Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிலேயே வாழ்க்கைச் செலவினம் யாழ்ப்பாணத்தில் தான் அதிகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yarl.jpg

சிறிலங்காவிலேயே யாழ்ப்பாண மாவட்டம் தான் வாழ்க்கைச் செலவினம் அதிகமுள்ள மாவட்டமாக சிறிலங்காவின் குடிசன மதிப்புப் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் வி.பி.சிவநாதன்,

 

" கொழும்பிலிருந்து தொலைவில் இருப்பதால் யாழ்ப்பாணத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவினங்கள் காரணமாக விலைவாசி உயர்ந்து காணப்படுகிறது.

 

யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடிகளில் குறித்த விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதும், போர்க்காலத்தில் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்த யாழ்ப்பாண மக்கள் தற்போது திறக்கப்பட்ட பொருளாதாரத்தில், எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கும் நுகர்வு கலாச்சாரத்துக்கு பழகி வருவதும் இதற்கு பிற காரணங்களாகும்.

 

வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தை ஓரளவு சார்ந்திருப்பது, சந்தையில் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம்.

 

யாழ்ப்பாணத்தில் பொருட்களை களஞ்சியப்படுத்தும் கட்டமைப்பு வசதிகள் இன்னும் பெரிய அளவில் உருவாக்கப்படாமல் இருப்பதும் விலைவாசியை அதிகப்படுத்துகிறது.

அரசு இந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால் யாழ்ப்பாண வாழ்க்கைச் செலவினங்களை கட்டுப்படுத்த முடியும்"என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120113105360

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலிருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தை ஓரளவு சார்ந்திருப்பது, சந்தையில் விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம்.

இதுதான் இதற்க்கான முக்கியகாரணி பெரும்பாலானோருக்கு வெளிநாட்டு உதவியையே நம்பியுள்ளார்கள் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தாரளமாக பணம் கிடைப்பதால் அதிகமாக செலவு செய்கின்றார்கள்

வெளிநாடுகளில் கஷ்டபட்டு குளிரிலும் பனியிலும் சம்பாதிக்கும் பணத்தை தமது உறவுகளுக்கு அனுப்பினால் எந்தவித கஷ்ரம் இன்றி செலவழிக்கின்றார்கள்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் யாழில் தான் மிக மிக ஏமாந்த ஆட்டு மந்தைகள் வாழ்கின்றன.

பொருளியல் விரிவுரையாளர் பங்கர் அமைச்சர், கொத்தி போடும் "தமிழ்" வரிகளை பற்றி பேசமாட்டார்.

இன்னொரு விடயம் யாழில் எல்லோரும் முதுகலை பட்டம் பெற்று வெளிநாடு தாவும் திட்டத்துடன் இருப்பதால் விவசாய துறை சீரழிந்துவிட்டது.

போர் காலங்களில் ஆடு பங்கிற்கு முன்னூறு ரூபா போனது. இப்ப ஆறாயிரம் ரூபாவை தொட்டுவிட்டது.

முன்பென்றால் ஒவ்வொரு வீட்டிலும் கோழி, ஆடு, மாடு என்று ஏதாவது இருக்கும்.

இப்ப எங்கட யாழ் ஆக்கள் புலிக்கு அறிவுரை சொல்றதுல பிசி.

வாழ்க்கைச் செலவை கணிப்பவர்களுக்கும், ஜனாதிபதிக்கும், அரச அதிகாரிகளுக்கும் மாதம் ரூபா 12,000 சம்பளம் கொடுத்தால் போதும் போல இருக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.