Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் மூன்று உயர்மட்டத் தூதுவர்களை கொழும்புக்கு அனுப்புகிறது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அமெரிக்கா அதற்கிடையில் மூன்று உயர்மட்டத் தூதுவர்களைக் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலர் மேரி ஒரேரோ, மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஆகியோர் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் தலைவர்களுக்கு ஜெனிவா தீர்மானத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விக்கமளிக்கவுள்ளனர்.

ஆனால் இத்தகைய நகர்வை எந்தவொரு அரசாங்கமும் தடுக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வரும் 27ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை வொசிங்டனுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்று சிறிலங்காவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறுமாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சிறிலங்கா அதிபர் கேட்டுள்ளார்.

அதேவேளை, நாளை கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

வரும் 11ம் நாள் வரை சிறிலங்காவினல் தங்கியிருக்கும் அவர், சிறிலங்கா அரசினது பல்வேறு அதிகாரிகள் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

http://www.saritham.com/?p=49717

ஒருபக்கம் குழுக்களை அனுப்புகின்றது, மறுபக்கம் உள்நாட்டில் 'பேய்க்காட்டலை' செய்கிறது.

யாழ்.குடாநாட்டுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் 100 பேர் வருகை

இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இலங்கோவன் தெரிவித்தார்.

யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது, வடமாகாணத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இக்குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய வடாமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, வடக்கின் வசந்தம் அபிவிருத்தியில் வட மாகாணம் துரிதகதியில் அபிவிருத்தியடைந்து வருகிறது.

கடந்த 30 வருடகாலத்திற்குப் பின்பு நீங்கள் யாழ்.மண்ணில் கால்வைக்கக் கூடிய வசதியை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். வடமாகாணம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தியை நோக்கிய பாதையில் சென்றுகொண்டு இருகிறது.

மக்களின் அமைதியான வாழ்வுக்கு அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது என குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது, யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோ, வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirr...5489--100-.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் குழுக்களை அனுப்புகின்றது, மறுபக்கம் உள்நாட்டில் 'பேய்க்காட்டலை' செய்கிறது.

இச்சந்திப்பின்போது, யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோ, வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்தனையும் தமிழர்கள்

இந்தப்பெண்களை வைத்து சிங்களம் நன்றாக ஆடுகின்றது பல நாடகங்களை :rolleyes:

இச்சந்திப்பின்போது, யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோ, வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நூலகசாலை சிங்கள இனவாதத்தால் இடிக்கப்பட்டது என்ற உண்மை இந்த இராசதந்திரிகளுக்கு இந்த பெண்மணிகளால் கூறப்பட்டிருக்கவேண்டும். அதைவிட இன்றும் மறுக்கப்படும் சுதந்திரத்தையும் மக்களை சுற்றிவரும் நாற்பதினாயிரம் சிங்கள இராணுவத்தையும் பற்றி இந்த பெண்மணிகள் கூறியிருக்கவேண்டும், ஆனால் அவர்கள் அதைசெய்திருக்கமாட்டர்கள் என திடமாக நம்பலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களையும் பிழை சொல்லிக்கொள்ள எம்மிடமெதுவுமில்லை.

புலம்பெயர்மக்களால் ஒரு தெம்பையும் அடுத்தகட்ட நகர்வுகளில் வளர்ச்சியையும் நீங்களும் ஏதாவது சொன்னால் பயன் ஏற்படும் என்கின்ற நிலைமையை நாம் கொண்டு வரும்வரை....

இதில் மேற்குலக இராசதந்திரிகள் கலந்துகொண்டதாக தெரியவில்லை. Wind and Dine என்பதற்கமைய இந்த நூறுபேரையும் அழைத்து அவர்களுக்கு இறாலையும் மாம்பழத்தையும் கொடுத்து உங்கள் நாட்டுக்கு கூறுங்கள் இங்கு மக்கள் வளமாக வாழ்கின்றனர் எங்களால் (யார் அவர்களை கொலை செய்தார்களோ அவர்காளால்)

56(2).jpg

0(119).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.