Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்தில் மதப்பிரச்சினை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்தில் மதப்பிரச்சினை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது

[ ratmalanai%20hindu_college.jpg

கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரிக்கு புதிய அதிபராக மீண்டும் ஆர் உதயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே அதிபராக இருந்த மன்மதராஜன் என்பவர் ஓய்வுபெற்றதை அடுத்து அதிபர் தரமில்லாத அவரின் மனைவியான ஆசிரியை அதிபர் பதவியை கோரியதன் காரணமாக பிரச்சினை எழுந்தது

இதனையடுத்து பிரச்சினையை தீர்க்க கல்வி திணைக்களம், பாணந்துறை முஸ்லிம் கல்லூரி ஒன்றில் கடமையாற்றிய முதலாம் தர அதிபர் தரம் கொண்ட உதயகுமார் என்பவரை இந்துக்கல்லூரியின் அதிபராக நியமித்தது.

எனினும் முன்னாள் அதிபரின் மனைவியான குறித்த ஆசிரியை அதிபர் அலுவலகத்தின் சாவியையும் கொடுக்க மறுத்ததன் காரணமாக இன்று வரை ஒரு வாரகாலமாக அதிபர்

அலுவலகம் மூடிக்கிடக்கிறது. புதிய அதிபருக்கும் கடமையை ஏற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் கல்வி திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட புதிய அதிபரின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதன் காரணமாக அவரை அதிபராக நியமிக்கமுடியாது என்று கல்லூரியின் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் இந்து வித்தியா அபிவிருத்தி சங்க தலைவர் கந்தையா நீலகண்டன் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் பெற்றோர் புதிய அதிபராக உதயகுமார் என்பவரே நியமிக்கப்படவேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை ஏற்கனவே அதிபராக இருந்து ஓய்வுபெற்ற அதிபர் மீது பெற்றோர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். அவருக்கும் இந்து வித்தியா அபிவிருத்தி சங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், முன்னாள் அதிபரின் பரிந்துரையின் பேரில் கந்தையா நீலகண்டன் தரப்பினரின் ஆதரவுடன், ராஜகிரிய பகுதி பாடசாலை ஒன்றின் அதிபர் இந்துக்குருக்கள் என்ற அடிப்படையில் இரத்மலானை இந்துக்கல்லூரியின் அதிபராக நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுடன் பேசி அவருக்கு நேற்று இரத்மலானை இந்துக்கல்லூரியின் அதிபர் நியமனமும் வழங்கப்பட்டது. எனினும் இன்று இந்த விடயம், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டமையை அடுத்து அவர், ஆளுநர் அலவி மௌலானாவுடன் பேச்சு நடத்தியமையை அடுத்து, இந்து வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் பரிந்துரையில் நியமிக்கப்பட்ட அதிபரின் நியமனம் ரத்துச்செய்யப்பட்டது.

இதனையடுத்து கல்வித்திணைக்களத்தினால்; ஏற்கனவே அதிபராக நியமிக்கப்பட்ட ஆர் உதயகுமார் என்பரை இரத்மலானை இந்துக்கல்லூரியின் அதிபராக நியமிப்பதென்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று முடிவெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நாளையதினம் புதிய அதிபர் உதயகுமார் இரத்மலானை இந்துக்கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அவருக்கு அதிபர் அலுவலகத்தின் திறப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லையேல், கல்வி அதிகாரிகளின் முன்னிலையில் அலுவலகம் பலவந்தமாக திறக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் எச்சரித்துள்ளார்.

எனினும் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மொஹமட், இந்து வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் அங்கீகாரம் இல்லாமல், இரத்மலானை இந்துக்கல்லூரிக்கு அதிபரை நியமிக்கமுடியாது என்று எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

எனவே சட்டத்தின்படி புதிய அதிபர் உதயகுமாரின் நியமனம் செல்லுப்படியாகாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மாணவர்களின் நலனுக்காக சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் புதிய அதிபர் உதயகுமார் ஒரு இந்துமதத்தவர் என்பதை அகில இலங்கை இந்துமாமன்ற தலைமை, ஜனாதிபதியின் இந்துமத ஆலோசகர் பாபுசர்மா, ஆகியோர் ஏற்றுக்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

முன்னால் அதிபர் மன்மதராஜா, அவரது மனைவி இருவரும் சேர்ந்து இரத்மலானை இந்துக் கல்லூரியை வைத்தே மாணவரிடமும், நலன் விரும்பிகளிடமும் காசைச் சுரண்டி வீடு கட்டி, கார் வாங்கியவர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மிக மோசமான பகற் கொள்ளைக்காரர்களான இருவரும் ஆசிரியத் தொழிலுக்கே லாயக்கற்றவர்கள் என்கின்றனர் anku நடப்பவற்றை நன்கறிந்த ஆசிரியர்கள் சிலர்.

அண்மையில் பாடசாலைக்கு வர்ணத்தை சில நிறுவனங்களின் அனுசரணையுடன் அடித்துவிட்டு, வர்ணம் அடிப்பதாக மாணவரிடம், ஆசிரியர்களிடம் காசு சேர்த்து அவற்றை அப்படியே கொள்ளையடித்ததாக அந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். சிங்களப் பயங்கரவாதிகளிடம் ஒட்டாக இருப்பதால் யாரும் தட்டிக் கேட்பதில்லையாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.