Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்

துன்னற்க தீவினைப் பால். 209

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ நினைத்தால் அவன் எந்தவிதமான எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது .

எனது கருத்து :

ஒருத்தர் தான் தான் நல்லாயிருக்க வேணும் , எல்லாம் தனக்குத்தான் கிடைக்கவேணும் எண்டு நினைக்கிறதிலை பிழையில்லை . ஆனால் மற்றவனை விழுத்தி கெட்டவேலையள் செய்து இப்பிடி வரக்கூடாது .

Beware, if to thyself thyself is dear,

Lest thou to aught that ranks as ill draw near!

Si l’on s’aime soi-même, il faut s’abstenir de ce qui peut participer du mal .

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்

தீவினை செய்யான் எனின். 210

ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால் அவனுக்கு எந்தத் துன்பமும் வராது என்பதாகும் .

எனது கருத்து :

இதுக்கு விபீசணனும் கர்ணனும் நல்ல உதாரணம் .இந்த ரெண்டு பேருமே சேர்ந்த இடம் பிழையான இடம் எண்டாலும் , கெட்ட வேலையள் செய்யாமல் விட்டதால கடைசியில தப்பீச்சினம் .

The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide.

Si, au lieu de e’engager dans la bonne voie, quelqu’un ne fait que du mal, sache qu’il est un professionnel du mal.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் -இல்லறவியல் - ஒப்புரவு அறிதல் ,( The knowledge of what is Befitting a Man's Position , Savoir pratiquer la bienfaisance ) .[/size]

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு. 211

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும் ?மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை .

எனது கருத்து :

ஒருத்தர் ஒராக்களுக்கு செய்யிற உதவியள் வந்து ஒண்டும் எதிர்பாத்து செய்யிறலை . அது தானாய் ரத்தத்தில ஊறி வாற விசையம் . இந்த மழையெல்லாம் எனக்கு ஏதாவது செய் எண்டு சனங்களிட்டை கேட்டுக்கொண்டே பெய்யுது ?

Duty demands no recompense; to clouds of heaven,

By men on earth, what answering gift is given?

De même qu’aux nuages qui versent la pluie, le monde ne fait rien en retour, de même les bienfaits n’exigent pas réciprocité .

  • தொடங்கியவர்

தாள்ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. 212

ஒருவன் முயற்சி செய்து ஈட்டிய பொருள் அனைத்தும் தகுதியுடைய சான்றோர்க்கு உபகாரம் செய்வதற்கேயாம் .

எனது கருத்து :

நாங்கள் கஸ்ரப்பட்டு வேலை செய்யிறம் . ஒரளவுக்கு வசதியா இருக்கிறம் . ஆனால் ஊரிலை எவ்வளவோ சின்னப்பிள்ளையள் படிக்க வசதியில்லாமல் , பள்ளிக்கூடம் போகேலாமல் இருக்கினம் . நாங்கள் பெரிய எடுப்பாய் ஒண்டும் செயவேண்டாம் . இந்தப் பிள்ளையள்ளை ஒராளை படிக்கவைச்சாலே அது ஒரு புண்ணியமன விசையம் . இதுக்கு மில்லியன்கணக்கில தேவையில்லை . ஒரு நாளைக்கு கபே குடிக்கிற 1 யூறோவே காணும் .

The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours.

Créée par le travail, la richesse de celui qui en est digne, lui est dounée pour faire la charité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற. 213

விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும் , பிறர்கு உபகாரம் செய்வதைப் போல நல்லவனவாகிய வேறு செயல்களைப் பெறுதல் அரிதாம்.

எனது கருத்து :

இப்ப உதவி செய்யிற ஆக்கள் கொஞ்சம் குறைஞ்சு கொண்டுதான் போகினம் . இதுக்கு காரணமும் இல்லாமல் இல்லை . இப்ப , வந்தவரைக்கும் லாபம்தான் எண்டு ஆட்டையை போடிற சனங்கள்தான் கூட . ஆனால் இதுகளைப் பாக்காமல் உதவி ஒத்தாசையாய் இருக்கிறவன் தான் மனிசன் .

To 'due beneficence' no equal good we know,

Amid the happy gods, or in this world below.

