Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?

Featured Replies

வணக்கம் அனைவருக்கும்,

இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன்.

இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது.

மேலும் அனைவரும் பட்டி மன்றக் கருத்துக்களை வாசித்திருப்பீர்கள் அதில் ரசிகையின் வேண்டுகோளுக்காக எதிர் அணியில் நான் வாதாடினாலும்,இங்கே தூயவன் கூறியதைப் போல் நிதர்சனமாகத் தெரிவது சில பேர் இணயம் கொடுக்கும் அனாமதேயத்தை தவறுதலாகப் பாவிகிறார்கள் என்பதுவே.கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு அவசியமாகின்றன.தண்டனைகள் அற்ற விதிமுறைகள் மீண்டும் மீண்டும் அவ் விதி முறைகளை மீறச் செய்யும். நான் இங்கே நிர்வாகத்திடம் கேட்கும் கேள்வி இவ்வாறான தனி நபர் தாக்குதல்களை நிப்பாட்டக் கூடிய பலமான காத்திரமான நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியாதா என்பதுவே?இங்கே விதி முறைகள் இன்னார் இவர் என்பவற்றிற்காக வளைக்கப் பட்டால் அவை விதிமுறைகளாக இருக்காது.இங்கே வந்து ஒரு தனி நபருக்காக நட்பின் பாசத்தின் அடிப்படயில் வந்து எழுத விரும்புபவர்கள் வந்து தாராளமாகக் கருத்து எழுதலாம்.

அதோடு தேவை கருதி நான் எனது சொந்தக் கருத்தை நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் எழுதியதற்கு ,எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

  • Replies 61
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காலம் வருசபிறப்பன்று நடக்கும் பட்டி மன்றங்களிலை...ஒருஇடத்திலை இராமன் வீரன் என்பார். அதே நபர். அடுத்த ஒரு இடத்தில் இராமன் கோழை என்பார். குறிகிய மணி இடைவளியில்.. குமரன் வாத்தி போன்ற பட்டிமன்ற பண்டிட்டுகள் இப்படி செய்ததை கண்டிருக்கிறன்...இதைத்தான் பட்டி மன்றமென்பது.. ....என்ன இருந்தாலும் நாரதர் சேம் சைட் கோல் போட்டிருக்க கூடாது... :lol::lol:

ஆகா..! நாரதர் அண்ணா என்ன ஒரு அருமையான இணையத்தை பார்த்து சீரளிவு எண்டு சொல்லீட்டீங்களே உங்களுக்கே இது நல்லாருக்கா...??? என்னதான் பிரச்சினை எண்டாலும் உங்களை நம்பியவர்களை இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே...!

( இது நாரதர் அண்ணாவுக்காக அல்ல)

தனிநபர் தாக்குதல் தொடரக்கூடாது என்பதில் எனக்கு இன்னும் ஒரு கருத்து இல்லை....! அதனால் எங்களுக்குள் வரும் சஞ்சலங்கள் கருத்துக்கள் கூறவிருப்பமில்லாத ஒரு விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்பது ஏற்றுக்கொள்ளபடவேண்டியது. அதனால் களம் நல்லதொரு உறுப்பினர்களை இளந்து விடக்கூடாது...... யாழ்களத்தின் நன்மை கருதியாவது ஒருவரை விளித்து எழுதும் போது அவரின் மனம் நோகாதவாறு தயவு செய்து எழுதுங்கள்.....! இது எல்லோரிடமும் எனது தனிப்பட்ட வேண்டுகோள்....!

(ஆனால் தாயை பளித்தவனையும் தாய்நாட்டைப் பளித்தவனுக்கும் மரியாதை குடுத்து உயரவைக்காதீர்கள்....! )

  • தொடங்கியவர்

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் தங்கள் முகமூடிகளை தாங்களே கிழித்துக் கொள்கிறார்கள். அதனை யாழ் அனுமதிக்க வேண்டும். :lol:நானும் சொல்கிறேன்! செயலில் இறங்குவது என்பது கதகதப்பான அறைக்குள் இருந்து கணணியில் எழுதுவது போல சுலபமானது அல்ல!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கருத்து என்னவெனில்! தமிழ் இளையோர் அமைப்பு என்ற ததலைப்பில் குருவி எழுதிய எல்லாக் கருத்துக்களையும் மீள வெளியிட வேண்டும். வேண்டுதமானால் அந்தக் கருத்தக்களளுக்கு நாம் எழுதிய பதில் எதிர்க் கருத்துக்களை வேண்டுமானால் நிர்வாகம் பகுதிக்கு மாற்றி விடுங்கள். குருவிகள் எழுதியவற்றை அனைவரும் பார்க்க வேண்டும். பயன்பெற வேண்டும்

கதை அப்படிப்போகுதா..எனது சர்வேக்கு நல்ல உதவி கண்ணாளங்களா..

கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.

கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.
அண்ணா.. உங்கள எந்த குறூப்பில சேர்க்கிறது.. நாரதர் குறூப்பா? குருவி குறூப்பா?

இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன :P :wink:

தாராளமா சேரலாம்.. நீங்க எனக்கு ஜால்ரா சத்தமா போடணும்.. நானும் உங்களுக்கு பதிலுக்கு ஜால்ரா சத்தமா போடறனே.. ஜென்டில்மன் அகிறீமன்ட்.. சரியா

இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன :P :wink:

நேரம் கிடைக்கும் பொழுது எங்கடை அகிறீமண்ட்டை காப்பாற்ற உழைப்பை நோ வொறீஸ்

நேரம் கிடைக்கும் பொழுது எங்கடை அகிறீமண்ட்டை காப்பாற்ற உழைப்பை நோ வொறீஸ்

சரியண்ணா.. நானும் பாட்டைமர்தான்.. எகிறீமன்ட். கன்பார்ம்ட்..

