Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் கருத்தை செவிமடுத்து இலங்கை அரசு செயற்படவேண்டும்

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தினை செவிமடுத்து, ஆக்கபூர்வமான வகையில் செயற்பட இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.

நாட்டில் நிரந்தர கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப் பட்ட நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அறிக்கையொன்றினை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.

இதில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அரசியல் தீர்வு மூலமே சமரசமாக முன்னோக்கி நகர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தானது வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்தினை நாம் மனப்பூர்வமாக வர வேற்கின்றோம். இலங்கையில் இடம் பெற்ற மனித உமை மீறல்கள் தொடர்பாக ஒரு சுதந்திரத்தன்மையான வெளிப்படை தன்மை கொண்ட ஒரு பாரபட்மற்ற விசாரணை நடைபெறவேண்டுமென்று இந்தியா முதலாவதாக கூறியுள்ளது. இந்தக் கருத்தினை நாம் வரவேற்கின்றோம்.

இரண்டாவதாக அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் யுத்தம் முடிவு பெற்றுள்ள சுழலில் இதுவே அத்தியாவசியமான தேவையாகும். அவ்விதமான அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகார பகிர்வு ஏற்படும் சுழலில் தான் விசுவாமான, உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிபிறக்கும் என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இதனையும் நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.

மூன்றாவது விடயமாக இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், புனர்னாழ்வு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல முயற்சிகளும் இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிக்கமைய மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வாழ்வு நிலை கஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இதனையும் நாம் மனப்பூர்வமாக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுடைய சகல தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இந்தியா தனது அறிக்கையில் உள்ளடக்கியிருப்பதனை நாம் அவதானிக்கின்றோம். நீண்டகாலமாக எமது பிரச்சினையில் சம்பந்தப் பட்ட வலுவான அயல்நாடாக இந்தியா திகழ்கின்றது. எமது பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் பங்களிப்பு தொடரும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரவேண்டும் என நாம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவின் கருத்தினை செவிமடுத்து ஆக்க பூர்வமான முறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுவதற்கு முன்வரவேண்டும் என இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். நாட்டில் நிரந்தர, கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமது பரிபூரணமான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராக உள்ளோம். இது எமது கடமையாகும் என்பதையும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நிதானமாக செயற்பட்டு அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு தீர்வொன்றினை காண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்@றாம்.இதற்கிணங்கவே எமது செயற்பாடுகள் அமையும் என்பதை சகல தரப்பினருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

http://www.telonews.com/sritelo/wordpress/?p=25947

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வின் மீது கொண்ட நம்பிக்கை தகர்கிறது!

resize_20111225183216.jpg

தீர்வின் மீது கொண்ட நம்பிக்கை தகர்கிறது'' என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். இந்த ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை வரியில் சொல்லப்பட்ட ஆழமான விடயமிது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தவுடன் பெருந்தேசியவாதத் தரப்பிலிருந்து கடும் தொனியில் வார்த்தைகள் வெளிவருகின்றன.

இத்தகைய தென்னிலங்கை எதிர்ப்பரசியலின் இறுக்கமான நிலைப்பாடு, தீர்வின் மீதான நம்பிக்கையை தகர்க்கிறது என்று மனோ கணேசன் சொல்வதில் நியாயமுண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சிங்கள மக்களை ஒன்று திரட்ட வேண்டுமென்கிறார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர. ஏனெனில் பேரினவாத அரசியலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் தமது இருப்பைத் தக்க வைப்பதற்கும் இவர்களுக்கு ஒரு எதிராளி தேவை.

ஆனால் ஆளும் அதிகார வர்க்கத்தின் பார்வை வேறு வகையில் அமைந்துள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் போன்றோர் தமது மக்களின் நலனிற்காக அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று கூட்டமைப்பும் அரசோடு இணைந்து செயற்பட வேண்டுமென்கிறார் அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச.

அது மட்டுமல்லாது, தம்முடன் மட்டும் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பு கற்பிதம் கொள்வது தவறென்றும் கூறுகின்றார்.

பின்னர் எதற்காகக் கூட்டமைப்போடு அரசு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது என்கிற கேள்வி எழும்போது அதற்கான பதிலை இவர்களால் வெளிப்படையாகக் கூற முடியாத நிலை ஏற்படும் என்பது நிஜம்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, அது வெளிவந்த பின்னர், நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பை கொண்டு வருவதே அரசின் தந்திரோபாய நகர்வாக இருக்கிறது.

அதற்கான அழுத்தங்களையே கூட்டமைப்பின் மீது இப்போது பிரயோகிக்கிறது அரசு.

இப்பொறிக்குள் கூட்டமைப்பை வீழ்த்த முடியாமல் போய் விடுமோவென்கிற நிலை ஏற்படும்போது, அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது பெருந்தேசிய இனவாதம்.

கடந்த வியாழனன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெளிவாக ஒரு விடயத்தை முன் வைத்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில் எதுவித பயனுமில்லையென அவர் கூறியுள்ளார்.

