Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத் தொழிலாளர்களை தமிழர் தாயகப் பகுதியில் அரசு திட்டமிட்டுக் குடியேற்றுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

north_001.jpg

வட கிழக்கு மாகாணங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க உள்ளதாகவும் இறப்பர் உற்பத்தியினை அதிகரிக்கவேண்டுமெனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவித்ததன் பின்னணியில், சிங்கள மக்களை தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்டு குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்டு குடியேறி வந்த சிங்களக் குடியேற்றங்கள், யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தீவிரமாக அரசாங்கத்தின் ஆசியுடன் குடியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்து தமிழர் தரப்பு பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசு சர்வதேச அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தற்போது இறப்பர் செய்கையை ஊக்குவிக்கப்போவதாக வெளிப்படையாக அறிவித்து அதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்பர் பயிர்ச்செய்கையில் பல வருடங்களாக அதிகளவில் சிங்களவர்களே தென் இலங்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கில் பல்வேறுவிதமான விவசாய நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தாலும், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு இறப்பர் பயிர்ச்செய்கை பற்றிய தொழில்சார் ரீதியான அறிவோ அனுபவமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறப்பர் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்போகிறோம் என வெளியுலகத்திற்குத் தெரிவித்துக் கொண்டு, இறப்பர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் பராமரிக்கவும் சிங்களத் தொழிலாளர்களை எமது தாயகப்பிரதேசத்தில் குடியேற்றி தமிழர் தாயகப்பிரதேசத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றவதே அரசின் நீண்டகாலத்திட்டமென எமது புலனாய்வு செய்தியாளர் அறிக்கையிட்டுள்ளார்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான சிங்கள குடியேற்றமானது தமிழர் தாயகத்தில் எதிர்காலத்தில் பலவேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.../newsite/?p=647

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களுக்கு இலவச தமிழ் படங்களை, சீரியலுகளை போட்டு காட்டி சோம்பேறியாக்கி வைத்திருக்கலாம்.

மற்றும் கொஞ்ச நாளில் அவங்கள் சுத்த தமிழில் பேச தொடன்கிவிடுவாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.