Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குதிரையின்ரை குணம் தெரிஞ்சு தானாம் கொம்பு குடுக்கேல்லை... :(

நான் சொல்றது ஏதும் இந்த குறளுக்கு பொருந்துதோ????? :rolleyes: :rolleyes:

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு 347

"யான் " "எனது "இருவகைப் பற்றுக்களையும் விடாதவரை துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன .

எனது கருத்து :

என்னத்தைச் சொல்ல......... " நான் " எண்டிறது அட்டமத்து சனியெண்டால் " என்ரை " எண்டிறது பத்திலை வியாழன் . ரெண்டும் ஒருத்தனை சிப்பிலி ஆட்டிபோடும் . நான் முழுக்க இதுகளை உங்களை விடச்சொல்லி கேக்கேலை . நீங்கள் முடிஞ்சவரை ஊக்கம் எடுத்தியள் எண்டால் சந்தோசமாய் இருப்பியள் பாருங்கோ .

Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp.

Les douleurs s’attachent à celui qui est rivé à ses attachements et ne le quittent pas.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர். 348

முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர் ; அவ்வாறு துறக்காத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர் ஆவர் .

எனது கருத்து :

இதைப் படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் தான் திரும்பத் திரும்ப மண்டையுக்கை அடிக்குது....... அப்பத்தையான் முனிவர்மாரிலை இருந்து இப்பத்தையான் சாமியள் வரை பெட்டயள் விசையத்தைலையும் , அதாலை வந்த காமத்தையும் ஏன் கட்டுப்படுத்தேலாமல் போனது பாருங்கோ ??

Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net.

Ceux qui renoncent définitivement à tout obtiennent leur salut. Les autres sont gagnés par le vertige et sont pris dans le filet (de la renaissance).

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பற்றுஅற்ற கண்ணே பிறப்பறுக்கும் ;மற்று

நிலையாமை காணப் படும். 349

இருவகைப் பற்றும் அற்றபொழுதே , அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும் . இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வரும் .

எனது கருத்து :

ஒருகுளத்திலை தாமரை இலைக்கும் தண்ணிக்கும் உள்ள தொடர்புதான் , மனுசனுக்கும் ஆசையளுக்கும் இருக்கவேணும் . இல்லையெண்டால் அந்த ஆசையளாலையே அவன் திருப்பித் திருப்பிப் பிறப்பனாம் எண்டு ஐயன் சொல்லுறார் .

When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability.

Le renoncement détruit instantanément la renaissance; tout autre moyen se heurte à l’instabilité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை ;அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

பற்று இல்லாதவனாகிய இறைவனது பற்றை மட்டுமே பற்றுக . உலகப் பற்றுகளை விடுவதற்கு அப்பற்றை பற்ற வேண்டும் .

எனது கருத்து :

சரி ஐயா நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள் . எங்கடை சனம் பிடிக்காத விரதங்கள் இல்லை , கும்பிடாத கோயிலுகள் இல்லை , கடைசீல எந்த இறைவனும் வந்து காப்பாத்தி விடேலையே ஐயா ?? வர வர எனக்கு இந்த இறைவனிலேயே நம்பிக்கை போட்டுது ஐயா .

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.

Pour renoncer à tout attachement, il faut suivre la voie du salut, tracée par Celui qui a vaincu l’attachement et s’y tenir fermement.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறத்துப்பால் துறவறவியல் மெய் உணர்தல் ,Knowledge of the True , Perception du vrai .

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்

மருள்ஆம் மாணாப் பிறப்பு. 351

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிழமையிலை ரெண்டு மூண்டுதரமாவது குதிரைக்கு காசு கட்டிக்கொண்டும் , லொட்டோ சுறண்டியும் வெட்டிக்கொண்டும் நிப்பினம் . இவையளை ஏன் இப்பிடி காசை சிலவளிக்கிறியள் ?? எண்டு கேட்டால் , " விட்ட காசை இப்ப எடுக்கிறன் பார் " எண்டு சொல்லுவினம் . ஆனால் வாழ்கையிலை விட்டதை எடுக்கமாட்டினம் . இவைக்கு குதிரையை ஓட்டிறது மனுசன் எண்டும் , லொட்டோ மெசின்தான் நிகழ்தகவு லை முடிவு செய்யும் எண்டு தெரியாமல் இல்லை . இப்பிடிப் பட்ட காயளை எளிய பிறப்புகள் எண்டு சொல்லலாம் .

Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream!

L’illusion qui fait prendre la chimère pour la réalité, engendre la naissance sans gloire.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பற்றுக பற்றுஅற்றான் பற்றினை ;அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

பற்று இல்லாதவனாகிய இறைவனது பற்றை மட்டுமே பற்றுக . உலகப் பற்றுகளை விடுவதற்கு அப்பற்றை பற்ற வேண்டும் .

எனது கருத்து :

சரி ஐயா நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள் . எங்கடை சனம் பிடிக்காத விரதங்கள் இல்லை , கும்பிடாத கோயிலுகள் இல்லை , கடைசீல எந்த இறைவனும் வந்து காப்பாத்தி விடேலையே ஐயா ?? வர வர எனக்கு இந்த இறைவனிலேயே நம்பிக்கை போட்டுது ஐயா .

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.

Pour renoncer à tout attachement, il faut suivre la voie du salut, tracée par Celui qui a vaincu l’attachement et s’y tenir fermement.

எல்லாம் கர்ம வினைப்படி தான் நடக்கும் என்று ஜயன் சொல்லுறாரே

Edited by ஜீவா

  • தொடங்கியவர்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு அவ்வுணர்வு அறியாமையை நீக்கி , இன்பத்தைக் கொடுக்கும்.

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிளிப்பிள்ளை மாதிரி மனுசிக்காறி வீட்டிலை இருக்க , வெளீல குரங்கு மாதிரி ஒரு தொடுப்பு வைச்சிருப்பினம் . அந்தக் தொடுப்பாலை இவை படாத பாடெல்லாம் பட்டு , நொந்து நூடில்சாகி மனுசிக்காறியிட்டை வரேக்கை , முதல் துன்பப் பட்டுபோனவருக்கு திரும்பவும் சொர்க்கத்தை கண்டமாதிரி இருக்கும் .

Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion free.

La délivrance de l’illusion, jointe à la vision sereine, fait éviter l’enfer et procure le salut.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து. 353

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யணர்வு பெற்றவர்க்கு , அடைந்துள்ள இவ்வுலகைவிட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

எனது கருத்து :

சில ஐமிச்சம் ஐயாத்துரையளை பாத்திருப்பியள் . இவையள் கெட்ட கிரிமியள் பாருங்கோ . தாங்களும் ஒரு விசயத்தை செய்யாயினம் மற்றவனையும் செய்யவிடாமல் தங்கடை கதையளாலை குழப்பிக்கொண்டு இருப்பினம் . இவையள் இப்பிடி இருந்தால் , ஆருக்கு வானத்த வளைக்கிற ஊக்கம் வரும் ??

When doubts disperse, and mists of error roll Away, nearer is heav'n than earth to sage's soul.

Le ciel est plus prêt d’être gagné que la terre, par celui qui passe du doute à la connaissance du Vrai.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐம்புலன்களின் உணர்வுகளையெல்லாம் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இல்லை.

எனது கருத்து :

ஒருத்தன் தன்ரை மனசை அடக்கி வெண்டிருக்காலாம் . ஆனால் , அவனாலை எது உண்மை எது பொய் எண்டு பகுத்தறிய தெரியாட்டில் , அவன் மனசை அடக்கியும் வேலையில்லை கண்டியளோ .

Five-fold perception gained, what benefits accrue To them whose spirits lack perception of the true?

Celui qui ne connaît pas le Vrai ne profite pas de maîtrise des cinq sens.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும் , அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும் .

எனது கருத்து :

என்னத்தைச் சொல்ல அகலிகையாலேயே தன்ரை புருசனை அடையாளம் காணேலாமல் போச்சிது . ஏன் கனக்க வேண்டாம் , எரிக்சொல்கெய்மிலை இருந்து எத்தினைபேர் வன்னிக்கு படை எடுத்தீச்சினம் . அவையளை நம்பினதாலைதானே எங்களுக்கு இத்தினை சீத்துவக் கேடுகளும் . இப்பிடி இனியும் இருக்காமல் நாங்கள் எதிலையும் அலேர்ட்டா இருக்கவேணும் பாருங்கோ .

Whatever thing, of whatsoever kind it be, 'Tis wisdom's part in each the very thing to see.

