Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்நின்று பின்நோக்காச் சொல். 184

நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம் . நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப்பழியையும் சொல்லக் கூடாது .

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தால் புறட்டணியம் படிக்காட்டில் அவைக்கு பத்தியப்படாது . ஆனா இப்பிடிப்பட்ட கோஸ்ரியளைப் பாத்து ஐயன் ரென்சன் ஆகி இப்பிடி சொல்லியிருக்கிறார்.

In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought.

Parle à quelqu’un, en fixant ses yeux et sans ménagement, mais garde-toi d’en dire du mal, en son absense.

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புன்மையால் காணப் படும். 185

புறங்கூறுபவன் அறத்தை நல்லதென்று அடுத்தவரிடத்தில் கூறினாலும் அவன் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனது கருத்து:

சிலபேர் வெளியல தாங்கள் வெள்ளை மாதிரிக்க கதைச்சுக்கொண்டு மற்றவனுக்கு ஆப்படிக்கிறது தான் குடிசைத் தொழில் . இப்பிடியான வேலையளை வைச்சே எவ்வளவு கேவலமான ஆக்கள் எண்டு அவையளை மதிக்கலாம் .

The slanderous meanness that an absent friend defames,

'This man in words owns virtue, not in heart,' proclaims.

Bien que le calomniateur célèbre la vertu, son penchant à la calomnie révèle qu’il ne parle pas sincèrement.

  • தொடங்கியவர்

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும். 186

பிறரது குற்றத்தை அவனைக் காணாதவிடத்துச் சொல்லுபவன் , பிறரால் அவனுடைய குற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டு , பழிக்கப்படுவான் .

எனது கருத்து:

இது ஒரு செயின் சிஸ்ரம் கண்டியளோ . எல்லாரும் கூடி ஒருத்தனைப்பற்றி ,அவன் இல்லாத நேரம் பாத்து கொசிப் அடிப்பினம் . அதிலை ஒண்டிரண்டு கலைஞ்சு போக , போனவையப் பற்றி மற்றவை கொசிப் அடிப்பினம் . உண்மையில இதுகளைத் திருத்தேலாது .

Who on his neighbours' sins delights to dwell,

The story of his sins, culled out with care, the world will tell.

Parmi les défauts de celui qui calomnie, les plus honteux seront découverts et divulgués .

  • தொடங்கியவர்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர். 187

பிறர் , மகிழுமாறு இன்பாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள் , நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர் .

எனது கருத்து:

சில பேர் இருப்பினம் அவைக்கு வேலையே ஆப்படிக்கிறது தான் . நல்லாய் இருக்கிற நண்பர்களோடை இவையும் நட்பு எண்டு சேரந்து எல்லாரையும் பிரிக்கிறதுதான் வேலை . இப்பிடிச் செய்யாட்டிக்கு இவைக்கு நித்திரையே வராது எண்டால் பாருங்கோவன் .இப்பிடிப்பட்ட ஆக்களைக் கண்டால் உடனையே காய் வெட்டிப்போடவேணும் .

With friendly art who know not pleasant words to say,

Speak words that sever hearts, and drive choice friends away.

Ceux qui ne savent pas, par des paroles captivantes, se faire des amis, calomnient même les parents et les forcent à se séparer d’eux .

  • தொடங்கியவர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதுஇலார் மாட்டு. 188

தம்மோடு நெருங்கிய சுற்றத்தாரது குற்றத்தையும் அவரைக் காணாத இடத்துத் தூற்றும் இயல்பினையுடையோர் அயலாரிடத்து யாது தான் செய்யார் ?

எனது கருத்து:

நெருங்கிப் பழகிற ஆக்களையே அவையள் இல்லாத நேரம் பாத்து வெறும் வாய் மெல்லுகிற ஆக்கள் , தங்கடை அயலட்டையை சும்மாவிடுவினமோ ? சொல்லுங்கோ . இவையள் கெட்ட கிரிமியள் தானே ?

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name?

Que ne feront-ils aux étrangers ceux qui publient malicieusement les torts des proches?

  • தொடங்கியவர்

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறம்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை. 189

பிறரைப் பழித்துக் கூறுவோனது உடற்கமைய பூமியானது அறம் என்று நினைத்துச் சுமக்கிறது போலும் !

