Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்கா தலையிடுமா?

Featured Replies

போர்க்குற்ற விசாரணையில் அமெரிக்கா தலையிடுமா?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது போதுமானதாக இல்லை என்று கருத்து வெளியிட்ட அமெரிக்கா, அந்த அறிக்கை பற்றிய முழுமையான விமர்சனங்கள் எதையும் இன்னமும் முன்வைக்கவில்லை.

அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ இந்த அறிக்கையில் உடன்பட்ட, உடன்படாத விடயங்கள் எவை எனச் சுட்டிக்காட்டவில்லை.

போர்க்குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்திய நாடுகளும் சரி, உள்நாட்டு விசாரணையே போதும் என்று அடித்துக் கூறிய நாடுகளும் சரி இந்த விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்குமா என்ற கேள்வி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

ஏனைய நாடுகளில் இருந்து இத்தகைய அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பை விட, அமெரிக்கா விடயத்தில் இந்த எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளது. அத்துடன் அமெரிக்கா நகர்த்தினால்தான் இந்தத் தேர் முன்னகரும் என்பதும் முக்கியமானது.

அடுத்து, சுதந்திரமான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரி 5000இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்ட மனுவொன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஜிம் மெக்டொனால்ட், அமெரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்களை அனுப்புவதற்காக வெள்ளை மாளிகையினால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில் இந்த மனுவை உருவாக்கினார்.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்காக சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

5000 பேர் இந்த மனுவில் ஒப்பமிட்டால், அதுகுறித்து வெள்ளை மாளிகை பசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டிருந்தது. அதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஒரு மாதகால அவகாசத்துக்குள்ளாகவே 5000இற்கும் அதிகமானோரின் ஒப்பங்கள் கிடைத்தன.

மொத்தம் 5938 பேர் இதற்கு ஆதரவாக ஒப்பமிட்டிருந்தனர். இது ஒன்றும் ஒருமுறை கிளிக் செய்து வாக்களிக்கும் முறை அல்ல.

இதற்கென வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் பெயர் விபரங்களைக் கொடுத்து விண்ணப்பித்து அங்கிருந்து வரும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் இணைப்பில் சென்றே ஒப்பமிட முடியும். எனவே தில்லு முல்லுகளுக்கு இடமில்லை.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கக் கோரும் இத்தகைய மனுவொன்றுக்கும் இந்த இணையத்தில் ஆதரவு தேடப்படுகிறது, ஆனால் சரத் பொன்சேகா விவகாரத்தில் தலையிடுவது பற்றிய கோரிக்கை மனுவைப் பரீசீலிக்க 25 ஆயிரம் பேரின் ஒப்பங்களைக் கோரியுள்ளது வெள்ளை மாளிகை.

இதைத் தவறாக புரிந்து கொண்ட சில ஊடகங்கள், 25 ஆயிரம் பேர் ஒப்பமிட்டால், சரத் பொன்சேகா விடயத்தில் அமெரிக்கா தலையிடும் என்று செய்தி வெளியிட்டன.

ஆனால் உண்மை அதுவல்ல. 25ஆயிரம் பேர் ஒப்பமிட்டால் இந்தக் கோரிக்கையை வெள்ளை மாளிகை பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் அவ்வளவுதான். சிலவேளைகளில் இந்தக் கோரிக்கை ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.

இது ஒரு தனிநபர் சார்ந்த விவகாரம் என்பதால் அதிகளவு ஒப்பங்களை கோரியது வெள்ளை மாளிகை.

ஆனால் ஆயிரக்கணக்கானோரின் மனித உரிமைகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், போர்க்குற்ற விசாரணை பற்றிய மனுவுக்கு 5000 பேரின் ஒப்பந்தங்கள் மட்டும் இருந்தால் போதும் என்றது.

