Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா

Featured Replies

இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா?

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு.

இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும் அமையலாம். அதிலிருந்து தமிழ் தேசியம் பாடத்தினை கற்பதற்கிடையில் துரோகிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள எதிரிகள் அடுத்த கட்டத்திற்கு நுழைந்திடுவார்கள். இது தமிழர் தரப்பிற்கு சில பின்னடைவுகளையும் அதன் காரணமாக அவர்களின் விடுதலைப்பயணத்தில் தாமதங்களையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனடிப்படையில் தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த்தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது இறந்தகால வரலாறு உதவும். அதே வேளை அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம்.

தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மைபுரியும். அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களைக் கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு. எதிரியினதும் துரோகியினதும் பலவீனத்தை மட்டுமல்ல பலத்தையும் சரிவர எடைபோடவேண்டும். அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது. உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம். இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது. அதனால் தான் இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக குறைந்தது 3 வல்லரசுகள் உட்பட உலகின் சக்திமிக்க ஆகக்குறைந்த 9 நாடுகளை சிறிலங்காவிற்கு பின்னால் அணிதிரள வைத்துள்ளன. வெறுமனே அணி திரள்வு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீவிரமாகவும் செயற்பட வைத்துள்ளது. இதில் அரசியல் பொருளாதாரம், இராணுவப் பயிற்சிகள் படைப்பலப் பெருக்கம் போன்றவை முக்கியமானவை. இவற்றினைவிட மிகமிக முக்கியமானது புலனாய்வு நகர்வு. இங்கே நகர்வு என்பது புலனாய்வின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடுகிறது. புலனாய்வு நகர்வு தான் எந்தத் தேசத்தின் இருப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துகிறது. ஆதலால் தான் எந்த அரசும் புலனாய்வுப் பிரிவிற்கு அதிகளவிலான பணத்தை செல்விடுகின்றன. அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தாராளமாக புலனாய்வுப் பிரிவிற்கு அள்ளி வழங்குகின்றன. இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் மீது எப்போதும் ஆழமாகப் பாய ஆரம்பித்துவிட்டன. இவையனைத்திற்கும் ஈடுகொடுத்து தமிழ்த்தேசத்தின் படையணி தமிழ்த்தேசியத்தை பாதுகாத்து வலுப்படுத்தி வருகிறது.

இதற்காக அவர்கள் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க இருக்கின்ற விலையை யார் அறிவார். தமிழ்த்தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துகின்ற விடுதலைப்புலிகளோடு மோதுகின்ற ஏனைய புலனாய்வு நாடுகளின் பலம், வசதி வாய்ப்புக்களோடு ஒப்பிடும் இடத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பலம் கோலியாத்தோடு மோதிய சிறுவன் போன்றதே. அல்லது முழங்கும் பல்குழல் பீரங்கிக்கு முன்னால் 9mm பிஸ்ரலோடு நிற்பதற்கு ஒப்பானதே. இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு பொது விடயத்தைக் கவனிக்கலாம். அதாவது எதிரி எல்லா வகையிலும் மிகமிகப்பலம் பொருந்தியவனாக இருந்த போதும் அவனோடு போராடுகின்றவன் தன்னை தற்காத்தபடி அனைத்துப் பேரளிவுகளிற்கும் மூல காரணமாக இருந்து இயங்குகின்றவனை அழித்துச் செயலிழக்கச் செய்து விடுவான். நேரடியாகக் கூறுவதானால் தன்னைப் பாதுகாத்தபடி நெருங்கி பல்குழல் பீரங்கி இயக்குபவர்கள் கதையை 9mm முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு உடனடியாகவே உத்தரவிடும்.

சிறுவன் கோலியாத்தின் கண்களை நோக்கி கற்களை வீசியது போன்றதே. இந்த சிறுவன் 9mm பிஸ்ரல் போன்றதே தமிழ்த்தேசியத்திற்கான படைப்பலம். எதிரி கோலியாத் பல்குழல் பீரங்கி போல் உள்ளான்.

கவனிக்க :- தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தும் தமிழரின் படைப்பலம் மிகமிகப் பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் உதவி பல்வேறு வழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இது தன்மானமிக்க மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனினதும் கடமை பொறுப்பு கட்டாயம். ஏனெனில், எமது எதிரிகள் எங்கள் பலத்தோடு ஒப்பிடுமிடத்து பன்மடங்கு பலமுள்ளவர்களாக திகழ்வதால் நாமும் நவீனமயமானவர்களாக வேண்டிய தேவையுள்ளது.