எனது கருத்து:

இப்புடிப்பட்ட கிரிமியளின்ரை உடம்புப் பாரத்தையும் இந்தப்பூமி , தான் தாங்கித்தரிக்கிறதும் ஒரு அறமெண்டு தாங்குதாம் எண்டு இதில ஐயன் செரியா நொந்துபோய் சொல்லியிருக்கிறார் .

'Tis charity, I ween, that makes the earth sustain their load. Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

La terre supporte par charité, le fardeau de l’homme qui guette le départ de quelqu’un pour le calomnier .

  • தொடங்கியவர்

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்

தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190

புறங்கூறுவோர் அயலாரது குற்றத்தைக் காண்பது போல் , தமது புறங்கூறும் குற்றத்தையும் காண்பாராயின் அவர்க்குத் துன்பம் உண்டாகாது .

எனது கருத்து:

மற்றவையைப் பாத்து கையை நீட்டிற நேரம் அதிலை ஒரு விரல் எங்களைப் பாக்கிது . இதைத் தெரிஞ்சு கொண்டால் மத்தவையைப்பத்தி புறட்டணியம் படிக்கமால் நல்ல பிள்ளையளாய் இருக்கலாம் எண்டு ஐயன் ஒரு பக்குவத்தை கடைசியா இந்தக் குறளிலை சொல்லியிருக்கிறார் .

If each his own, as neighbours' faults would scan,

Could any evil hap to living man?

Y a-t-il douleur pour celui qui reconnaît ses torts, de la même manière qu’il découvre ceux du prochain.

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல்-பயன்இல சொல்லாமை ( The Not Speaking Profitless Words , Ne pas proférer de vaines paroles ).

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 191

பலரும் கேட்டு வெறுக்கும் பயனில்லாத சொற்களைச் சொல்பவன் எல்லோராலும் இகழப்படுவான்.

எனது கருத்து:

சிலபேர் இருக்கினம் , தாங்கள் ஏதோ மெத்தப்படிச்ச அறிவாளியள் மாதிரி எல்லாரையும் பாத்து வெட்டிவிழுத்துவினம் . ஆனால் அவைக்குத் தெரியாது , அவையின்ரை எறிசொறிக் கதையளைக் கேக்கிறவை எவ்வளவு நாய்பேய்க் கடுப்பிலை இருப்பினம் எண்டு .

Words without sense, while chafe the wise,

Who babbles, him will all despise.

Celui qui indispose plusieurs par des paroles inutiles, est méprisé de tous .

  • தொடங்கியவர்

பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல

நட்டார்கண் செய்தலின் தீது. 192

பயனில்லாத சொற்களைப் பலர் முன் சொல்லுதல் , நண்பரிடத்து வெறுக்கப்படும் செயல்களைச் செய்தலினும் தீயதாகும்.

எனது கருத்து:

ஐஞ்சுசதத்திற்கும் பிரையோசனமில்லாத கதையளை மற்றைவைக்கு முன்னால கதைக்கிறவையைப் பாத்து ஐய்யன் சொல்லிறார் , ஒரு நட்புக்கு செய்யிற துரோகத்தைவிட உங்கடை கதையள் டேஞ்சரான கதையள் எண்டு .

Words without sense, where many wise men hear, to pour

Than deeds to friends ungracious done offendeth more.

Tenir devant plusieurs, des discours dont on ne peut tirer profit, est pire que se livrer à des actes indésirables vis-à-vis des amis.

  • தொடங்கியவர்

நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல

பாரித்து உரைக்கும் உரை. 193

ஒருவன் பயனில்லாத சொற்களை விரித்துக் கூறினால் அச்சொற்கள் அவன் நீதியில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

எனது கருத்து:

உங்களுக்கு முன்னால ஒருத்தர் சும்மா விழல் கதையள் கதைச்சு கொண்டு நிக்கிறார் எண்டால் , ஆள் ஒரு ஒழுங்கு முறையில்லாத ஆள் எண்ட முடிவுக்கு நீங்கள் வரலாம் பாருங்கோ .

Diffusive speech of useless words proclaims

A man who never righteous wisdom gains.

