Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கும் கிழக்கும் இணைவதால் என்ன லாபம்? என்று கேட்கிறார் பிள்ளையான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pillaiyan-mahinda-150x150.jpg

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தொழில் முயற்சிப் பொருட்களும் தொழில் முயற்சிக்கான காசோலைகளும் வழங்கும் நிகழ்வு பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,வடக்கும் கிழக்கும் தனித் தனியாக இருப்பதால் இரண்டு மாகாணங்களுக்கும் இரண்டு முதலமைச்சர் வருவர். அவ்வாறு இல்லாமல் தமிழ் கூட்டமைப்பினர் கூறுவது போல் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதால் ஒரு முதலமைச்சர் வருவார். அதனால் கிழக்கில் முதலமைச்சர் இல்லாமல் போகும் என்ற நப்பாசையில் கூட்டமைப்பினர் செயல்படுகின்றனர். கிழக்கை எப்போதும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளவேண்டும் நாம். இன்னும் இன்னும் அடிமைகளாக வாழக் கூடாது என்றும் கூறினார்.

கோறளைப்பற்று பிரதேச செயலகமும், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன. கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பேத்தாழை தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், வாழைச்சேனை தமிழ் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாசிக்குடா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், என்பவற்றுக்கு பதினாறு லட்சத்தி ஐம்பத்தேழாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் காசோலைகளும் வழங்கப்பட்டன.

http://www.saritham.com/?p=45563

கருணா கிழக்கில் ஏன் சிங்களவர் காணி வாங்கி குடியேற முடியாது என்கிறார். பிள்ளையான் கிழக்கை கிழக்கு மாகாணத்து (குடியேறிவரும் சிங்கள) குடிமக்கள் தான் ஆளவேண்டுமென்கிறார். இப்படியே இரண்டு முட்டாள்களும் தாம் பேசுவது என்ன என்பது தெரியாமல் ஒருவரின் குடிம்பியை மற்றவர் பிடித்து இழுக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தெரிந்து இந்த மனித குரங்கு என்ன செய்ய போகுது:-)

வடக்கும் கிழக்கும் இணைவதால் என்ன லாபம்? என்று கேட்கிறார் பிள்ளையான்!

இணைவதால் நீ தொலைந்து போவாய் அது பெரியலாபம். இதெல்லாம் தெரியாமல் அரசியல் செய்யுதுகள்.

கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்குத் தான் லாபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.