Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினம் 2011: தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் வெற்றியாண்டு அனலை நிதிஸ் ச. குமாரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karthigai-poo_150article.jpg

வருடங்கள் வெகுவாகவே உருண்டோடி விடுகின்றன. இக்காலகட்டத்தில் எதனை நாம் சாதித்தோம் எம்பதை வைத்தே அவ் வருடத்தின் வெற்றி, தோல்வியை நிர்மாணிக்க முடியும். தமிழீழ விடுதலையை மூச்சாக சுமந்து மாண்டவர்களின் கனவுகள் அனைத்தையும் சிங்கள ஏகாதிபத்திய அரசின் இராணுவ கட்டமைப்பு மே 2009-இல் அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தது. மாவீரர்கள் என்பவர்கள் மரணத்தையும் வென்றவர்கள் என்பதை சிங்கள அரசுகள் உணரவில்லை. புனிதமானவர்கள் எப்பொழுதுமே மக்களுடன் வாழ்வார்கள்.

அய்யன் வள்ளுவர், புத்தர் போன்ற மகான்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்திருந்தாலும் அவர்களைப் பூசித்து வழிபடுகிறார்கள் பல கோடி மக்கள். ஆகவே இப்புனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் குறிக்கோள்களுக்கு உரம் கொடுத்தே வருகிறார்கள் அவர்களை பூசிக்கும் மனிதர்கள். அதைப்போலவேதான் 30,000-க்கும் அதிகமான மாவீரர்களை ஈழத்தமிழினம் ஈழ விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்துள்ளது. இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் விதையாக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு விதையிலிருந்து எவ்வாறு பல நூறு விதைகளை நாம் அறுவடை செய்கிறோமோ அதைப்போலவேதான் மாண்ட மாவீரர்களின் கதையும். நவம்பர் 27, தமிழீழ விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசிய நாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும்.

அடுத்த நவம்பர் 27-க்குள் பல நூறு புதிய உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து மாண்ட வீரர்களின் கனவை நனவாக்க உறுதியெடுத்துக் கொள்வார்கள்.

விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்க செய்து இரண்டரை ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. எப்போது தமது தலைவன் தம் முன் தோன்றி அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி விளக்கம் தருவார் என்று ஏங்கித்தவிக்கும் பல இலட்சம் தமிழ் மக்களின் நெஞ்சங்களுக்கு உரம் கொடுக்கும் ஆண்டாகவே இவ்வருடத்தைப் பார்க்க வேண்டும். கடவுள் என்பது சக்தி.

தலைவன் என்பவன் சிறந்த பல தலைமைப் பண்புகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒரு படிமேல் சென்று கூற வேண்டுமாயின் தலைவனும் அதீத சக்தியை தன்னகத்தைக் கொண்டிருந்தால்தான் பல இலட்சம் மக்களை வழி நடத்த முடியும். ஆகவே, சக்தி என்பது எப்பொழுதுமே தூரத்தில் இருந்துகொண்டு வழி நடத்தினால்தான் அதன் தொன்மையை உணர முடியும். அதைப்போலத்தான் தமிழ் மக்கள் ஏங்கித்தவிக்கும் அவர்தம் தலைவரின் இருப்பும், செயற்பாடுகளும். இதனை உணர்ந்து செயலாற்றுவதுதான் மாவீரர்களுக்கு நாம் அளிக்கும் மதிப்பாக இருக்க முடியும்.

இவ்வருட மாவீரர் காலத்தில் உருவாகியிருக்கும் ஈழ விடுதலைக்கான ஆதரவு நிலை:

சண்டையிட்டு பல பேரழிவுகளை சந்தித்த இனமே ஈழத்தமிழினம். வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அழிவுகளைச் சந்தித்தார்கள் தமிழர்கள். இன்னும் பல்வேறுவிதமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இன்றும் எதிர்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள். யுத்தம் முடிவுற்று இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டாலும், இன்னும் சிங்கள அரசின் இராணுவம் தமிழர் தாயகத்தில் குடிகொண்டுள்ளது. முன் எப்போதும் இல்லாதவாறு பல இராணுவ தளங்களை நிர்மாணித்து தமது இருப்பைப் பலப்படுத்துகிறது. போர் முடிவுக்கு வந்துவிட்டதால் எதற்காகப் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவ நிலைகளை அதிகரிக்க வேண்டுமென்கிற குரல் அழுத்தமாகவே ஒலிக்கிறது.