Développer des sujets dont on ne peut tirer profit,

indique que l’orateur n’a pas la notion de la justice .

  • தொடங்கியவர்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து. 194

பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடத்துச் சொல்லுவானாயின் அவனிடத்து நீதியோடு பொருந்தாதனவாகி நற்குணங்களினின்றும் அவனை நீங்கச் செய்யும்.

எனது கருத்து:

ஒருத்தன் தொடர்ந்தும் ஊத்தைக்கதையளையும் பயனில்லாத சொல்லுகளையும் கண்டவையோடையும் கதைச்சுக் கொண்டிருந்தால் அவனைச் சுத்தி கெட்ட குணங்களும் , கெட்ட கூட்டுகளும் தானாம் சேரும் .

Unmeaning, worthless words, said to the multitude,

To none delight afford, and sever men from good.

Les paroles inutiles font disparaître les bonnes qualités de l’orateur.

  • தொடங்கியவர்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின். 195

நற்குணமுணமுடையார் பயனற்ற சொற்களைச் சொல்லுவாராயின், அதனால் அவரது மேன்மையும் நன்மதிப்பும் அவரை விட்டு நீங்கும்.

எனது கருத்து:

"படிசவனுக்கு ஏத்த மாதிரி கதைச்சுப் பழகு " எண்டு எங்கடை பெரிசுகள் எங்களை பேசுவினம் கண்டியளோ . ஒரு படிச்சவன் விழல் கதையள் கதைச்சால் அவனை ஒருத்தரும் மதிக்கமாட்டினம் .

Gone are both fame and boasted excellence,

When men of worth speak of words devoid of sense.

Même les hommes de qualité perdent leur grandeur et leur grandeur et leur célébrité, par de vains propos.

  • தொடங்கியவர்

பயன்இல்சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கள் பதடி எனல். 196

பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும் பல தரமும் சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க,மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

எனது கருத்து:

நெடுகலும் பிரையோசனமில்லாத வழவழா கொழகொழா கதையளைக்க் கதைச்சுக்கொண்டிருக்கிறவையை தெரு நாய் எண்டு சொல்லுறது தான் சரி எண்டு இந்தக்குறளில ஐயன் ரென்சானாகிப்போய் சொல்லியிருக்கிறார் .

Who makes display of idle words' inanity,

Call him not man, -chaff of humanity!

N’appelle pas homme celui qui repète d’inutiles discours ; appelle-le “grain sans substance” de l’humanité.

  • தொடங்கியவர்

நயன்இல சொல்லினும் சொல்லுக; சான்றோர்

பயன்இல சொல்லாமை நன்று. 197

சான்றோர் நீதியோடு பொருந்தாத சொற்களைச் சொன்னாராயினும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாராக .

எனது கருத்து:

படிச்சவன் பண்பானவன் அளாப்பிக் கதைக்கலாமாம் ஆனால் , விழல் கதையளை ஒருக்காலுமே கதைக்கக் கூடாதாம் எண்டு பாருங்கோ இதில ஐயன் ஒரு போடு போடிறார் .

Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word.

Que le Sage tienne même des propos qui ne sont pas justes. Il est bon qu’il ne dise pas d’inutiles paroles.

  • தொடங்கியவர்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல். 198

சிறந்த பயன்களை ஆராயும் அறிவுடையவர் , பெரிய பயன் தருதல் இல்லாத சொற்களைப் பேசவே மாட்டார்கள்.

எனது கருத்து:

"பெரிய விஞ்ஞானியள் மேதையள் எல்லாம் ஒருக்காலுமே பிரையோசனமில்லாத கதையள் கதைக்கமாட்டினம் " . எண்டு ஐயன் இதில சொன்னாலும் இப்ப அப்பிடியா நடக்குது ? காசுக்காக நரம்பிலாத நாக்கால எப்பிடியும் கதைக்கலாம் எண்டிறவங்களைத்தானே இப்ப பாக்கிறம் .

The wise who weigh the worth of every utterance,

Speak none but words of deep significance.