அத்தோடு மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குமாறு கூட்டமைப்பு கோருவதை ஒரு போதும் அரசு ஏற்றுக் கொள்ளாதென உறுதிப்படக் கூறுகின்றார்.

இதையே "பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுவதன் பொழிப்புரை என்று கணிப்பிடலாம்.

ஆகவே, விடுதலைப் புலிகள் கேட்டதைவிட கூட்டமைப்பு அதிகம் கேட்கிறது என்கிற வியாக்கியானங்கள் ஊடாக, 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அரை குறை காணி அதிகாரங்களையும் மறுக்க அரசு முற்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

அரசு கொடுக்க விரும்பும் அதிகாரப் பரவலாக்கம் என்பது உள்ளூராட்சி சபையோடு மட்டுப்படுத்தப்படும் என்பது வெளிப்படை.

தீர்வு யோசனை குறித்து நல்லிணக்க ஆணைக்குழு கூறும் பரிந்துரைகளும், 13 ஆவது திருத்தச் சட்டம், உள்ளூராட்சி சபைக்கான அதிகாரங்களை அதிகரித்தல் மற்றும் மாகாணப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இரண்டாவது சபை (Second chamber) பற்றியே பேசுகிறது.

ஆகவே அரசைப் பொறுத்தவரை, நல்லிணக்க ஆணைக்குழு முன் வைக்கும் அரசியல் தீர்விற்கான பரிந்துரைப்புக்களை பரிசீலிக்க, அவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறது.

இந்த அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்ததாலேயே அரசிற்கு கடும் கோபம் ஏற்பட்டது.

அத்தோடு அரசோடு பேசி தீர்வு எட்டப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொள்வோமென கூட்டமைப்பு கொண்டிருக்கும் நிலைப்பாட்டையிட்டு அரசு சினங் கொள்கிறது.

காணி அதிகாரம் வழங்கப்பட்டால், அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று ஒரு அமைச்சர் கூறுகின்றார்.

பிரச்சினை என்னவெனறால் இதனால் முழு இலங்கைக்குமான சிங்களத்தின் இறைமை பலவீனமாகும் என்பது தான் இவர்களிடம் காணப்படும் அச்சம்.

ஆகவே தமிழ்த் தேசிய இனத்தின் தாயக கருத்து நிலையை, காணி அதிகாரம் அங்கீகரித்து விடுமென கலக்கமடையும் பேரினவாதம், துளியளவு விட்டுக் கொடுப்பினையும் இவ் விவகாரத்தில் அனுமதிக்காது.

அதேவேளை, நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட இறுதி நாள் விவாதத்தில் மாவை சேனாதிராஜா தமிழர் தரப்பின் அடிப்படை கோட்பாட்டினை தெளிவாக முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பை அச்சுறுத்தி அடிபணியச் செய்து தீர்வொன்றினைத் தீர்மானிப்பதற்கு அரச அதிபர் முயல்வதாகக் கூறியதோடு, எமது பிரதேசத்தில் சுய நிர்ணய உரிமையோடு வாழவே தமிழ் மக்கள் விரும்புவதாக வலியுறுத்தினார்.

ஆகவே, அரசோடு கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தையில் இறுக்கமான நிலையொன்று முறிவடையும் நிலை நோக்கிச் செல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை விட உண்மைத்தன்மை வாய்ந்தது என்பதை நிரூபிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதற்கு ஆதரவினைத் திரட்ட அரசு முயல்வதைப் பார்க்கிறோம்.

பொதுமக்களின் பிரச்சினையை இவ்வாணைக் குழுவின் அறிக்கை சீராக ஆராய்ந்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் அடிகளார் புகழாரம் சூட்டுகிறார்.

உலக நாடுகள், இலங்கையின் அபிவிருத்திப் பணிக்கு உதவ வேண்டுமென சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஆதரவு தெரிவிக்கின்றார்.

இந்த அறிக்கையை மனித உரிமைக் கண்காணிப்பகம் நிராகரித்தாலும் இதில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா வக்காளத்து வாங்குகின்றார்.

ஆகவே ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவரடங்கிய குழு வெளியிட்ட நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பக்கத்தில், இலங்கை அரசு வரைந்திருக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின அறிக்கைக்கோடு பெரிதாகத் தென்படுமாவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதேவேளை, அரசோடு பேசுமாறு கூட்டமைப்பிற்குத் தமது மறைமுக அழுத்தங்களைப் பிரயோகித்த மேற்குலகம் இந்தியாவும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணையுமாறு கூட்டமைப்பிற்கு புதிய அழுத்தங்களைக் கொடுக்குமாவென்பதை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

இறுதிப் போரில் நடைபெற்ற இனவழிப்பு தொடர்பாக சர்வதேச விசாரணையொன்று அவசியம் என்கிற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்னமும் உறுதியாக இருக்க வேண்டுமென்பதையே இந்த அச்சுறுத்தல்கள் உணர்த்துகின்றன.

-இதயச்சந்திரன்

http://www.thedipaar...ws.php?id=
38821

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.