Au Ciel comme sur la terre, il est difficle de faire une meilleur couvre que d’obliger (son prochain).

  • தொடங்கியவர்

ஒத்தது அறிவோன் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். 214

உலகிற்கு உதவும் நற்பண்புகள் உள்ளனவே உயிர் வாழ்பவன்; மற்றவன் இறந்தவனுக்கு ஒப்பானவன் .

எனது கருத்து :

இதைத்தான் நான் முதலும் சாடையாச் சொன்னனான் .மற்றவனுக்கு உதவி ஒத்தாசையா இல்லாமல் , தான் தன்ரை குடும்பம் எண்டு இருக்கிற கூட்டங்கள் , அதுகள் சீவிச்சாலும் செத்த சவங்கள் எண்டு ஐயன் ரென்சனாகி சொல்லியிருக்கிறார் .

Who knows what's human life's befitting grace,

He lives; the rest 'mongst dead men have their place.

Celui qui sait ce qu’il faut faire de convenable est un homme vivant, tout autre est rangé parmi les morts.

  • தொடங்கியவர்

ஊருணி நீர்நிறைந்து அதற்றே உலகுஅவாம்

பேரறி வாளன் திரு. 215

உலக நன்மையை விரும்பிச் செய்கின்ற பேரறிவாளன் பெற்ற செல்வம் ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிறைந்தாற்ப் போன்று பலருக்கும் பயன்படும்.

எனது கருத்து :

இறைக்க இறைக்கிற கிணறுதான் ஊறும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லியிருக்கினம் . நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குடுக்கிறியளோ அவ்வளவுக்கு உங்கடை செல்வமும் , நீங்கள் செய்ததாலை வாற பயனும் கூடும் . அள்ள அள்ள குறையாத குளத்து தண்ணி மாதிரி நீங்கள் செய்யிற உதவியள் எல்லாரையும் தூக்கிவிடும்

The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies.

La richesse du grand Sage qui désire se conformer et se conforme aux us et coutumes du monde, ressemble à la pièce d’eau du village qui est rempli jusqu’aux bords.

  • தொடங்கியவர்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின். 216

உபகாரம் செய்பவனிடத்தில் செல்வம் சேருமானால் அது ஊரின் நடுவில் எல்லார்க்கும் பயன் தரக்கூடிய மரம், பழம் பழுத்தாற்போல யாவர்க்கும் பயன்படும் .

எனது கருத்து :

ஐயன் சொன்னது சரிதான் . ஆனால் , கல்லைக் கண்டால் நாயைக்காணேலை , நாயைக் கண்டால் கல்லைக் காணேலை எண்ட கதையாய் நிலைமை இப்ப பிழையாய் கிடக்கு . உதவி செய்யிற மனம் உள்ளவனிட்டை காசுகள் இல்லை . எல்லாம் மொள்ளமாரியள் , முடிச்சவிக்கியளிட்டைத் தான் பாருங்கோ காசு பணங்கள் கிடக்கு . இதாலை ஆருக்கு என்ன லாபம் ?

A tree that fruits in th' hamlet's central mart,

Is wealth that falls to men of liberal heart.

Si l’opulence échoit à un homme charitable elle ressemble à l’arbre utile situé au milieu du village et chargé de fruits mûrs.

  • தொடங்கியவர்

மருந்துஆகித் தப்பா மரத்துஆற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின். 217

பெருந்தன்மை உடையவனிடம் செல்வம் உண்டாகுமானால் அது தன் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படும் மரத்தைப் போன்றது .

எனது கருத்து :

வேப்பம் மரம் அதின்ரை தலையிலை இருந்து கடைசி வேர் வரை பிரையயோசனமாய் மற்றவைக்கு இருக்கிது . அதைமாதிரித்தான் உதவிசெய்யிறவனிட்டை வசதியள் இருந்தால் , மற்றவைக்கு பிரையோசனமாய் இருப்பான் . ஆனால் நடக்கவேணுமே ?

Unfailing tree that healing balm distils from every part,Is ample wealth that falls to him of large and noble heart.

Se trouve-t-elle entre les mains d’un homme de grande générosité, la richesse est pareille à l’arbre, dont toutes les parties servent de médicaments.