இந்த மனுவை வெள்ளை மாளிகை பரீசீலித்த பின்னர், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து பதில் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் மைக்க ல் எச்.போஸ்னர் இந்த பதிலை, இணையம் மூலம் ஒப்பமிட்டவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும், வெள்ளை மாளிகையின் இணையப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில, மனித உரிமை மீறல்கள் விவகாரங்கள் விடயத்தில் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை அரசாங்கம் இந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு அனைத்துலக கட்டுப்பாடுகளுக்கு அமையப் பதிலளிக்கும் என்று நம்புவதாகவும், பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசைத் தொடர்ந்தும் தாம் வலியுறுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படைப் பொறுப்பை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு அரசாங்கத்தினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தான் விவகாரம். அதாவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா ஆதரிக்குமா என்ற கேள்விக்கான பதில் இங்கேயே இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியாக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தத் தவறினால் அல்லது அதற்கு விரும்பாது போனால் மட்டுமே சர்வதேச போர்க்குற்ற விசாரணை சாத்தியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.

இதனால் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இன்னமும் முழுமையான எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் உள்ளது.

அமெரிக்காவின் இந்த மௌனம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னதாக, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவதை இலங்கை அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம்.

முன்னதாக அமெரிக்கா இந்த அறிக்கை வெளியானதும், பொறுப்புக் கூறுவதற்குப் போதுமானதல்ல என்ற கருத்தை கூறியதுடன் நின்று கொள்ளவில்லை. அதற்கு அப்பால் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசுடன் இராஜதந்திர வழிகளின் ஊடாகப் பேச்சுக்கள் நடத்தியதாகவும் தகவல்கள் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், இந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெளிவிவகார கொள்கை வகுப்புப் பிரிவைச் சேர்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் நால்வர் கொழும்பு வரவுள்ளனர். ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட சமமான நாட்களில் அமெரிக்கா இப்படி நான்கு அதிகாரிகளை தனித்தனியாக இலங்கைக்கு அனுப்பிய நிகழ்வு ஏதும் இதற்கு முன் நடந்ததாகத் தெரியவில்லை.

இவர்கள் பொறுப்புக் கூறுதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தே அரசாங்கத்துடன் விவாதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கம் தமது கடமைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறினால் அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழலில் தான் சர்வதேச விசாரணை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஆனால் எந்தக் காலவரையறையையும் அது முன்வைக்கவில்லை. ஆனால் இந்தியாவோ குறிப்பிட்ட காலவரையறைக்குள் அதனை செய்ய வேண்டும் என்கிறது.

இதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் குறுகிய காலத்துக்குள் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து வெளியிடுவதைக் காணமுடியவில்லை.

இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து அரசாங்கம் என்ன செய்கிறது என்று நாடி பிடித்துப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். அதேவேளை, அரசாங்கம் இந்த விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் அடுத்துவரும் மூன்று மாதங்களும் அரசுக்கு சிக்கல் நிறைந்தவையாகவே இருக்கும். அமெரிக்கா விரும்புவது போன்று அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் தமது கடமைப் பொறுப்பை நிறை வேற்ற எந்த முயற்சிகளும் எடுக்கப்படாது போனால் அமெரிக்காவின் அழுத்தங்கள் தீவிரமடையும்.

ஆனால் அது குறுகிய காலத்துக்குள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே வெள்ளை மாளிகை மனுவுக்கான பதிலில் இருந்து தெரிகிறது. இதனை வைத்துக் கொண்டு போர்க்குற்ற விசாரணைகள் குறித்து அமெரிக்கா அலட்சியம் காட்டும் என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் போர்க்குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகத் தீவிரமாகவே எடுத்துக் கொண்டுள்ளது என்றும் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.

இது ஒரு வகையில் இலங்கை அரசுக்கான எச்சரிக்கைதான். இது போல பல எச்சரிக்கைகளை அமெரிக்கா வழங்கிவிட்டது. ஆனால் அவையெல்லாம் அரசின் காதுகளில் ஏறியதாகவே தெரியவில்லை.

ஆக்கம்: ஹரிகரன்

மூலம்: வீரகேசரி - தை 15, 2012

பிரசுரித்த நாள்: Jan 16, 2012 15:53:23 GMT

  • தொடங்கியவர்

1 அடுத்த இரண்டு ஐ.நா. அமர்வுகளிலும் இருந்து சிங்களம் தப்பித்து விட்டால், போர்குற்ற விசாரணைகளில் இருந்து சிங்களம் முழுமையாக தப்பும் சாத்தியங்கள் உள்ளன.

