Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். 85

விருந்தினரை முன்னர் உண்பித்து எஞ்சியதைப் பின்பு தான் உண்டு வாழ்பவனுடைய விளைநிலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமா ? வேண்டா தானே விளையும்

எனது கருத்து :

கிணத்தை இறைக்க இறைக்கத் தான் ஊறும் எண்டு சொல்லுவினம் எங்கடை பெரிசுகள் :icon_mrgreen: . அதைமாதிரித்தான் வாற விருந்தாளியளை உபசரிச்சு அவையை வயிறு குளிரப்பண்ணறதை தொடந்து செய்து கொண்டு வாங்கோ :), உங்கடை வயல்லை விதைக்கத் தேள்வையில்லை . பயிர்பச்சை ஏதோ ஒரு வழியிலை தொடந்து வரும் எண்டு ஐயன் சொல்லுறார் :unsure::icon_idea: .

Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise.

Les champs de celui qui satisfait d’abord les hôtes et ne prend que la nourriture qui reste, ont-ils besoin d’être ensemencés.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு. 86

இப்பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து , மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பாரத்திருப்பவன் மறுமையில் தேவனாய் வானுலகில் வாழும் தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான் .

எனது கருத்து :

நீங்கள் இப்பிடியெல்லாம் ஒழுங்காய் நடந்து கொண்டு வந்தால் , உங்கடை மரணத்துக்குப் பின்னால தேவலோகத்தில நீங்கள் தான் வி ஐ பி எண்டு சொன்னாலும் :rolleyes::unsure: , ஒருத்தன் உயிரோடை இருக்கேக்கை கிடக்காத அங்கீகாரமும் புகழும் அவன் செத்தாப் பிறகு தேவலோகத்தில கிடைச்சு என்ன பயன் ^_^:icon_idea: ???????????

The guest arrived he tends, the coming guest expects to see;To those in heavenly homes that dwell a welcome guest is he.

Celui qui, après avoir servi les hôtes qui sont arrivés, en attend d’autres pour manager avec eux, devient un hôte honorable pour les habitants du Ciel.

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று . விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும் .

எனது கருத்து :

வீட்டுக்கு வாறவை ஏழையோ பணக்காறனோ விருந்தாளி எண்டு வந்தால் , ஒரே அளவான விருந்தோம்பலைத் மனிசனாய் பிறந்தவன் செய்யவேணும் :icon_mrgreen: . ஆனால் ஐயன் தகுதிதராதரம் பாத்துசெய்தால் விருந்தோம்பலின்ரை பலன்களும் வேறுபடும் எண்டிறார் :o. சம்திங்

றோங்........ ^_^:D:icon_idea: .

To reckon up the fruit of kindly deeds were all in

vain;Their worth is as the worth of guests you entertain.

Il n’y a pas de mesure pour évaluer le mérite de l’acte hospitalier. Seul l’honorabilité de l’hôte est la mesure du sacrifice.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார். 88

விருந்தினரைப் போற்றி அவ்வேள்வியின் பயனை அடையாத அறிவில்லாதவர் , பொருளை வீணே காத்து இழந்து ஆதரவற்ரவரானோம் என்று பின்னர் வருந்துவர் .

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் பெரிய காசுக்காறராய் இருப்பினம் . வைச்சிருந்தும் என்ன பிரையோசனம் :icon_mrgreen::rolleyes: ??? சாப்பிட்ட கையாலை காகம் கலைக்க மாட்டினம் , அவ்வளவு ஈச்சாப்பியள் :lol:. இவையளை அறிவிலியள் எண்டும் , பேந்து பின்னாலை கவலைப்படுவினம் எண்டு இவைக்கு ஒரு குட்டும் வைக்கிறார் :icon_idea: .

With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,Who cherish not their guests, nor kindly help supply.

Ceux qui ne pratiquent pas l’hospitalité et ne savent pas gagner le mérite de ce sacrifice, se plaindront un jour d’avoir perdu la richesse qu’ils ont acquise et jalousement conservée.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு. 89

செல்வ நிலையிலும் வறுமை என்பது , விருந்தோம்பாத அறியாமையாகும் . அது அறிவுடையாரிடம் உண்டாகாது . அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும் .