  • தொடங்கியவர்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடன்அறி காட்சி யவர். 218

தாம் செய்யத் தக்கவற்றை நன்கு அறிந்த அறிவுடையோர் தம் செல்வம் இல்லாத காலத்தும் பிறர்க்கு உதவி செய்வதற்கு மனம் தளரமாட்டார்.

எனது கருத்து :

கர்ணமகாராசா அர்சுனன் போட்ட போடில கீழைவிழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் . அப்பகூட இந்தக் கண்ணன் சும்மாயிருக்கேலை . மாறுவேசம் போட்டு அவற்ரை கொடை எல்லாத்தையுமே தானமாய் வாங்கிப்போட்டான் . என்ன கஸ்ரம் வந்தாலும் உதவிசெய்யிறவன் எந்த நேரத்திலையும் உதவி செய்வான் எண்டதைச் சொல்லுறன் .

E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true.

Celui-là a le sentiment éclairé du devoir qui ne se lasse pas de faire la charité, même quand ses ressources ont diminué.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு. 219

பிறர்க்கு உதவி செய்து ஒழுகும் கடமையை இயலபாக உடையவருக்கு , பிறர்க்கு உதவி செய்ய முடியாமல் வருந்துவதே அவருக்கு வறுமையாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் ஏழையாய் போய்விட்டான் எண்டு சொல்லுறதுக்கு வரைவிலக்கணமே , அவனால மற்றவனுக்கு உதவி செய்யேலாமால் போவதை வைச்சுதான் எண்டு ஐயன் சொல்லுறார் .

The kindly-hearted man is poor in this alone,

When power of doing deeds of goodness he finds none.

Devenir pauvre pour l’homme généreux c’est regretter l’impossibilité où il est de ne pouvoir faire des libéralités.

  • தொடங்கியவர்

ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து 220

பிறர்க்கு உபகாரம் செய்வதானால் தனக்குப் பொருட்கேடு உண்டாகும் என்றால் , அப்பொருட்கேடு தன்னை விற்றாவது கொள்ளத் தக்க தகுதியை உடையதாகும்.

எனது கருத்து :

ஒருத்தர் உதவி செயிறதாலை நாளைக்கு தனக்கு கெட்ட பேர் வருமெண்டு சொன்னால் அவரை வித்துத்தான் அந்தக் கெட்டபேர் வருமெண்டு ஐயன் ரென்சனாகிப் போய் இதிலை சொல்லுறார் .

Though by 'beneficence,' the loss of all should come,

'Twere meet man sold himself, and bought it with the sum.

Si la charité peut antraîner la perte de la richesse,

elle vaut qu’on l’achète, en se vendant soi-même.

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் - இல்லறவியல் - ஈகை, ( Giving , La charité ) .[/size]

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும் . பிறருக்குக் கொடுப்பதெல்லம் பயனை எதிர்பார்த்துத் தருவதாகும் .

எனது கருத்து:

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை . ஒண்டையுமே எதிர்பாக்காமல் வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழை பாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை . இதை சிலபேர் இந்தக் காலத்தில செய்யினம் . ஆனால் காணாது .

Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense.

Donner aux pauvres, c’est faire la charité; il est de a nature de tous les autres dons de n’être faits qu’en vue d’un profit, que l’on en attend dans la suite.

  • தொடங்கியவர்

நல்லாறு எனினும் கொளல்தீது ; மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. 222

நல்ல அறச்செயலுக்காக என்றாலும் பிறரிடம் யாசித்துப் பெறுவது தீமையே. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

எனது கருத்து:

ஏழை எழியவைக்கு குடுக்கிறதுக்கு மற்றவையிட்டை வாங்கி குடுக்கிறது அழுகல் பழக்கம் . தங்கடை சொந்தக்கையாலை குடுகிறதுக்குப் பேர்தான் உண்மையான கொடை . இந்தக் கொடையாலை சொர்க்கம் கிடைக்காட்டிலும் கஸ்ரப்பட்டவைக்கு உதவி ஒத்தாசையா இருக்கிறது தான் உண்மையான வாழ்க்கை .

