Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருவர் வெள்ளை வேனில் கடத்தல்

Featured Replies

இருவர் வெள்ளை வேனில் கடத்தல்

வரக்காபொல பகுதியில் நேவிருவன் என அழைக்கப்படும் ருவன் சந்திமால் டெப் என்பவரும் அவருடைய நண்பரான தம்மிக்கவும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நேவி ருவனின் மனைவி முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=89964

  • தொடங்கியவர்

தனது கணவரின் கடத்தலின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கம்! - நேவி ருவானின் மனைவி குற்றச்சாட்டு!!

பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்த ருவன் சந்திமால் தீப் கடந்த 03ஆம் திகதி மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி லக்சிகா சாமலி சிறிலங்கா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், சிறிலங்கா பொலிஸாரே தனது கணவரைக் கடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேவி ருவான் என அறியப்பட்ட தனது கணவரின் கடத்தல் தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள சிறிலங்கா பொலிஸார் பின்னடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். கதிர்காமத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது தம்மை மறைந்திருந்து தாக்கிய கடத்தல்காரர்களில் ஒருவர் தனது கணவரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முற்பட்டதாகவும், அவர் மீது தனது கணவர் கல் ஒன்றை வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது கணவர் நினைவு இழக்கும் வரை கடத்தல்காரர்கள் அவரைத் தாக்கியதாக குறிப்பிட்டுள்ள அவர், அதன் பின்னர் வெள்ளை வாகனம் ஒன்றில் அவர்கள் தனது கணவரை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, கடத்தல்காரர்களில் சிலர் வரக்காபொல நகரில் சுதந்திரமாக நடமாடியதைத் தான் கண்டதாகவும் கூறியுள்ள அவர், இதுபற்றி கோத்தபாய ராஜபக்ச வுக்கு மட்டுமே தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரைக் கொன்று விடாதீர்கள் எனத் தான்கடத்தல்காரர்களிடம் கோரியதாகவும், அப்போது கடத்தல்காரர்களில் ஒருவர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொலைபேசி எடுக்குமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீதே தான் சந்தேகம் கொள்வதாகவும் நேவி ருவானி மனைவியான லக்சிகா சாமலி கூறியுள்ளார். நேவி ருவான் சிறிலங்கா படைத்துறை அமைச்சின ஆலோசகராக இருந்த துமிந்த சில்வாவின் நெருங்கிய உதவியாளர் என ஊடகங்களால் குறிப்பிடப்பட்டு வந்தார்.

முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, துமிந்த சில்வாவின் மற்றொரு உதவியாளரான நேவி தம்மிகவும் வெள்ளை வாகனத்தில் கடத்திச் செல்லப்பப்பட்டுள்ளதாக தொயி வருகின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கோஸ்டியின் தலைவர் தெமட்டகொட சமிந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை துமிந்த சில்வாவின் கட்டளையின் பேரில் கடலில் புதைத்ததாகவும், துமிந்த சில்வாவின் கட்டளையின்பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் புதைத்தாகவும் கூறியிருந்தார். ஒவ்வொரு முறை சடலங்களைப் புதைக்கும் போதும், கோத்தாபய ராஜபக்சவின் கட்டளையின் பேரிலேயேஇதைச் செய்வதாக துமிந்த சில்வா தனக்குக் கூறுவார் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனிடையில் இலங்கையில் இடம்பெறும் வெள்ளை வாகன கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக லங்கா ஈ நியூஸ் கடந்த மாதம் 25ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.c...fd-1f178bf0d375

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.