Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி மூலம் :- http://www.thinakkathir.com/?p=24662

இரா.துரைரத்தினம்

கே.பியினால் வழிநடத்தப்படும் லங்காசிறி மனிதன் இணையத்தளங்கள்- லங்காசிறி குகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் ஒத்துக்கொள்கிறார்

Published on December 8, 2011-7:39 pm · 11 Comments

sritharan-150x150.jpgசிறிலங்கா அரசாங்கத்துடன் இருக்கும் கே.பியினால் லங்காசிறி, மனிதன் இணையத்தளங்கள் வழிநடத்தப்படுகின்றன என்ற விடயத்தை மனிதன், லங்காசிறி இணையத்தளங்களை நடத்தும் சிறிகுகனின் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். மனிதன், லங்காசிறி இணையத்தளத்தின் பணிப்பாளர் ஒரு இனதுவேசம் கொண்ட சிங்கள பெண்ணாகும். இந்த விடயங்களை நாம் வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்களை திரட்டிய வேளையிலேயே எம்மை கருணாவுடன் தொடர்பு என மனிதன் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டார்கள். தங்கள் மீது இருக்கும் அசிங்கங்களை மறைப்பதற்காகவே மனிதன் இணையத்தளம் இதனை வெளியிட்டது என்பதற்கான சில ஆதாரங்களை இங்கே தருகிறோம். இன்னும் அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் பலவற்றை நாம் விரைவில் வெளியிடுவோம்.

இரா.துரைரத்தினம்

ஊடகவியலாளர்.

சுவிட்சர்லாந்து

08.12.2011

லங்காசிறி குழுவால் நடத்தப்படும் மனிதன், கூல்சுவிஸ், ஆகிய இணையத்தளங்களில் கடந்த 04.12.2011அன்று என்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக… ஏன் அவர்கள் என்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டார்கள் என்பதை தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டியது எனது கடமை.

சில காரணங்களுக்காக லங்காசிறி குழுவைச்சேர்ந்தவர்கள் என்மீது இந்த பழியை போட்டு தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் ஊடகதுறையிலிருந்தும் என்னை ஒதுக்குவதற்கு திட்டமிட்டனர்.

1. தமிழ்வின் இணையத்தளத்தில் ஆரம்பத்தில் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கட்டுரைகளை எழுதி வந்தேன். அதேநேரம் தமிழ்வின் லங்காசிறி குழுவின் போக்குகளை அறிந்த பின் அதன் உரிமையாளர் யார் என்பதை அறிந்து அதிலிருந்து விலகி இருந்தேன். அதன் பின்னர் தனியாக ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்தேன். அதன் பின்னர் என்மீது பழிவாங்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு வந்தார்கள்.

2. லங்காசிறிகுழுவின் இணையத்தளங்களான தமிழ்வின் லங்காசிறி மனிதன், ஆகிய இணையத்தளங்களை உண்மையில் நடத்துபவர்கள் சுவிஸில் உள்ள சிறிகுகன், லண்டனில் உள்ள சஞ்சே ஆகியோர் என பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அந்த நிறுவனத்தின் பிரதான பணிப்பாளராக இருப்பவர் Sewwandi என்ற சிங்கள பெண்ணாகும். இவர் மிகமோசமாக சிங்கள இனவாதியாக பலராலும் இனங்காணப்பட்டவர். இவர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டவர். அந்த நிறுவனத்தில் யார் யார் பணிப்பாளர்கள், இந்தியாவில் லங்காசிறி எப்.எம் வானொலியை யாரின் பெயரில் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் அனைத்தையும் நாம் சேகரித்துக்கொண்டிருந்ததை லங்காசிறி குழு அறிந்து கொண்டது. இதனாலும் எப்படியாவது என்னை பழிவாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தது. இந்த விபரங்கள் அனைத்தும் நாம் விரைவில் வெளியிட இருக்கிறோம்.

3. என்னைப்பற்றி செய்தி வருவதற்கு சில தினங்களுக்கு முதல் கொழும்பில் உள்ள கே.பி குழுவுடனும், கருணா பிள்ளையான் குழுக்களுடனும் லங்காசிறி மனிதன் குழுவினருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை நாம் திருட்டியதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். லங்காசிறி மனிதன் இணையத்தளத்தை நடத்தும் சிறிகுகனின் அண்ணனான நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் தொடர்பு கொண்டு பேசியபோது ( இன்னொருவரே அவருடன் பேசினார்) மனிதன் இணையத்தளத்தை கே.பி குழுதான் வழிநடத்துகிறார்கள் என்றும் சிறிதரன் தெரிவித்திருந்தார். மனிதன் இணையத்தளம் முழுக்க முழுக்க கே.பியின் வழிகாட்டலில்தான் செயற்படுகிறது. மனிதன் இணையத்தளம் திட்டமிட்டு ஆட்களின் கழுத்தை வெட்டிச்சாய்க்கும் வேலையை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த ஒலிப்பதிவு எங்களிடம் இருக்கிறது. இந்த விடயங்களை நாம் திரட்டி விட்டோம் என்பதையும் லங்காசிறி குழு அறிந்து என்மீது பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தது.

