Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியர் இடமாற்றம் - விசாரணை யமதர்மன் தலைமையில் ஆணைக்குழு

Featured Replies

ஆசிரியர் இடமாற்றம் - விசாரணை யமதர்மன் தலைமையில் ஆணைக்குழு

வட பகுதியில் ஆசிரியர் இடமாற்றம் தீராத் துன்பமாகத் தொடர்கின்றது. ஆலயவாசல் மிதியாத ஆசிரியர்களும் நேர்த்தி வைக்கும் அளவிற்கு ஆசிரியர் இடமாற்றத் தொந்தரவு படாப்பாடுபடுத்துகிறது. கல்வி அதிகாரிகளும் ஐயா! வேண்டாம் இந்த வேலை என்று கூறுமளவிற்கு நிலைமை படுமோசம். வன்னிப் பகுதியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக சண்முகார்ச்சனை செய்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களோ, நமக்குத் தீராநோய் தந்தருள வேண்டும் என மன்றாடுகின்றனர். அங்கும் இங்குமாக வழிபாடு நடத்த குழப்பமடைந்த பரம்பொருள், யமதர்மராசனை அழைத்து வட பகுதியில் நடைபெறும் ஆசிரியர் இட மாற்றம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், யமதர்மன் தலைமையில், சித்திரகுப்தன் உள்ளிட்ட சில பிரதிநிதிகளை ஆணைக்குழுவில் நியமித்து வட பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த ஆணைக்குழுவில் அமரத்துவமடைந்த வைத்திய நிபுணர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். சித்திரகுப்தனுக்கு ஆச்சரியம். எதற்காக இவர்கள்? தன் சந்தேகத்தை யமதர்மனிடம் தெரிவிக்க, ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை சரி பார்க்கத்தான் இவர்கள் என்று யமன் விளக்கம் கொடுத்தார். யமதர்ம சபை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில் கூடுகிறது. ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், முன்னாள் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வட பகுதியில் இருக்கக்கூடிய சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள், இட மாற்றத்தை தயார் செய்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், நிர்வாக அதிகாரிகள், ஆசிரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலருக்கும் யமதர்ம சபை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

யமதர்மனின் நோட்டீஸை யாரேனும் அலட் சியம் செய்ய முடியுமா என்ன? வடக்கு மாகாண கல்வி அமைச்சு ஆட்களால் நிரம்பி வழிகின்றது. இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள், கைக்குழந்தைகளுடன் - வயோதிபப் பெற்றோருடன்- நோய் நிர்ணய மருத்துவச் சான்றிதழ்களுடன் சபைக்கு வந்திருந்தனர். இதோ! யமதர்மராசா வருகிறார். பராக், பராக்.. கட்டியம்கூற யமதர்மராசன் சபைக்கு வருகிறார். சிலர் எழுந்து ஓடி யமதர்மராசனுக்கு சந்தன மாலை அணிய முற்படுகின்றனர்.

இன்னும் சிலர் பொன்னாடையை விரித்து யமனுக்கு அணிவிக்க அந்தரப்படுகின்றனர். யமன் அதட்டலாக சிரிக்கின்றார். மானிடரே! மாலை அணிவிக்கும் உங்கள் மடமையால் தான் நாங்கள் இந்த சபையை இங்கு கூட்டியுள்ளோம். வடக்கு மாகாண சபையில் இதுவரை அணிவிக்கப்பட்ட மாலைகளுக்கு பெறுமதியிட்டால் கோடி ரூபாயைத் தாண்டும். கையிழந்து, கால் இழந்து, உண்பதற்கு வழியின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உங்கள் சந்தன மாலைக் காசைக் கொடுங்கள் அவர்கள் இன்புறுவர் இவ்வாறு கூறியபடி சபைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர், பதவி விபரங்களை யமன் பார்வையிடுகிறார்.

முதற் பெயர் ஆளுநர்.

யமன்: ஆளுநரே! போர் முடிந்து விட்டதல்லவா?

ஆளுநர்:ஆம்! பிரபு.

யமன்: கடந்த காலத்தில் எனக்கு இங்கு கடுமையான வேலை. இப்போது சற்று ஓய்வு. (சிரித்தபடியே யமன் கூறுகிறார்.) ஆசிரியர் தொழிற்சங்கப் பட்டியலைப் பார்வையிட்டதும் அதிர்ந்து போகிறார் யமன்.

< எங்கே?மகாசிவம்?

(விசாரணை நாளையும் தொடரும்)

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26579

எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர்கள் சிலர் இணைந்து தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சனஞ்சமல்ல. குறிப்பாக யாழ் மருத்துவபீட மாணவர்கள் இதற்கெதிராகச் செய்த கலகங்கள்..

அந்தக் கல்லூரி வெற்றி பெற்றிருந்தால் அதிகளவான தமிழ் வைத்தியர்கள் தமிழ்ப்பகுதிகளிலும், உலகத்தின் ஏனைய பகுதிகளிலும் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

சரி.. கலகஞ்செய்த யாழ் மருத்துவபீடத்தில் கற்ற எத்தனை மாணவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வேலை செய்ய விரும்பினார்க‌ள்.. ? :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.