Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரத்தினபுரி தோட்டத்தில் தமிழ் - சிங்கள மோதல்: வியாபார நிறுவனங்கள் மீதும் தாக்குதல்

Featured Replies

ரத்தினபுரி தோட்டத்தில் தமிழ் - சிங்கள மோதல்: வியாபார நிறுவனங்கள் மீதும் தாக்குதல்

சிறிலங்காவின் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை நகரத்திற்கு அண்மித்த வெள்ளந்துறை தோட்டத்தில் தோட்ட இளைஞர்களுக்கும், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தமிழ் இளைஞர்களின் வியாபார ஸ்தலங்கள் இரண்டும், முன்பள்ளி கட்டிடமும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரின் பஸ் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

மாட்டுப்பொங்கல் தினமான நேற்றைய தினமே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

தோட்ட இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு அவரை தாக்கியதாக சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைக்கண்டு ஆத்திரமடைந்த தோட்ட இளைஞர்களுக்கும் பெரும்பான்மை இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு, மோதலாக உருமாறியதாக மேலும், தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் தற்போது கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதோடு அவர் தவிர இன்னும் மூண்று தோட்ட இளைஞர்களும் காயத்திற்குள்ளாகியுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடலில் துப்பாக்கியால் ஏற்பட்ட சூட்டுக்காயமும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

http://www.pongutham...df-814ef4d5964e

Edited by akootha

இப்போது சிங்களவனுக்கு கேட்க ஆளில்லை என்ற நினைப்பு என்ன வேண்டுமானாலும் செய்வாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அப்படிச் சொல்லுறீங்க.. யார் இல்லை என்று கவலைப்படுறீங்க. நம்ம அர்ஜீன் அண்ணா இருக்கிறார்.. சித்தார்த்தனோட பேசி.. டக்கிளசோட.. கலந்து ஆலோசிச்சு.. ஆனந்த சங்கரியைக் கொண்டு கூட்டம் போட்டு.. கருணாவைக் கொண்டு முடிவெடுத்து.. பிள்ளையானைக் கொண்டு செயற்படுத்துவார்... வரதராஜப் பெருமாள்.. பொருள் உதவி செய்வார்.. சோனியா.. பக்க வாத்தியம் வாசிப்பார்.. கருணாநிதி.. உண்ணாவிரதம் இருப்பார். ஏன் கவலைப்படுறீங்க.. வெயிட் அண்ட் சீ..! :D:o:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.