Les savants qui ont la capacité d’étudier les matières d’une rare utilité, n’emploient pas de mots qui ne soient pas d’une utilité effective

  • தொடங்கியவர்

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசுஅறு காட்சி யவர். 199

குற்றமற்ற அறிவினையுடையவர் பயனில்லாத வெறுஞ் சொற்களை மறந்துஞ் சொல்ல மாட்டார்.

எனது கருத்து:

ஒரு உண்மையான அறிவாளி படிச்சவன் எண்டால் தேவையில்லாத கதையள் கதைக்க மாட்டானாம் .அவனாலை சனங்கள் எப்பவுமே பயனடைஞ்சு கொண்டிருக்குமாம் .

The men of vision pure, from wildering folly free,

Not e'en in thoughtless hour, speak words of vanity.

Les sages innocents ne profèrent pas des paroles inutiles, même par oubli .

  • தொடங்கியவர்

சொல்லுக சொல்லின் பயன்உடைய ; சொல்லற்க

சொல்லின் பயன்இலாச் சொல். 200

ஒருவன் தனக்கும் பிறர்க்கும் பயன் தரத்தக்க சொற்களையே பேசவேண்டும் , பயன்தராத சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .

எனது கருத்து:

எப்பவுமே நீங்கள் மற்றவையோடை கதைக்கிறபோது எப்பவும் பிரையோசனமான சொல்லுகள்தான் வெளியில வரவேணும் லூசுக் கதையள் வராமல் பாத்துக்கொள்ளுங்கோ .

If speak you will, speak words that fruit afford,

If speak you will, speak never fruitless word.

Que l’on tienne des discours utiles et que l’on s’abstienne de vains propos.

  • தொடங்கியவர்

அறத்துப்பால் - இல்லறவியல் - தீவினை அச்சம் , ( Dread of Evil Deeds , Crainté du mal ).

தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு. 201

தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் . ஆகவே அவை

தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அஞ்சப்பட வேண்டியவை .

எனது கருத்து :

கத்தியை எடுத்தவன் கத்தியாலதான் அழிவான் எண்டு ஐயன் இதிலை சொன்னாலும் , ஒருத்தனை சாக்காட்டிற நோக்கத்தில ஒருத்தன் வரேக்கை தேவாரம் படிக்கச் சொல்லுறது அவ்வளவு சரியா எனக்குப் படேலை .

With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.

Les pure se cœur redoutent le vertige du mal, il n’en va pas ainsi des pécheurs .

  • தொடங்கியவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும். 202

தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீயசெயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும் .

எனது கருத்து :

ஒரு கெட்டவேலை செய்ய முதல் நாலு வளத்தாலையும் யோசிக்க வேணும் . இந்தக் கெட்டவேலையள் நெருப்பிலும் பாக்க கெட்ட சாமான் . இப்ப எங்களுக்குக் கெட்டவேலையள் செய்த ராஜபக்சா ஒரு இடமும் நிம்மதியாய் போய் வரேலாமல் கிடக்கு .

Since evils new from evils ever grow,

Evil than fire works out more dreaded woe.

Les mauvaises actions engendrent la souffrance,

elles sont à redouter plus que le feu.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல். 203

தமக்கு தீங்கு செய்யாதவருக்கும் தாம் பதிலுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தலை அறிவினுள் எல்லாம் தலைசிறந்த அறிவு என்று கூறுவர்.

எனது கருத்து :

ஒருத்தன் எங்களுக்கு கெட்ட வேலையொண்டு செய்தால் நாங்களும் திருப்பி அதையே செய்தால் எங்களுக்கும் செய்தவனுக்கும் வித்தியாசம் தெரியாது .காலம் தான் சனத்துக்கு ரெண்டு பகுதியையும் அடையாளம் காட்டும் .

Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.

Ne pas rendre le mal pour le mal est, dit-on, la première des sagesses.

  • தொடங்கியவர்

மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204

பிறனுக்கு தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது . நினைத்தால் அப்படி நினைத்தவனுக்கு கேடு செய்ய அறம் நினைக்கும் .

எனது கருத்து :

அரசன் அண்டறுப்பான் தெய்வம் நிண்டு கொல்லும் எண்டு சொல்லுவினம் . இப்பவெல்லாம் ஆராவது எளிய வேலையள் செய்தால் , உடனை உடனை அதின்ரை றியாக்சன் தெரியும் . அதால மறந்தும் ஆருக்கும் போய் கெட்ட வேலையள் செய்து போடாதையுங்கோ .

Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.

Ne pense pas, au moins par oubli, à l’acte qui cause le malheur de ton prochain. Sinon, le dieu de la Justice pensera au moyen de causer ton malheur.

  • தொடங்கியவர்

இலன்என்று தீயவை செய்யற்க ; செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 205

"யான் வறியவன் " என்று நினைத்து தீய செயல்களைச் செய்யக்கூடாது . செய்தால் பொருள் உடையவன் ஆகாது ,முன்னிலும் வறியவனாகித் துன்புறுவான் .

எனது கருத்து :

என்னதான் பசிச்சாலும் மற்றவன்ரை பொருளுகளிலை கைவைக்கக் கூடாது முதல் நல்ல இனிப்பாய் இருக்கும் .பேந்து அதுவே அவடை நடுறோட்டிலை நிக்கிறதுக்கும் அலுவல் பாக்கும் எண்டு ஐயன் சொன்னாலும் , பசிவந்தால் பத்தும் பறந்து போகும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கிறதையும் யோசிக்கத்தான் வேண்டிக்கிடக்கு .

Make not thy poverty a plea for ill;

Thy evil deeds will make thee poorer still.

Ne fais pas le mal parce que tu es pauvre; si tu le fais; tu deviendras plus pauvre encore.

  • தொடங்கியவர்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க ; நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். 206

துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருந்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்யக் கூடாது .

எனது கருத்து :

உப்பைத் திண்டால் தண்ணி குடிக்கவேணும் எண்டும் , வினை விதைச்சால் வினையைத்தான் அறுக்கவேணும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கனம் . தனக்கு கஸ்ரமே வரக்கூடாது எண்டு நினைக்கிறவன் , மற்றவனுக்கு ஒருக்காலும் எளியவேலையள் பாக்கமட்டான் .

What ranks as evil spare to do, if thou would'st shun

Affliction sore through ill to thee by others done.

Ne fais pas à autrui, le mal dont tu ne désires pas souffrir toi-même.

  • தொடங்கியவர்

எனைப்பகை உற்றாரும் உய்வர் ; வினைப்பகை

வீயாது பின்சென்று அடும். 207

எவ்வெளவு பெரிய பகையை அடைந்தவரும் ஒருவகையில் அதிலிருந்து தப்பிப் பிழைத்தல் கூடும் . ஆனால் ஒருவர் செய்த தீவினையாகிய பகை , செய்தவரை விட்டு நீங்காமல் பின் தொடர்ந்து அவரை அழிக்கும் .

எனது கருத்து :

ஆராவது காதலிச்சு கலியாணம் செய்தால் , முதல்லை தாய்தேப்பன் கேம் கேப்பினம் . பேந்து ஒரு பேரப்பிள்ளை பிறக்க சமாதானமாய் போவினம் . ஆனால் , இதையே சாட்டி ஆராவது தாய்தேப்பனுக்கு செய்வினைசூனியம் செய்தினமெண்டால் , அவையின்ர சந்ததியே உருப்படாது . இதைத் தான் ஐய்யனும் சொல்லிறார் .

From every enmity incurred there is to 'scape, a way;

The wrath of evil deeds will dog men's steps, and slay.

On échappe à toute haine (quelque féroce qu’elle soit) mais celle causée par le mal (qu’on a fait) poursuit le coupable et le tue.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தீயவை செய்தார் கெடுதல் , நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் துஅற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் துன்புறுவர் என்பது நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியில் தங்கியிருத்தலைப் போன்றது .

எனது கருத்து :

ஒருத்தர் மற்றவைக்குச் செய்யிற கெட்ட வேலையள் , அவையளின்ரை மனச்சாட்சி போலையும் , அவையின்ர சொந்த நிழல் போலையும் தொடர்ந்து வருமாம் .

Man's shadow dogs his steps where'er he wends;

Destruction thus on sinful deeds attends.

Le mal que l’on fait suit le coupable, ainsi que l’ombre suit l’homme, partout sans jamais le quitter.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.