Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள்

Featured Replies

2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள் - ஆக்கம்: எஸ்.யே. இம்மானுவேல்

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய எனது தமிழ் ஈழ சகோதரங்களே என்னும் சில தினங்களில் ஈழத் தமிழர் அனைவரினாலும் மதிப்புடன் நினைவுகூரப்படும் மாவீரர் தினத்தை எமது தேசிய எழுச்சி நாளாக அனுட்டிக்கிறோம்.

தேசிய வழிபாடு. உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூருதல் எப்படி எழுச்சி நாளாகும். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் சாவிலும் வாழ்வோம். வீழ்ந்தாலும் எழுவோம் எனத் திடம் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். ஆகையினால் தான் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீர்த்தவர்களை நன்றியுணர்வுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்வதுடன் அந் நிகழ்வை ஊற்றாகக் கொண்டு மாவீரரின் வீரத் தியாகத்தின் உணர்வை உள்வாங்கி நாமும் வீரத் தியாகத்துடன் எழுச்சி பெற்று போராட எம்மைத் தயார் செய்கின்றோம். இத் தினத்திற்குரிய புனித தத்துவத்தை மாசுபடுத்தாது, அதை எமது இனத்தின் தேசிய வழிபாடு போல மதித்து நடந்து கொள்ளுமாறு எல்லோரையும் ஒழுங்குபடுத்தும் பணியாளர்களையும் பங்குபற்றும் பொது மக்களையும் பணிவுடன் வேண்டுகின்றேன்.

இப் புனித நிகழ்வை மாசுபடுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் சில்லறைச் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் தவிர்த்து நடக்க இதய சுத்தியுடன் முயற்சியுங்கள். இந்த ஆண்டு எம்மை எட்டும் தகவல்கள் மிக மிக மன வருத்தத்தைக் கொடுக்கின்றன.

முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்

இந்த நாளின் நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலுக்கு முன்பு செய்தது போல எல்லாம் செய்ய முடியாததையிட்டு நாமும் எல்லோரும் வருந்துகின்றோம். ஆனால் இன்றைய சூழலுக்கும் தேவைக்கும் தற்போதைய சவால்களுக்கும் உகந்ததாக இந்நாளை அனுட்டிப்பதே நீதியும் பொருத்தமுமானது. அதாவது மக்களுக்கு தாயகம் மீட்க தன்னுயிர் நீர்த்த மாவீரரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை நினைவுபடுத்தி இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், துன்பங்களையும் எதிர்த்து போராட தேவையான மக்கள் சக்தியைப் பெருக்க அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

எமது போராட்டத்தின் புதிய மரிமாணத்தையும் சூழலையும் அதன் வெவ்வேறு சவால்களையும் தேவைகளையும் இன்னும் நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் போராட்டத்தின் புதிய கட்டத்தை நடத்த வேண்டிய புலம்பெயர் மக்கள் அதிகமானோர் இன்னும் சரியாக தம்முடைய பங்கையும் பணிகளையும் விளங்கவில்லை. இத் தெளிவற்ற நிலையே இன்று எம் மத்தியில் இருக்கும் பிரச்சினைகள் பிரிவினை பலவற்றிற்கு காரணமாயிருக்கிறது.

முள்ளிவாய்க்காலினான் முன் போரும் போராட்டமும் வன்னித் தலைமைத்துவத்தின் கீழ் ஈழத்தில் நடந்தது. புலம்பெயர்ந்த மக்கள் உணர்விலும் உதவியிலும் ஒன்றித்திருந்தனர். ஆனால் இன்று வன்னித் தலைமைத்துவமும் இல்லை. அங்கு ஆயுதப் போருமில்லை. அங்கு எஞ்சி இருக்கும் எழுந்து நின்று உரியமுறையில் போராட சக்தியுமில்லை. வசதியுமில்லை. இந் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர் முடிந்தாலும் போராட்டம் தொடரும், வீழ்ந்தாலும் எழுவோம் சாவிலும் வாழ்வோம் என்பதற்கு ஒப்ப போராட்டத்தை தொடருகின்றோம்.

