Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றஅதன்

பின்சாரப் பொய்யாமை நன்று. 323

ஆராயப்புகின் , உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும் , உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.

எனது கருத்து:

நீங்கள் வாழ்க்கையில என்ன கூத்தும் ஆடுங்கோ . ஆனால் , உயிருகளை கொல்லாமல் , எடுத்ததுக்கெல்லாம் பொய்பேசாமல் இருக்கோ எண்டு ஐயன் சொன்னாலும் , இன்னுமொரு இடத்திலை ஏதாவது நல்லவிசையம் நடக்குமெண்டால் பொய் சொல்லலாம் எண்டு சொல்லி சனங்களை குழப்பிறார் இந்த ஐயன் . கொஞ்சம் யோசிக்க வேண்டித்தான் கிடக்கு .

Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to say.

Ne pas tuer est bon par lui-même; ne pas mentir n’est bon que pour venirensuite.

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நல்லாறு எனப்படுவது யாதுஎனின், யாதுஒன்றும்

கொல்லாமை சூழும் நெறி. 324

நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலையும் போற்றும் நெறியாகும்.

எனது கருத்து:

சரி நல்ல விசையம்தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் எந்த உயிரை கொல்லகூடாது எண்டு ஐயன் சொல்லேலை . இப்ப ஐஞ்சறவான சீவனுகளை கொல்லாமல் விட்டால அதுகள் கால்வைக்க இடமில்லாமல் பெருகி, போடுங்களல்லோ ( இயற்கைசமநிலை ) ?? இதை ஏன் ஐயன் கணக்கில எடுக்கேலை ??

'Tis path of him who studies nought to slay. You ask, What is the good and perfect way?

Quel est le meilleur chemin (pour aller au ciel)? Cest celui que l’on suite en ne tuant quelque être que ce soit.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை. 325

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களைவிட உயர்ந்தவன் ஆவான்.

எனது கருத்து:

காவியை விட ஒரு உயிரை வதைச்சு கொல்லாமல் இருக்கிறவன் உலகத்திலை திறமான ஆள் எண்டு ஐயன் சொல்லுறார் ஐயன் . ஆனால் எனக்குள்ளை ஒரு கேள்வி வருகிது . காவி எண்ட உயர்ந்த நிலையை அடைஞ்சும் , கொலை செய்த கோஸ்ரியளை எந்த வகைக்குள்ளை அடக்கிறது ?? உதாராணமாய் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் .

Of those who 'being' dread, and all renounce, the chief are they,

Who dreading crime of slaughter, study nought to slay.

Le plus élevé de tous ceux qui ont renoncé au monde, par crainte d’une autre vie, est incontestablement celui qui n’oublie pas la vertu de ne pas tuer, par horreur du meutre.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் மேல் உயிரை உண்ணும் காலனும் செல்லமாட்டான்.

எனது கருத்து:

இதிலை எனக்கு பெரிய குழப்பம் இருக்கு . கொல்லாமை எண்டிறது மனி உயிர் மட்டுமோ இல்லை ஐஞ்சறிவுள்ள உயிருகளையும் சேர்த்தோ ?? சரி ....... ஐஞ்சறிவுள்ள உயிருகளும் எண்டால் இந்தக்காலத்தில ஒரு சுத்தவானும் இல்லை . ஆனால் , கொலாமையை அறமாய் கொண்டவனுக்கு காலன் வர பஞ்சிப்படுவான் எண்டால் , மனிசக் கொலையையே குலத்தொழிலாய் கொண்ட மகிந்து குறூப்புக்கும் காலன் கிட்ட வரப் பஞ்சிப்படுகிறானே பாருங்கோ .

Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent care.

Yaman (dieu de la mort) qui dévore toutes les vies n’a pas de pouvoir sur les jours de celui qui observe la vettu de ne tuer.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது

இன்உயிர் நீக்கும் வினை. 327

உயிரினங்கள் மூலம் தனக்கு மரணபயம் வந்தாலும் , தன்னைக் காத்துக்கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.

எனது கருத்து:

இதுக்கு நான் அறிஞ்சவரையில எங்கடை தேசியவிடுதலை போராட்டத்தை தான் சொல்லுவன் . தம்பி பிராபாகரனுக்கு மகிந்து குறூப்பை முடிக்கிறது சிம்பிள் வேலை . ஆனால் அதை அவர் செய்யேலை . கடைசீல தன்ரை உயிர் போகேக்கைகூட அதை அவர் செய்யேலை . இந்த குறளுக்கு ஒரு உதாரணமாய் போய் சேந்திட்டார் பாருங்கோ . அனால் மகிந்து குறூப்தான் அடங்கினதாய் தெரியேலை .

Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away.

Ne jamais commettre le crime de ravir la vie précieuse d’un autre être, même si cela doit coûter sa propre vie.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கம் கடை. 328

உயிர்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம், அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருதமாட்டார்கள் .

எனது கருத்து:

உயிர்வதை ஒரு நல்ல விசையமில்லை . எங்கடைசனம் கோயிலுகள் வளிய பெரிய வேள்வியள் வைப்பினம் . வாய்பேசாத சீவனுகளை வெட்டித்தள்ளுவினம் . கேட்டால் வைரவருக்கு குளித்தி , ஊருக்குநல்லது அது இதுவெண்டு கதையளப்பினம் . ஒழுங்கான படிச்ச மனச்சாட்சி உள்ளவங்கள் இதுகளை கேடுகெட்ட வேலையாத்தான் நினைப்பாங்கள் பாருங்கோ .

Though great the gain of good should seem, the wise

Will any gain by staughter won despise.

Le profit (spirituel) provenant de l’immolation d’une victime dans un sacrifice est grand et a été recommandé à ceux qui mènent la vie familiale; cependant les Sages pénitents méprisent le profit provenant d’un meutre.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=4]கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவார் அகத்து. 329[/size]

[size=4]கொலைத் தொழிலைச் செய்யும் மனிதர்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிட்தில் தாழ்ந்த தொழிலாகவே கருதுவார் .[/size]

[size=4]எனது கருத்து:[/size]

[size=4]சைவமும் சொல்லுது உயிருகளை கொல்லாதையுங்கோடாப்பா , அன்பே சிவம் எண்டு . பௌத்தமும் இதைத்தான் சொல்லுது . ஆனால் இந்த மகிந்து செய்யாத கொலையளோ ?? கொலையள் அவங்களுக்கு குலத்தொழிலாய் போனாலும் , இண்டைக்கு உலகம் அவங்களைத்தானே உயத்திப் பிடிக்குது . அப்ப ஆரில பிழை ?? ஐயனிலயோ அல்லது உலகத்திலையோ ???[/size]

[size=4]Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know.[/size]

[size=4]Ceux qui font métier de tuer sont aux yeux de ceux qui en connaissent la vileté, de vils professionnels.[/size]

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப,

செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

பிணி வறுமை போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக்க கண்டு இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர்.

எனது கருத்து:

எனக்கு முற்பிறவியளிலை நம்பிக்கையில்லை . உலகத்தில இருக்கிற சர்வாதிகாரியள் , அரச குடும்பங்கள் செய்யாத கொலையளோ ?? ஏன் அவையிட்டை இந்த வறுமையோ வருத்தங்களோ அண்டுதில்லை ??நல்லாய்த்தானே இருக்கினம் ...... உதாரணத்துக்கு டயானாவையும் டோடியையும் கொண்ட எலிசபெத்தோ அல்லது அவாவின்ரை பெடியோ என்ன கெட்டழிஞ்சு போட்டினமே ??? ஐயன் ஏன் இப்பிடி எழுதிறார் ???

Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained.

Ceux qui connaissant les conséquences des actes humains disent que ceux dont le corps est couvert d’ulcères et qui vivent misérablement de vils métiers, sont ceux qui ont arraché, dans le passé, la vie des être.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் துறவறவியல் நிலையாமை, ( Instability , De l’instabilité). [/size]

நில்லாத வற்றை நிலையின என்று உணரும்

புல்லறி வாண்மை கடை. 331

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .

எனது கருத்து :

ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .

Lowest and meanest lore, that bids men trust secure,

In things that pass away, as things that shall endure!

C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் துஅற்று. 332

பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது .

எனது கருத்து :

இதைத்தான் எங்கடை பெரிசுகள் வலு சிம்பிளாய் சொன்னவை. குளங்குட்டையிலை தண்ணியும் மீனும் இருக்கும் வரைக்கும் தான் கொக்குகள் இல்லாதபொல்லாத சொந்தங்கள் கொண்டாடும் எண்டும் , இது ரெண்டும் வத்திப்போனால் கொக்குகள் குளத்தை ஏன் நாயே எண்டும் கேக்காதுகள் எண்டு .........

As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease.

La grande opulence vient, comme vient nombreuse la foule pour assister à une représentation théâtrale; elle s’en va comme la foule qui se dissipe, quand la représentation a pris fin.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல். 333

செல்வம் நிலைக்காத இயல்புடையது . அத்தகைய செல்வத்தைப் பெற்றால் நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும் .

