Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

அஜீவன் அண்ணா,

சத்தியமாக நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.... யாரோ பாமரத்தனமாக சொன்னதை இங்கு சொல்கிறீர்களே, மற்றவர்கள் எப்படி பொருள்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?

இது அங்கு வாழும் ஒருவருடைய கருத்து மட்டுமே.

அவர் ஓர் முன்னால் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று வேறோர் கட்சியில் இருப்பவர்.........

(பெயர்களை எழுத முடியவில்லை. காரணம் அவர்கள் அரசியலால் வாழ்பவர்கள்.)

தவிரவும் அங்கு அரச அலுவலங்களில் சில வேலைகள் நிமித்தம் சென்றேன்.

என்னை வெறுக்க வைத்தது.

லஞ்சத்தின் உச்சம்.

கவனயீனம் மற்றும் சட்டை செய்யாத நிலை.............

நான் சொன்னேன்

அப்துல்கலாம் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று தவறாக சொல்லி விட்டார்.

அவர் சாதாரண ஒருவனாக வந்தால் உண்மை நிலை புரியுமென்று .............

அதற்கு அந்த அதிகாரி முறைத்து சத்தமிட்டார்.

நான் மீண்டும் அவரிடம் சொன்னேன்.

ஐயா

காந்தி இந்தியாவை அமைதி தேசமாக உருவாக்க பாடுபட்டார்.

நம்பினார்.

ஆனால் இன்றும் அது கனவு மட்டுமே.

அது போல இதுவும் அப்துல்கலாமின் கனவு மட்டுமே என்றேன்.

அவர் உறும முயன்ற போது.........

என்னோடு வந்தவர்

அரசிலில் ஒரு முக்கிய புள்ளி.

அவர் அவரை பேசவிடாது தன்னை அடையாளம் காட்டிய பின்னர் மெளனமானார்.

காரணம்

இந்தியாவிலிருந்து ஒருவர் தொழில் விடயமாக

சுவிஸுக்கு வர வேண்டி றெட்சீல் பண்ணிக் கொடுக்கும் படி கோட்டையில் கையளித்த சான்றிதழை தான்தோன்றித்தனமாக தொலைத்து விட்டு தெரியாது என்று சொன்னதே.

பின்னர் அங்கு வேலை செய்யும் பியூன்

அதைக் கிழித்து ஏதோ எழுதியிருப்பது தெரிய வந்தது.

பின்னர் மீண்டும் ஒரு பிரதி கொண்டு வந்து 5000 ரூபா லஞ்சம் கொடுத்த பின் ஓகேயானது.

இவைகளை தனியாக எழுதவிருக்கிறேன்.

பொறுத்திருங்கள்...................

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply

காவடி....

சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....

மீட்புப்பணிகளிற்கு இராணுவத்தை அனுமதித்தது என்பது தவறு இராணுவத்தினரின் முன்னணி நிலைகளைக்கூட மீட்டு மீளளித்து கொடுத்தது தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதே உண்மை. மற்றும் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்பதல்ல அவர்கள் அப்பகுதிகளிற்கு செல்லவில்லை என்பதே உண்மை. அமெரிக்கர்கள் கூட இலங்கை அரசின் கடற்படைத்தளங்களை மட்டுமே மீளமைப்பு செய்து கொடுத்தார்கள்.

இப்போது என் நிலை என்னவென்றால்.... இவர்கள் என் தாய்நாட்டுக்கு எதிராக இருக்கும்போது நாம் மட்டும் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது தான்....

இதே நிலைப்பாடுதான் இப்போது எனதும். 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி கடந்த விவாதங்களில் சில உண்மைகளைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.. செய்திகளின் உண்மைத்தன்மையும் கருத்துக்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவ்வாறு நீங்கள் கேள்விப்படும் செய்திகள் போராட்டம் தொடர்பான தவறான கருத்துக்களையும் உண்டாக்கக் கூடும்.. தயவு செய்து உங்கள் குழப்பங்களை பகிருங்கள். உமக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் கருத்தில் எடுக்காதீர்கள்.