போராட்டத்தின் கட்டமைப்புக்கள்

இப் புதிய கட்டத்திற்கு இலட்சியத் தெளிவு ஏற்படுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளவும் உறுதிப்படுத்தினோம். இவ்விலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு புதிய முயற்சியை நாடு கடந்த அரசாங்கம் என்ற கட்டமைப்பில் முயலுகின்றோம். எமது போராட்டத்தின் சர்வதேச சவால்களை சந்திக்கவும் செயல்படவும் ஏற்கனவே நாடுகளின் மட்டத்தில் செயற்பட்டு வந்த அமைப்புக்களை இணைத்து உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்தோம். ஈழத்தில் எஞ்சியிருக்கும் எமது உறவுகளையும் அவர்களின் தேவைகள் உரிமைகளை பிரதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனும் பொருத்தமான உறவையும் தொடர்புகளையும் பேணி வருகின்றோம். இப்படி போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்துன் அமைப்புக்கள் மக்களை வரும் புதிய சவால்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து செயற்படுவதில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளையில் அந்தந்த நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் மக்களை விசேடமாக இழையரை ஒன்றிணைத்து அவர்கள் சார்பில் அந்தந்த அரசாங்கங்களுடனும் அங்கேயுள்ள அரசுசார்பற்ற நிறுவனங்களுடனும், எமக்கு சார்பான பரப்புரைகளையும் பரிந்துரைகளையும் செய்ய முயலுகின்றோம். இது போராட்டத்தின் ஒரு முக்கிய இன்றியமையாத பகுதி

நிகழ்ச்சிகள் எமக்குள், போராட்டம் வெளி சக்திகள் அமைப்புக்களுடன்.

மக்கள் மத்தியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மக்கள் சக்தியை பெருக்குவதற்கு இன்றியமையாதவை. ஆனால் அவைகளைப் போராட்டமென்றாற் போல அவைகளிலே முழுக் கவனத்தையும் செலுத்தக் கூடாது. மனிதனுக்கு சாப்பிடுவது அல்லது சக்தி திரட்டுவது முக்கியம். ஆனால் அது வாழ்வாக அமைய முடியாது. செய்ய வேண்டிய பணியாக அமைய முடியாது. சக்தி திரட்டும் நிகழ்வுகளையும் போராடவேண்டிய சக்தி அமைப்புகளையும் சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டும்.

துரதிஸ்டவிதமாக இன்று சிலர் நினவுநாள் நிகழ்ச்சிகளையும் அமைப்புகளையும் மாத்திரம் மையப்படுத்தி நடக்கின்றர். நாம் இலட்சியத்தை மையப்படுத்தி அமைப்புகளையும் தனிநபர்களையும் இலட்சியத்தின் பணியாளர்களாக நடந்து கொள்வோமாயிருந்தால் நமது போராட்டம் வேகத்திலும் வீரத்திலும் முன்னேறும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய கட்டத்தின் தன்மையையும் சவால்களையும் உண்மையாக உணர்ந்து மும்முரமாகவும் முழுவீச்சுடனும் செயற்படவேண்டிய நேரமிது. ஈழத்தில் சிங்கள அரசாங்கம் இரவு பகலாக எம் மண்ணையும் மக்களையும் அழித்துக் கொண்டு வெளி நாடுகளில் பொய்ப்பிரச்சாரத்துடன் எமக்கெதிரான போரை மும்முரமாக விஸ்தரிக்கும் தருணத்தில் புலம்பெயர்ந்த மக்கள் முபொருபொழுதும் இல்லாத வகையில் போராட வேண்டிய நேரம் இது. தனித்தனி நாடுகள் ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் போராட நாம் எல்லோரும் அழைக்கப்படுகின்றோம்.

ஆகையினால் அன்பானவர்களே தளராத இலட்சிய உறுதியுடனும் தெளிவான பார்வையுடனும் ஆழமாக அர்ப்பணிப்புடனும் பொருத்தமான பங்களிப்பைச் செய்ய உங்களை பணிவுடன் அழைக்கின்றோம்.

பணியாளன் – எஸ்.யே. இம்மானுவேல்

ஜேர்மனி

21-11-2011

மூலம்: உலகத் தமிழ் பேரவை

பிரசுரித்த நாள்: Nov 27, 2011 17:06:38 GMT

Edited by akootha

  • தொடங்கியவர்

தனியனாக நின்று தணலேற்றிய தம்பியின் தூரப்பார்வை..

