கோசான்ஜியின் கருத்துதான் எனதும். அவர் நான் பேச நினைத்ததெல்லாம் தான் பேசிவிட்டார். நன்றி கோசான்ஜி!
ரசோதரன், “ஒரு நல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும்” இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த நல்லவர் யார்? எங்கே இருக்கிறார்? நல்லவர், இல்லாவிட்டால் ஓரளவாவது நல்லவர் என்று தேடினாலும் கிடைக்குமா? நல்லவர்களைத்தான் 67இல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களே. அன்றிலிருந்து அண்ணனின் தம்பிகள் காட்டில்தானே மழை.
நீங்கள், “நல்லவர்கள்” என்று சொல்லும் போது எம்ஜிஆரின் படப் பாடல்வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது, “ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் என்றாராம்….” என்று அந்தப் பாடல் இருக்கும்.
இப்பொழுதெல்லாம் நல்லவர்கள் அரசியலுக்குள் வருவதில்லை. அரசியலை ‘சாக்கடை’ என்று குறிப்பிட்டு பல வருடங்களாயிற்று. எம்ஜிஆர் படங்களில் நல்லவனாக நடித்து நல்லவன் வாழ்வான் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டு, வல்லவன் வாழ்வான் என்று அரசியலில் காட்டியவர்.
விஜய், சினிமாவில் ஈட்டாத பணம்? புகழா? ஆனால் ஏன் சினிமாவை விட்டு அவர் அரசியலுக்கு வருகிறார்? சினிமாவை விட அரசியலில் அவை இரண்டும் அதிகமாக இருக்கும்.
திருமா, விஜயோடு ஆரம்பத்திலேயே இணைவதாக இருந்தது. தவெக மேடையிலேயே அவர் பேசுவதாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதோ அவர் மேடையிலும் தோன்றவில்லை, விஜயுடன் தேர்தல் கூட்டணியிலும் இல்லை. ஆக, இங்கே ஒரு நல்லவன் என்ன பாடு படுகிறார் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
நாட்டுக்காக உழைப்பதற்கென்றே பிறந்தவர்களல் ஒருவர் படத்தை இணைக்கிறேன். அரச வைத்தியசாலையில், உடுப்பதற்கே உடையின்றி இருப்பதைப் பாருங்கள்.
கக்கன் போன்ற நேர்மையான தலைவர்களின் நிலையை நினைத்தால் இன்னும் வருத்தமாக தான் இருக்கும். அதிகாரத்தில் இருந்தவர், பிறகு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி இருந்தார். அவர் யாருக்காக உழைத்தாரோ அந்த மக்களே அவரை மறந்துவிட்டார்கள்.
ரசோதரன், ‘நல்லவர்களது ஆட்சி’என்பதை உங்களைப் போல் நானும் வரவேற்பேன். அதற்கான சந்தர்ப்பம் எனது காலத்தில் இல்லை. உங்கள் காலத்திலும் வருமா தெரியவில்லை.இங்கே, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பந்தயத்தில் எந்தக் குதிரை மீது காசைக் கட்டலாம்? எது முதலாவதாக வரும்? எந்தக் குதிரை இனி ஓட்டத்துக்கு லாயக்கில்லை? என்பதையே கவனிக்கிறேன். சண்டிக் குதிரை, வண்டிக் குதிரை, நொண்டிக் குதிரை,சவாரிக் குதிரை, என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.
By
Kavi arunasalam ·
Archived
This topic is now archived and is closed to further replies.