வெறுமனே எதிரியின் பலம் வளர்ச்சி எங்களின் நிலை தேவை என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் எதிர்நோக்கியுள்ள (காத்திருக்கின்ற) சவாலையும் அது கடந்த காலத்தில் எவ்வாறு விசத்தைக் கக்கியது என்பதையும் கவனிப்பது அவசியமானது.

அதனடிப்படையில் எமக்கு எதிராக யார் யார் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள் எந்தப் பகுதியை மையமாக வைத்துச் செயற்படுகிறார்கள் எதற்காக அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றையும் சில பொதுவான அம்சங்களையும் அலசலுக்கு உட்படுத்துவோம். இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது எமக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள பல நாடுகளில் சிற்சில நாடுகளுக்குள், தமது தேச இருப்பு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பாக கடுமையான புலனாய்வுப் போர் தொடர்கிறது. இதனை ஓர் சிறிய உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்குடா நாடு புலிகளின் கைகளுக்குள் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் இருந்தது. இந்த வேளையில் அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளையும் எந்தவிதமான உயிர்ச்சேதமுமின்றி மீட்பதற்கான சகல ஆயுத்தங்களையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதே போன்று பாகிர்தானோ முதுகெலும்பு முறிந்தது போன்றிருந்த சிறிலங்காப்படையினருக்கு விரைவாக தேறுவதற்காக உன்னத சத்துணவாக பல்குழல் பீரங்கிகளை வழங்கியது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 'கார்கில்' போர் இடம்பெற்றதால் பரஸ்பரம் பரமஎதிரிகளாக இருந்தனர். ஆனால் தமிழ்த்தேசியத்தை நசுக்க முனைந்த போது பரமஎதிரிகள் கூட ஓரணியில் திகழ்கிறார்கள். இது எதனைப் புலப்படுத்துகிறது ?

எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது விடுதலை மூலமான உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும். தூரநோக்குள்ள வல்லமைமிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள். மூலப்போகின்ற போர் பலசேதிகளை சொல்லக் காத்திருக்கின்றது. இந்தப் போர் இழுபடுவதோ முடிவுகள் அற்றதோ அல்ல. விரைவாக தீர்க்கமான தீர்வினைச் சொல்லும். 17500ற்கு மேற்பட்ட மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்கான மிமிகச் சரியான பதிலை சொல்லும். விடுதலை வேண்டி போராடும் தேசங்களிற்கு பலபடிப்பினைகளைச் சுட்டிக்காட்டும். தர்மத்தையும் நியாயத்தையும் வெளிப்படுத்தும். அந்நிய ஆதிக்க சக்திகளின் குள்ளநரித்தனங்களை புட்டுவைக்கும். இவையனைத்திற்கும் உறுதுணையாக பல ஆண்டுகளாக அவலங்களையும் ஏக்கங்களையும் சுமத்த எமது மக்கள் இருந்தார்கள், இருக்கப்போகிறார்கள் என்ற சேதி தெரியவேண்டும். எமது மக்கள் எப்போதுமே போரியல், அரசியல், சக பொருளாதார ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் சட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க ஒரு சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

இன்று எமது தேசத்தினை நோக்கி பல நாடுகளின் புலனாய்வுக் கண்கள் தீவிரமாகத் திரும்பியுள்ளன. சில நாடுகள் எமது தேசத்தினைக் கூறுபோடும் முயற்சியிலும் எமது போராட்டத்தினை நசுக்கும் வகையிலும் நேரடியாகவே செயற்பட ஆரம்பித்துள்ளன. அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகள் இதனைப் புலப்படுத்தி நிற்கின்றன. இந்தச் செய்திகளின் மக்களின் கதைகளில் பிரதானமாக பேசப்படும் உளவு அமைப்பாக இந்தியாவின் 'றோ' ( RAW - Research and Analysis Wing) அமைப்பே திகழ்கிறது.

கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் அண்மைக்காலத்தில் தீவிரம் பெற்றுள்ளதாக மக்கள் மற்றும் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறான செய்திகள் தகவல்கள் இந்தியாவைச் சங்கடத்தில் ஆழ்த்தக் கூடும்.

இந்த வேளையில் இந்தியாவின் குறிப்பாக றோவின் கடந்த காலத்தைத்திரும்பிப்பார்ப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.