இன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். பலாலி முகாமில் இருந்து பனாகொட முகாம்வரை ” எங்கு விடியப்போகிறதோ..? ஐயோ..! எப்படி விடியப்போகிறதோ..? ” என்று சிங்கள இனவாதத்திற்கு கெடிக்கலக்கத்துடன் விடிவதுதான் மாவீரர் தினத்தின் விடியலாக இருந்தது.

அது அன்று ஆனால் இன்று காலம் மாறியிருக்கிறது.. ஆனால் சவால் மாறவில்லை..

” புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் இந்த நாட்டில் 24 மணி நேரத்தில் சமாதானம் மலர்ந்துவிடும்..” என்றான் சிங்கள இனவாதி ஜே.ஆர்.

இன்று..

ஆயுதங்கள் மௌனித்துக் கிடக்கின்றன.. சிங்களவன் சத்தமில்லாமல் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்துக் கொண்டிருக்கிறான்.. பிரபாகரன் வீட்டை இடித்துக்கொட்டி, அவன் வீட்டுக்கு அருகில் இருந்த ஆலமரத்தைத் தறித்து புத்தவிகாரையும், புனித வெள்ளரசு மரமும் வைக்க துடித்துக் கொண்டிருக்கிறான்.

ஆயுதங்களை போடுங்கள் என்று சொன்ன அயலில் உள்ள அறிவிலிகள் எல்லாம் அவனோடு சேர்ந்து கும்மாளமடிக்கின்றன… மாவீரனோ துயிலிடமும் இல்லாமல் தூபியும் இல்லாமல் துன்மார்க்கர் கூட்டத்திடையே துறவியாகி நிற்கிறான்.

அடடா அன்று..

கங்கை கொண்டான் சோழன், இமயத்தில் புலிக்கொடி பதித்தான் நம் இராஜேந்திரன், கனகவிசயர் தலையில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்தான் சேரன் செங்குட்டுவன் என்று திரைக்கதை எழுதிய தமிழக வீரர்கள் வன்னியில் நடப்பதைப் பார்த்துவிட்டு திரை மூடி இருந்தார்கள். இவர்கள் எமக்கு தொப்புள் கொடி உறவுகள் என்றார்கள் சில வெத்து வேட்டு தமிழர்கள்… மாவீரன் மௌனமாகவே அந்தத் திரைப்படத்தையும் வீர வசனங்களையும் பார்த்துச் சிரித்தான்.

பயங்கரவாத பட்டியலிட்ட உலகம் புதுமாத்தளனையும், முள்ளிவாய்க்காலையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வாரத்தில் 140.000 பேர் கொன்று குவிக்கப்பட்டபோது.. பெண்கள் நிர்வாணமாக்கி கடித்துக் குதறி ஓநாய்கள் தின்பது போல தின்னப்பட்டபோது தன் பட்டியலை அது சரி பார்த்துக் கொண்டிருந்தது..

தண்டனை வழங்கப்படாத இந்தக் குற்றங்களுக்கு நீதிகேட்க.. அதைத் தடுக்க வக்கற்ற.. உலக சமுதாயம் பயங்கரவாத பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்ட அவலத்தையும் மாவீரன் பார்த்துக் கொண்டிருந்தான் மௌனமாக..

நச்சுப் புகை அடித்து நம் வீரர்கள் கொல்லப்பட்டபோது.. போர் விதிகள் மீறப்பட்டபோது.. உலகத்தின் அதி நவீன சற்லைற்றுக்களால் அவதானிக்கப்பட்டு எதிரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது.. புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மூழ்கடிக்கப்பட்டபோது.. வெள்ளைக் கொடியுடன் வந்தவன் வெட்டி வீழ்த்தப்பட்டபோது.. சற்லைற்றுக்களால் பார்த்து உலக நாகரிகம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வெட்கங்கெட்டவர்களின் நாடுகளின் பட்டியலிலா தமிழீழ தேசமும் இடம் பெறப்போகிறது..

மாவீரன் முதல் தடவையாக வெட்கப்பட்டான்.

பின்பொருநாள்..

சனல் 4 தணலாக வெளிவந்தது, ஐ.நாவின் அறிக்கை வந்தது, நோர்வேயின் குற்ற ஒப்புதல் வந்தது.. அநீதியில் இருந்து தப்பிக்கொள்ள துடிக்கும் அந்த உலக அவலங்களை எல்லாம். மாவீரன் பார்த்து காறித் துப்பினான்.

