Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டோம் – தமிழோசையிடம் சம்பந்தன்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan23-150x150.jpg

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புநிராகரித்திருக்கிறது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், அரசு, கூட்டமைப்புடன் வியாழனன்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்த யோசனையை முன்வைத்ததாகவும், ஆனால், இரு தரப்புகளுக்கும் இடையே தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தைகளின் முடிவில் காணப்படும் இணக்கப்பாடை, இந்த தெரிவிக்குழுவின் முன்னர் வைத்து, அதன் பின்னர் அந்தக் குழுவில் அதைப் பரிசீலிக்கும்போது அதில் பங்குபெறுவது குறித்து யோசிக்கலாம் என்று தாங்கள் கூறியதாகக் கூறினார்.

அரசு தரப்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகிய இரு வழிமுறைகளுமே இணையாக நடக்கலாம் என்று கூறப்பட்டதா அல்லது, அரசு இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை, பேச்சுவார்த்தைகளுக்கு மாற்றாக முன்வைக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த சம்பந்தன், அரசு இது வரை தங்களிடம் இரு தரப்புபேச்சுவார்த்தைகளைக் கைவிடவேண்டும் என்று கூறவில்லை என்றார்.

இது வரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது, ஆனால் எந்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் என்பது குறித்து கண்டறியப்பட்டிருக்கிறது என்றார் சம்பந்தன்.

நன்றி – பிபிசி

http://www.saritham.com/?p=42560

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு ஏமாற்று வேலை- அதில் அங்கம் வகிக்கப்போவதில்லை- ஜே.வி.பி அறிவிப்பு!

Published on December 1, 2011-1:56 pm · No Comments

anura-JVP-150x150.jpgமகிந்த ராசபக்ச அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என அமைத்திருக்கும் பாராளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்றும், மக்களை ஏமாற்றுவதற்காகவே இக்குழுவை அரசாங்கம் அமைத்திருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க இன்று கொழும்பு பெல்வத்தையில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமற்ற ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போராடப் போவதில்லை என்றும், ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஜே.வி.பி கலந்து கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தை மாற்றி அதற்கு ஒப்பான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதைவிட மாற்று அரசாங்கத்தையே கொண்டுவர வேண்டுமென அநுரகுமார குறிப்பிட்டுள்ளார். அந்த மாற்று குழு மக்கள் விடுதலை முன்னணியே என அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.thinakkathir.com/?p=24163

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.