியாவும் சீனாவுமே எமது அழிப்பிற்கு கூடுதல் காரணமாகும்.

எண்பது மில்லியன் தமிழர்கள் இந்தியாவிலும், ஐந்து இலட்சத்திற்கு மேலாக மேற்குலகிலும் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக உழைத்து சில மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகால் காட்டப்படும் இந்தத் தந்திரங்கள் எல்லாம் சும்மா தமிழரின் காதுகளில் சுற்றப்படும் பூக்கள். ஏனைய நாடுகளில் மேற்கொண்ட அழுத்தங்களில் ஒரு வீதமேனும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவில்லை. அப்படி நடந்திருப்பின் சிறிலங்கா இந்நேரம் சுருண்டு விழுந்திருக்கும். தமிழரைப் பொறுத்தவரையில் மேற்குலகத்திற்கு மனிதாபிமானமாவது மண்ணாங்கட்டியாவது.

இது என்னுடைய கோடி, இங்கே நீங்கள் ஒன்றும் செய்ய கூடாது என்று இந்திய இரானிய கொங்கிரஸ் தடுத்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.