செவிடன் காதில் சங்கூதின கதைபோலத்தான் சிங்கள ஆதிக்க சக்திகளின் செயற்பாடுகளும். யார் என்ன சொன்னாலென்ன, தமிழர் தாயகத்தை தமதாக்க வேண்டுமாயின் இராணுவ பலத்துடன்தான் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் தமிழ் இளைஞர்கள் குறிப்பாக மாவீரர்களை துதிபாடும் இளைஞர் கூட்டம் மீண்டும் ஆயுதங்களை கையில் எடுத்திடுவார்கள் என்கிற மனப்பயத்தில் மூழ்கிப் போயுள்ளது சிங்கள அரசு என்றால் மிகையாகாது. தமிழர்கள் யூத இனத்தினரைப் போன்றவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. புத்தியைக் கொண்டு செயற்படுபவர்கள் தமிழர்கள் என்பதை சரித்திரம் சொல்லும்.

ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியப் பகுதிகளில் இருக்கும் நாடுகள் பலத்த அழுத்தங்களைச் சிங்கள அரசிற்கு கடந்த இரண்டரை வருடங்களாக கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, மனிதவுரிமை மற்றும் போர்க்குற்ற செயற்பாடுகளுக்காக சிங்கள அரச தலைவர்களும் மற்றும் இராணுவ அதிகாரிகளுமே பொறுப்பு என்கிற வகையில் குற்றங்களைச் சுமத்தியுள்ளார்கள். இதனை விசாரிக்க சிங்கள அரசு உடனடியாக தன்னாலான செயற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீறினால் அனைத்துலக நாடுகளின் விசாரணை அவசியம் என்கிற வாதத்தை முன்வைத்து பிரச்சாரங்களைச் செய்கிறது குறித்த நாடுகள்.

அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நாடுகளை வசீகரிக்க தேவையான கருவியே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு. இவ்வாணையத்தின் அறிக்கை மாவீரர்களை போற்றும் வாரத்திலேயே வெளியிடப்படுகிறது. இதுவானது, மாவீரர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியே. இதன் மூலமாக ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் மகிமையை உலகம் அறிய வழிகோலும். குறிப்பாக, பல சிங்கள இராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய படை அதிகாரிகளை யுத்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்த வழிகோணுமென அறிய முடிகிறது. அத்துடன் சில அரச அதிகாரிகளும் விசாரணைகளை எதிர்கொள்வார்கள். இவைகள் அனைத்துமே மகிந்த மற்றும் அவரின் சகோதரர்களைப் பாதுகாக்க உதுவுமென்றாலும், குறித்த சம்பவங்கள் சர்வதேச அளவில் பேசப்படப்போகிறது என்றால் மிகையாகாது.

குறித்த ஆணைக்குழு மேலும் சில பரிந்துரைகளை முன்வைக்குமென்று தெரிகிறது. தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற உண்மையறியும் ஆணைக்குழு போன்றதொரு சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவை சிறிலங்காவிலும் நியமித்து ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிய உண்மையறியும் விசாரணை இடம்பெறும் என்றும் அறியக்கூடியதாகவுள்ளது. இவ்வருட மாவீரரைப் போற்றும் காலப்பகுதிக்கு சற்று முன்னரேதான் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழர் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சென்று முக்கிய இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவுக்கு துதிபாடிவரும் இந்திய நடுவன் அரசிற்கு பலத்த தலையிடியைக் கொடுக்க களம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது இன்னொரு இராஜதந்திர வெற்றியாகவே கருதப்படுகிறது. தமிழக மீனவர்களை முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது சிங்கள கடற்படையினர் கொன்றும் காயப்படுத்தியும் வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த இந்திய நடுவன் அரசிற்கு ஜெயலலிதா தலைமயிலான அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

பல தமிழக அரசியல் கட்சிகள் தமிழக அரசிற்கு பலவிதத்தில் குறித்த சம்பவத்திற்காக நடுவன் அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அரசு சிங்கள அரசிற்கு எதிராக நடவடிக்கைகளைச் செய்யாவிட்டால் தமிழக அரசின் தலைமையில் பலதரப்பட்ட போராட்டங்களை இந்திய நடுவன் அரசிற்கு எதிராக மேற்கொள்ள வேண்டுமென்கிற குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவைகள் அனைத்துமே மாவீரர்களின் கனவுகள் நனவாக்க உதவுவதுடன்�� அவர்களை அழித்த பகைவர்களுக்குச் சாவுமணி அடித்தாற்போல் அமைந்துள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் நேரமிது:

