Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த. தே. கூட்டமைப்பு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகக் கூடாது - இந்து நாளேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hindu_logo.jpg

தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

இவ்வாறு சென்னையை தளமாகக்கொண்ட 'The Hindu' ஆங்கில நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையாக '13ம் திருத்தச்சட்டத்தின் மேலதிக சரத்துக்கள்' தொடர்பில் தனது அர்ப்பணிப்பை சிறிலங்கா அதிபர் மீளவும் வெளிக்காட்டியமையானது வரவேற்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அதிபர் பல தடவைகள் இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாக 2009ல் 'இந்து' நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணல் உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை வெளிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காப் படைகளால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு இரு ஆண்டுகள் மேலாகி விட்டதன் பின்னர் அரசியற் தீர்வு விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் குறைந்த முன்னேற்றத்தையே காட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் முன்னைய அரசியற் தீர்வு விடயத்தில் ஆதரவாக இருந்த இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ராஜபக்ச தனது அரசியல் நலன்களைக் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகளிலும், சிறிலங்கா அரசாங்கமானது புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள யுத்தத்திற்குப் பின்னான இக் காலப்பகுதியில், நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியற் தீர்வொன்றை சிறிலங்கா அதிபர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கமானது அரசியற் தீர்வொன்றில் தான் மிகத்தீவிர கரிசனையுடன் இருப்பதைக் காட்டுவதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன், சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்தது.

அரசியற் தீர்வு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றையும் இவ் அரசாங்கம் அமைத்துக் கொண்டது. அவசரகாலச்சட்டத்தை 2011ல் தளர்த்தியமையும் இத்தீர்வுத் திட்டத்தைப் பெறுவதில் அரசாங்கம் முனைப்பாக இருப்பதைக் காட்டுவதற்கான சமிக்கையாக அமைந்திருந்தது.

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம், சிறிலங்கா அரசாங்கமானது 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்குப் பதிலளித்துக் கொண்டது.

இவ் ஆணைக்குழுவானது சிறிலங்கா அரசாங்கத்தால் மேலும் கவனிக்கப்பட வேண்டிய சில பரிந்துரைகளை அடையாளங் கண்டுள்ளது. இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கமானது இன்னமும் உறுதியான சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

13வது திருத்தச் சட்டமானது அரசியற் தீர்வொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு வெளிப்படையாக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கொண்டு அவர் செயற்படுவதாயின், பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களையும் கவனத்திற் கொண்டு செயற்படுவதற்கான நேரம் இதுவாகும்.

இதுவரையில், அரசாங்கமானது காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களில் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டவில்லை. '13ம் திருத்தச் சட்டத்தின் மேலதிக சரத்தானது' மேல்சபையில் சகல மாகாணங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை வழங்குவதைக் குறிக்கின்றது.

அரசியற் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைவதற்கான பொறிமுறையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவானது முன்னைய ஆணைக்குழுக்கள் போன்று செயற்படக்கூடாது. அதாவது அரசாங்கத்தால் முன்னர் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும் எந்தவொரு பயனுள்ள வெளிவிளைவுகளையும் தருவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் இதற்குப் பதிலாக அரசியற் தீர்வொன்றை எதிர்ப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்ட அமைப்புக்களாகவே விளங்கியுள்ளன.

தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

யாழ்ப்பாணம் மற்றும் இதர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான இராணுவ விடயம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள அச்சநிலைக்கு அப்பால், வடக்கில் மாகாணத் தேர்தலை மிக விரைவில் நடாத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட வேண்டும்.

http://www.puthinapp...?20120121105413

அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

கிந்திய அரசு கொண்டிருக்கும் தீவிரவாத போக்கு அரசியலை, அதன் பின்விளைவுகள் பற்றி வெளிப்படையாக கூற திராணியற்ற ' த இந்து'.

தனிநாடு கோரிக்கையை விட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை தமிழர் தரப்பு விரும்பினாலும், அதை இந்த தீவிரவாத போக்குஉலகம் தருவதாக இல்லை.

கிருஸ்ணாவின் விஜயம் த.தே.கூ மீது அழுத்தங்களை பிரயோகிக்க என்பதை இந்துவின் கட்டுரையும் காட்டுகிறது. இவர்கள் சில மாதங்கள் வரைக்கும் தமிழருக்கு தம்மை தவிர வேறு வழி இல்லை என்று இருந்தவர்கள். த.தே.கூ அமைப்பின் மேலைநாட்டு விஜையங்கள், இவர்களை எதையோ அவசரமாக செயத்தூண்டுகிறது.

1.ஜனநாயக நாடுகளான மேலை நாடுகளுக்கு செல்ல முடியாமல் முடக்கப்பட்டுபோயிருக்கும் கொடிய போர்குற்றவாளிகளை பண்பின் சிகரமாக போற்றுவது.

2. இந்திய ரசாயன ஆயுத போரினால் கெட்டு நொந்து போயிருக்கும் தமிழ் மக்களை மேலும் வருத்தி எல்லோருக்கும் ஏற்ற தீர்ப்பு என்று அவர்களுக்கு இருக்கும் அதிகாரங்களையும் ஒப்பந்தங்கள் மூலம் சூறையாட முயல்வது.,

3 தீர்வைத் தவிர்க்கவும், தமிழரினால் த.தே.கூ அமைப்புக்கு கொடுக்கபட்ட அரசாங்கத்துடனான பேச்சுவார்தைகாகான அதிகாரத்தை இல்லாமல் செய்து கூட்டமைப்பை அரசாங்கத்தினால் நியமிக்க பட்ட ஒட்டு குழுவினரின் கால்களில் விழ வைக்க ஒழுங்கு செய்ய பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிட மிருந்து தீர்வு வரபோவதாக நாடகமாடுதல்

4.கொடிய போரை நடத்தி தன்னை இலங்கை அரசனாவும், ஒட்டுக்குழு தலைமைகளை யாழ்ப்பாண அரசராகவும் வருணித்து விட்டு ஜனநாயக தேர்தலுக்கு கோடி கோடியாகப் பணத்தை செலவழித்த அரசாங்கம், தாய மக்களால் தோற்கடிக்க பட்டு, தமது பிரதி நிதிகளாக த.தே.கூ அமைப்பை தெரிவு செய்து முடிய, அகதிகளாக மேலை நாடுகளால் ஏற்கப்பட்டிருக்கும் புலம் பெயர்மக்ககளை தீவிரவாதிகளாக உருவகப்படுத்தி, த.தே.கூ அமைப்பை அவர்களின் கைப்பொம்மைகளாக கட்ட முயல்வது

இந்த சொற்பிரயோகங்கள் இந்தியாவின் தீர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்தியாவின் அவசரமானது மேற்கு நாடுகள் அழுத்தத்தை பாவித்து இலங்கையில் தீர்வொன்றைக்கொண்டுவந்து விடுவார்கள என்ற பீதியில் எழுவதாகும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.