உலகத்தில் புதியதாய் உதிக்க உள்ள ஒரு நாட்டிற்காக போராடுகின்ற ஒரு இனம் என்ற வகையில் அந்த உலகிற்கு போராட்டம் தொடர்பான சந்தேகங்களை குழப்பங்களை சரியாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில் இந்த நாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு நாளை அனைவருக்கும் சரியான காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும்..

உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க கூடும். ஆயினும் நீங்கள் இந்தியர்தான். ஏனெனில் உதிக்கப்போகும் நமது நாட்டிலும் மக்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நாம் ஈழத்தவர்களே.. என்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பின்னர் எழுதுகிறேன்.

ஆகவே ஒரு இந்தியனாக எங்கள் போராட்டத்தை நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்

8) 8) 8)

8) :roll:

அப்போ - அபிவிருத்தி கூட - அஞ்சலிகள் - அனுதாபகூட்டங்களிலதான் - தங்கி இருக்கு போல தோணுதே-!

என் வீட்டு பேசா ஜீவன் இறந்தால்- தென்னம் கன்றுக்கு - பக்கத்தில் வெட்டி புதை- அட்லீஸ்- மரமாவது - நல்லா வளரட்டும்- என்பதுவா- இது?

கருத்து- எனது-!

கருவுக்கு நன்றி அஜீவன் அண்ணா-! 8)

ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள்.

ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள்.

இதைதானே ஆரம்பத்தில் இருந்து சொல்லுறாங்க - எல்லாரும்

கவனம் குறுக்க வந்து யாரும் - கேள்வி கேக்க போறாங்க -சிங்க கொடிதான் நான் - தூக்குவன் - அடுத்த கேள்வி என்ன எண்டு-! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் கருணானிதி மேல் எங்கள் ஆட்கள் பேசுவதை விட இங்கு அதிகமாக விமர்சனம் செய்ய பட்டுள்ளது. தனி தமிழ் நாடு கேள், ஹிந்தி கார்னின் அடிமை நாங்கள் என்ற தொணியில் எவ்வளவு கருத்து எழுத பட்ட்ளது , அது நீங்கள் அறியாத்த தலை??

---------------------------------------------------

உங்களது தலைவரைப்பற்றி இங்கு பேசியதாக பெரிதாக கிழிக்கிறீர்களே, ஏன் தற்ஸ்தமிழ்.கொம்மில் எங்களையும் எங்களது தலைமைத்துவத்தையும் பற்றி நீங்களெல்லொரும் ஒரு மிருகமாக மாறி கேவலமாகக் பேசியதெல்லாம் மறந்துவிட்டதா.

உன்னைத்திருத்து உலகம் தானாகத்திருந்தும் என்பார்கள். ஆனால் இங்கு இப்படிப்பேசிவிட்டு பின்பு கருத்து.கொம் மிலோ அல்லது தற்ஸ்தமிழ்.கொம்மிலோ போய் மாறி எழுதுவீர்கள் என்பதை நான் நெடுனாளாகவே கவனித்துத்தான் வருகிறேன். இங்கு கருணானிதி பற்றி எழுதிய தலைப்பை மாற்றச்சொன்னவர்களில் நானும் ஒருவன் அனால் இங்கு கிழிக்கிற நீங்கள் யாராவது ஒருனாளாவது அங்கு எழுதியிருப்பீர்களா நீங்கள் எழுதுவது பிழையென்று. அனால் நாம் எழுதினால் சும்மா பிச்சுக்கொன்டு நிற்கிறீர்கள் ஏன் இந்த இழினிலை. எனவே சும்ம வெட்டியாக எதும் சொல்லாமல் செய்துவிட்டு பின்பு நீங்கள் யார் என்று காட்டவும்.

இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினமான காரியம், உள்ளுர் போட்டியில் நன்றாக விளையாண்டால் தாம் இடம் கிடைக்கும். சில் ஆண்களுக்கு முன் சீராம், பதானி( வட நாட்டவர் தான், ஆனால் பிறந்து வளர்ந்து எல்லாம் சென்னையில்) ,குமரன் என்று பல பேர் இடம் பிடித்தனர்.ஆனால் சரியாக விளையாடாம்ல் நீக்க பட்டு விடுகின்றனர்.அமைதி படை சோகம் எனக்கும் தெரியும்.அது எதிர்பாரமல் நட்ந்தது. அமைதி படை காலத்தில் நானும் சிறுவன் தான். என்க்கு அது என்ன அக்கிரம் செய்த்தது என்று சில வருடங்களுக்கு முன்னர் தான் தெரியும்.இன்னும் பல பேருக்கு அமைதி படையின் இன்னொரு முகம் தெரியாது. :cry: :cry:

