Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பேரினவாதத்தின் நவீன நில ஆக்கிரமிப்பு உத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பேரினவாதத்தின் நவீன நில ஆக்கிரமிப்பு உத்தி

ஆக்கம்: இதயச்சந்திரன்

லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. நீண்ட காலமாக லண்டனில் இயங்கிவரும் வானொலி ஒன்றினால் எங்கு மக்கள் செல்ல விரும்புகிறார்கள் என்கிற கருத்துக் கணிப்பென்ற பெயரில் ஒரு அபத்தம் நிகழ்ந்தது.

கருத்துக் கணிப்பிற்கான விடயமல்ல இதுவென்பதைச் சுட்டிக் காட்டியவுடன் 'பிரதேசவாதி' என்கிற பட்டத்தை அவ் வானொலி சூட்டியது. ஆகவே, இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் போக்குக் காணப்படுகிறது.

இதுவும் ஒரு ஊடகத்தால் ஏனைய ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாகவே கருதப்படும்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 'மாவீரர் தின அறிவித்தல்' சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது போன்று, ஐரோப்பாவில் மாவீரர் தின போட்டிக் குழுக்களிடையே வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது வருந்தத்தக்கது.

அதேவேளை, வாகரைப் பிரதேசத்திலுள்ள கண்டலடி மற்றும் கரடியனாறு மாவீரர் துயிலுமில்லங்கள் படையினரால் அழிக்கப்பட்டாலும் இந்த வாரம் முழுவதும் புலனாய்வுப் பிரிவினர் அப்பகுதியை நோட்டமிடுவதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

காரைநகரிலுள்ள கோயில் மணிகளுக்கும் வாய்ப்பூட்டு. தீபங்களுக்கு ஒருவார கால கட்டாய விடுமுறை. வாயைப் பிளந்து நிற்கும் ஒலிபெருக்கிகள், சத்தம்போடக் கூடாது. நல்ல ஜனநாயக நாடுதான் இலங்கை.

மாவீரர் வாரத்தில் தாயகத்தின் நிலைமை இது.

சிறு பொறியொன்று பெரும்காட்டுத் தீயினை உருவாக்கிவிடக்கூடிய இயங்கியல்பூர்வமான யதார்த்த நிலை நிலவுவதால் கலாசார நிகழ்வுகளுக்குத் தடை போடுகிறது அரசதிகாரம். பன்மைத்துவ கலாசார அரசியலின் அவசியம் என்பதெல்லாம் குறைந்தபட்ச ஜனநாயகம் மக்கள் மத்தியில் நிலவும் நாடுகளுக்குப் பொருந்தும். ஆனாலும், தமிழர் தாயகத்தில் போரினால் சிதைந்து போன சமூகக் கட்டுமானங்களை மீட்க வேண்டுமென்கிற அக்கறை குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.

வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்து தொழிற்சாலைகளை நிறுவுவதோடு மின்சாரத்தை உற்பத்தி செய்தால் மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்பி விட்டார்களென்று அர்த்தப்படுத்திவிட முடியாது.

அதேவேளை, இலங்கையின் அரசியல் அதிகாரம் முறைமையை மாற்றியமைக்காமல் தேசிய இனங்களுக்கிடையே குறைந்தபட்ச நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. நாம் இலங்கையர் என்கிற உணர்வு தமிழ் பேசும் மக்களிடையே உருவாக வேண்டுமாயின் தமிழர் தேசத்தை பெரும்பான்மையினம் அங்கீரிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை முன்வைக்கிறார்களெனக் கூறுவதன் ஊடாக தேசிய இனமொன்றின் இறைமை சார்ந்த பிறப்புரிமையை அரச தரப்பு நிராகரிக்க முனைகிறது. கூட்டமைப்போடு அரசு பேசும் அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றினையும் அமைக்கிறது.

அத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை இணைப்பதன் ஊடாக, தமிழர் அரசியல் தரப்பினை தனித் தரப்பாக ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டினை நிராகரிக்கும் பொறியொன்றினை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதெனலாம்.

ஆனாலும் இதற்கு உடன்பட மறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, சரியானதொரு நகர்வாகவே கருத வேண்டும். எட்டப்படும் அரசியல் தீர்வு முன்மொழிவினை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கலாமென்கிற கூட்டமைப்பின் கருத்து, அநேகமாக அரசு விரிக்கும் அதே பொறிக்குள் தாமாக விழும்சந்தர்ப்பத்தை உருவாக்கி விடலாம்.

