Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை

Featured Replies

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை -

தெரிவுக்குழுவிலேயே இறுதி முடிவு! கெஹலிய ரம்புக்வெல

பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இனநெருக்கடிக்கான இறுதி முடிவு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே எடுக்கப்படவேண்டியதாக இருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகின்றது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடரப்போவதில்லை எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு என ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடர்வதில் எந்தவிதமான தர்க்க ரீதியான நியாயமும் இருக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவால் முன்வைக்கப்படும் இறுதித் தீர்வை நடைமுறைப்படுத்துவதில் தனக்குள்ள உறுதிப்பாட்டை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்த ரம்புக்வெல, 13 வது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வாக்குறுதியளித்திருப்பது தொடர்பாகக் குறிப்பிட்டபோது, இதற்கு ஜனாதிபதி இசைவைத் தெரிவித்திருந்தாலும் இறுதி முடிவை பாராளுமன்றத் தெரிவுக்குழுவே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 17, 18, 19 ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இருந்தபோதிலும் இதில் பங்குகொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து இந்தப் பேச்சுக்கள் கைவிடப்பட்டன. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமது பெயர்ப் பட்டியலை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் அனைத்தையும் அரசாங்கம் கேட்டிருந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. என்பவற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை நிராகரித்திருப்பது அரசுக்குப் பெரும் சங்கடமான நிலையைக் கொடுத்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தது. அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடு தம்முடன் அரசாங்கம் ஏற்கனவே செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை மீறும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசுக்கும் தமக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களில் காணப்படும் உடன்படிக்கையை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைக்கும்போது தாமும் அதில் பங்குகொள்வதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

http://www.pongutham...2f-3418defc87e6

Edited by akootha

  • தொடங்கியவர்

அரச தரப்புக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சு?

தெரிவுக்குழுவுக்கான பெயர்களை வழங்கியதாகவும் சந்தேகம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று இரா.சம்பந்தன் அரச தரப்பினடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் 27ஆம் திகதிக்கு முந்திய தினமாகிய 26ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதுவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகிய இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தனின் நெருங்கிய சகாவாக கருதப்படுகின்ற சுமந்திரன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இலங்கை வந்திருந்த போதிலும், அவருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் கூட தெரிவிக்காமல், இரா.சம்பந்தன் மிகவும் இரகசியமாக அரசாங்கத்தரப்புடனான சந்திப்பை நடத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது.

இத்தகைய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுபற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டபொழுது தனிப்பட்ட முறையில் இரா. சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார் என்பது தெரிந்ததே.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் இல்லையேல் அதில் கலந்து கொள்ள முடியாதென்று இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தான் அழுத்தம் திருத்தமாகக் கூறியதாகவும் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அப்போது தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தடைப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதம் நடைபெறவிருந்த சமயத்தில், அரசாங்கத்தை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரகசிய சந்திப்பு நடைபெற்றிருந்தது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்: வீரகேசரி

பிரசுரித்த நாள்: Jan 30, 2012 1:53:22 GMT

Edited by akootha

வீரகேசரியும் சில சமயம் நிச்சயப்படுத்த படாத செய்திகளை வெளியிடுகிறது.

பெயர்களை சம்பந்தர் கொடுத்திருந்தால் மிகுதி என்ன செய்ய வேண்டும் அரசுக்கு என்பது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை -

தெரிவுக்குழுவிலேயே இறுதி முடிவு! கெஹலிய ரம்புக்வெல

பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இனநெருக்கடிக்கான இறுதி முடிவு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே எடுக்கப்படவேண்டியதாக இருப்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகின்றது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களைத் தொடரப்போவதில்லை எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

http://www.pongutham...2f-3418defc87e6

அரசாங்கத்திற்கே விளங்கி விட்டது!

கூட்டணி தான் இன்னும் தூங்குகின்றது போலும்! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.