4. தமிழ்வின் இணையத்தளத்தில் கருணா, பிள்ளையானின் செய்திகளே முழுக்க முழுக்க வருகிறது. அவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செய்திகளை போடுகிறார்கள் இல்லை என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் என்னிடம் முறையிட்டிருந்தார். மட்டக்களப்பில் உள்ள செய்தியாளர் ஒருவரும் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தமிழ்வின் தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். நான் உடனே மட்டக்களப்பிலிருந்து தமிழ்வின்னுக்கு செய்திகளை அனுப்பும் இரு செய்தியாளர்களையும் தொடர்பு கொண்டு ஏன் கருணா பிள்ளையானின் செய்திகளை அனுப்புகிறீர்கள், நீங்கள் அனுப்பும் செய்திகளை பார்த்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கருணா பிள்ளையான் போல பிரமையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். என கூறியிருந்தேன். அதை அறிந்து கொண்ட சிறிகுகன் துரைரத்தினத்திற்கு பைத்தியம். நீங்கள் கருணா பிள்ளையானின் செய்திகள் அனைத்தையும் அனுப்புங்கள். அனைத்தையும் போடுவோம் என கூறியதுடன் தனக்கு கருணாவின் தொடர்பை ஏற்படுத்தித்தருமாறு மட்டக்களப்பில் உள்ள கிருஷ்ணா என்ற செய்தியாளரிடம் லங்காசிறி சிறிகுகன் கேட்டிருந்தார். அதன் பின்னர்தான் சிறிகுகனுக்கும் கருணாவுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தமிழ்வின் இணையத்தளத்தை கருணா பாராளுமன்றத்தில் பாராட்டி பேசியிருந்தான். இதனை இப்போதும் பாராளுமன்ற கன்சார்டில் பார்வையிட முடியும். இந்த விடயங்களிலும் எனக்கும் சிறிகுகனுக்கும் இடையில் மிகப்பெரிய கருத்து மோதல் ஏற்பட்டது. அதனாலும் என்னை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர்.

5. மட்டக்களப்பில் தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தியாளராக தமிழ்மக்களுக்கு எதிராக செயற்படும் ஜப்பர்கானை நியமித்திருந்தார்கள். ஐ.நா நிபுணர்குழு அறிக்கை வெளிவந்த போது மட்டக்களப்பில் கிராமம் கிராமமாக சென்று பெண்களிடம் ஐ.நா.அறிக்கைக்கு எதிரான வாசகம் எழுதிய அட்டையை கொடுத்து வீடியோ எடுத்து பிரசாரம் செய்து வந்தார். அதேபோல ஊறணியில் படையினருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அதை வீடியோ எடுத்து சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவிடம் கொடுத்திருந்தார். இது தொடர்பாக தினக்கதிர் இணையத்தில் செய்தி வெளியிட்டேன். அப்போது சிறிகுகன் ஜப்பர்கானிடம் தொடர்பு கொண்டு துரைரத்தினத்திற்கு ஆப்பு வைப்போம் பொறுங்கள் என கூறியிருந்தார்.

இது போன்ற பல காரணங்களால் என்னை பழிவாங்க வேண்டும் என லங்காசிறி சிறிகுகனும் சஞ்சே என்பவரும் திட்டமிட்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நடந்தது. கடந்த 04.12.2011 அன்று தினக்கதிர் இணையத்தில் வெளியிட்ட செய்தி ஒன்றை எடுத்து மனிதன் இணையத்தளத்தில் போட்டிருந்தார்கள். இதை பார்த்தும் உடனடியாக மனிதன் இணையத்தளத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். அந்த மின்னஞ்சலை இங்கே இணைத்துள்ளேன்

From: thurair@hotmail.com

To: manithanonline@gmail.com

CC: manithan9@gmail.com

Subject: நன்றி என்று போடுங்கள்.