எனது கருத்து :

நாங்கள் எங்கடை வாழ்க்கையில சிலபேரைப் பாத்திருப்பம் . நல்ல வசதியாய் இருப்பினம். ஆனால் , நெடுக பஞ்சப்பாட்டுப் பாடிக்கொண்டிருப்பினம் :icon_mrgreen::rolleyes: . எங்கை தங்களிட்டை ஐஞ்சைப் பத்தைக் கேட்டுப் போடுவினம் எண்டு :o.இவையள் மறந்தும் எங்களை தங்கடை வீட்டை கூப்பிட மாட்டினம் .இப்பிடியான குணங்கள் மூடரிட்டை மட்டும் தான் இருக்குமாம் :icon_idea:.

To turn from guests is penury, though worldly goods abound;

'Tis senseless folly, only with the senseless found.

Le malheur de ceux qui possèdent, c’est le sot dédain du devoir de l’hospitalité: et ce malheur est le lot des ignorants.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து. 90

அனிச்சமலர் நுகர்ந்தபொழுதே வாடிவிடும் . ஆனால் , விருந்தினர் முகம் மாறுபட்டுப் பார்க்கின்ற அளவிலேயே வாடி விடுவர்.

எனது கருத்து :

வீட்டுக்கு வாற விருந்தாளியளை நீங்கள் முழங்கையில பிடிச்சுக் கொண்டு அவையளை விருந்தோம்பல் செய்தியள் எண்டால் :icon_mrgreen: , அனிச்சம் பூ போல அவைன்ர முகம் வாடிப் போயிடும் எண்டு ஐயன் சொல்லுறார் :(^_^:icon_idea: .

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.

La fleur ‘‘Anitsa’’ se flétrit lorsqu’on la sent. Ainsi le visage des hôtes pâlit, lorsqu’on les regarde d’un regard farouche.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - விருந்தோம்பல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . தொடர்ந்து அதிகரித்து வரும் உங்கள் ஆதாரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் - இனியவைகூறல் ( The Utterance of Pleasant Words , Douceur de language ).

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , இனிய சொற்களாய் , அன்பு கலந்ததாய் , வஞ்சம் இல்லாததாய் இருக்கும் .

எனது கருத்து :

இனிய சொல்லு எண்டால் என்ன :icon_mrgreen: ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார் ஆனால் , இப்பிடியெல்லாம் கதைச்சுத் தானே எங்களைக் கவுட்டுக்

கொட்டினவங்கள் .

Pleasant words are words with all pervading love that burn;

Words from his guileless mouth who can the very truth discern.

Les paroles douces sont celles des hommes qui abordent affablement et qui pratiquent la vertu de parler sans dissimulation.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின். 92

முகமலர்ந்து இன்சொல் உடையவனாய் இருக்கப் பெற்றால் , மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும் .

எனது கருத்து :

நீங்கள் எந்தநேரமும் சிரிச்சமுகத்தோடை அன்பாய் பண்பாய் கதைப்பிங்கள் எண்டால் ( ஒருத்தர் உங்களிட்டைக் கடன் கேட்டாலும் ) :rolleyes:, மனங்குளிர்ந்து ஒரு சமானைக் குடுக்கிறவரைவிட நீங்கள் மேலான ஆளாம் :lol::D:icon_idea: .

A pleasant word with beaming smile's preferred,

Even to gifts with liberal heart conferred.

Il vaut mieux recevoir, le visage souriant et avec des paroles obligeantes, que donner généreusement à quelqu’un (tout ce qu’il lui faut.)

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ ல் இனிதே அறம். 93

முகம் மலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளங் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்

எனது கருத்து :

எங்களைப் பாத்து , முகத்தாலை விரும்பி , இனிமையாப்பாத்து ,உள்ளத்தாலை தான் , நோர்வேயில இருந்து ஒருத்தர் வந்து சாமாதானம் பேசுவம் எண்டு சொன்னார் :icon_mrgreen: . கடைசீல என்ன நடந்திது ? இதை எப்படி அறமாக எடுக்கமுடியும் :( ???????????

With brightly beaming smile, and kindly light of loving eye,

And heart sincere, to utter pleasant words is charity.

La vertu consiste à avoir (lorsque la rencontre se fait) l’air avenant, le regard gracieux, puis à dire du fond du cœur, des paroles agréables.