சில உதாரணங்கள் - இந்திய அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு

பாகிஸ்தானில் முதன் முதலாக இந்தியா அணி 2004ல் தான் முதலாவது டெஸ்ட் வென்றது.அதற்கு முன்பு நடந்த தொடர்களில் பாகிஸ்தானே வென்றது.ஆனால் 1989ல் நடைபெற்ற 4 டெஸ்டிலும் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தது. இந்தியா தோல்வியடையும் என எதிர்ப்பார்த்த இத்தொடர் சிறிகாந்தின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது. சிறிகாந் தலைமையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 1989ல் சென்று சிறப்பாக விளையாடியும், அடுத்துவந்த நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறிகாந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டு அசாருதீன் தலைமையில் இந்தியா அணி விளையாடியது.

வெங்கட்ராகவன் தலைமையில் 70 கடைசியில் பலம்பொருந்திய இங்கிலாந்துக்கு சென்ற அணி கடைசிப்போட்டியில் 420க்குமேல் ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5ம் நாளில் சிறப்பாக விளையாடி 7,8 ஒட்டங்கள் குறைவாக உள்ளபோது நேரம் காணாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்து. பலர் இத்தொடரில் இங்கிலாந்து அணி 5-0 ல் வெற்றி பெறும் என நினைக்க வெங்கட்ராகவனின் சிறப்பான தலைமையில் இந்தியா 1-0ல் தோல்வியடைந்தது. அடுத்த தொடரில் வெங்கட்ராகவன் அணியின் தலைமைப்பதவி பறிக்கப்பட்டு 12வது ஆளாக விளையாடினார்

  • தொடங்கியவர்

காவடி,

பாண்டியன் மற்றும் வர்ணன் எழுதிய கருத்துகளைப் பாருங்கள்... ஈழத்தமிழர்கள் மீது எனக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே போவதற்கு இவர்கள் தான் காரணம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி,

பாண்டியன் மற்றும் வர்ணன் எழுதிய கருத்துகளைப் பாருங்கள்... ஈழத்தமிழர்கள் மீது எனக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே போவதற்கு இவர்கள் தான் காரணம்.....

லக்கிலுக் நான் சொல்லியதில் என்ன பிழைகண்டுவிட்டீர். நான் சொன்னதெல்லாம் பொய் என்று உங்களால் கூற முடியுமா. தற்ஸ்தமிழ்.கொம்மில் திரிச்சி007 என்பவரும், சுத்தத் தமிழன் என்பவரும் இன்னும் நிறைய ஆட்கள் எழிதியவைகளை நீங்கள் வேண்டுமானால் மறைக்கலாம் ஆனால் எம்மைப்பற்றி எழுதியபடியால் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஏன் நீங்கள் எழுதவில்லை என்று உங்களால் கூற முடியுமா. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்கள் அனால் நாம் எழுதினால் உங்களுக்கு எங்களில் வெறுப்பு வருகிறதென்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. நீங்கள் செய்தவைகளையே சுட்டிக்காட்டினேன்.

பாண்டியன் அவர்கள் எழுதியினார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் அங்கேயே வாக்குவாதம் செய்ய வெண்டியது தானே !! இங்கு ஏன் அதை தேவை இல்லாமல் சொல்கீரீர்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி! ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்தி விடலாம் என முயல்கிறேன். பார்க்கலாம்! லக்கி பல முறை நீங்கள் தமிழ் ஈழவிடுதலைப்போராட்டத்திற்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாண்டியன் அவர்கள் எழுதியினார்கள் என்றால் நீங்கள் அவர்களிடம் அங்கேயே வாக்குவாதம் செய்ய வெண்டியது தானே !! இங்கு ஏன் அதை தேவை இல்லாமல் சொல்கீரீர்கள்???