(Sorry no imocon for Handshaking)

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கூட்டு உருப்படுமா.....?

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

தூயவன் எண்டால் தூயவன் தான் - திரும்பவும் 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..

மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனில் நடந்த அந் நிகழ்வு தொடர்பாக குருவி தெரிவித்திருந்த ஒரு குற்றச்சாட்டு.. அங்கே ஒரு சகோதரி வைத்திருந்த போஸ்ரரில் Tharshini என்ற பெயரில் h என்பது இடையில் செருகப்பட்டிருக்கிறது. நாலு வரி கையாலை எழுதத் தெரியாத இவர்கள் எல்லாம் என்ன செய்யினம் என்ற மாதிரி குருவியின் குற்றச் சாட்டு இருந்தது.

உண்மையில் மனம் திறந்து சொல்லுங்கள்.. விமர்சனம் என்பது இதுதானா..? விமர்சனத்துக்கும் ஒரு தகுதி வேண்டாமா? கொஞ்சமாவது அறிவு பூர்வமாக விமர்சிக்க வேண்டாமா?

தயவு செய்து நிர்வகமே.. குருவி எழுதிய அத்தனை கருத்துக்களையும் மீண்டும் வெளியிடுங்கள்.

இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!

உங்க நிலைப்பாடு:

1)தேசியத்துக்கு துணையாவா?

2)தேசியத்துக்கு எதிராவா?

3)இரு சார்பு நிலையும் இல்லையா?

4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?

முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-

அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-

அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இவங்க என்னம் கோள்மூட்டுற தொழிலை விடல்லையா? இளையோர் அமைப்பு பிரிவை மூடவைச்ச பெருமை யாரை சாரும் எண்டு ஒரு பட்டிமன்றம் வைச்சால் தப்பே இல்லை? 6,7 பக்கத்தில் குருவி, இவோன் என்னம் பலர் கருத்துகள் எழுதி இருந்தார்கள், அது பல நாட்களாக இருந்தது, நேற்று வந்து சூடா 2 வார்த்தை கதைச்ச சிலரால் கருத்து திசை மாறிச்சென்று வெட்டுறுத்தினர்களின் கையில் சிக்கிவிட்டது அந்த பிரிவு,,

கருத்துக்களம் என்றால் அது ஒரு பக்கச்சார்பாகத்தான் இருக்கனும் எண்டு எதிர்பார்க்கிறது தவறு,, ஒரு பொருளை எடுத்து அதனை ஒவ்வொருக்கும் காட்டும்பொழுது ஒவ்வொருவரினதும் மனதில் ஒரே மாதிரியான என்னம் வராது, அதேமாதிதித்தான் குருவி தன்னுடைய கருத்தை சொல்லுறார், அதற்கு பலர் தங்களின் (எதிர்)கருத்தை சொன்னார்கள், அதை வாசித்த அனைவருக்கும் விளங்கும் யாருடைய கருத்தில் அர்த்தம் இருக்கு என்று,

சரி இளையோர் அமைப்பைப்பற்றி விவாதிக்கும் இடத்தில அசினுக்கும் பிசினுக்கும் என்னவேலை? அல்லது பேடிக்கும் ஆண்மையற்றவனுக்கும் என்ன வேலை? இதை யார் முதல்ல அங்க செருகினது? குருவியா? அல்லது நீரா? அது எப்படி இவோன், குருவி சண்டைபிடிக்கும்பொழுது மூடாத அந்த பக்கம் நீர் வந்த உடன மூடினது? நானும் அங்கே பல கருத்துக்களை முன்வைத்தேன், இவோன், குருவி, நான், என்னம்பலர் கருத்துக்களை முன்வைக்காத பொழுது மூடாத களத்தை உம்முடைய கருத்தின் மூலம் மூடவைத்துவிட்டு எதற்கு இந்த கோள் மூட்டுகை?? :roll: :? :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் அந்தக் கருத்துப் பகுதி ஏன் மூடப்பட்டதென்று எனக்கு தெரியாது. நாரதர் எழுதியவற்றை நான் பார்க்கவில்லை. ஒருவர் எழுதுகின்ற கருத்துக்களின் விசமத்தனத்தை உணர்ந்து எதிர்க்கருத்துக்களை வைத்த போது அதை ஏன் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வேண்டுகோள் இதுதான்.. நான் நீங்கள் எழுதியவற்றை தண்க்கை செய்யட்டும். ஆனால் குருவி எழுதியவற்றை மீளவும் வெளியிட வேண்டும்.

வர்ணன்.. உங்களது கோரிக்கை எதை சொல்கிறதென்றால்.. அதாவது அவர் யார் என்பது முதலே தெரிந்து விட்டால் அவர் உங்களுக்கு சார்பானவரென்றால் அவருடை எல்லாக் கருத்துக்களும் அற்புதம் என்றும் அவர் உங்கள் கருத்துக்கு சார்பானவராய் இல்லயென்றால் அவரது அத்தனை கருத்துக்களும் பொய்யானவை என்று முடிவெடுக்கவே.

ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்.. தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம். அதே நேரம் தேசியத்திற்கு சார்பானவரும் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம். ஆகவே அந்தக் கருத்ததுக்களை வாசித்து விட்டு அது தொடர்பில் தீர்மானியுங்கள்.

மேற்கோள்:

ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்..

தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்.

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

தயவு செய்து உடனடியா சொல்லுங்க- நழுவி போக மாட்டிங்க எண்டு நம்புறன் ! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..

அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே?

இதற்கு அண்மைக்கால உதாரணங்களை யாழ் களத்திலேயே கண்டிருப்பீர்கள் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.