Date: Sun, 4 Dec 2011 19:43:38 +0000

நீங்கள் ஊடகத்துறையின் மரபோ அடிச்சுவடியோ தெரியாதவர்கள் என்பது எனக்கு தெரியும். தயவு செய்து ஒரு ஊடகத்திலிருந்து ஒரு செய்தியை எடுத்து போடுவதாக இருந்தால் அந்த ஊடகத்திற்கு நன்றி என்று போடுங்கள். கேவலங்கெட்ட பிழைப்பு தயவு செய்து நடத்தாரீர்கள். முதலில் ஊடகத்துறையின் ஒழுக்கத்தை புரிந்து கொண்டு நடவுங்கள்

என மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். நான் இரவு 7.43க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சரியாக ஒன்றரை மணி நேரத்தில் (09.22 PM)மனிதன் இணையத்தளத்தில் என்மீது பழியையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டனர்.

மனிதன் மற்றும் சுவிஸ் கூல் என்ற இணையத்தளங்களை நடத்துபவர்கள் துணிவும் நேர்மையும் இருந்தால் முதலில் தங்களை யார் என்று வெளிப்படுத்த வேண்டும். முகமூடியை போட்டுக்கொண்டு ஒழித்து நின்று கீழ்தரமான வேலைகளை செய்யக்கூடாது.

என்மீது சுமத்திய குற்றச்சாட்டிற்கு ஒரு துளி ஆதாரத்தையாவது இவர்களால் வெளியிட முடியுமா? சுவிஸில் நான் கடந்த 7வருடமாக வாழ்ந்து வருகிறேன். இந்த காலப்பகுதியில் நான் கருணாவையோ அல்லது அரசாங்க தரப்பினரையோ சந்தித்தற்கான ஒரு சிறிய ஆதாரத்தையாவது வெளியிட முடியுமா?

நான் என்னுடைய வீட்டு தொலைபேசி இலக்கம், கைத்தொலைபேசி இலக்கம் அனைத்தையும் சுவிஸ் காவல்துறைக்கு வழங்கியிருக்கிறேன். எனக்கு கருணாவோ அல்லது சிறிலங்கா அரசாங்க தரப்போ என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்களா என ஆய்வு செய்யுமாறும், இதன் மூலம் இவர்கள் என்னை திட்டமிட்டு தமிழர் சமூகத்தில் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு இச்செய்தியை புனைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கிறேன்.

மனிதனை நடத்தும் லங்காசிறிகுழு சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் கே.பியினால் வழிநடத்தப்படுகிறது என்பதற்கும், மனிதன், நடத்தும் லங்காசிறி லிமிட்டெட்டின் பணிப்பாளர் ஒரு சிங்களப்பெண் என்பதையும் ஏனைய விடயங்களையும் ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறேன்.

இவர்களைப் பற்றி நிறைய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அவற்றை விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடுவேன். நான் சவால் விடுகிறேன். மனிதன் இணையத்தளத்தை நடத்துபவர்கள் நாங்கள் தான் என சமூகத்தின் முன் இனங்காட்டுங்கள். என்மீது நீங்கள் போட்ட பழிக்கு ஆதாரங்களை வெளியிடுங்கள்.

நான் சுவிஸிற்கு வந்த இந்த 7காலப்பகுதியில் ஒரு தடவையாவது கருணாவுடன் தொடர்பு கொண்டிருந்தால் அதற்கான ஒரு சிறு ஆதாரத்தையாவது இவர்கள் வெளியிட்டால் நான் ஊடகத்துறையிலிருந்தே ஒதுங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இறுதியாக ஒன்று நான் மட்டக்களப்பை சேர்ந்தவன் என்ற எண்ணத்தில்தான் இவர்கள் எடுத்த எடுப்பில் கருணாவுடன் முடிச்சை போட்டிருக்கிறார்கள். பொதுவாக மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் மீது பழியை போடுவதாக இருந்தால் உடனடியாக அவன் கருணாவின் ஆள் என பழியை போடும் வழக்கம் மேற்குலக நாடுகளில் வளர்ந்து வருகிறது.

ஆனால் இந்த முகமூடிகளை போட்டிருக்கும் போலிகளுக்கு ஒன்றைச்சொல்கிறேன். நான் எதற்கும் அஞ்சாத வடமராட்சியான். இந்த சலசலப்பிற்கெல்லாம் ஒருபோதும் அஞ்சியதில்லை. இவர்கள் தொடர்பான பல ஆதாரபூர்வமான தகவல்களை விரைவில் வெளியிடுவேன். இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல.

நன்றி

இரா.துரைரத்தினம்

50217179

http://www.thinakkathir.com/?p=24662

  • கருத்துக்கள உறவுகள்
50217179_Seite_1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.