Connaître, c’est percevoir le Vrai dans chaque chose, quelle qu’elle soit et de quelque nature qu’elle soit.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி. 356

கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப் பொருளையும் அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர் .

எனது கருத்து :

உண்மையிலை நல்லா படிச்சு எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறிஞ்சு நடக்கிறவை திரும்ப பிறக்காமல் இருக்கிறதுக்கு ஏத்தமாதிரி நடப்பினம் எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை மனிசனாய் பிறந்தவன் பலம் பலகீனம் எண்ட ரெண்டு விசயத்தையும் கொண்டவனாய் இருக்கேக்கை ,எப்பிடி அவன் திரும்பி பிறக்காமல் இருக்க நடப்பான் ??

Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again.

Celui qui acquiert en ce monde, la connaissance du Vrai par l’instruction, obtient le moyen de ne pas y renaître.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357

கேட்ட பொருளை ஆராய்ந்து உண்மை அறிந்தவனுக்கு மறுபிறவு உண்டென்று ஒரு பொழுதும் எண்ண வேண்டாம் .

எனது கருத்து :

இண்டைக்கு எல்லாரும் படிக்கினம் . பெரிய அறிவாளியா வருகீனம் . படிக்காதவையின்ரை வீதம் குறையுது .இப்பிடி எல்லாருமே உண்மையை உணர்ந்திருக்கினம் , அவை மறுபிறப்பு இல்லை எண்டு நினைப்பினம் எண்டு ஐயன் சொன்னால் , அப்ப ஏன் உலகத்திலை சனத்தொகை கூடுது ??

The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell.

Ne croyez pas à la renaissance de celui dont l’esprit s’est recueilli et qui par, méditation et examen, a connu l’Etre qui existe.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு. 358

பிறவித் துயரைத் தரும் அஞ்ஞானம் அகல , முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு ஆகும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் எந்தநேரமும் தாங்கள் செத்துப்போடுவம் எண்டு புசத்திக்கொண்டு திரிவினம் . ஆனால் உயிரோடைதான் இருப்பினம் . இவையள் தரவளியாலை பக்கத்திலை இருக்கிறவனுக்குத்தான் அரையண்டம் . அறிவுடமை எண்டாலே இப்பிடியான மனநிலையளை கடந்து ஒரு தெளிவான முடிவுக்கு வாறதுதான் எண்டு ஐயன் இதிலை ஒரு டெபினிசன் தாறார் .

When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom true.

La vraie connaissance consiste à percevoir l’Etre pur, cause du ciel et à détruire l’ignorance, cause de la renaissance.

சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து , ஆசைகள் கெடுமாறு ஒழுகினால் , சார்வதற்கு உரிய துன்பங்கள் மீண்டும் வரமாட்டா.

எனது கருத்து :

பிரைச்சனையே இங்கைதானே !!! ஒருக்கால் வீட்டிலை கஸ்ரம் எண்டு களவெடுப்பம் . எங்களுக்கு தெரியும் இதாலை வில்லண்டம் வரும் எண்டு ஆனால் கைருசிப்படும் . எல்லாப் பிரைச்சனையளுக்கும் ருசிப்பட்டகை ஒருக்கால் உன்னும் . இப்பிடி இருக்காமல் ஆசையளை விட்டாலே அரைவாசிப் பிரைச்சனையள் இல்லாமல் போடும் .

The true 'support' who knows- rejects 'supports' he sought before- Sorrow that clings all destroys, shall cling to him no more.

Les douleurs inhérentes à l’homme sont détruites et n’atteindront plus à nouveau, celui qui perçoit le Refuge de tous créatures et vit libre de tout attachement.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360

விருப்பு , வெறுப்பு , அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றினுடைய பாதிப்பு இல்லாமல் ஒழுகினால் துன்பங்கள் வராமல் கெடும் ( ஒழிந்து நீங்கும் ) .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஆர் ஐயா இப்பிடி சீவிக்கிறாங்கள் ?? அப்பிடி எல்லாரும் நடந்தால் உலகம் எவ்வளவு நல்லாய் இருக்கும் ?? ஏன் மகிந்து குறூப்எங்கடை சனத்தை வேரோடை அழிச்சுது ?? இதுக்கு பிழை எண்டு தெரிஞ்சும் , இருபத்தியேழு நாடுகளுக்கு கிட்ட கூட்டாளியாய் நிண்டாங்கள் . சும்மா பகிடி விடாதையுங்கோ ஐயன் .