துன்புறூஉம் துவ்வாமை இல் ஆகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ ல் அவர்க்கு. 94

யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.

எனது கருத்து :

அப்ப ஏன் பாரதியாருக்கு வறுமை வந்தது :( ?? எல்லோரையும் இன்புறுவிக்கிற தமிழ்க் கவிதையைத் தானே தந்தான் . இந்தக் குறளில எனக்கு உடன்பாடில்லை :icon_idea: .

The men of pleasant speech that gladness breathe around,

Through indigence shall never sorrow's prey be found.

La misère qui engendre les souffrances n’atteint jamais ceux dont les paroles douces rejouissent tout le monde.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி; அல்ல மற்றுப் பிற. 95

வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

எனது கருத்து :

நீங்கள் உங்களுக்கு கீழை வேலை செய்யிற ஆக்களிட்டையும் , அன்பாய் பண்பாய் கதைச்சியளெண்டால் :icon_mrgreen: அவை உங்களுக்கு தாற மரியாதையும் அன்பும் சொல்லிவேலையில்லை . அதுதான் உங்கடை உண்மையான உள் உடுப்புகள் :):):icon_idea: ( அணிகலன்கள் ).

Humility with pleasant speech to man on earth,

Is choice adornment; all besides is nothing worth.

Respecter, parler avec douceur: voilà la parure de l’homme;

il n’en est pas d’autre.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின். 96

ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும் .

எனது கருத்து :

ஒருத்தர் நல்ல விசையங்களை மனசால கதைச்சுக்கொண்டு வந்தால் , அவருக்கும் நாட்டுக்கும் நல்லவிசயங்கள் நடக்கும் . அக்கிரமங்கள் குறையும் என்று ஐயன் சொன்னாலும் :blink: , இப்ப உள்ள நிலமையிலை காசுக்கும் சண்டியனுக்கும் தானே மரியாதை :(:icon_idea:!!!!!!!!

Who seeks out good, words from his lips of sweetness flow;

In him the power of vice declines, and virtues grow.

Les péchés diminuent et la vertu augments chez celui qui, cherchant les mots qui fassent du bien aux autres, parle avec douceur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து ,நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்பவனுக்கு இன்பமும் தந்து நன்மையும் பயக்கும் .

எனது கருத்து :

நல்ல பண்பாய்க் கதைச்சு , ( காந்தீயம் ) அதில இருந்து விலத்தாமல் அதால நல்ல பயனையும் மற்றவைக்குத் தந்த காந்திக்கு , கடைசீல அது இன்பத்தையும் பயனையும் தந்திதா ?? எண்ட கேள்வியும் எனக்கு வருகின்றது :(:(:icon_idea: .

The words of sterling sense, to rule of right that strict adhere,

To virtuous action prompting, blessings yield in every sphere.

Les paroles serviables et douces procurent la justice et la vertu.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும். 98

துன்பத்தைத் தரும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் சொல்பவனுக்கு இன்பத்தைத் தரும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தால் நல்ல வசதியாய் இருப்பினம் :icon_mrgreen: . ஆனால் எப்பவும் சின்னத்தனமான கதையள் கதைப்பினம் :rolleyes: . இந்தக்கதையள் இவைக்கு இருக்கேக்கையும் புகழ் சேர்க்காது ,இல்லாட்டிலும் புகழ் சேர்க்காது ^_^ ^_^ . பகைவர்களைத்தான் கூடக் குடுக்கும் :icon_idea: .

Sweet kindly words, from meanness free, delight of heart,

In world to come and in this world impart.

Les paroles douces et à l’abri de toute bassesse, procurent le bonheur en ce monde et dans l’autre.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது. 99

இனிய சொல் இன்பம் உண்டாக்குவதை அறிந்தவன் கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ தெரியவில்லையே!

எனது கருத்து :

சிலபேரை பாத்தால் எந்தநேரமும் " நாயே , பேயே " எண்டுதான் சொல்லிக் கொண்டிருப்பினம் :icon_mrgreen: . ஆக்களைப்பாத்தால் நல்ல படிச்சவையாய் இருப்பினம் . ஆனால் வாய்குள்ளால வாறது கூவமாய்த் தான் இருக்கும் . முக்கியமாய் எங்கடை வாத்திமார் :o , வீட்டில மனிசிமாரோடை ஏத்தம் எண்டால் அண்டைக்கு வகுப்புப் பெடியள் பாடு கதைகந்தல் தான் :lol:. இவையெல்லாம் நல்லாய் படிச்சிருந்தும் , ஏன் கடுமையான வார்த்தையளைப் பாவிச்சவை :( ? எண்டு இண்டைக்கும் எனக்கு விளங்கேலை :icon_idea: .