” வந்த பின் அறிக்கை விடும் பேடிகள் அல்லடா நாம் வருமுன் காப்பதற்காக அவன் போராடிய வீரர்..! ” என்று சொல்லாமல் சொன்னான். உலகை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராடினான்,

தன்மானத்துடன் தூய தமிழ்க் காற்று வெளியில் கலந்தான் – அவன் மாவீரன். அவன் வாழ்விலும் அர்த்தமுண்டு.. அவன் இறப்பிலும் அர்த்தமுண்டு..!

மாவீரன் என்பவன் ஒருவனல்ல.. இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் கொடுத்த தமிழ் மான ஈகம்..! வீரம்..! ஆதித் தமிழன் போற்றிய அகில உலக நாகரிகம் ! அதற்கு வடிவம் கிடையாது.. அதற்கு தூபியும் கிடையாது, தூண்களும் கிடையாது..

பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வடித்த தன்மான வீர இலட்சிய வடிவம் அது..

புறநானூற்றில் வரும் புகழ் வீரனெல்லாம் தூபிக்குள்ளா இருக்கிறான்..? மாவீரனுக்கு துயிலிடம் கிடையாது.. ஏனென்றால் அவன் துயில்வதில்லை.. எதிரியிடம் தண்ணீரும் வாங்கிக் குடிக்க மறுத்து, மானத்திற்காக உயிர்விட்ட சங்கத்தமிழ் வீரனுக்கு எதிரி மாநில ஆட்சியை கொடுத்தால் வாங்குவானா..? ஒப்பிட்டுப்பார்…!

மாவீரர்நாளை இன்று போட்டிக்கு நடத்துகிறான் தமிழன் என்று கூறி தமிழ் மானத்தை குலைக்க முயல்வோரையும் மாவீரன் பார்க்கிறான்..

போட்டிக்கு நடாத்துகிறான் என்று ஒருவனை ஒருவன் கொச்சைப் படுத்தினால் நம்மை நாமே அழிக்கும் நாசமே மீண்டும் மிஞ்சும்… போட்டிக்கு நடத்தவில்லை அவன் போட்டி போட்டு நடாத்துகிறான்.. அவன் வாழ்க..! என்று திருப்பிப் போடு.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மாவீரனுக்காக நீயும் ஒரு மலரெடுத்துப் போடு.

மாவீரர் சமாதிகளை இடிப்பவனை மட்டுமல்ல.. அதை இடிக்காமல் இடிப்பவர்களையும் மாவீரன் அறிவான்…

அவன் அறியாதது எதுவும் இல்லை..

எல்லோரையும்… எல்லாவற்றையும் அறிந்தவன் மாவீரன்..

அதனால்தான்..

எல்லோரையும் தள்ளி நிற்கும்படி கூறிவிட்டு தன்னந் தனியனாக வந்து தன் மாவீரத் தம்பியரின் ஈகச் சுடரில் தனி ஒருவனாக நின்று தணலேற்றினான் பிரபாகரன்..

கடுகளவும் கறைபடியாத காந்த நெருப்பு…!

அவன் ஏற்றிய நெருப்பின் ஒளிக்கு முன்னால் போலிகள் எல்லாமே பொசுங்குவதே வரலாறு..

உலக நாகரிகத்தில் ஏற்றப்பட்ட முதல் தமிழ் விளக்கை இன்றுவரை அணையவிடாது காத்த அந்த வீரத் தமிழ் மறவருக்கு இதயத்தால் அஞ்சலிகள்..

எமக்கு செய்த இழி செயலை எம் எதிரிக்குக்கூட செய்ய மாட்டோம்.. செய்தால் எங்கள் வீரம் அக்கணமே செத்துவிடும் என்று உலகுக்கு சொல்லி உயிர் கொடுத்த மாவீரனுக்கு முன்னால் மாபெரும் உலகமே தலை சாய்த்து நிற்கிறது.

உழுத்துப் போன உலகத்தை உதறிவிட்டு தனியனாக தம்பிகளுக்கு விளக்கேற்றிய தம்பி பிரபா நீ வாழ்க..!!

http://www.alaikal.com/news/?p=89063

Edited by akootha

உழுத்துப் போன உலகத்தை உதறிவிட்டு தனியனாக தம்பிகளுக்கு விளக்கேற்றிய தம்பி பிரபா நீ வாழ்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.