Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா துரோகி என்றால் பசில் ராஜபக்சவும் துரோகியா ? சண்டேலீடர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா துரோகி என்றால் பசில் ராஜபக்சவும் துரோகியா ? சண்டேலீடர்!

resize_20120204211211.jpg

இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக குழு ஒன்றை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள இந்தநிலையில் யார் துரோகி என்ற தலைப்பில் சண்டே லீடர் செய்திதாள் இன்று செய்தி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டனின் அழைப்பை ஏற்றுள்ள அரசாங்கம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸுடன் குழு ஒன்றை அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள இந்தநிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் அமைச்சர் டியூ குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்துரைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தில் அமெரிக்கா அரசாங்கத்துடன் இணங்கிச் செல்வது என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர வேறு வழியில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக சண்டேலீடர் தெரிவித்துள்ளது.

இதன்போது அமெரிக்கா 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதில், திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் கொலை செய்யப்பட்டமை ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஐந்து மாணவர்களையும் விசேட அதிரடிப்படையினரே கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்

எனினும் துப்பாக்கி சன்னங்கள் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அது விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்திய சன்னங்கள் அல்ல என்று தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

எனவே இந்த சம்பவம் குறித்த நிபுணர்கள்pன் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் யார் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டுக்கு எதிரான துரோகிகள், டொலர்களுக்காக இந்த தகவல்களை அமரிக்காவுக்கு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த இடத்தில் துரோகி யார் என்று சண்டேலீடர் கேள்வி எழுப்பியுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக்கை சந்தித்தபோது விசேட அதிரடிப்படையினரே ஐந்து மாணவர்களை கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்ததாக விக்கீலீக்ஸ் கசியவிட்டுள்ள செய்தியை இந்த இடத்தில் சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கையின் தரைப்படையினருக்கு மனித உரிமைகள் குறித்து தெளிவுகள் உள்ளன எனினும் கடற்படையினரே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ச, ரொபட் ஓ பிளெக்கிடம் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனிடம், இலங்கையின் அதிகாரிகள், தமது மகன் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் என்று எழுதிய ஆவணத்தில் கையெழுத்திட்டால் மாத்திரமே அவரது மகனின் சடலத்தை ஒப்படைக்க முடியும் என்று அச்சுறுத்தியதை சண்டேலீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி கூறிய கருத்துக்கள் பொய்யானவை. அவர் ஒரு பொய்யர், துரோகி என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிபிசி ஹாட் டோக் நிகழ்ச்சியில் கூறியதை சண்டேலீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குழு அமெரிக்கா சென்று அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு குறித்து விளக்கமளிக்கும் போது வீக்கிலீக்ஸின் தகவல்களின்படி, பசில் ராஜபக்ஷ ஒரு பொய்யர். அவர் ஒரு துரோகி அவரை தூக்கிலிட வேண்டும் என்று கூறுமா? என்று சண்டேலீடர் கேள்வி எழுப்பியுள்ளது.

http://www.thedipaar.com/news/news.php?id=40827

அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி கூறிய கருத்துக்கள் பொய்யானவை. அவர் ஒரு பொய்யர், துரோகி என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பிபிசி ஹாட் டோக் நிகழ்ச்சியில் கூறியதை சண்டேலீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குழு அமெரிக்கா சென்று அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு குறித்து விளக்கமளிக்கும் போது வீக்கிலீக்ஸின் தகவல்களின்படி, பசில் ராஜபக்ஷ ஒரு பொய்யர். அவர் ஒரு துரோகி அவரை தூக்கிலிட வேண்டும் என்று கூறுமா? என்று சண்டேலீடர் கேள்வி எழுப்பியுள்ளது.

மகிந்தாவும் பசிலும் தாங்கள் தப்ப கோத்தாவை மாட்டி விடமுதல், கோத்தா முந்திக்கொள்ளுவதே புத்திசாலித்தனமானது :rolleyes:

சண்டே லீடரிடம் ஒரு கலண்டர் இல்லை அதனால்த்தான் விசையங்களை முன் பின்னால் போட்டு குழப்புகிறது.

