Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரித்திர முக்கியத்துவம் மிக்க மானிப்பாய் மருதடி வினாயகர் ஆலயம் சீரழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திர முக்கியத்துவம் மிக்க மானிப்பாய் மருதடி வினாயகர் ஆலயம் சீரழிப்பு

  • Monday, December 12, 2011, 20:17

யாழ் மாவட்டத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து, யாழ் அரசாங்க அதிபர் விசாரணைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த ஆலயத்திற்குப் பொறுப்பான நிர்வாகத்தினர் ஆலயத்தைப் பல்வேறு வழிகளில் சீரழித்துள்ளதாக, நிர்வாகத்தினருக்கு எதிராக முறையிடப்பட்டிருக்கின்றது. எனவே, பின்வரும் விடயங்களில் நிர்வாகத்தினரிடமிருந்து விளக்கம் கோரியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐந்தாண்டுகளுக்கான கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும் எனவும் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

• 1982 ஆம் ஆண்டு வழக்குத் தீர்ப்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு முரணாகவும், ஏனைய நடைமுறைகளுக்கு விரோதமாகவும் தவறான நிர்வாகத்தால் ஆலயம் சீரழிக்கப்பட்டுள்ளது

• ஆலயத்தின் நிரந்தர சொத்துக்களான பொன் ஆபரணங்களை உரிய அங்கீகாரம் இல்லாமல் விற்று அழித்து, அந்தப் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளது.

• 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலயத்தின் நிதி அறிக்கை உரிய முறையில் பட்டயக் கணக்காளரால்

தயாரிக்கப்படவில்லை. ஒரு மாத காலத்தில் எண் பார்வை அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என 2008 ஆம் ஆண்டு யாழ் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மேலும் திருப்பணிக்காக அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி பற்றிய விபரங்கள் வெளியிடப்படாமல், அது விரயம் செய்யப்பட்டுள்ளது.

• உரியவர்களிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல், இந்த ஆலயக் கட்டிடங்கள் முற்றாகத் தகர்த்து அழிக்கப்பட்டுவிட்டது. யாழ் மாவட்ட நீதிமன்றம், ஆலயத்தின் வழிபடுவோர் சங்கப் பொதுச்சபை ஆகியவற்றின் உரிய அங்கீகாரமின்றியும், ஏலம் கோராமலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலும் ஆலயத்தின் ஒரு பகுதி விற்றொழிக்கப்பட்டு விட்டது.

• ஆலயம் இருந்த இடத்தி;ல் ஆலய அமைப்பு இல்லாமலும், அதற்குரிய ஆலோசனைகள், அனுமதிகள் என்பன வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச சபை என்பவற்றிடமிருந்து பெறாமல் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர்.

• ஆலயத்திற்கு எவ்வித உரிமையும் இல்லாத, ஆலயத்திற்கு மேற்குப்புறத்தில் உள்ள விவசாய குளம், வாய்க்கால் என்பவற்றிற்கு மண்போட்டு நிரப்பியும், குறுக்கு மதில் கட்டியும், பல நூற்றாண்டுகள் வழிபடுவோர் மற்றும் விவசாயிகளின் பாவனையில் இருந்த வழித்தடத்தையும், பிரதான வழிபாட்டு சந்நிதான தரிசனத்தையும் வழியடைத்துத் தடைசெய்துள்ளனர்.

• உரிய ஆலய அமைப்பில்லாமலும், ஆகம விதிகளுக்கு விரோதமாகவும் ஆலயத்தைக் கட்டுவதற்கு முயற்சிககள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி மாணிக்கம் வேதநாதன் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு வந்துள்ளார். அத்துடன் ஆலயக் கட்டுமாணங்களை நேரடியாகப் பார்வையிட்ட போது, இலகுவில் திருத்த முடியாத தவறுகள் நி;றைந்த வகையில் அவைகள் அமைக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

• ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் அங்கீகாரம் பெற்ற வரைபடம் இல்லாமலும், பொது ஒப்புதல் பெறப்படாமலும் புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது, தர்மச் சொத்துக்கள சட்டப்பிரிவின்படி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், தர்மகர்த்தா சபையின் கூட்டப் பதிவு பிரதிகள், கணக்காய்வு அறிக்கை, திட்ட வரைவுகள் என்பவற்றை ஆலயத்தின் வழிபடுவோர் கோரிய போதிலும் நிர்வாகத்தினர் அவற்றை வழங்க மறுத்துள்ளனர்.

• ஆலயக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர், முகாமைத்திட்டத்திற்கு அமைய கேள்வி, தகுதி கோரி நியமிக்கப்படவில்லை. அத்துடன், ஆலய நிர்மாணத்தில் அவருக்கப் போதிய அனுபவம் இல்லை என்பதுடன், அவர் இலங்கைப் பிரஜையும் அல்ல.

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தது. சிதம்பரத்தைப் போல, சிவயோகி ஒருவரால் இந்த ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபட்டு வந்தது.

போர்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் அவர்களால் முற்றாக இடித்து அழிக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. போர்த்துக்கேயருக்கு அஞ்சி மறைவாக பூசைகள், வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்துச் சைவ ஆலயங்களின்; வரிசையில் இந்த ஆலயம் திருக்கேதீஸ்வரத்துடன் முதன்மைப்படுத்தப்பட்டு, இலங்கையின் சைவ நெறி கல்விப் பாடத்திட்டத்தில் தரம் 7 பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத மரத்தின் கீழ் மேற்குத் திசையை நோக்கியவாறு கர்ப்பக்கிரகமும், அர்த்த மண்டபமும் அமைக்கப்பபட்டிருந்த இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் 15 ஆம் திகதி கொடியேற்றப்பட்டு, சித்திரை முதலாம் திகதி நடைபெறுகின்ற தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள்கூட இப்போது இடித்து அழிக்கப்பட்டுவிட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/newsite/?p=1478

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.