அரசு உருவாக்கும் புதிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கையானது காலத்தை நீட்டிச் செல்லும் தந்திரோபாயமாகப் பார்க்கலாம். ஏற்கெனவே திஸ்ஸ விதாரன தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் குழுவானது, தீர்வு தொடர்பான தனது ஆய்வினை மேற்கொண்டது. ஆகவே, விதாரன குழு வைத்த தீர்வுப் பொதியை கூட்டமைப்போடு நடத்தும் பேச்சுவார்த்தை மேசையில் அரச தரப்பினர் முன்வைக்கலாம். அதனை விடுத்து மீண்டுமொரு முறை விதாரன குழு போன்றதொரு புதிய குழுவினை அமைக்க வேண்டியதன் அவசியம், அரசிற்கு ஏன் ஏற்படுகிறதென்பதை உற்று நோக்கினால், அரசிடம் தீர்வு ஏற்பட வேண்டுமென்கிற எண்ணம் கிடையாதென்பதை உணரக் கூடியதாகவிருக்கிறது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணையமாட்டோமென கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டிற்கு மாற்றீடாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு முன் வரலாம். அத்தேர்தலில் மந்திரி பிரதானிகள் களமிறக்கப்பட்டாலும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் என்பதையும் அரசு உணரும். அவ்வாறான எதிர்பார்த்த நிகழ்வு நிகழும் பட்சத்தில், வடக்கிலுள்ள தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்கி விட்டோம் என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்குக் கூறியவாறு, நிரந்தர தீர்வு குறித்த பேச்சுவார்த்தையிலிருந்து அரசு நழுவிச் செல்லலாம்.

அதேவேளை, மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறித்து கூட்டமைப்போடு பேசப் போவதாகக் கூறப்படும் விடயங்களும் தேவையற்ற தொன்றாக மாறிவிடும். ஆகவே, அரசியல் தீர்வு குறித்த சரியானதொரு முடிவு எட்டப்படாமல், வட மாகாண சபைத் தேர்தல் என்கிற பொறிக்குள் கூட்டமைப்பு வீழ்த்தப்பட்டால், நிரந்தரத் தீர்வு என்கிற முக்கிய விவகாரம் கானல் நீர் போலாகும் சாத்தியங்கள் வலுப்பெறும்.

இவை தவிர, தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான அரங்குகளை தமது நலனிற்கேற்ப வடிவமைப்பதில் அரச தரப்பினர் ஈடுபடும் அதேவேளை, நில அபகரிப்பிற்கான நவீன உத்திகளை யாழ். குடாவில் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. கல்லோயாவிலிருந்து ஆரம்பித்து மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பெருமளவு கிழக்கு மாகாண நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட பெரும்பான்மையின ஆட்சியாளர்கள், அதேபோன்றதொரு முறைமையினை நாவற்குழியில் ஆரம்பித்தார்கள்.

இன்று அபிவிருத்தி, மக்கள் முன்னேற்றம் என்கிற போர்வையில் பன்னாட்டுக் கம்பனிகளை வடக்கிற்கு வரவழைத்து, நிலங்களை அபகரிக்கும் புதிய உத்தியை அரசு கையாள்வதுபோல் தெரிகிறது. 35 மெகா வட் மின் உற்பத்திக்காக மலேஷியாவின் கே.எல்.எஸ். எனேர்ஜி (KLS Energy) என்ற நிறுவனம் வட பகுதிக்கு வருகிறது. காற்று மற்றும் சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி மின்சாரம் பெறும் திட்டமே அது.

கடந்த மாதம் இந்த மலேஷிய நிறுவனமானது, China Machinery and Energy Corporation உடன் ஒப்பந்தமொன்றினைச் செய்தது. மின்சார உற்பத்திக்கான காற்றலைகளையும் சூரிய சக்தியில் இயங்கும் மின் உற்பத்தி தளபாடங்களையும் நிறுவுவதற்கான இடமாக காங்கேசன்துறையிலிருந்து பருத்தித்துறை வரையான கடலோரப் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே இப்பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புகளை அகற்ற வேண்டிய அவசியம் அரசிற்கு ஏற்படுகிறது.