When lust and wrath and error's triple tyranny is o'er, Their very names for aye extinct, then pain shall be no more.

Que les trois (vices): désir, colère et illusion soient détruits; leurs conséquences néfastes disparaissent.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் துறவறவியல் அவா அறுத்தல் ( The Extirpation of Desire, L'extirpation du désir )[/size]

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்புஈனும் வித்து. 361

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து அவா என்று கூறுவர் .

என்கருத்து :

வயசானவை உயிர் போறநேரத்திலை சேடம் இழுத்துக் கொண்டு இருப்பினம் . எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் ஏதாவது முடியாத ஆசையள் இருக்கும் பாலை ஊத்திவிடுங்கோ எண்டு . மனிசனிலை இருக்குற ஆசையள் எண்ட விதை தானாம் திரும்பவும் ஒருத்தரை பிறக்கப்பண்ணும் எண்டு படிச்ச பெரியாக்கள் சொல்லுவினம் .

The wise declare, through all the days, to every living thing. That ceaseless round of birth from seed of strong desire doth spring.

La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்பவேண்டும் . அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை )விரும்பினால்த்தான் உண்டாகும் .

என்கருத்து :

ஒருத்தர் திரும்பி பிறக்க வேண்டாம் எண்ட நிலமைக்கு வாறதெண்டால் ஆசையை இல்லாமல் பண்ணவேணும் . ஆனானப்பட்ட முனிவர்மாரே பெண்ஆசையிலை கவிண்டு கொட்டிண்டு போயிருக்கினம் . எனக்கெண்டால் ஆசையை நிப்பாட்டிறது நடக்குமெண்டு நினைக்கேலை .

If desire you feel, freedom from changing birth require! 'I' will come, if you desire to 'scape, set free from all desire.

S’il faut faire un souhait, souhaitons la non renaissance. Celle-ci est assurée par l’évulsion du désir.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை

யாண்டும் அஃதுஒப்பது இல். 363

 

ஆசையின்மைக்குச் சமனான சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை மறு உலகிலும் அதற்குச் சமமானதொரு பொருளைக் காண்பதரிது.

 

என்கருத்து :

 

தண்ணி அடிக்கிறதாலை வாற வில்லங்கங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச விசையம் தான் . அந்த தண்ணியடி ஆசையை நிப்பாட்டுறதாலை வாற சந்தோசமும் ( பணம் , உடல்நலம் , குடும்ப உறவு , சமூக அந்தஸ்த்து ) சொல்லிவேலையில்லை . இந்த சந்தோசத்தை நீங்கள் எங்கைபோனாலும் எடுக்கேலாது .


No glorious wealth is here like freedom from desire; To bliss like this not even there can soul aspire.

 

Il n’y a pas, de richesse, supérieure en ce monde à l’absence du désir, ni égale en l’autre monde.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தூஉய்மை என்பது அவாஇன்மை ; மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 364

 

தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும் அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்

 

என்கருத்து :

 

எவன் ஒருத்தன் ஆசை இல்லாமல் இருக்கிறானோ அவன்ரை மனசு வெள்ளையாய் இருக்கும் . அதுவும் உண்மையா நடந்தால் தான் இதெல்லாம் ஒருத்தனுக்கு கைவரும் . ஆனால் , இவையள்தரவளியை இப்ப வலைபோட்டு தேட வேண்டிக்கிடக்கு .

 

Desire's decease as purity men know; That, too, from yearning search for truth will grow.

 

La pureté est l’absence du désir: celle-ci s’obtient par le culte du Vrai.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அற்றவர் என்பார் அவாஅற்றார் ; மற்றையார்
அற்றாக அற்றது இலர். 365

 

எதிலும் பற்றில்லாதவர்கள் பிறவியற்றவர்களாவர் . ஆசைக்கு அடிமையானவர்களுக்குப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை .

 

என்கருத்து :

 

எவன் ஒருத்தன் மண் ஆசை , பெண் ஆசை ,பொருள் ஆசை இல்லாமல் இருக்கிறானோ ,அவனை முற்றிலும் துறந்த துறவி எண்டும் , அவனுக்கு திரும்பவும் பிறப்பு இல்லை எண்டு ஐயன் சொலிறார் . இப்பிடியான ஆக்களை நான் யாழ்பாணத்திலை பாத்திருக்கிறன் . ஒரு யோகர் சாமியும் , கடையில் சாமியுமே காணும் . ஆனால் ஒருகாலத்திலை நாங்கள் உயர்வாய் மதிச்ச காஞ்சி மடமும் , மதுரை ஆதீனமும் ஐயன் சொன்னதுக்கு தலைகீழாய் நிண்டு நாறுது . இவையளை எப்பிடி நாங்கள் துறவி எண்டிறது ?? இன்னும் ஒரு விசையமும் எனக்கு விளங்கிது . ஏன்ரா இந்த பூமியிலை இவ்வளவு சனத்தொகையெண்டு .

 

Men freed from bonds of strong desire are free; None other share such perfect liberty.

 

Ceux que l’on appelle libérés de la renaissance sont ceux qui sont libérés du désir; les autres renaîtront.

 

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அஞ்சுவதோ ரும் அறனே ; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. 366

ஒருவன் அவாவிற்கு (ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம் . ஏனெனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.

என்கருத்து :

 

எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் ஒருத்தன் கட்டுசெட்டாய் இருக்கவேணுமெண்டால் விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கவேணும் எண்டு . ஆனால் , உங்கை கவிண்டு கொட்டுண்டவையின்ரை ஹிஸ்ரறியளை எடுத்து பாத்தியள் எண்டால் , அவையள் ஏதோவளியிலை ஒண்டிலை அளவுக்கு அதிகமாய் ஆசை வைச்சிருப்பினம் . அதாலை ஆசையள் இல்லாமல் சீவிக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது .

 

Desire each soul beguiles;  True virtue dreads its wiles.

 

C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை இல்லாமல் என்ன சீவியம்? ஆசை இருந்தால் தானே தேடல் இருக்கும்.. :rolleyes:

ஜயன் எங்கையோ தவறு விட்டிட்டரோ...! :icon_idea:

  • தொடங்கியவர்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். 367

 

ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால் , அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.

 

என்கருத்து :

 

ஒருத்தன் என்னத்தை விதைக்கிறானோ அதைத்தான் அறுப்பான் . எவன் கண்டதுக்கெல்லாம் ஆசைப்படாமல் தன்ரை சீவியத்தை கொண்டுபோறானோ , அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் . ஆசையை அடக்காதவன் கடைசியிலை அந்த ஆசையாலையே அடிப்பத்திப் போவான் பாருங்கோ .

 

Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.

 

A celui qui extirpe ses désirs, le salut vient par la voie qu’il désire.

 

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் ;அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368

 

அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை . அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்து கொண்டே இருக்கும் .

 

என்கருத்து :

 

சும்மா கிடந்த ராவணன் தேவையில்லாமல் சீதைக்கு மேலை கைவைக்கப்போய் கடைசியில சொந்த நாடும் அவனுக்கு இல்லை . அவனுக்கு பெண் ஆசை இல்லாட்டில் ஒழுங்காய்த்தானே இருந்திருப்பான் . ஆசையை அடக்கினவனுக்கு வாழ்க்கையிலை அரையண்டம் இல்லை . அடக்காதவனுக்கு பொங்கு சனிதான் . ஆளையே முடிச்சு போடும். 

 

Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide.

 

Nulle douleur pour celui qui n’a pas de désir; au contraire, les souffrances s’accmulent sans fin, sur la tête de celui qui a le désir.

 

  • தொடங்கியவர்

இன்பம் இடையறா து ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். 369

 

துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால் , நிலையான இன்பத்தைப் பெறலாம் .

 

என்கருத்து :

 

சரி ஆசையை விட்டால் இன்பம் கிடைக்கும் எண்டு வைச்சாலும் , ஆசை அல்லது தேடல் தானே மனுசனை அவன்ரை இடத்திலை இருந்து உயத்திக் கொண்டு போகிது ?? ஆசை இல்லாட்டில் அவன் சோம்பேறியா அல்லோ போடுவான் ஐயன் .

 

When dies away desire, that woe of woes

Ev'n here the soul unceasing rapture knows.

 

Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs,
jouit du bonheur perpétuel, même ici-bas.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.