Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டுக்குத் துரோகமிழைக்கும் தீய சக்தியாகக் கூட்டமைப்பு உருவெடுத்து வருகின்றது: அதை நசுக்கவேண்டும் என்கிறார் இனவாதி குணதாச அமரசேகர.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dr-gunadasa-amarasekara150.jpg

ஜெனீவா மாநாட்டின் போது இலங்கையை சர்வதேசப் பிடிக்குள் சிக்கவைப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக வகுத்து வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. எனவே, இனியும் அரசு மௌனம் காத்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா அழைப்பை அரசு நிராகரித்துள்ள நிலையில், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து சிறப்பிப்பதன் உள்நோக்கத்தை நாம் அறிவோம். ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில் இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான சதித்திட்டங்களை கூட்டமைப்பு வகுத்துவருகின்றது. மாநாட்டில் இலங்கையை தவிக்க வைப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.

நாட்டுக்குத் துரோகமிழைக்கும் தீய சக்தியாகக் கூட்டமைப்பு உருவெடுத்து வருகின்றது. எனவே, அரசு அதை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. அரசு, கூட்டமைப்பை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது தொடர்ந்தும் மௌனம் காத்தால், அது நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி எனக் கூறினார் கலாநிதி குணதாச அமரசேகர.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசபயங்கரவாதத்தின் இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தை, உள்ளங்கை அளவு நிலத்தில் ஒரு பூங்கா அமைத்து அதனால் சுற்றிவைக்கும் அந்த நோக்கத்திற்கு அதிதீவிர இனவாதக் கோளாறு ஆகிய இந்த குணதாசா அதை நாசம் செய்யப் பார்கின்றார்!

தன்னுடைய கருத்தை இஸ்டத்திற்கு வெளிப்படுத்துவது, உலகெலேயே சொறிலங்காவில் மட்டும்தான் பயங்கரவாதம் என்று ஆகின்றது!

உலகும் சொறிலங்காவின் கருத்து சுதந்திரத்தை அறிய இதுவே ஒரு வாய்ப்பாக அமையட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

மாநாட்டில் இலங்கையை தவிக்க வைப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.

இப்படி ஆழமாக சிந்திக்கும் குணதாச சிறுபான்மை மக்களை தொடர்ந்து வதைப்பதில் என்ன இன்பத்தை கண்டு விட்டார். கடந்த 30 வருடங்களாக தமிழர்கள் மட்டுமில்லாமல் சிங்களவர்களும் கொல்லப்பட்டதை ஏன் இவர்ரும் இவர் போன்ற இனவாதிகளும் சிந்திக்க மறுக்கிறார்கள்? மீண்டும் ஒரு போரை இவர்கள் விரும்புகின்றார்களா?

புத்தி ஜீவி என கூறிக்கொள்ளும் கலாநிதி குணதாச அமரசேகரவுக்கே இந்த இனவெறி உள்ள போது சாமானிய சிங்களவர்களை நினைத்து பார்க்க முடியவில்லை.(எல்லோரும் அல்ல)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.