Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

2011: மன்மோகன் சிங்

என்ன ஒரு வீழ்ச்சி!

மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன்.

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக்காக்க முற்படுகிறார்?

ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை.

2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இவர் பேசாமல் பஞ்சாபில் கோதுமை

நடப்போயிருக்கலாம். தினம் தினம் அசிங்கப்படுகிறார். லோக்பால் சட்ட விவாதங்களின்போது பாஜகவினர் அசிங்க அசிங்கமாக இவரைப் பற்றிப் பேசுகிறார்கள். கோபமே கொள்ளாது உட்கார்ந்திருக்கிறார். கோபித்துத்தான் என்ன பயன்? ராகுல் காந்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று போய்விடலாம்.

வேண்டாம் சார்! பேசாமல் வீட்டுக்குப் போய், நாலைந்து எகனாமிக்ஸ் பாடப் புத்தகம் எழுதுங்கள். இந்த பாலிடிக்ஸில் புகுந்து புறப்பட உங்களுக்குத் தெரியவில்லை. அதையெல்லாம் பிரணவ்டாவிடம் விட்டுவிடுங்கள்.

ஆக்கம் - பத்ரி

http://www.badrisesh.../2011_4313.html

Edited by akootha

  • தொடங்கியவர்

2011: சுப்ரமணியன் சுவாமி

தெஹெல்காவில் இவரைப் பற்றி நீண்ட ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசியுங்கள். ( http://tehelka.com/story_main51.asp?filename=Ne311211Coverstory.asp )

2ஜி ஊழல் வழக்கில் தனியாளாக நின்று நீதிமன்றத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சர்ச்சையான மனிதர். ஏன், எதற்கு இவர் ஒரு வழக்கைக் கையில் எடுத்துக்கொள்கிறார் என்பதில் எனக்கு நிறையச் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் விடாக்கண்டர். அரசியல் உலகில் உள்ள அசிங்கங்கள் பெரும்பாலாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து வழக்காடுபவர்கள் இவரைப்போல யாருமே இல்லை. திமுகவை - ராசாவை, கனிமொழியை - மட்டுமின்றி, காங்கிரஸின் சிதம்பரத்தையும் அடுத்து ராபர்ட் வாத்ரா, சோனியா காந்தி இருவரையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று சூளுரைத்திருக்கும் இவரும் 2011-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்தவராகிறார்.

அண்ணா ஹசாரேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதைவிட அதிகமான எதிர்ப்பு இவர்மீது இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அதிகம். விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி.

2ஜி விவகாரத்தில் ஏதோ சரியில்லை என்று முதலில் கண்டுபிடித்தது சில பத்திரிகையாளர்கள்தாம். அதனை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று ரூம் போட்டு யோசிப்பதற்கு முன்னதாகவே களத்தில் குதித்து தனக்கான போராக மாற்றிக்கொண்டவர் சுவாமி. மாபெரும் சந்தர்ப்பவாதி. மாபெரும் போராளி.

இந்தியாவை ஊழலிலிருந்து காக்கவந்த மாமனிதர் என்பதாகத்தான் ட்விட்டரில் இவருடைய ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் எனக்குச் சம்மதம் இல்லை. சுவாமியின் முதல் குறி அரசியல் ஆதாயம்தான். அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருவர்மீதும் ஊழல் வழக்குகள் போட்டுக்கொண்டே ஜெயலலிதாவுடன் சமரசம் பேசுகிறார். சோனியாவுடன் சேர்ந்துகொண்டு பாஜகவைக் குழிபறித்துத் தள்ளிவிட்டு, இப்போது சோனியாவை ஒழித்துக்கட்டிவிடுவதாகப் போராடுகிறார். ராஜிவ் காந்தி தன் உற்ற நண்பர் என்று சொல்லியவர், அப்போது கையில் எடுக்காத போஃபோர்ஸ் பணப் பட்டுவாடா + ஸ்விஸ் வங்கிக் கணக்குப் பிரச்னையை இப்போது பேசுகிறார்.

ஆனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இவரும் முக்கியக் கண்ணியே. பிறரால் செய்யமுடியாத பலவற்றை இவரால் செய்யமுடியும். பயமே இன்றி ஆட்சியில் இருப்போரை இவரால் தனியொரு மனிதனாக எதிர்கொள்ள முடியும். மாறி மாறி ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி, முதல்வர்கள், மந்திரிகள்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த முடியும். நீதிமன்றங்களில் தாமாகவே வழக்காடி நீதிபதிகளை ஏற்கவைக்க முடியும்.

அதுவரையில் இவர், இவருடைய எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே.

http://www.badriseshadri.in/2011/12/2011_30.html

  • தொடங்கியவர்

நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக்காக்க முற்படுகிறார்?

manmohini_manmohan-singh-sonia-gandhi-cartoon.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.