எனது கருத்து :

காசு இண்டைக்கு வரும் நாளைக்குப் போகும் . காசின்னரை குணமே அதுதான் .உங்களுக்காக ஆரும் நாலு சொட்டு கண்ணீர் விடமேணுமெண்டால் , காசு இருக்கேக்கை ஒரெப்பன்.............. கனக்கவேண்டாம் கபே குடிக்கிற காசு 2 யூறோ சேத்தால் மாசம் 60 யூறோ . இந்த நேசக்கரம் போலை இருக்கிற உண்மையான ஆக்களிட்டை குடுத்தியள் எண்டால் , அங்கை ரெண்டு மாசத்துக்கு வயிறு முட்ட போராலை பாதிச்ச சனங்கள் சாப்பிடுங்கள் அல்லது படிக்கிங்கள் எல்லோ.

Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ.

L’opulence est, de sa nature, instable. L’obtient-t-on? Il faut s’empresser de faire de suite, les actes de charité qui s’accomplissent par son moyen.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின். 334

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு, " நாள் " என்பது கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

எனது கருத்து :

நீங்கள் சிலபேரைப் பாத்திருப்பியள் ,ஒவ்வரு வரியமும் தங்கடை பிறந்தநாளை ஏதோ கோயில் திருவிழா கணக்காய் செய்து கொண்டிருப்பினம் . உண்மையில அவைக்கு விளங்கிறேலே , தங்கடை ஆயுள் காலத்தில ஒருவரியம் போட்டுதெண்டு . ஆனால் பிறந்தநாளை சம்பெயின் உடைச்சு கொண்டாடிவினம் . எவ்வளவு விளப்பம் கெட்ட சனங்கள் பாத்தியளே ?? உண்மையிலை தன்னைப் பற்றி அறிஞ்சவன் இதுகளையெல்லாம் செய்யமாட்டான் கண்டியளோ .

As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life.

Le temps a l’apparence d’être mesuré par la jour. En réalité, pour ceux qui le connaissent, il est une scie, dont les dents coupent continuellement la vie.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும். 335

மேல்மூச்சு நாக்குத் , தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதிபெற நல்லறம் செய்யவேண்டும்.

எனது கருத்து :

மனிசனாப் பிறந்தால் குறைஞ்சது ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் . சிலபேரை பாத்தியள் எண்டால் தானும் படுக்காமல் மற்றவனையும் படுக்கவிடாமல் புத்துக்கு மண்ணெடுத்துக் கொண்டிருப்பினம் . இவையளாலை ஆருக்கு என்னபிரையோசனம் ??? எதுக்கும் ரிக்கற் எடுக்கிறதுக்கு முதல் ஒரு துரும்பையாவது எடுத்து போடுங்கோ . போறவழிக்குப் புண்ணியமாய் போகும் .

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death.

Les bonnes couvres, sont à être faites en hâte, avant que la langue soit paralysée et que le hoquet survienne.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு. 336

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம் .

எனது கருத்து :

இண்டைக்கு மகிந்துவும் மகிந்துவின்ரை கூட்டாளியளும் தம்பியையும் , தம்பியின்ரை கூட்டத்தையும் முடிச்சிட்டம் எண்டு விழா எடுத்து அப்பாவிச் சனங்களுக்கு முன்னாலை நெஞ்சை நிமித்தாலாம் . ஆனால் பாருங்கோ நாளைக்கு இதே மகிந்து கூட்டத்துக்கு சங்கூத ஒருதன் வருவான் . வாழ்க்கையிலை எதுவுமே நிலையில்லை . ஆனால் அதுக்குள்ளை எத்தினை ஆட்டம் போடிறாங்கள் இந்த மோடையங்கள் ??

Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world.

Ce monde est instable, tel que le font ressortir ces paroles:

‘‘ il fut hier, il n’est plus aujourd’hui’’.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல. 337

அறிவற்றவர் ஒருவேளியாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல; மிக்க பலவாகும் .

எனது கருத்து :

இந்த உடம்பும் உயிரும் ரெயில் பயணியள் மாதிரி . இறங்கிற இடம் வந்தவுடனை பயணி எண்ட உடம்பு உயிர் எண்ட ரயிலை விட்டு போய் கொண்டே இருக்கும் . இதுகள் தெரியாமல் சனங்கள் ஆயிரம் மனக்கோட்டையள் கட்டிக்கொண்டு இருப்பினம் எண்டு ஐயன் சொன்னாலும் , வேறை வழியாலையும் நாங்கள் யோசிக்கவேணும் கண்டியளோ . வாழ்க்கை நிலையில்லாதது எண்டு ஒவ்வருத்தனும் மூலையுக்கை குந்திக் கொண்டிருந்தால் , காட்டுக்கை மிருகத்தோடை மிருகமாய் இருந்த மனுசன் இண்டைக்கு சாம்சுங் கலக்ஸியோடையும் , சாம்சுங் ரபிலற்றோடையும் திரிவனோ ???????