முன் எப்போதும் இல்லாதவகையில் தற்போது சிங்கள அரசு தனது தமிழின விரோத புல்லுரிவிகள் மூலமாக மாவீரரை துதிபாடும் நிகழ்வுகளுக்கு எதிராக செயற்பாடுகளை அதிகரித்துள்ளது. அத்துடன் இப்படியான நிகழ்வுகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு அத்திவாரமிடப்படுமென்கிற கருத்து சிங்கள அரசிற்கு இருக்கிறது. இதன் மூலமாக மீண்டும் புலிகள் உயிர்த்தெழுந்துவிடுவார்கள் என்கிற பயம் சிங்கள அரசிற்கு உண்டு. அத்துடன் இப்படியான நிகழ்வுகள் மூலமாக சர்வதேச நாடுகளின் அனுதாபத்தைத் தமிழர்கள் பெற்றுவிடுவார்களோ என்கிற சலனமும் சிங்கள அரசிடம் இருக்கிறது.

சிங்கள அரசின் அனைத்துவிதமான இராஜதந்திர வேலைத்திட்டங்களை முறியடிக்க வேண்டுமாயின் தமிழர் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து மாவீர்களைப் போற்றும் நிகழ்வுகளை இணைந்து செய்ய வேண்டும். தமிழ் மக்களால் உன்னதமாக மதிக்கப்படும் மாவீரர்களுக்காகக் கொண்டாடப்படும் மாவீரர்தினம் வெறும் அடையாள நிகழ்வோ கேளிக்கை நிகழ்வோ அல்ல. வணங்குதலுக்குரிய போற்றுதலுக்குரிய நன்நாள். தமிழீழத்தின் புனிதநாளான மாவீரர்நாள் நினைவெழுச்சி நாளாகத் தேசமெங்கும் பரந்து நிற்கும். களமும்இ புலமும் ஒரே குடையில் இணைந்து நின்று அந்த நாளை வரவேற்கும்.

தற்போது ஈழத்தில் தமிழினம் கொடியவனின் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தாலும் ஆறாத வடுக்களுடன் அவல நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இனத்தின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகூரத் தயாராகி வரப்போகும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளைக் காண எதிர்பார்த்து நிற்கிறார்கள் களத்திலும்இ புலத்திலும் வாழும் தமிழ் மக்கள்.

விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம். இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் மக்களை வழி நடாத்துபவர்கள் அவர்களின் சக்தியான மாவீரர்களே. இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும். இதனை அனைத்து தமிழர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அணுகுமுறைகள் சார்ந்து தமிழர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அனைவரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சு10ழலில் மிக இயல்பானவை. குறிப்பாக புலம்பெயந்து வாழும் தமிழர்கள் பல முன்னணி ஜனநாயகச் சூழலைக்கொண்ட நாடுகளிலேயே வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் தம் நாடுகளின் அரசியல் விழுமியங்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும். இதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் மாவீரர்கள் என்பவர்கள் அனைத்து தமிழ் மக்களுக்கும் உருத்துடையவர்கள். இதனடிப்படையில் அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து இந்த வருட மாவீரர் நாளை நடத்துவதுதான் சாலச்சிறந்ததாக இருக்க முடியும்.

மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் கிடையாது. அத்துடன் எதிரிகளின் வலையில் தமிழ் மக்கள் விழுந்துவிடாமல் ஒரு குடையின் கீழ் செயற்படுவதன் மூலமாக எதிரியின் சதிவலையை கிழித்தெறியலாம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இந்த வருட மாவீரர் காலம் என்பது பலதரப்பட்ட இராஜதந்திர வெற்றிகளுடன் இடம்பெறப்போகிறது. மாவீரர்கள் கண்ட கனவு மெய்ப்பிக்கப்பட காலம் கனிந்து வந்துள்ளது. இதனை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

மாவீரர்களைப் பூசித்து வணங்கும் ஒரு புனிதமான பணி தமிழர்கள் அனைவர் முன்னும் காத்திருக்கிறது. இறைவனின் அருளைப் பெற எவ்வாறு நாம் வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுகிறோமோ அதைப்போலவேதான் மாவீரர்களின் கனவை நனவாக்க நாம் அனைவரும் அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று ஒன்றிணைந்து பூசித்து வணங்க வேண்டும். இதன் மூலமாக இறைவனிடத்திலிருந்து எவ்வாறான பலன்களை நாம் வேண்டுகிறோமோ அதற்கு மேலாகவே மாவீரர்களைப் பூசிப்பதன் மூலமாக இறையருளைப் பெறமுடியும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:

nithiskumaaran@yahoo.com

http://www.seithy.com/breifNews.php?newsID=52315&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.