Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்குள் சீனப் பொருளாதார கொலைகாரர்கள் ஆக்கிரமிப்பு- இந்தியா கடுமையான அதிருப்தி - டி.சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chaina%20kili%201%20copy_CI.jpg

இலங்கைக்குள் சீனப் பொருளாதார கொலைகாரர்கள் உட்புகுந்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். அரசாங்கம் நாட்டை சீனாவிடம் தாரைவார்த்துள்ளது. இதனால் இந்தியா கடுமையான அதிருப்திக்குள்ளாகியுள்ளது. இதனால் தெற்காசிய பிராந்தியத்தில் புதியதொரு பூகோள மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஹர்ஷ டி.சில்வா குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கலாநிதி ஹர்ஷ டி.சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைகத்தின் வடக்கு இறங்குதுறை விஸ்தரிப்பு திட்டம் மேர்சன்ட் நிறுவனம் மற்றும் உள்ளுர் நிறுவனமான எயிட்கன்ட் ஸ்பென்ஸ், துறைகங்கள் அதிகாரசபை இணைந்து மேற்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கமைய சீன நிறுவனத்திற்கு 80 வீத ப் பங்குகளும் எயிட்கன்ட் ஸபென்ஸ் நிறு வனத்திற்கு 30 வீதம் துறைமுகங்கள் அதிகாரசபைக்கு 20 வீதம் உறுதி செய்யப்பட்டதோடு 35 வருடங்களுக்கு குத்தகைக்கும் இணக்கம் காணப்பட்டது.

ஆனால் இன்று சீன நிறுவனம் அரசியல் ரீதியாகவும் வேறு வழிகளிலும் உள்ளுர் நிறுவனமான எயிட்கன்ட் ஸ்பென்ஸ் மீது அழுத்தங்களை பிரயோகித்ததால், அந்நிறுவனம் இவ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறியுள்ளது.

இதனால் 80 வீத பங்குடமை சீன நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதோடு 35 வருட காலம் இந்த இறங்குதுறையை நிர்வகிக்கும் அதிகாரம் கிடைத்துள்ளது.

இதுவா அரசாங்கம் தேசிய நிறுவனங்க ளுக்கு ஊக்கமளிக்கும் இலட்சணம். அதிகளவிலான இந்தியக் கப்பல்களே இவ் இறங்குதுறையூடாக பொருட்களை இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் அதன் நிர்வாகம் சீனாவிடம் 35 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இந்தியா அதனை பயன்படுத்தாது.

அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அனல் மின்நிலையம், வானுயர் கோபுரம் அமைக்கும் திட்டங்கள் உட்பட பெரும்பான்மையானவற்றை அரசாங்கம் சீனாவிடமே கையளித்துள்ளது. சீனாவின் பொருளாதாரக் கொலைக்காரர்கள் நாட்டுக்குள் புகுந்து ஆக்கிரமித்துள்ளனர்.

இத்திட்டங்களை எல்லாம் சீனா அன்பளிப்பாக செய்து கொடுப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் நான் பொறுப்பு டன் கூறுகிறேன். ஒரு சதமேனும் ஒரு டொலரேனும் சீனா அன்பளிப்பாக வழங்கவில்லை அனைத்தும் கடன் என்ற ரீதியிலேயே மேற்கொண்டுள்ளது. சீனாவுக்கு அனைத்தையும் வழங்கிவிட்டு கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தடுமாறும் அரசாங்கம் அனைத்தையும் சீன நிறுவனங்களுக்கே கையளிக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச நூலொன்றை எழுதியிருந்தார். மேற்குலகின் பொருளாதார அதிகாரம் இலங்கையின் தலைவிதியும் என்ற தலைப்பிலேயே அந் நூல் அமைந்துள்ளது. ஆனால் இன்று இது தலைகீழாக மாறியுள்ளது அதாவது சீனாவின் பொருளாதார அதிகாரம் இலங்கையின் தலைவிதியும் என்ற நிலையுருவாகியுள்ளது.

இந்தியா அதிருப்தி அரசாங்கம் துறைமுகங்களையும் நாட்டையும் சீனாவிடம் தாரைவார்த்துள்ளது. இதனால் இந்தியா கடுமையான அதிருப்தி கொண்டுள்ளது. அத்தோடு தெற்காசிய வலயத்தில் புதிய தொரு பூகோளமாற்றம் ஏற்பட்டுள்ளதோடு இவ் வலயத்தில் நெருக்கடிகள் தோன்றும் நிலைமையும் உருவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியின் பிரதிநிதிகள் கொழும்பு வந்துள்ளனர். கடன் வழங்கும் உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே அவர்கள் வருகை தந்துள்ளனர். ஆனால் ரூபாவின் பெறுமதி கீழிறங்கியுள்ளதால் இம்முறை நாணய நிதியத்தின் கடன் எமக்கு கிடைக் கப்போவதில்லை என கலாநிதி ஹர்ஷ டி.சில்வா குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

ஹர்ஷா சில்வா மகிந்த சிந்தனைக்கு மாறாக யோசித்தாலோ இல்லை கருத்துக்களை கூறினாலோ காணாமல் போகலாம்.

பேசாமல் தானும் 'அடிக்கக்கூடியதை' அடித்துக்கொண்டு ஓடுற வழியைப்பர்ப்பதே நன்று.

எதிர்க்கட்சியினர் பதவிக்கு வந்தாலும் சீனா அங்கு இருக்கும். அதற்கான தளங்களை சீனா அமைத்துவிட்டது.

மிகவும் சரியான விடயம்.

ஒரு சோகம் என்னவென்றால் இந்தியாவுடன் சீபா என்ற பொருளாதார உடன்படிக்கை வந்தபோது கூச்சலிட்ட ஒருவரும் இப்போ வாயை திறப்பதேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.