அவர்கள் பாவித்த வசன நடைமுறைக்கு ஒரு சாதாரண மனிதனால் சாதாரண தோரணையில் பதில் எழு த முடியாது. ஏனெனில் அவர்கள் பாவித்தது கெட்ட வார்த்தைபிரயோகம். நான் அவர்களுடன் கெட்ட வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. இதுதான் காரணம். மற்றும்படி நான் யாரையும் வெறுப்படைய வைக்கவுமில்லை வைக்கவும் மாட்டேன்.

இதை நான் இங்கு சொல்வதற்கான காரணம் நீங்கள் அங்கு என்னவெல்லாமோ எழுதிவிட்டு இங்கு ஏதோ நாம்தான் பிழை செய்கிறொம் என்று சொன்னதற்காகவே.

பிழையை பிழை என்று ஏற்றுகொள்வதுதான் பன்பாடு. அது எங்கு நடந்தாலும் சரி

திரு பாண்டின் திருச்சி, சுத்த தமிழ்ர் அவர்காளும் புலி எதிர்ப்பு கருத்துகளை எழுதினாலும் கெட்ட வார்தைகளை உபயோக படுத்தி பார்த்ததில்லை. நீங்கள் சொல்வது தவறு, எனினும் அடுத்த ஒரு தளத்தை பற்றி இங்கு நாம் பேசுவது சரியாகாது

ஈழத் தமிழர்கள், சிங்கள கொடியை தூக்குவது மிகவும் தவறு, நாம் இலங்கை அரசுக்கு எதிராக போரடும்போது, சிங்கள அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால், விடுதலைப்புலிகள் தான் எமக்கு எதிராக போரடுகிறார்கள், ஆனால் தமிழ் மக்களோ, சிங்கள அரசை ஆதரிக்கறார்கள், இவற்றுக்கு ஆதாரம் எம்மவர்கள் கிரிக்கெட் விசரால், சிங்க கொடியை ஏந்திப்பிடிப்பதால் தான் கில்லாடி சிங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் தமக்கு சாதகம்மாக பயன்படுத்துகிறார்கள்.

சரியாகச் சொன்னீங்க அடிதடி 8)

இதுதான் எனது கருத்தும் :P

  • தொடங்கியவர்

பாண்டியன்,

நான் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழரையும் தட்ஸ்தமிழில் கேவலமாகப் பேசினேனா? அதற்கு ஏதாவது உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா?

சென்ற வாரம் கூட நான் புலிகள் தலைவரைப் பற்றி கருத்து.காமில் கருத்து தெரிவித்திருந்தேன்... இந்த லிங்கில் முதல் பக்கத்தில் கடைசியில் நான் பதிவு செய்திருக்கிற கருத்தைப் பாருங்கள்...

http://www.karuththu.com/forum/index.php?showtopic=480

சத்தியமாக சொல்லுகிறேன்... உங்கள் மோசமான அணுகுமுறை... நண்பன் யார் எதிரி யார் என்று கூட புரிந்துகொள்ள முடியாத அறியாமை தான் உங்களுக்கு நாடு கிடைக்க தாமதமாகும் காரணம்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்

தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், :lol: :lol:

ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

ஆமாம்.

அதில் பிரிதொரு தளத்தில் நடந்த பிரச்சனையை மனதில் வைத்து எழுதி விட்டதாக உணர்கின்றேன். அதற்காக வருந்துகின்றேன். சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!

இருக்க, ஈழப்பிரச்சனை தொடர்பாக அவர்கள் தெளிவான , எதிர்ப்பினை காட்டுகின்ற சந்தர்ப்பத்தை மன்னித்து அனுமதிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது குறித்து நீங்களே முடிவெடுங்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இப்படியான வாதங்கள் வைக்கப்பட்டால், அடிக்கு அடிதான் தீர்வு!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழரையும் தட்ஸ்தமிழில் கேவலமாகப் பேசினேனா? அதற்கு ஏதாவது உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாமா?