Though men declare it heavenward path, yet to receive is ill;Though upper heaven were not, to give is virtue still.

Mendier est mauvais, bien qu’il y en ait qui prétendent qu’il conduit à la bonne voie dans ce monde. Donner est bien, bien qu’il y en ait qui prétendent qu’il ne fait pas obtenir le paradis.

  • தொடங்கியவர்

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள. 223

'யான் வறியவன் ' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் சொல்வதற்கு முன் அவனுக்கு உதவும் பண்பு நற்குடியிற் பிறந்தவர்க்கே உண்டு .

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தியள் எண்டல் எந்த நேரமும் தங்களைப்பற்றி புறட்டணியம் சொல்லிக் கொண்டிருப்பினம் . ஆரும் ஐஞ்சைப்பத்தை தங்களிட்டை கேட்டுப்போடுவங்கள் எண்டு . ஆனால் சிலதுகள் என்ன கஸ்ரம் எண்டாலும் அதை வெளீல காட்டாமல் கஸ்ரப்பட்துகளுக்கு உதவிசெய்வினம் . உயர் குடிப்பிறப்பில பிறந்த ஆக்களை இப்பிடித் தான் ஒருத்தர் கணிக்கிறது.

'I've nought' is ne'er the high-born man's reply;

He gives to those who raise themselves that cry.

Ne pas proférer les paroles déshonorantes. ‘‘Je n’ai rien’’ et donner à ceux qui les ont dites: tous les deux actes ne se rencontrent que chez l’homme de bonne famille.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு. 224

உதவி பெற்ற பிறகு அதைப் பெறுபவனுடைய முகம் மலராவிடில் . ஒருவன் செய்யும் தானமும் யாசித்தலைப் போல் துயரத்தைத்தான் தரும் .

எனது கருத்து:

இதிலை நான் கொஞ்சம் ஐயனோடை பிழையா இருக்கிறன் . ஒருத்தருக்கு குடுக்கக் குடுக்க திறுத்தி இல்லையெண்டால் குடுக்கிறவர் ஏன் கவலைப்படவேணும்? அவரும் தன்னால முடிஞ்ச உதவியளைத் தானே செய்யலாம் .

The suppliants' cry for aid yields scant delight,

Until you see his face with grateful gladness bright.

Avoir pitié, ne cause pas la joie jusqu’au moment où l’on voit le visage épanoui du pauvre qui a obtenu (l’aumône).

  • தொடங்கியவர்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். 225

தவம் செய்வோர் பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமையடைவர் . அவ்வலிமையானது பசியைத் தம் ஈகைத் திறத்தால் நீக்குவோருடையை வலிமைக்குப் பிற்பட்டதேயாகும் .

எனது கருத்து:

வரியம் முன்னூத்து அறுபத்தைஞ்ஞு நாளும் விரதம் கிடக்கிறம் பேர்வழி எண்டு கடவுளை கும்பிடாமல் பசிக்கிது எண்டு வாறவனுக்கு வயிறு குளிரப்பண்ணி அனுப்பிறதுதான் உலகத்திலேயே பெரிய கொடை .

'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain.

Le mérite des hommes fermes á souffrir la faim, ne vient qu’après le mérite de celui qui apaise la faim d’autrui.

  • தொடங்கியவர்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி. 226

ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும் ; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும் .

எனது கருத்து:

பசிக்கிது எண்டு வாறவன்ரை வயிறைக் குளிரைப் பண்ணிறது தான் காசுபணம் உள்ளவையின்ரை உணமையான சேமிப்பு வங்கி . பேந்து உங்களுக்கொரு கஸ்ரம் எண்டு வந்தால் ஆரும் உதவி செய்வினமல்லோ .

Let man relieve the wasting hunger men endure;

For treasure gained thus finds he treasure-house secure.

Apaiser la faim déchirante des pauvres, est le moyen de mettre sa propre richesse en sécurité.

  • தொடங்கியவர்

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது. 227

பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீய நோய் அணுகுதல் இல்லை .

எனது கருத்து:

எல்லாருக்கும் குடுத்து சாப்பிட்டியள் எண்டால் உங்கள பஞ்சம் பட்டினி வாட்டாது .ஆரும் கைகுடுத்துக் கொண்டுதான் இருப்பினம்.

