Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பெண்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு

Featured Replies

இலங்கை பெண்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு

cris1.jpg

இலங்கை : தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு, கிழக்கில் உள்ள பெண்கள் பாரிய பாதுகாப்பு நெருக்கடிக் குள்ளாகியுள்ளதாக சர்வதேச நெருக்கடிக் குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்துள்ள காலப்பகுதியிலிருந்து இன்றுவரை பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் உரிய நிவாரணம் எதுவும் இல்லாத பரிதாப நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

பெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் பெருமளவான ஆண்கள் அதுவும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் தமக்கு உரிய உதவிகளைப்பெற்றுக்கொள்ள முடியாத ஓர் அவல நிலைமையிலேயே வடக்கு கிழக்குப் பெண்கள் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டிய நிலைமையும் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானித்தபடி வாழ முடியாத நிலைமை அப்பகுதிப் பெண்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்களது பாதுகாப்புத் தொடர்பில் நம்பிக்கையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமிடத்து அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=91569

Edited by akootha

  • தொடங்கியவர்

Sri Lanka: Women’s Insecurity in the North and East

EXECUTIVE SUMMARY AND RECOMMENDATIONS

Women in Sri Lanka’s predominantly Tamil-speaking north and east are facing a desperate lack of security in the aftermath of the long civil war. Today many still live in fear of violence from various sources. Those who fall victim to it have little means of redress. Women’s economic security is precarious, and their physical mobility is limited. The heavily militarised and centralised control of the north and east – with almost exclusively male, Sinhalese security forces – raises particular problems for women there in terms of their safety, sense of security and ability to access assistance. They have little control over their lives and no reliable institutions to turn to. The government has mostly dismissed women’s security issues and exacerbated fears, especially in the north and east. The international community has failed to appreciate and respond effectively to the challenges faced by women and girls in the former war zone. A concerted and immediate effort to empower and protect them is needed.

  • தொடங்கியவர்

To: akeenan@crisisgroup.org

Cc: brussels@crisisgroup.org

Subject : re: Sri Lanka: Women’s Insecurity in the North and East

Dear Mr. Keenan,

Thanks to ICG the world has come to learn the plight of women of Sri Lanka in general and that of Tamil women.

The excellent report by ICG should ring the alarm bells to those powers in the world that unless the overwhelming military occupations ends the plight of women will never not improve, rather will continue to worsen. And only devolution of political powers can make meaningful inroads in the lives of women via a civil administration.

Please continue your great work.

Sincerely,

  • தொடங்கியவர்

'மிகவும் மோசமான நிலையில் வடக்கு கிழக்கு பெண்கள்'

111221141936_north_east_women_304x171_bbc_nocredit.jpg

அச்சத்தில் வடக்கு, கிழக்கு இலங்கைப் பெண்கள்

உள்நாட்டுப் போரின் பின்னான காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்குகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இண்டர்நேஷனல் கிரைசஸ் குரூப்( ஐ சி ஜி) என்னும் அமைப்பு கூறியுள்ளது.

இன்றும் பல விதமான காரணங்களால் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் வன்செயல் குறித்த அச்சங்களை எதிர்நோக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அவர்களது நடமாடுவதற்கான ஆற்றல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இராணுவ பிரசன்னம்

பெரிதும் இராணுவ மயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ் பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும், தமது வாழ்க்கை குறித்த கட்டுப்பாடு எதுவும் அவர்களது கையில் இல்லை என்றும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது என்றும் ஐ சி ஜி விமர்சித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்பு விடயங்கள், அதிகரித்த அச்சங்கள் ஆகியவற்றை அரசாங்கம் பெரும்பாலும் நிராகரிப்பதாக அது கூறுகிறது.

இந்த முன்னாள் போர் வலயத்தில் உள்ள பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் சாவால்கள் தொடர்பில் சாதகமாக நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் தவறி விட்டது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன் அந்தப் பெண்களின் பிரச்சினைகளை களைவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட, உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெண்களின் உடல் ரீதியான பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது அச்சங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் மூடுவதன் மூலமும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்கள் இடங்களை திரும்ப வழங்குவதன் மூலமும், இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப் பகிர்வு

வடக்கு கிழக்கில் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கு பகிரப்படுதல் மூலம் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

பொலிஸ் படைகளில் தமிழ் பேசும் அதிகாரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கான தமது உதவிகளின் போது பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் ஐ சி ஜி கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவை உட்பட இலங்கை நிகழ்வுகள் குறித்த தமது கண்டுபிடிப்புக்கள் குறித்து ஐநாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது கேட்டிருக்கிறது.

http://www.bbc.co.uk...uponwomen.shtml

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.