உண்மையில் நீங்கள் அப்பிடி பேசியிருக்க கூடாதென்பதே எனது விருப்பமும் கூட! பிரபாகரன் பற்றிய உங்கள் கருத்தினையும் பார்த்தேன். அதுமட்டுமின்றி யாழ் நுலக எரிப்பு தொடர்பான ஒரு பதிவினையும் பார்த்தேன். எனக்குப் புரிவதெல்லாம் உங்களை, உங்களின் நம்பிக்கைகளை, சீண்டும் போது பதிலுக்கு நீங்கள், உங்களுக்கு மனதளவில் உடன்பாடில்லாத விடயங்களை கூட திணித்து பதிலடி கொடுக்க வேண்டுமென்பதற்காக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். இங்கே யார் முதலில் ஆரம்பித்தது யார் இரண்டாவதாக ஆரம்பித்தது என்ற கேள்விகளை விட்டுவிடுவோம்.

நான் நம்மவரை கேட்பதெல்லாம் அவர்கள் இந்தியர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியராக உணர்வதும், நம்புவதும், அவர்களது விருப்பம். அதை உணர்ந்து கொள்ளுங்கள்.

லக்கி ! ஒரு இந்தியராக உங்களுக்கு அயலில் ஈழத்தவரின் நாடு ஒன்று அமைவது உங்களுக்கு மகிழ்ச்சி தானே!

  • தொடங்கியவர்

எனக்கு தெரிந்து எந்த இந்தியருக்கும் ஈழம் மலர்வதில் ஆட்சேபணை எதுவும் கிடையாது.... :lol::lol::lol:

திரு காவடி,

ஈழம் என்ற நாடு வருவதில் எமக்கு எல்லோருக்கும் மகிச்சியே !! எனக்கு உமது தலைவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் வன்முறை போக்கில் சில தலை முறை மாறி விட்டதில் தான் சோகம். நான் பழய விழங்களை மற்க்க விரும்புகிறேன்.

இதோ இதே பகுதியில் திரு தூயவன் அடிக்கு அடி என்ற போக்கில் எழுதுவதில் தான் வருத்தம். நாங்களாகவே இங்கு எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கவில்லை.

உங்களின் புரிந்துணார்வுக்கு நன்றி. உங்கள் வருத்தம்,சோகம், போராட்டம், உணர்சிகள் வங்காள விரிகுடாவின் மறுபக்கதுக்கு சரியாக கொண்டு சென்றால் உங்கள் ஆதர்வை பெருக்கலாம். அதை இதுவரை சரியாக செய்யவில்லை என்பது எனது எண்ணம்.அதோடு கர்நாடக காரன் அடித்தான் போன்ற உங்கள் பிர்ச்சனையோடும் எங்கள் பிர்ச்சனைகளை கொண்டு சேர்ப்பது எதிர்ப்பை உண்டாக்கும்.இந்த முகவிரியை பாருங்கள். இது தான் எங்கள் சந்தேகஙளுக்கு காரணம்.

http://www.dalitstan.org/tamil/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி லக்கி! இன்னமும் இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் இதனை ஏற்கவில்லை என்றாலும் ஓர் அரசினைத் தீர்மானிப்பது மக்களெ என்பதனால் மக்களின் விரும்பம், ஆசை அரசிலும் செல்வாக்கு செலுத்தும் என நம்புவோம்.

உண்மையில் இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவிகள் வழங்கப்போகிறதாம் என செய்திகள் வரும் போதெல்லாம் எமக்கு கோபத்திற்கு முன்பதாக வருவது ஏக்கம் தான். இந்தியா எதற்காக இப்படி செய்கிறது என்ற ஆதங்கம் தான்,

திரு காவடி

புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி

http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm

  • தொடங்கியவர்

இந்தியா இலங்கைக்கு எக்காலத்திலும் ஆயுத உதவி வழங்காது.... தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்.... அவர்கள் பெரும் போராட்டம் அறிவித்து ஸ்தம்பிக்க செய்ய மாட்டார்களா?

இந்தியர் மீதான ஈழத்தமிழரின் வெறுப்பு அர்த்தமற்றது என்பது என் கருத்து.....

நண்பர் ராஜாதி ராஜாவும் பல களங்களில் South_Indian என்ற பெயரில் ஈழத்தமிழருக்கு ஆதரவான கருத்துகளை வைப்பவர் தான்... அவர் ஏன் இங்கு ஈழத்தமிழரை கடுமையாக விமர்சிக்கிறார் என்றால் தூயவன் போன்ற இருநாட்டு மக்களின் நல்லிணக்கத்தை விரும்பாதவர்களால் தான்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.