Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு 49ஆயிரம் வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு - கிழக்கு மக்களுக்கு 49ஆயிரம் வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்! pdf_button.png printButton.png emailButton.png வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 13:39

IndiaFlag.jpgஇலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கடந்த ஜுன் மாதம் இந்தியா சென்றிருந்த போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் அங்கு தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் மத்திய, உவா மாகாணங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக 38 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். சேதம் அடைந்த 5 ஆயிரம் வீடுகள் பழுது பார்க்கப்படும். ஆதரவு இன்றி தனியாக இருக்கும் பெண்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் வீடுகளை அவர்களாகவே கட்டிக் கொள்ளலாம், வீடு கட்டுவது மற்றும் வீடுகளை பழுது பார்ப்பதற்கான பணம், அந்த பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்படும்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசு ஏற்கனவே ரூ.500 கோடி வழங்கி உள்ளது. வடக்கு பகுதியில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்து உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்‌பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புலர்வு

வடக்கு - கிழக்கு மக்களுக்கு 49ஆயிரம் வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் மத்திய, உவா மாகாணங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக

வீடு கட்டுவது மற்றும் வீடுகளை பழுது பார்ப்பதற்கான பணம், அந்த பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்படும்

"இப்பவே நீங்கள் என்னுறதை பார்த்தால் இன்னும் கொஞ்சத்திலை நீ என்ன போறாய் போலை கிடக்கு"

அடுத்த தலைப்பும் செய்தியும்.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு 48,999 வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்

இந்த திட்டத்தின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் மத்திய, உவா , மேல், மற்றும் தென், வடமத்திய, மற்றும் வடமேல், சப்பிரகமூவா மாகாணங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக.........................................

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.