Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓன்றாரியோ தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடப்படுத்துகிறது

Featured Replies

கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசும் தமிழர் மரபுரிமை மாதமாக தை மாதத்தை பிரகடப்படுத்துகிறது

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவும் ஜனவரி மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகிறது.

கனடாவின் மார்க்கம், அஜெக்ஸ், பிக்கறிங் நகரசபைகள் மற்றும் ரொறன்ரோ மாநகரசபை ஆகியவற்றின் தமிழ்மொழி மாதப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இம்மாகாணமும் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனப்படுத்துகின்றது.

மாநகர, நகரசபைகள் போலல்லாது ஒன்ராறியோ அரசானது இதனைச் சட்டமூலமாக்கினாலேயே இது சாத்தியப்படும் என்பதால் இதனை தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரேரணை மூலமாக உள்வாங்கி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் சட்டத்தை இயற்றும் உறுதிமொழியை நாளை மாகாண அரசு வழங்கவுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றில் புறநானுறாக நடைபெறும் தை மாதத்தை தமிழர்கள் மாதமாக அறிவிக்கும் செயற்பாடு கனடாவிலிருந்து ஏனைய மேற்குலக நாடுகளிற்கும் பரவி செம்மொழியின் வரலாற்றையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையை மூத்த தமிழ் ஆர்வலர்களிடையே கனடாவில் தற்போது இடம்பெற்றுவரும் இச் செயற்பாடுகள் எடுத்தியம்புகின்றன.

நாளைய தினம் கனடிய தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழாவில் இடம்பெறப்போகும் அறிவிப்பானது கீழ்க்கண்டவாறே அமையும் என ஒன்ராறியோ மாகாண அரசிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சட்டமூல உருவாக்கத்தை தனிநபர் பிரேரணையாகவே எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருப்பினும், இந்த விவகாரத்தை முதல்வரோ அல்லது ஒரு மூத்த அமைச்சரோ தனது தனிப்பட்ட பிரேரணையாக முன்மொழிந்து இச்சட்ட உருவாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளனர்.

“ஒன்றாரியோ லிபரல் அரசவையானது கனடியத் தமிழ்க் காங்கிரசுடன் தமிழ்மொழி மாதத்தை பிரகடனப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் பல மாதங்களாக தன்னை ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்மொழி மாதமாக தை மாதத்தை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை நாங்கள் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் ஒரு தனிநபர் பிரேரனையூடாக விரைவில் நிறைவேற்றவுள்ளோம்” என்பதே இன்றைய தினத்தில் வெளியிடப்படவுள்ள செய்தியின் சுருக்கமாகும்.

இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் கன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களினூடக கனடா தழுவியரீதியில் தமிழ் மாதமாக ஜனவரியைப் பிரகடனப்படுத்தும் முயற்சிகளிற்கும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பரிற்கு கோரிக்கை விடுத்து இந்த முயற்சிக்கு வித்திடும் என அதன் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இன்றைய நிகழ்ச்சிகளை உலகின் எத்திசையிலிருந்தும் மக்கள் www.canadiantamilcongress.ca என்ற இணைய முகவரியூடாக, கனடிய நேரப்படி பிற்பகல் 6.30 மணியிலிருந்து இரவு 12 மணிவரை பார்வையிடலாம் என்றும் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிரந்தர சமாதான வாழ்விற்காக தங்களை ஆகுதியாக்கிய ஆத்மாக்களின் விருப்பாக தமிழ்மொழி இன்று மேற்கில் தளைத்தோங்கி தனக்கென ஓரிடத்தை தரணியில் பெறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையே 2012ம் ஆண்டு தைத் திங்களும் பொங்கல் விழாவும் எடுத்தியம்பி நிற்கின்றன.

http://www.torontota...AE%BE%E0%AE%A3/

தமிழர் உயிர்காத்த கப்பல் காப்டனுக்கு கனடிய தமிழர் பேரவை சிறப்புக் கௌரவம்

இன்று 21ம் திகதி சனிக்கிழமை, தமது வருடாந்த பொங்கல் விருந்துபசார வைபவத்தை கனடிய தமிழர் பேரவையினர் ரொரன்ரோவில் கொண்டாடுகின்றனர்.

பல அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில் 1986ம் ஆண்டு கனடாவுக்கு அகதிகளாக புகலிடம் தேடிவந்த 155 தமிழர்கள் நியபவுண்லாந்து கடலில் அனாதரவாக உயிருக்கு தத்தளித்தபோது தன்னலம் பாராது உடனடி உதவிகளைப் புரிந்து அவர்களைக் காப்பாற்றிய கப்பல் காப்டன் திரு. கஸ் டால்டன் அவர்களுக்கு சிறப்புக் கௌரவம் அளிக்க கனடிய தமிழர் பேரவையினர் தீர்மானித்துள்ளனர்.

இவ் வைபவத்தில் காப்டன் திரு. கஸ் டால்டன் அவர்களோடு அவரது குடும்பத்தினரும் நியூபவுண்லாந்து மாகாணத்தில் இருந்து வந்து சிறப்பிப்பர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கடந்த ஆண்டு காலமான முன்னாள் கனடிய எதிர்கட்சித் தலைவரும், கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவரும், கனடியத் தமிழர் சமூகத்தின் மேம்பாட்டுக்கு அயராது பாடுபட்டவருமான அமரர் திரு. ஜாக் லேட்டன் அவர்களுக்கும் சிறப்பு சேவை விருது ஒன்று வழங்கப்படவிருக்கின்றது.

அமரர் திரு. ஜாக் லேட்டனின் மைந்தன் ரொரன்ரோ நகர சபை உறுப்பினர் திரு. மைக் லேட்டன் இவ்விருதினை கையேற்று உரையாற்றவிருக்கிறார்.

பல கலை நிகழ்ச்சிகளும் சிறப்புரைகளும் நடைபெற உள்ள இவ்வைபவம் கனடா வாழ் தமிழர்களின் வலுவான திறன்கள் மற்றும் இறுக்கமும் ஒற்றுமையும் வாய்ந்த வாழ்க்கை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.torontota...AE%B2%E0%AF%8D/

Edited by akootha

  • தொடங்கியவர்

5th Annual CTC Tamil Thai Pongal Dinner

Chief Guest

Mr. M.A. Sumanthiran MP, Tamil National Alliance

Guest of Honour

Hon. Dalton McGuinty, Premier of Ontario

Guest Speaker

Mr. Chris Alexander MP Ajax-Pickering

Live Telecast on Tamil One TV

Sponsored by: A & T Human Resources

and Nimal Vinayagamoorthy, Certified General Accountant

Saturday, January 21, 2012

6:30 PM to 7:30 PM EST

Live Webcast on CTC Website

With the help of Tamil Vision Inc (TVI) powered by VTO consulting

http://canadiantamilcongress.net/article.php?lan=eng&id=26

  • தொடங்கியவர்

திரு. சுமந்திரன் அவர்கள் கனேடிய தமிழர் பேரவையின் வருடாந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை :

Part 1: http://www.tamilbizcard.com/media/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=2&video_id=386

Part 2 : http://www.tamilbizcard.com/media/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=2&video_id=385

Part 3 : http://www.tamilbizcard.com/media/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=2&video_id=384

Edited by akootha

  • தொடங்கியவர்

IMG9831-M.jpg

IMG9945-M.jpg

IMG0121-M.jpg

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.