ஏற்கெனவே யுத்தத்தின் காரணமாக இப்பகுதியில் வாழ்ந்த 60 ஆயிரம் மக்கள், 1992, 1995 ஆண்டளவில் வெளியேற்றப்பட்டு இன்னமும் நலன்புரி நிலையங்களிலும் புனர்வாழ்வு மையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கின்றார்கள்.

இந் நிலையில் மின்சார உற்பத்தி என்கிற அபிவிருத்திப் போர்வையில் மீதமுள்ள மக்களை வெளியேற்றி, அவர்களின் பூர்வீக நிலங்களை நிரந்தரமாகப் பறிக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட முனைகிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு மின்சக்தி அத்தியாவசியம் என்கிற வியாக்கியானத்தை அரசு முன்வைக்கலாம். ஆனாலும் அபிவிருத்தி என்பது மக்களின் இயல்பு வாழ்வு சிதைவடையாமல் மேற்கொள்ளப்படும் விடயமாக இருக்க வேண்டும்.

பன்னாட்டுக் கம்பனிகளின் மூலதனச் சுரண்டலுக்கான பூர்வீக தேசிய இனமொன்றின் நிலங்களைப் பறிப்பது, ஒருவகையில் அடிக்கட்டுமானத்தின் மீதான இன அழிப்பு என்கிற வரையறைக்குள் உள்ளடக்கப்படும்.

அதேவேளை, 2012 ஆம் ஆண்டிற்காக உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் கூறப்படும் 468.9 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இலங்கை நாணயத்தின் பெறுமதியை 3 சதவீதத்தினால் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கலாமென்று

அரசு கற்பிதம் கொள்கிறது. இதைவிட சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற கடனில் ஆண்டொன்றிற்கான வட்டியோடு கூடிய கடன் தொகை, ஏனைய பன்னாட்டு வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனிற்கான வருட வட்டி மற்றும் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் முதிர்ச்சியடையும் அரச முறிகளை (BOND) மீளச் செலுத்தும் தொகை போன்ற பாரிய நிதி நெருக்கடிகளிலிருந்து விடுபட,வட கிழக்கில் முதலிட வருமாறு சர்வதேச நாடுகளை அரசு வருந்தி அழைக்கிறது.

இதில் நிலப்பறிப்பு என்கிற விடயத்தை மிக அவசியமானதாக அரசு கருதுகிறது. இருப்பினும் குடியிருக்க நிலமில்லாமல், இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வாழும் தமிழ் மக்களிடம் அபிவிருத்தி பற்றி பேசுவது அபத்தமாகவிருக்கிறது. ஆகவே உலகமயமாதலில் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள், காணாமல் போகடிக்கப்படும் நிலை காணப்படுகின்றதென்கிற உண்மை, இலங்கை போன்ற நாடுகளில் நிதர்சனமாகிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு, நாணயத்தின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்கின்றோம் என்கிற விளக்கத்தை அரசு கொடுத்தாலும், பொருளாதார வீழ்ச்சியின் குறியீடாக இவ்விவகாரத்தை நோக்கும் இன்னொரு பார்வையும் உண்டு.

மூலம்: வீரகேசரி - கார்த்திகை 27, 2011

பிரசுரித்த நாள்: Nov 29, 2011 15:05:46 GMT

அரசு கற்பிதம் கொள்கிறது. இதைவிட சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற கடனில் ஆண்டொன்றிற்கான வட்டியோடு கூடிய கடன் தொகை, ஏனைய பன்னாட்டு வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனிற்கான வருட வட்டி மற்றும் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் முதிர்ச்சியடையும் அரச முறிகளை (BOND) மீளச் செலுத்தும் தொகை போன்ற பாரிய நிதி நெருக்கடிகளிலிருந்து விடுபட,வட கிழக்கில் முதலிட வருமாறு சர்வதேச நாடுகளை அரசு வருந்தி அழைக்கிறது.

Sri Lankan president calls influential Tamil diaspora to invest in post-war progress

"We have launched several programs to develop the north and help our people. There is a need to provide entertainment for the north with more facilities for sports and recreation in addition to building more hotels. Both the private sector and diaspora could play an active role in the north," he was quoted as saying in the statement.

http://english.peopledaily.com.cn/90777/7661743.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.