Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன் - மு.றெமீடியஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தலைமையிலான யாழ். மாநகரசபை ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாகவும் தான் சுகந்திரக் கட்சியில் இணையப் போவதாகவும் கூறுவது சுத்தப் பொய் என யாழ். மாநாகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாக வெளிவந்த செய்தி தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு வினாவியபோது...

என் மீது வேண்டும் என்று சிலர் சேறு பூச முனைகின்றனர். நான் பிரபல சட்டத்தரணி என்பதால் எனது பெயருக்கு அவப்பெயரை உண்டு பண்ணுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

எது எப்படி நடந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு நான் ஒருகாலமும் விலக மாட்டேன். தமிழ் தேசியத்திற்கான எனது அரசியல் பயணம், தமிழ் மக்களின் அரசியல் சமூக உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பதுடன் பிழையிருப்பின் அஞ்சா நெஞ்சத்துடன் அதை சுட்டியும் காட்டுவேன் என்று கூறினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சபைக்குத் தெரிவாகி இப்போது தனித்துச் செயற்படும் நிஷாந்தனுடன் இணைந்து, ஈ.பி.டி.பி. தலைமையிலான மாநகர ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சில செய்திகள் அண்மையில் வெளிவந்தன. இச்செய்தி தொடர்பில் ரெமீடியஸ் கூறுகையில்...

நிஷாந்தன் என்பவர் அரசியல் பாடத்தைக் கூட பள்ளிக் கூடத்தில் கற்றுக்கொள்ளாத ஒருவர். இவர் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்திக்கு நான் பொறுப்பாளி அல்ல எனத் தெரிவித்ததோடு, எனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை. ஆனால், அதற்காக நான் வேறு கட்சியுடன் இணைந்துகொள்ள முயல்வதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/32393-2011-12-10-20-41-46.html

  • தொடங்கியவர்

யாழ். மாநகரசபை முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் ஆளுங்கட்சி உறுப்பினர் மங்களநேசன்; முதல்வர் மீது சரமாரியான குற்றச்சாட்டு

யாழ். மாநகரசபை முதல்வரின் நிர்வாகத்தில் ஊழல்கள் மற்றும் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை யாழ். மாநகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் மனுவேல் மங்களநேசன் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார்.

தன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வர் தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்னைக் கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளார். அதற்கு நான் எள்ளளவும் பயப்படப் போவதில்லை.

ஊழல்கள் மற்றும் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நான் நம்பவில்லை. ஆனால் தற்போது அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பது தெரியவந்துள்ளது. கடைகள் கைமாறப்பட்டதிலும் மாநகரசபை எல்லைக்குள் விளம்பரங்கள் வைக்கப்பட்டதிலிருந்தும் பல லட்சம் ரூபா மோசடிகள் செய்யப்பட்டிருக்கின்றன.இந்த ஊழல் மோசடிகள் குறித்து பலருக்கு தெரிந்தும் வெளியில் சொல்லப் பயப்படுகின்றனர். பாதிப்பு ஏற்படுமெனத் தயங்குகின்றனர்.

இது தொடர்பில் நான் எனது கட்சியிடமும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=44941686311442755

டகிளசுக்கு வடமாகாண முதலைச்சர் பதவி கிடைகாது என்பது இப்போது வெளிச்சம். வடமாகாணத்து சுதந்திர கட்சிகாரர்கள் இதுவரை ஏதும் பெரிதாக அர்சாங்கதிற்கு செய்ய வில்லை. அப்புறம் என்ன?

Makeup man மேக்கப்பை மாற்று.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.