Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி, பொலிஸ்

Featured Replies

காணி, பொலிஸ் வழங்க வேண்டும்- பசில் _

புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நான் சேவையாற்றினேன். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன்.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesar...asp?key_c=36316

Edited by akootha

  • தொடங்கியவர்

அரசு இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும்; த.தே.கூ

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடமிருந்து உத்தியோக பூர்வமாக அழைப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசாங்கம் எம்முடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே அதுபற்றி முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் ஒரு வருடத்தைக் கடந்துள்ள போதிலும் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் தான் தெரிவுக்குழு குறித்து அரசு பேசுகின்றது. தெரிவுக்குழுவில் பங்குகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரையில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுமில்லை. அழைப்பு விடுக்கவும் இல்லை. என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தாலும், நாம் தொடர்ந்து எமது நிலைப்பாட்டிலிருந்து மாற மாட்டோம். எம்முடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு அரசாங்கம் வந்தால் மட்டுமே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க முடியும்.

நாம் எமது தரப்பு நிலைப்பாடுகளை மிகவும் தெளிவாகவே பேச்சுவார்த்தைக் குழுவிடமும் ஜனாதிபதியிடமும் தெரிவித்திருக்கின்றோம். இது வரையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கம் கூட்டமைப்புடனும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்பதைக் கூறியிருக்கின்றோம். எனினும் எமது நியாயப்பாடுகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=29046778325603614

இது இந்தியாவின் தந்திரங்களினால் வரத்தக்க கதை. கூட்டமைப்பு இதற்குப் பதில் அளிக்கக் கூடாது. பசில் உண்மையில் தமிழர்கள் இதை நம்பட்டும் என்று கூறியிருந்தால் அதை கூறியிருந்திருக்க வேண்டிய இடம் கூட்டமைபுடனான பேச்சுவார்த்தையின் போதுதான்.

பொலிஸ், காணி அதிகாரம் ஏற்கனவே இருப்பது. இலங்கையை ஆழ்வது சுதந்திரக்கட்சி. அதனுடனான ஒருவருட பேச்சு வார்தையின் போது கூறப்பட்ட பதில் பொலிஸ், காணி அதிகாரம் கிடையாது என்பது. அதன் பின் கூறப்பட்டது சுதந்திரக்கட்சி தனிக் கட்சி என்பதால் அதனுடனான பேச்சு வார்த்தையில் இணக்கம் காணப்படுபவை நடை முறைப்படுத்தக்கூடிய சாத்தியம் இல்லை என்பது. அவ்வாறு இருக்க பசில், ஒருதனி மனிதன் ஒருபக்மாக கூறும் விடையங்கள் எப்படி நடை முறைச்சாத்தியத்திற்கு வந்து விடும் என்று தமிழர்களோ அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கூட்டமைபோ நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

"புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவருக்கு மருந்துவ வசதிகளை செய்துகொடுத்து உபசரித்தேன்."

உண்மையில் பசில் தான் அதற்காக நியமிக்க பட்டிருந்ததாகத்தான் கூறினார். ஆனால் பசில் செய்ததாக பசில் மீது சர்வதேச அறிக்கைகளால் சாட்டப்படும் குற்ற சாட்டு, ராணுவத்தின் குண்டு மழையிலிருந்து தப்பித்து வந்தவர்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதை தடுத்துநிறுத்தியவர் என்பதுதான். அதிலிருந்து தெரியவேண்டும் இப்போது பெயரவில் இருக்கும் காணி, பொலிஸ், காணி அதிகாரங்களை கட்டளைகள் போட்டு தடுத்து நிறுத்த புதிதாக அமர்த்தப் பட்டிருப்பவர்தான் பசில் என்பது.

உள்ளூராட்சித் தேர்தலின் போது பசிலும் பரிவாரங்களுகளும் இரண்டு வார காலமாக வடக்கில் வசந்தம் என்று கூறிக்கொண்டு தெற்கின் விலைமாதர்களை அழைத்து வந்து போடாத கூத்துக்களேல்லாம் போட்டவர்கள். தேர்தலில் தோற்றவுடன் வடக்கின் வசந்தம் வந்து பசிலிற்கு பல்பு மாற்றும் தொழிலாக மாறிவிட்டது. அதே போலத்தான் இப்போது தேர்தலிற்கு ஆயத்தப் படுத்தும் பசிலின் பொலிஸ், காணி அதிகாரம் தேர்தல் முடிந்ததும் தமிழர்களைத் தூக்கு போடும் அலுக்கோசு தொழிலாயும், காடுகரம்பை சுத்தப்படுத்தி இராணுவத்திற்கு கையளிக்கும் அடிமைத்தொழிலாகவும் பசில் மற்றி விடுவார் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பொலிஸ், காணி அதிகாரங்களை வட-கிழக்கு மக்கள் கோரவில்லை

அமைச்சர் பசில் ராஜபக்­ஷ தெரிவிப்பு

வடக்கு-கிழக்கு மக்கள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ தெரிவித் துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் சகோதரரும், அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்­ஷ நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் கூறினார்.

