Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைக்கிள் பெற வந்தோருக்கு கிடைத்தது டோக்கன் மட்டுமே

Featured Replies

சைக்கிள் பெற வந்தோருக்கு கிடைத்தது டோக்கன் மட்டுமே

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பங்குபற்றிய சைக்கிள் வழங்கும் நிகழ்வுக்காக அழைத்துவரப்பட்ட மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மக்கள் சைக்கிள்கள் கிடைக்காத நிலையில் "டோக்கனுடன்' மட்டும் திரும்பிச் சென்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த 18 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தின் முன்பாக வைத்து இந்திய அரசின் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதற்காக வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் தலா 50 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அரச பேருந்து மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். காலையிலேயே குறித்த நிகழ்வுக்காக பொது மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இருப்பினும் நிகழ்வு மாலை 4 மணியளவிலேயே ஆரம்பமானதுடன் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் சிற்றுண்டி மட்டுமே வழங்கப்பட்டது.

அத்துடன் சைக்கிள்களை பெற்றுச் செல்லலாம் என்று வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பயனாளிகளுக்குரிய சைக்கிள்கள் வழங்கப்படாமல் அதற்குரிய "டோக்கனுடன்' மட்டும் மக்கள் திரும்பிச் சென்றனர். பொதுமக்கள் ஏமாற்றத்துடன் இரவு வேளையே திரும்பிக் கொண்டு செல்லப்பட்டு நகரப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.

வெறும் "டோக்கனை' மட்டும் பெறுவதற்காக பொதுமக்கள் அன்றைய நாள் முழுவதையும் வீணே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அரசியல் அதிகாரங்களைக் காட்ட பொது மக்களை இவ்வாறு பாடாய்ப்படுத்துகின்றனர் என்று அரச அதிகாரி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று ரீதியான கிந்தியாவுடன் தொடர்பு.. கிந்தியா ஏதாவது செய்யவேண்டும் இன்னும் எக்ஸ்டரா எக்ஸ்டரா .. என்று லைனில் நின்றால் டோக்கன் தான் கிடைக்கும் ... இங்கையே ரேசன் அரிசியில் இருந்து பாடையில் போகிறவரைக்கும் அனைத்தும் இலவசமாக இருந்தாலும் கமாய்(லஞ்சம் ) வெட்டினால் தான் கிடைக்கும்... அவன் வாயால வண்டி ஓட்டுறதை நம்பி போன ஜனங்களை சொல்லணும்...

டிஸ்கி:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்சி கொண்க்ராஸ் கைகூலிகள் சைக்கிள் கப்பில் ரெயில் விடுபவர்கள். 

சகோதரன்,  உங்களது இணைப்பிற்கு நன்றி. 

இன்னும் நம்மவரில் ஏமாளிகள் பலர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.