Who know not if their happy lives shall last the day,

In fancies infinite beguile the hours away!

On se sait pas si on vivra au moins un jour, on forme des projets,

plus nombreux que dix millions.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் துஅற்றே

உடம்பொடு உயிர்இடை நட்பு. 338

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது . கூட்டைத் தனியே விட்டுவிட்டுப் பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும் .

எனது கருத்து :

இந்த குருவியள் எல்லாம் தாங்கள் முட் போட்டு குஞ்சு பொரிச்சு ஒரெப்பன் வளரும் வரைக்கும் தான் கூடு ஒண்டை கட்டி அதுக்குள்ளை இருப்பினம் . குஞ்சுகள் கொஞ்சம் வளர இந்தக் குருவியள் எங்கையாவது பறந்து போடுங்கள் . இதே மாதிரித்தான் எங்கடை உடம்பும் உயிருக்கும் பந்தங்கள் கண்டியளோ . ஆனால் இதுக்குள்ளை எத்தினை ஆட்டங்களை எங்கடை சனங்கள் ஆடுதுகள் ??

Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share.

L’oisillon parvenu à maturité abandonne l’œuf dont il est sorti et s’envole: telle est l’amitié de l’âme pour le corps.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. 339

உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும் . மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு சா நித்திரையைப் போலை வரும் . தப்பி தவறி அவன் பிறக்க வேண்டி வந்தால் , அது அவனுக்கு நித்ரையாலை எழும்பிற மாதிரி . இதை கிட்டமுட்ட ஒவ்வருநாளும்தான் நாங்கள் செய்யிறம் . ஆனால் இருந்தாப்போலை அப்பிடியே நித்திரையா போடுவம் . இதுகள் தெரியாமல் எங்கடை சனங்கள் இடைப்பட்ட 16 மணித்தியாலத்தில எத்தினை கூத்துகளை ஆடுதுகள் ?? தான்தான் பணக்காறன் எண்டும் , சாதிமான் எண்டும் , அறிவாளியெண்டும் , தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் கைநாட்டுகள் எண்டும் , இவையள் ஆடிற ஆட்டம் சொல்லி வேலையில்லை கண்டியளோ .........

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep.

La mort ressemble au sommeil. La naissance ressemble au réveil.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு. 340

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை.

எனது கருத்து :

நாங்கள் எவ்வளவோ நல்லதுகளையும் கெட்டதுகளையும் செய்யிறம் . நாங்கள் ஏதோ சாகாவரம் எடுத்த ஆக்கள் மாதிரி . ஆனால் உண்மை அப்பிடி இல்லை கண்டியளோ . எங்கடை உயிருக்கு ஒழுங்கான வீடுவாசல் கிடையாது . ஒழுங்கான மனிசரெண்டால் இதுகளை மனசிலை வைச்சு மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் சீவிக்கிற வழியை பாக்கவேணும் பாருங்கோ .

he soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows?

La vie n’a pas de gîte permanent dans le corps, habité par toutes les maladies; elle ne l’habite qu’à titre de locataire.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் - துறவறவியல் - துறவு - ( Renunciation ,Du renouncement) . [/size]

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 341

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ ,அந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை .

எனது கருத்து :

ஒருத்தனுக்குப் பிடிச்ச சனியள் மூண்டு மண் , பொன் , பெண் . இந்த மூண்டு சனியும் ஒருத்தனை உண்டு இல்லை எண்டு ஆக்கிப்போடும் . இதுகளிலை பற்றை வைக்காமல் விட்டால் அவனுக்கு துன்பம் வராது எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை முற்றுந்துறந்த துறவியளாலேயே இந்தப் பெண் எண்ட பற்றை விடேலாமல் கிடக்கு......... நம்ம காஞ்சி பெரியவாளும் , பிரேம்ஸ்சும் , நித்தியும் படுகிற பாடுகளைப் பாக்கிறியள் தானே ???

From whatever, aye, whatever, man gets free,

From what, aye, from that, no more of pain hath he!

Si l’on renonce à un objet quelconque,

celui-ci ne cause aucune douleur au renonçant.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல. 342

துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால் , ஆசைகளையெல்லாம் விட்டுவிடவேண்டும் . அப்படி விட்டுவிட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பங்கள் பலவாகும் .