இது பிளேக் பதவிக்கு வந்த காலம். அவர் விசையம் தெரியாமல் ராசாங்க அமைச்சுக்கு பாக்ஸ்சை அனுப்பிப்போட்டார். அதாவது அந்த நேரம் தான் அமெரிக்கா இராணுவத்திற்கு மனித உரிமைகளை மதிப்பதற்கு வகுப்புகள் நடத்தியது (அந்த பேரில்த்தான் இராணுவ உதவிகளைப் பிளெக் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார்). பசில் ராணுவம் செய்தாக பொதுவாக ஒத்து கொள்ள முடியாது. எனவே அமெரிக்கா சம்பந்த படாத கடல்ப் படைதான் செய்ததாக கூறினார். இதனால் ரொபேட் பிளேக்கிக்கும் தொடர்ந்து அமெரிக்க உதவிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. பிளேக் இது மேல் இடத்து உத்தரவின் பிரகாரம் செய்யப் பட்டது என்ற உண்மையை மறைத்து யாரோ ஊர் பேர் தெரியாத கடற்படை உறுப்பினர்கள் மீது பாரதை போட்டு தந்தி அனுப்பி ராசபக்சா குடும்பத்தை காப்பாத்தினார்.

ஆரம்பத்தில் பிரான்சிய அரசாங்கம் இதில் விசாரணை வேண்டும் என்று கூறியது யாரின் தலையீட்டால் அதை முழுதாக கைவிட்டதோ தெரியாது. பிரான்சிலாய் இருந்திருந்தால் இந்த மனித நேயம் கடமையில் இறந்தவர்களுக்கு பணம் கட்டியிருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் பரராசசிங்கம், கதிர்காமர், திரிகோணமலை ஐவர், ரவிராஜ் போன்றொரின் மரணத்தை இலங்கை அரசு கட்டாயம் விசாரிக்க வேண்டும் எனத் தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் காண முயலாமல் பாரிய உதவிகளை கடல்ப் படைக்கு செய்து கப்பல்களை காட்டி கொடுத்தது பிளேக்கின் அரசாங்கம். பிளெக் இந்த நொண்டிச் சாட்டை அனுப்பிய பின்னாவது கடல் படைக்கு அமெரிக்கா உதவக்கூடாது என்று பரிந்துரைத்ததாக ஒரு தந்தியும் இதுவரையில் வெளிவரவில்லை.

ஆகவும் பசில் இதை பிளெக்கிடம் கூறினாரா அல்லது இந்த நொண்டிச்சாடை அவரே இட்டுக்கட்டி செய்தி அனுப்பினரா தெரியாது. சண்டே லீடர் எல்லாவற்றையும் ஆராய்ந்து, பொன்சேக்காவா, பலிலா அல்லது பிளெக்கா பொய்யர் என்பதை கண்டு பிடித்து எழுதட்டும்.

சுதந்திர தினம் வந்து போய்விட்டது. பத்திரிகைகள் பொன்சேக்க விடையத்தில் போட்ட ஆரூடத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாது. பொன்சாகாவை விடுவிப்பது சம்பந்தமாக அரசோ பொன்சேக்க பக்கமோ பெப்பிரவரி 4ம் திகதி எதுவும் பேசவில்லை. அரசாங்கம் அமெரிக்கா எப்படியும் தனக்கு எதிராகப் போகலாம் என்பதால் விடுவிக்க இல்லையா, அல்லது பீரிசின் வாசிங்டன் பேச்சு வார்த்தைகளுக்கு பாவிக்கலாம் என்பதால் விட வில்லையா, அல்லது தம்மைத்தான் விளம்பரப்படுத்த பத்திரிகைகள் இதை எழுதினவா தெரியாது.

Edited by மல்லையூரான்

ஆகவும் பசில் இதை பிளெக்கிடம் கூறினாரா அல்லது இந்த நொண்டிச்சாடை அவரே இட்டுக்கட்டி செய்தி அனுப்பினரா தெரியாது. சண்டே லீடர் எல்லாவற்றையும் ஆராய்ந்து, பொன்சேக்காவா, பலிலா அல்லது பிளெக்கா பொய்யர் என்பதை கண்டு பிடித்து எழுதட்டும்.

பசில் மௌனம் சாதிப்பது விக்கிலீக்ஸ் கூற்றை உண்மை என ஏற்றுக்கொள்ளுவதாக எண்ணலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.