Who sees the pleasure kindly speech affords,

Why makes he use of harsh, repellant words?

Quel est l’avantage escompté par celui qui voit les douces paroles causer du charme et qui emploie cependant des paroles dures?

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் துஅற்று. 100

இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும்போது காய்களைத் தின்பதைப் போன்றது .

எனது கருத்து :

இதுக்குச் சுருக்கமாய் சொன்னால் , பிலாப்பழத்தைச் சாப்பிட வைச்சுக்கொண்டு அலரிக்காயைச் சாப்பிடிற மாதிரி :o:lol::D:icon_idea: .

When pleasant words are easy, bitter words to use,

Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

Se servir de paroles dures, alors que l’on sait employer des paroles douces, c’est manger des fruits verts, quand on en a de mûrs.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் அண்ணா.எனக்கு மிகவும் பிடித்தது 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று'

  • தொடங்கியவர்

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - இனியவைகூறல் பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியில் - செய்நன்றி அறிதல் ( The Knowledge of Benefits Conferred: Gratitude , Reconnaissance des bienfaits ) .

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. 101

தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது .

எனது கருத்து :

முன்பின் தெரியாத ஒரு ஆள் எங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் , அந்த இடத்தில் அது எங்களுக்கு பெரிசாய் தெரியும் :icon_mrgreen: . அதின்ரை பெறுமதிக்கு இந்த மண்ணையும் விண்ணையும் கூட ஒப்பிட ஏலாது எண்டு ஐயன் இந்த முதல் குறளிலேயே தெளிவாச் சொல்லுறார் :) .

Assistance given by those who ne'er received our aid,

Is debt by gift of heaven and earth but poorly paid.

Le Ciel et la terre ne peuvent être la juste récompense du bienfait (provenant) de celui qui n’en a pas reçu.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. 102

தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் , அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

எனது கருத்து:

எங்கேயோ பிறந்து வளர்ந்து இலட்சியத்தாலை ஒன்றிணைஞ்சு தேவைப்பட்ட காலத்தில எங்களை பாதுகாத்த ( உதவி ) எங்கள் மண்ணின் மைந்தர்களின் செயல் இந்தப்பூமியைவிடப் பெரிசுதான் :( !!!!!!!!

A timely benefit, -though thing of little worth,

The gift itself, -in excellence transcends the earth.

Un service rendu à propos, quelque minime qu’il soit, est plus grand que l’univers (si on en considère l’opportunité).

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது. 103

பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலிலும் பெரிதாகும்.

எனது கருத்து:

நாங்கள் ஒருத்தருக்கு செய்யிற உதவியால எங்களுக்கு என்ன லாபம் எண்டு யோசிக்காமல் செய்யற சின்ன உதவியோ , பெரிய உதவியோ அதை செய்யற எங்கடை அன்பை அதிலை பாத்தால் , அந்த உதவின்ரை நன்மை கடலை விடப் பெரிசு எண்டு ஐயன் சொல்லுறார் :icon_mrgreen:. ஒரு உதாரணத்துக்கு இந்த இக்கட்டான நேரத்தில நாங்கள் நேசக்கரத்தால செய்யிற உதவியள் :):):icon_idea: .

Kindness shown by those who weigh not what the return may be:

When you ponder right its merit, 'Tis vaster than the sea.

L’exellence d’un service rendu sans que le prix en ait été pesé,

est si on la pèse, plus vaste que l’océan.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். 104

ஒருவன் தினையளவு சிறிய உதவியை தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.

எனது கருத்து:

ஒருத்தர் ஒரு சின்ன உதிவி செய்திருந்தாலும் , அந்த உதவியின்ர பயனை ஆராய்கிறவர் அதை பனை அளவுக்கு மிகப்பெரிய உதவியாய் நினைப்பர் :icon_mrgreen: .இதிலையும் அதே இடத்துக்கு வாறன் . எங்களுக்கு ஒரு 50 யூறோ மாதத்தில சின்னக்காசு .அது நேசக்கரத்தால ஒரு குடும்பத்துக்கு தாயகத்துக்கு போனால் ,அது அவைக்கு பனையளவு

உதவிதானே :D:icon_idea:.