எனது கருத்து :

சிவசத்தியமாய் எனக்கு இந்தக் குறளின்ரை லொஜிக் விளங்கேலை. ஒரு பொருளிலை பற்று ஆசை வைச்சால் தானே அதாலை இன்பம் கிடைக்கும் . உதாரணத்துக்கு ஒருத்தன் ஒரு பெட்டையை அக்கறையா முழு மூச்சோடை சைற் அடிச்சால் தானே காதல் இனிய கலியாணம் எண்ட இன்பம் கிடைக்கும் . ஏனோதானோ எண்டு சைற் அடிச்சால் எந்தப்பெட்டை அவனை திரும்பிப்பாக்கும் ??

'Renunciation' made- ev'n here true pleasures men acquire;

'Renounce' while time is yet, if to those pleasures you aspire.

Nombreuses sont les délices qu’obtient naturellement dans cette existence, celui qui renonce à tout. Si on les désire, il faut renoncer au monde.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343

ஐவகைகப் புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருட்களை ஒரே சேர விட்டு விட வேண்டும்.

எனது கருத்து :

சரி ஐயா ஐஞ்சு புலனையும் அடக்கினால் தான் துறவு எண்டு சொல்லுறியள் . ஆனால் இது நடக்கிற காரியமோ ?? ஆனானப்பட்ட விசிவாமித்திரரே மேனகையிட்டை கவிண்டு கொட்டுண்டவர் எண்டதையும் ஞாபகப்படுத்திறன் .

'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire .

Il faut abolir les sensations que l’on perçoit par les cinq sens et abandonner radicalement; tous les objets que l’on a amassés, en vue de jouir des cinq sens.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இயல்புஆகும் நோன்பிற்குஒன்று இன்மை; உடைமை

மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. 344

தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும் . பற்று இருந்தால் மீண்டும் மயங்குவதற்கு வழி உண்டாகும்.

எனது கருத்து :

சாமியாப் போறது ஒண்டும் லேசுப்பட்ட வேலையில்லை . அதுக்கு முதல் வேலையே ஆசையளை விடிறதுதானாம் . ஒருகாலத்திலை கடையில் சாமி , குடைச்சாமி , யோகர் சாமி எண்டு கண்டிருக்கிறன் . யோகர்சாமீட்டை போற சனத்துக்கு அந்தாள் சொல்லும் " சும்மா கிட எண்டு " . இவையள் இமையமலைக்குப் போய் விலாசம் காட்டின ஆக்கள் இல்லை . இவையிட்டை ஒரு சொத்துப்பத்தும் இருக்கேலை . ஆனால் இப்ப இருக்கிற சாமியளைப் பாத்தால் பேருக்குத்தான் காவி , ஆனால் நம்பர் வண் மில்லியனர் பாருங்கோ.

'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew.

Ne rien posséder est la loi de la pénitence. Posséder un seul objet détruit la pénitence et ramène le vertige.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிக வருமானம் வரும் இடம் ஆன்மீகம் தானே.முதல் இல்லாத தொழில்

  • தொடங்கியவர்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையானதாகும் . ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

எனது கருத்து :

இந்த சாமியளையும் அவையின்ரை சொத்துப்பத்துகளையும் பாத்தால் , அவை அரசாங்கத்துக்கு வரி கட்டினமோ இல்லையோ திரும்பி பிறக்கிறதுக்கு தங்கடை சுமையளை கூட்டிக்கொண்டுதான் இரிக்கினம் எண்டிறது கிளியறாய்த் தெரியுது .

To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?

A celui qui s’efforce d’éviter la renaissance, le corps est de trop. Qu’adviendra-t-il, s’il désire encore d’autres biens.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

யான் எனது என்னும் செருக்கு

அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் 346

உடலை " யான் "எனவும் , பொருட்களை "எனது" எனவும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்கின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் போவான் .

எனது கருத்து :

இங்கைதானே பிரச்சனையே . நான் என்ரை எண்டு சொல்லாமல் " நாம் " " எமது " எண்டு சொல்லுங்கோ . உங்கடை சொண்டு மற்றச் சொண்டோடை முட்டும் . பக்கத்தில இருக்கிற சனமும் உங்களோடை ஒட்டும் . இதுகளை பளக்கத்திலை கொண்டுவாங்கோ பேந்து உங்களைப் பிடிக்கேலாது .

Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine.

Celui qui déracine l’orgueil de dire: ‘‘ Moi, le mien’’ entre dans la région céleste, supérieure au séjour des dieux.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.