வடக்கு கிழக்கு மக்கள் காணி அதிகாரத்தைக் கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே காணிகளைக் கோருகின்றனர் என்றும், அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ தருவதற்கு முன்வந்துள்ளார் என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ­ கூறியுள்ளார். அதேபோல, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு கிழக்கு மக்கள் கோரவில்லை என்றும் அவர்கள் கப்பம் மற்றும் குற்றங்களில் இருந்து தம்மைப் பாதுகாக்க பொலிஸ் பாதுகாப்பையே கோருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தினது கருத்துக்கள் அல்ல. எனது சொந்தக் கருத்துக்கள் எனவும் பசில் ராஜபக்­ஷ தெரிவித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, அண்மையில் இலங்கைகக்கு வந்திருந்தபோது காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கிய 13ஆவது திருத்தச் சட்டத் திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தேசியவாதக் கட்சிகள் அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாட்டைக் கோரியதுடன் அரசை விமர்சனமும் செய்திருந்தன. இந்நிலையி லேயே பசில் ராஜபக்­ஷ தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26853

வலம்புரியும் வீரகேசரியும் தாங்கள் குறிப்பிடும் மகாநாட்டின் திகதிகளைப் போடவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே போலவும் வலம்புரி சரி போலவும் தென்படுகிறது.

  • தொடங்கியவர்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது அவசியமானது என சிறிலங்காவின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவதால் இது பிரச்சினையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் 'ராவய' வாரப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் இதனைத் தெரிவித்திருக்கும் அவர், "காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கூட்டு ஆணைக்குழுதான் தீர்மானிக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.

"காணி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பதைப் பொறுத்தவரையில் அது அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது மாகாண சபைகளுடனான உறவுகளை நெருக்கமாகக் கொண்டுவருவதாகவும் அமைந்திருப்பது அவசியம்" எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளையில், காணி அதிகாரங்களைப் பரவலாக்குவது என்பது ஒரு பெரிய பிரச்சினையல்ல எனத் தெரிவித்திருக்கும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதுதான் பிரச்சினைக்குரியது எனவும் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=06026543-7f9a-4575-ad86-ecad538b0d6e

  • தொடங்கியவர்

காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது கிழக்கு மாகாண சபை!

மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் பிரதி சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாகாண சபைக்கு காணி அதிகாரங்களை பகிராது போனால், காணி மீதான அதிகாரம் இல்லாமல் வீட்டை வைத்திருக்கும் நிலையைப் போன்றே இருக்கும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான காணிகளை தொடரூந்துத் திணைக்களம். படைத்தரப்பு, வனப் பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுலாசபை மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியனவே கொண்டுள்ளதாக இத்தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததால், வளமான நிலங்கள் சுற்றுலாத் திட்டங்களுக்காக வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் சுவீகரிக்கப்பட்டு வருவதாக இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போது சுவிற்சர்லாந்து சென்றுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், நாடு திரும்பியதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோருவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியச் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனடிப்படையில் இவ்விகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=13ece25d-95b3-4ed4-b6c2-903fcb2d80a5

பிராந்தின் காலால் சறுக்கி வல்லூறின் வாயில் விழுந்த கதையாக இருக்கு இந்த அதிகாரப் பகிர்வு.

பேச்சு வார்த்தையின் போது சம்பந்தர் எதுக்கும் ஒத்துக்கொள்ள கூடாது. பிள்ளையானிடம் நேர்மை இருந்தால் வேறு ஒரு கோரிக்கையும் வைக்காமல், மற்றைய கட்சிகள் செய்ததுபோல் கூட்டமைபின் தலைமைக்கு கீழ் வந்து, ஆனந்த சங்கரி, சித்தான் போல் அதிகாரங்களை பற்றி கதைக்க தொடங்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.