2 நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்தே சிங்களம் பல நகர்வுகளை நகர்த்த திட்டமிட்டு உள்ளது

Sri Lanka’s Game of Diplomacy and Deceit

By Gibson Bateman

What Will Happen in Geneva?

In theory, Rajapaksa’s administration has plenty to worry about. Lobbying and debate surrounding the next session of the HRC has already begun.

Many foreign governments recently made strong statements that the LLRC’s final report does not touch on the question of accountability. The Sri Lankan government refuses to look into credible claims that violations of international humanitarian law occurred at the end of the war; government officials are unwilling to go into any detail about what actually happened during the last phase of the conflict.

Looking Ahead

Again, in spite of the LLRC’s complete exoneration of the military, the report does contain some good recommendations about devolution, land rights, compensation for victims/survivors and demilitarization.

There are some decent recommendations in the National Action Plan as well.

However, the chances that the Sri Lankan government will swiftly move to implement any of the solid recommendations are infinitesimal. Rajapaksa’s government has shown its unwillingness to follow through on almost all the agreements it made during the last session of the Universal Periodic Review in 2008.

It disregarded the LLRC’s interim recommendations as well.

The word “recommendation” in Sri Lankan political parlance is meaningless. Why should anyone be optimistic this time around?

Forget recommendations, the government continues to ignore its own constitution.

http://www.jofr.org/2012/01/16/sri-lankas-game-of-diplomacy-and-deceit/#.TxVjXfnOuSp

1 அடுத்த இரண்டு ஐ.நா. அமர்வுகளிலும் இருந்து சிங்களம் தப்பித்து விட்டால், போர்குற்ற விசாரணைகளில் இருந்து சிங்களம் முழுமையாக தப்பும் சாத்தியங்கள் உள்ளன.

2 நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்தே சிங்களம் பல நகர்வுகளை நகர்த்த திட்டமிட்டு உள்ளது

தமிழர் தரப்பு உறுதியாக உள்ளவரை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து சிங்களப் பயங்கரவாதிகள் தப்ப முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்குற்றம் என்பது வெறும் பேப்பர் குற்றம் தான். இலங்கையை சீனாவிடம் இருந்து அகற்றி தங்கள் காலடியில் விழ வைக்கும் ஒரு இராஜதந்திர நடவடிக்கை மட்டுமே. இதனால் தமிழர்கள் மீண்டும் மனஅழுத்தத்திற்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றாவது இலங்கையுடன் தமிழரின் அடிப்படை உரிமைபற்றி ந்த நாடுகளாவது இலங்கையுடன் அழுத்தமாகப் பேசிஉள்ளார்களா. இல்லவே இல்லை. போர்க்குற்றம் வெறும் புகார் மண்டலம். உள்ளே எரியும் நெருப்பு வேறு. இங்கு தமிழர்களுக்கு ஏதும் கிடைக்குமா? என்பதும் நனைத்துப்பார்க்கமுடியாது. ராஜபக்ஸ அடிபணியாதவரை பேப்பரில் குற்றம் இருக்கும். பிலிகள் காலத்தில் வெளிறாடுகள் இலங்கையில் நுழைந்த தமிழர்மேல் அஜாரகம் செய்தது போல் இனிமேல் இயலாது. மேற்குலகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் புலிகள் மேல் கிலி கொண்டதால் தான் அதுவே இலங்கைக்குச் சாத்தியமானது. ஆனாலும் ராஜபக்ஸவும் மேற்குலகம், இந்தியாவைவிட புலிகளுக்கே பயந்து நடுங்கினர். இல்லாவிட்டால் ஐ.நா போர்விதியின்படி தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவித்திருப்பார்களா? ஒட்டுமொத்த உலகமும் சேர்ந்து தமிழன்மேல் ஏறிமதித்தார்கள். இதைத்தான் வெற்றியென்றும் கொண்டாடினார்கள்.

நிதியான போர்க்குற்றவிசாரணையில் ஆயுதம் வழங்கிவர்களும் அடங்குவர். புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்தவர்கள் குற்றமெனின் போர்குற்றத்தில் ஆயுதம் வழங்கியவர்களும் தண்டிக்கப்படவேண்டியது நீதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.