Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனென்றால் நாங்கள் வாழ்வதற்காக நீங்கள் இறந்தீர்கள் அல்லவா! சிட்னியில் இருந்து பிரமி ஜெகன்

Featured Replies

பிராமி ஜெகன் இவர் அவுஸ்ரேலியாவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போர்க்குற்ற வழக்குத்தாக்கல் செய்த ஜெகன் அவர்களின் புதல்வி. நடந்து முடிந்த மாவீரர் நாள் நிகழ்வும் அதில் தமிழர்கள் எதனை சர்வதேசத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

.

உலகத்தில் தமிழர்கள் வாழும் நாடுகளில் அனைத்து இடங்களிலும் நவம்பர் 27 இல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் எங்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். நானும் சிட்மியில் உள்ள சிலவர் வோட்டர் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கு 2000 ஈராயிரம் வரையான மக்கள் எமது மாவீரர்களுக்கும் இறுதிப்போரில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் மக்களிற்குமாக அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர்.

.

பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எனவும் மனதிற்குள் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் ஓடின. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது எனது கொடும்பம் அதாவது அம்மாவும் நானும் எவ்வளவு வேதனைப்பட்டோம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நாம் தத்தளித்துக்கொண்டுதான் இருந்தோம் அதற்கு முக்கிய காரனமாக இருந்தது எனது அப்பாவும் முள்ளிவாய்க்காலிற்குள் இருந்தார். ஒவ்வொரு தடவையும் குண்டுத்தாக்குதல் செய்தி வரும்போதும் முதலில் எனது அப்பாவின் விபரங்கள் இருக்கின்றதா என்று பார்க்கும் நிலை எமக்கு.

.

அதே வேளை எனது மனதி|ற்குள் ஓர் அற்புதமான தாயக நினைவும் ஓடியது; ஆம் அது ஒரு நாள் இரவு தாயகத்தில் முழு நிலவை ரசித்துக்கொண்டு விடிய நான்கு மணிவரை அரசியல், போர் , சமாதானம் பற்றி பேசினோம். எனது போராளி நண்பர் திரு. கே. என்பவருடன் வாழ்க்கை, அன்பு பற்றியும் பேசினோம். நான் இருட்டிற்குள் இருக்க மாட்டேன் என்பதற்காக அவர்கள் விடிய விடிய மின்பிறபாக்கி மூலம் மின்சாரம் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த அன்புக்குரிய நண்பர் போரில் வீரச்சாவு அடைந்துவிட்டார். இந்த எண்னங்கள் எல்லாம் எனது மனதில் வந்துபோகின்றன.

.

என்னை மக்கள் கேட்பார்கள் நீ எங்கே இருந்து வந்தாய் என அல்லது உனது பூர்வீகம் என்ன என்று கேட்பார்கள். நான் ஒரு தமிழிச்சி என்றுதான் சொல்வேனே தவிர நான் சிறிலங்கா என்று சொல்லமாட்டேன். அந்த அலவு வெறுப்பை சிறிலங்கா மீது காட்டிக்கொண்டு இருக்கின்றேன்.

.

சிங்களவர்கள் தமது முழு முதல் வரலாற்று நூலாக போற்றிவரும் நூலில் கூட எல்லாள மன்னன் எல்லா இனத்தவரையும் சமமாக கனம் பண்ணி எவ்வாறு ஆட்சி செய்துள்ளான் என கூறப்பட்டுள்ளது. ஆனால் சிங்கலம் என்ன செய்கின்றது?

.

உண்மையில் நான் 2002 இல் சிறிலங்கா சென்றிருந்தேன் அந்த நாளில் இருந்து எனது மனம் சாந்தமாக இல்லை. போரின் கொடிய ரணங்கள் என்னை பாதித்துள்ளன. அப்பா அம்மாவை இழந்த குழந்தைகள், விதவை தாய்மார்கள், கை, கால்களை இழந்த இளைஞர்கள் , பெண்கள் என நான் அவர்களை சந்தித்தேன். எனக்கு வயது அப்போது 22 ஆனால் நான் அவர்களை நேருக்கு நேர் முகம்கொண்டு பேசினேன். என்னால் அவர்களை புரிந்துகொள்ள முடிந்தது. சிறிலங்கா இராணுவத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டவர்களை நேரே கண்ணால் பார்த்தேன்.

.

இந்த கொடுமைகளை எப்படி நான் எனது மேற்கத்தைய நண்பர்களுக்கு விளங்கவைக்காமல் இருக்க முடியும்? இந்த வலிகளையும் துன்பங்களையும் எப்படி என்னால் அவர்களுக்கு எடுத்துக்கூறமுடியாமல் இருக்கமுடியும்? இவற்றையெல்லாம் பார்த்தபின்னர் எப்படி நான் எனது வாழ்க்கையில் அமைதியாக இருக்கமுடியும்?

.

நான் நினைக்கின்றேன் மதிப்பிட முடியா இழப்புக்களை எமது இனம் சந்தித்துள்ளது. ஆகவே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எம்மவரின் பங்கு என்ன?

.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது, ஆனால் அதனை சர்வதேசம் நிறுத்த முடியவில்லை. ஆனால் சனல் 4 காணொளியால் சிறிலங்கா அரசாங்கத்தின் இனவெறி கொடூரத்தை உலகம் புரிந்துகொண்டது. தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் நியாயமான சூழலை நோக்கி சர்வதேசம் விழித்துக்கொண்டுள்ளது.

.

பிரித்தானியப் பிரதமர், கனேடியப் பிரதமர்,அவுஸ்ரேலிய முன்நாள் பிரதமர் ஆகியோர்கள் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளார்கள். அனைத்துலக விசாரணை ஒன்றை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவுஸ்ரேலிய பிரதமர் யூலியா ஹிலாட் இது தொடர்பில் மெளனம் காப்பது வெட்கக்கேடு.

.

அரேபியா நாடுகளில் என்ன நடக்கின்றது என்பது எதுவுமே மக்களால் இயலாதது என்று கூற முடியாது. எமக்கும் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். போர் முடிந்துவிட்டதாக கூரலாம் ஆனால் போராட்டம் ஓயவில்லை. நான் ஒரு தமிழிச்சி எனக்கும் எனது தந்தைக்கும் பொறுப்புக்கூறவேண்டும் கூடவே மாவீரர்களுக்கும் எனது ஆருயிர் நண்பர் மாவீரர் கே. என்பவரிற்கும் பொறுப்புள்ளவளாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் வாழ்வதற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்தவர்கள் அல்லவா?

brami-jegan-ausi.jpg

மூலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் தேடிய இளையோர் இங்கே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.