Each benefit to those of actions' fruit who rightly deem,

Though small as millet-seed, as palm-tree vast will seem.

Le bienfait reçu ne serait-il gros que comme un grain de mil, le considèrent comme aussi gros que le fruit du palmier, ceux qui en connaissent la valeur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

எனது கருத்து:

நாங்கள் ஒருத்தருக்குச் செய்யிற உதவி எண்டது , எங்கடை உதவீன்ர அளவை வைச்சு மதிக்கிறேல :icon_mrgreen:. எங்களிட்டை உதவியைப் பெற்றவரின்ரை பண்பாட்டிலதான் அதின் பெறுமதி தெரியும் :):icon_idea:.

The kindly aid's extent is of its worth no measure true;

Its worth is as the worth of him to whom the act you do.

La reconnaissance ne doit pas être à la mesure du bienfait reçu mais doit être proportionnée à la dignité de l’obligé.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

குற்றமற்ற நல்லவரின் நட்பை மறத்தல் கூடாது .துன்பம் நேரந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்களின் நட்பை எந்நாளும் கைவிடுதல் கூடாது.

எனது கருத்து:

நடுறோட்டில கையறுந்த நிலமையில நிக்கேக்கை கை குடுத்தவன்ரை நட்பை ஒருக்காலும் மறக்கக்கூடாது :unsure: . அதேநேரம் ,அறிவு

ஒழக்கம் போன்ற விசையங்களில திறமான ஆக்களின்ர நட்பையும் விடக்கூடாது :):):icon_idea:.

Kindness of men of stainless soul remember evermore!

Forsake thou never friends who were thy stay in sorrow sore!

Que l’on n’abandonne pas l’amitié de ceux qui ont secouru dans le temps du malheur ! Que l’on n’oublie pas la qualité secourable des hommes sans péché !

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு. 107

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

எனது கருத்து:

இக்கட்டான நேரத்தில உதவி செய்தவைன்ர நட்பை தங்கள் வாழ்நாள் முமுழுக்க மறக்காமல் இருக்கவேணும் :icon_mrgreen: . அவைதான் உண்மையில பெரிய ஆக்கள் :D:icon_idea: .

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.

On doit se souvenir dans sept naissances,

l’amitié de ceux qui ont guéri ses douleurs.

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று. 108

பிறர்செய்த நன்மையை மறப்பது அறமாகாது . அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் எங்களுக்கு செய்யிற உதவியளை மறந்து , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்கிறது நல்ல பழக்கம் இல்லை :(^_^ . அவர் எங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கஸ்ரத்தை தந்தாரெண்டால் அதை உடன மறக்கிறது நல்ல பழக்கம் :):D:icon_idea: .

'Tis never good to let the thought of good things done thee pass away;

Of things not good, 'tis good to rid thy memory that very day.

Il n’est pas bon d’oublier un bienfait reçu; mais il est bon d’oublier aussitôt le contraire d’un bienfait.

Edited by கோமகன்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு. 107

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

எனது கருத்து:

இக்கட்டான நேரத்தில உதவி செய்தவைன்ர நட்பை தங்கள் வாழ்நாள் முமுழுக்க மறக்காமல் இருக்கவேணும் :icon_mrgreen: . அவைதான் உண்மையில பெரிய ஆக்கள் :D:icon_idea: .

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.

Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.

On doit se souvenir dans sept naissances,

l’amitié de ceux qui ont guéri ses douleurs.

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று. 108

பிறர்செய்த நன்மையை மறப்பது அறமாகாது . அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் எங்களுக்கு செய்யிற உதவியளை மறந்து , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்கிறது நல்ல பழக்கம் இல்லை :(^_^ . அவர் எங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கஸ்ரத்தை தந்தாரெண்டால் அதை உடன மறக்கிறது நல்ல பழக்கம் :):D:icon_idea: .

'Tis never good to let the thought of good things done thee pass away;

Of things not good, 'tis good to rid thy memory that very day.