Whose soul delights with hungry men to share his meal,

The hand of hunger's sickness sore shall never feel.

La cruelle maladie appelée faim n’afflige pas celui qui est accoutumé à partager ses repas, avec les hôtes.

  • தொடங்கியவர்

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழுக்கும் வண் கணவர். 228

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் இரக்கமில்லாதவர்கள் , பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள் .

எனது கருத்து:

தான் குடுத்து ஏழையின்ரை முகத்திலை சிரிப்பை பாக்கிறவன்தான் உண்மையான மனிசன் .கஞ்சாப்பியள் தங்கடை சொத்து பத்துகளை பதக்கி பதுக்கி வைப்பினம் . ஆனால் அவையின்ரை முகத்தில சந்தோசம் இருக்காது .

Delight of glad'ning human hearts with gifts do they not know.Men of unpitying eye, who hoard their wealth and lose it so?

Ce sont ceux qui sont dépourvus de la grâce qui thésaurisent et perdent ensuite leur fortune. Ils ne connaissent donc pas le bonheur éprouvé par ceux qui donnent ?

  • தொடங்கியவர்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல். 229

ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளிக்காமல் தான் மாத்திரம் உண்பவன் நிலை யாசிப்பதிலும் கீழாகும்.

எனது கருத்து:

மற்றவனுக்கு குடுக்கிறதாலை தங்கடை தேட்டம் எல்லாம் அழிஞ்சு போகும் எண்டு தாங்களே சாப்பிடறவையின்ரை நிலமை பிச்சை எடுத்து சீவிக்கிறவைய விட கேவலமானது ஐயன் ரென்சனாய் போய் சொல்லுறார்

They keep their garners full, for self alone the board they spread;'Tis greater pain, be sure, than begging daily bread!

Manger solitaire afin de remplir (son trésor) cause une douleur plus aigue que mendier.

  • தொடங்கியவர்

சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்

ஈதல் இயையாக் கடை. 230

யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும் .

எனது கருத்து:

வாழ்க்கையில ஒருத்தன் செத்துப்போறதுதான் பெரிய துன்பம் ஆனால் ஒருத்தனுக்கு ஒண்டையும் குடுக்கேலாத நிலமை வந்தால் இருக்கிறதிலை பிரையோசனமில்லை கண்டியளோ .

'Tis bitter pain to die, 'Tis worse to live.

For him who nothing finds to give!

Il n’y a rien de plus cruel que mourir. Il vaut mieux mourir qu’être impuissant à donner.

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் இல்லறவியல் புகழ் ( Renown , La gloire ) .[/size]

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. 231

வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை.

எனது கருத்து :

மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும் . அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும் . அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான் இதைத்தான் ஐயனும் சொல்லுறார்

See that thy life the praise of generous gifts obtain;

Save this for living man exists no real gain.

Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là.

  • தொடங்கியவர்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். 232

இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும்.

அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான் . ஏனெண்டு நினைக்கிறியள் , அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல்லோ .

The speech of all that speak agrees to crown

The men that give to those that ask, with fair renown.

De tous les éloges qu’on décerne, seul reste permanent, celui qui est fait de quelqu’un qui donne (aux pauvres).

  • தொடங்கியவர்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில். 233

நெடு நாள் நீடித்து நிலைக்கும் புகழுக்கு ஒப்பான ஒரு பொருளை உலகில் காண்பது மிகவும் அரிதாகும்.

எனது கருத்து:

ஒரு கெட்டவன் எண்ட பேரை ஐஞ்சு நிமிசத்தில எடுக்கலாம் ஆனால் ஒருத்தன் நல்லவனா வள்ளலாய் இருந்து புகழ் எடுக்கிறது செரியான கஸ்ரம் பாருங்கோ ஆனால் அந்தப் புகழ்தான் உலகத்தில நிலையானது

Save praise alone that soars on high,

Nought lives on earth that shall not die.

Il n’y a en ce monde rien qui puisse égaler la grande gloire de quelqu’un. Tout le reste est détruit ici-bas.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.