Il n’est pas bon d’oublier un bienfait reçu; mais il est bon d’oublier aussitôt le contraire d’un bienfait.

நட்பின் பெருமைகளை கூறும் இப்பகுதி மிக நன்று.

"இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற பதத்திற்கு ஏற்றவாறு நட்பு இருப்பது மிக அவசியம்.

உன் நண்பர்கள் யார் என்று கூறு , நீ யார் என்று கூறுகிறேன் என்ற ஒரு சொல்லும் இருக்கிறது. இப்படியாக நட்பின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நீங்கள் தொடருங்கள் . இப்பகுதி அருமை...

  • தொடங்கியவர்

நட்பின் பெருமைகளை கூறும் இப்பகுதி மிக நன்று.

"இடுக்கண் களைவதாம் நட்பு " என்ற பதத்திற்கு ஏற்றவாறு நட்பு இருப்பது மிக அவசியம்.

உன் நண்பர்கள் யார் என்று கூறு , நீ யார் என்று கூறுகிறேன் என்ற ஒரு சொல்லும் இருக்கிறது. இப்படியாக நட்பின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நீங்கள் தொடருங்கள் . இப்பகுதி அருமை...

கருத்துக்களைக் கூறிய கல்கிக்கு மிக்க நன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

கொன்று அன்னா இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

முன்பு உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும் , அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும் .

எனது கருத்து:

இந்தக்குறளில் எனக்கு உடன்பாடில்லை . ஏனென்றால் ஒருத்தர் எல்லாத்தையும் செய்துபோட்டு நான் உனக்கு உதவி செய்திருக்கிறன் :unsure:,அதால இப்ப நான் செய்யிற தீமை சரி எண்டிறது எந்தவகையில ஞாயம் :( ???? அப்ப இந்திய அமைதிகாக்கும்படைகள் செய்ததெல்லாம் சரியா ^_^:icon_idea: ?????

Effaced straightway is deadliest injury,

By thought of one kind act in days gone by.

Le souvenir d’un ancien bienfait efface une injure même mortelle/

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்;உய்வுஇல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு . ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது .

எனது கருத்து:

இந்தக்குறளில எனக்கு கனக்க விசையங்கள் வருகிது :icon_mrgreen: . ஒரு சின்ன விசையம் சொல்லுறன் . மகிந்து எங்கடை பரம்பரையையே இந்தியாவின்ரை உதவியோடை அழிச்சு தன்ர பாவங்களை கழுவிப்போட்டு :(, இப்ப சப்பட்டையோட தேனிலவு கொண்டாடிறார் ^_^ . இந்தப் பாவத்தை எங்கை கொண்டு போய் கழுவப்போறார் ஜெனிவாவிலையோ :o:icon_idea: ?????

Who every good have killed, may yet destruction flee;

Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!

Il y a rémission pour les immolateurs de toutes les vertus, mais il n’y en a pas pour celui qui immole le bienfait

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் - நடுவு நிலைமை ( Impartiality , La droiture ) .

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பால்பட்டு ஒழுகப் பெறின். 111

அறவழி நின்று பகை , நட்பு , நொதுமல் ( அயலவர் ) ஆகிய மூவிடத்திலும் வேறுபாடு இன்றி நடத்தலே நடுவுநிலைமையின் பயனாகும்.

எனது கருத்து :

இப்ப உள்ள நிலைமையில நடுநிலைமை என்றாலே பெரிய சர்ச்சைகுரிய விசையம் :icon_mrgreen: . இந்த நடுநிலைமை மட்டும் எங்கடை இருண்ட வாழ்கையில வெளிச்சம் தரப்போகுதா என்ன :(^_^:icon_idea:???????????????

If justice, failing not, its quality maintain,

Giving to each his due, -'tis man's one highest gain.

La vertu appelée droiture est la seule bonne Elle s’acquiert par l’accomplissement des devoirs, sans considération d’ennemis,

d’étrangers ou d’amis.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி

எச்சத்திற் ஏமாப்பு உடைத்து. 112

நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

எனது கருத்து :

நேரிய வழியில உழைச்சு வாற செல்வம் தான் நிலைச்சு நிண்டு , அவற்ரை அடுத்த பரம்பரைக்கும் பயன்படும் எண்டு ஐய்யன் சொல்லுறார் :unsure::):icon_idea:.

The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure.

La fortune du Juste ne se dissipe pas; elle se transmet intacte à sa postérité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நன்றே தரினும் நடுவு இகந்துஆம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல். 113

நடுநிலை தவறி ஈட்டிய பொருள் நன்மையே தருவதாக இருந்தாலும் அதை அப்போதே கைவிடவேண்டும்.

எனது கருத்து :

இப்ப நான் சொல்லபோற விசையம் கொஞ்சம் வில்லங்கமானது :o. ஆனால் , மன்னிச்சுக்கொள்ளுங்கோ :icon_mrgreen: . 90 க்கு முதல் , எங்கடையாக்கள் நாலைஞ்சு பேரில பேப்பர் போட்டு சோசல் காசு எடுத்த நேரம் .(டோல் மணி ) காசு அந்த மாதிரித்தான் வரும் :lol: . ஆனால் பின்னால வந்த பிரச்சனையளை அவையள் யோசிக்கேல . கடைசீல மாட்டுப் பட்டு , டிப்போர்ட் ஆன ஆக்களும் இருக்கினம் :D.

Though only good it seem to give, yet gain . By wrong acquired, not e'en one day retain!

Abandonner sur-le-champ la richesse acquise hors des règles de la Justice, quand bien même elle ne causerait que du bien.

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்

எச்சத்தால் காணப்ப படும். 114

இவர் நடுவுநிலையுடையவர் , இவர் நடுவுநிலை இல்லாதவர் என்பவற்றை அவருடைய மக்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம் .

எனது கருத்து :

ஒருத்தர் நீதிமானா ? இல்லையா ? எண்டதை அவற்ற காலத்துக்குப் பிறகு வாற , அவற்றை புகழும் பழியும் தான் முடிவு செய்யும் .பண்டாரநாயக்கா + ஜே . ஆர் , தந்தை செல்வா + ஜீ ஜீ பொன்னம்பலம் :icon_mrgreen::unsure: ,இவையளைப் பாத்திங்களெண்டால் வித்தியாசம் தெரியும் :D.

Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear.

Quels sont les Justes et quels sont les hommes injustes? Ceci est mis en évidence par la présence ou l’absence des bons enfants.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கேடும் பெருக்கமும் இல்அல்ல; நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி. 115

தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்பே அமைந்து உள்ளவையாகும் .அதை அறிந்து நடுவுநிலமை தவறாது இருத்தலே சான்றோருக்கு அழகாகும் .

எனது கருத்து :

தங்கடை தங்கடை வசதிக்கு நீதி எண்டு சொல்லுறவையை , எப்பிடி சான்றோர் என்று ஏற்றுக் கொள்வது :icon_idea: ???

The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament.

La misère et la prospérité sont le lot de tous; mais la gloire du Sage est de ne pas dévier, dans son cœur, des règles de l’équite.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின். 116

தன் உள்ளம் நடுநிலை தவறிப் பாவத்தை நினைத்தால் அது பின்னர் வரப்போகும் தீமைக்கு அறிகுறி என்று அறியவேண்டும் .

எனது கருத்து :

செய்யாத அட்டூளியம் எல்லாம் செய்தீச்சினம் இப்ப ஜெனீவாவில கணக்கு எண்ணிக் கொண்டிருக்குது :D:icon_idea: .

If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern!

Si la volonté de quelqu’un, déviant du chemin de la Justice, pense à commettre l’injustice, qu’il sache que c’est pour son malheur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கெடுவாக வையாது உலகம்; நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117

நடுநிலை தவறாது அறவழி நடப்பவனுக்கு வரும் வறுமையைச் சிறந்த செல்வமாக அறிஞர்கள் அறிவார்கள் .

எனது கருத்து :

இந்தக் குறளைப் பாக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது ^_^. நாங்கள் நடுநிலமையாய் அறவழீலதான் எங்கடை தாய்நாட்டு விடுதலைக்குப் போராடினம் :( . ஆனால் உலகம் என்ன சொல்லீச்சுது :(:icon_idea: ???

The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight.

Le monde ne considère pas comme un mal la pauvreté de l’homme Juste.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி. 118

தன்னைச் சமனாகச் செய்து கொண்டு , பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும் .

எனது கருத்து :

அப்பிடியொரு நீதிபதியளையும் , நடுநிலையாளரையும் நான் காணேல ^_^. இந்தப் பான் கீ மூன் , எங்கடை பக்கத்து நாட்டுக்காறன் எல்லாம் எந்த அடைமொழிக்கை போடுறது :rolleyes::o ??ஆக நடுநிலமை எண்டிறது தங்கடை நலன் சார்ந்து தான் அதின்ரை வியாக்கியானமும் மாறும் ^_^ .

To stand, like balance-rod that level hangs and rightly weighs,

With calm unbiassed equity of soul, is sages' praise.

Tels que la balance qui d’abord a les plateaux en équilibre et qui pèse ensuite le poids à elle confié, les sages n’inclinent d’aucun côte et c’est là, leur parure.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உள்கோட்டம் இன்மை பெறின். 119

உள்ளத்தில் கோணுதல் இல்லாத பண்பைப் பெற்றிருந்தால் , சொற்களில் கோணுதல் இல்லாதிருந்தாலும் செப்பமாக உணரப்படும் .

எனது கருத்து:

இதுக்கு இலக்கணமாய் ஒருத்தர் இருந்தவர் . ஆனால் , ரெண்டு வரியத்துக்கு முதல் இல்லை எண்டு சொல்லீனம் :( . இப்பிடி முதலும் நடந்திருக்குது :( . கடவுளுக்குத் தான் வெளிச்சம் :icon_idea: .

Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess.

La justice est la droiture du langage: on l’acquiert par la constante stabilité de la volonté dans l’équité.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தம்போல் செயின். 120

பிற பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால் அதுவே வாணிகம் செய்வோருக்கு உரிய நல்ல முறையாகும் .

எனது கருத்து:

கூப்பன் கடையில பாத்தமெண்டால் ,அரசாங்கம் ஏழைமக்களுக்கு தாற மா , சீனி , மண்ணெண்ணையில ஆயிரம் கோல்மாலுகள் செய்வினம் :icon_mrgreen: . ஒருவகையில இவையளும் வியாபாரியள் தான் . ஆனால் ,அப்பிடியில்லாமல் சனத்தை நினைச்சால் இந்த எண்ணங்கள் வராது :lol::D:icon_idea: .

As thriving trader is the trader known, Who guards another's interests as his own.

Le commerce prospère aux marchands qui veillent sur le bien d’autrui comme sur le leur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இத்துடன் அறத்துப்பால் -இல்லறவியல் - நடுவு நிலமை பகுதியிலுள்ள பத்துக் குறள்களையும் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் :):):) .

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியில் - அடக்கமுடமை( The Possession of Self-restraint , La modestie ) .

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர்இருள் உய்த்து விடும். 121

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும்.அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும் .

எனது கருத்து:

இந்த அதிகாரம் உண்மையிலேயே இன்றைய காலத்தில் சர்ச்சைக்குரிய விடையமாகும் :icon_mrgreen: . இந்தக் குறளைப் பண்பாட்டு ரீதியா பாத்தால் சரியே . இன்னுமொரு வழியால் பாத்தால் , சமரசம் செய்வதால் ஏற்படுகின்ற அடக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா ^_^ ?? இந்தவழியால பாத்தால் , உலகம் அமைதிப் பூங்காவாக அல்லவா இருக்கவண்டும் :lol::D:icon_idea:??

Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there.

La modestie conduit à l’habitation des dêvas.

La fatuité précipite dans le lieu inhabitable des ténèbres.

காக்க பொருளா அடக்கத்தை ; ஆக்கம்

அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. 122

அடக்கத்தை உறுதிப்பொருளாக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம்தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை .

எனது கருத்து:

ஆறாவது அறிவு மனிதனாகப் பிறந்தவனுக்கு கிடைச்ச வரப்பிரசாதம் :) .அதில் ஒருவன் எவ்வளவு தான் அறிவால் வல்லவனாலும் அவையடக்கம் , நாவடக்கம் இல்லாவிட்டால் தூசிக்குச் சமன் :lol: . இந்த அடக்கம் தான் ஒருத்தற்ரை உண்மையான செல்வம் :D:icon_idea:.

Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul!

Il n’y a pas de bien plus précieux à la vie, que la modestie. Qu’on la converse comme un bien précieux à garder !

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.