Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசைக் கவிழ்க்க வல்லரசுகள் மறைமுக சூழ்ச்சி செய்கின்றனவாம்!அனுமதிக்கமாட்டோம் என்கிறார் பிரதமர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DM-jayaratne_150.gif

நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து - கலவரங்களை உண்டபண்ணி பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதுதே வல்லரசு நாடுகளின் நோக்கம். இத்தகையதொரு நிலையையே இலங்கையிலும் ஏற்படுத்தி அரசைக் கவிழ்ப்பதற்குச் சில நாடுகள் மறை முகமாகச்சூழ்ச்சி செய்துவருகின்றன. இதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பலம் எம்மிடம் உள்ளது எனப் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சகல பாகங்களிலும் தமிழ் மக்கள் வசிக்கின்றார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் வசிக்கின்ற குறிப்பிட்ட சிலரே தனிநாடு கோருகின்றார்களெனவும் அவர் கூறியுள்ளார். மருதானை சாஹிராக் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் மீலாத் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அதனை முறையாகப் பின்பற்ற வேண்டும். அத்துடன், ஏனையமதத்தையும் அதனைச் சார்ந்தவர்களையும் மதிக்க வேண்டும். அதன் போதே குரோதங்களற்ற ஐக்கியமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். எந்த மதத்தவர்களையும் அவர்களது கலை, கலாசார விழு மியங்களையும் மதிக்கும் உயர்வான குணம்கொண்டவரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,

மதங்களினூடாக நாம் ஐக்கியப்படுகிறோம். மாறாகப் பிளவுபடவில்லை. இன்று உலகளாவிய ரீதியில் பார்க்கின்ற போது பெரும் அழிவுகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக மாலைதீவு போன்ற நாடுகளில் இடம்பெறுகின்ற பிரச்சினைகளைக் குறிப்பிடலாம்.

ஆனால், இலங்கையில் புரையோடிப்போயிருந்த போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு தற்போது அமைதியானதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நாடுகளில் வல்லரசு நாடுகள் கலவரங்களை ஏற்படுத்தி அங்கே பிரிவினைவாதங்ளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான ஒரு நிலைமையை இலங்கையிலும் தோற்றுவிக்க சூழ்ச்சிகள் மேற்கொள்ளப் படுவதை நாம் காண்கின்றோம். அதற்கு இடம்கொடுக்காது எமது தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டு நாம் ஐக்கியமாக வாழ்வதற்கான சூழ்நிலையை தோற்றுவிப்பதே எமது நோக்கம் என்றார் அவர்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில்லாத சூழ்நிலை இருந்தால் அமைதியேற்பட்டது என்ற அர்த்தம் கிடையாது போர் ஏன் எங்பட்டது என்றதுக்கான காரணத்தை நிவர்த்தி செய்யவில்லை. தமிழர்களது உரிமையும் உடமையும் பறிக்கப்பட்டகு;கொண்டே இருக்கின்றது. தமிழர்கள் வாழும் பகுதி இராணுவக்கட்டுப்பாடடிற்குள் தான் இருக்கின்றது. அவர்களால் சுதந்திரமாகக்கூட நடமாடமுடிவதில்லை. ஈதை வைத்துக்கொண்டு எப்படி அமைதியான நாடு என்று சொல்லமுடியும. போரின்போது புலிகளை அழித்தபின் செய்வோம் என்று உறுதிளித்து வெளிநாடுகளிடம்உதவி பெறப்பட்டது. உறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ராஜபக்ஸவும் சிங்களமும் தமிழர்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றியது போல் சர்வதேசத்தையும் ஏமாற்றி அந்தக்காலத்தில் தமிழனை முற்றாக அழித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகின்றது. சீனாவைக் கொண்டு வந்து வைத்தது ஏதோ இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பாதுகாப் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இருந்தாலும் தமிழர்களுக்கான உரிமைத்தீர்வு வழங்கப்படாவிடத்து ராஜபக்ஷ பிரச்சனைக்கு முகம் கொடுத்தாகவேண்டும். தவிர்க்கமுடியாது. இல்ஙகையிலி ஒட்டு மொத்த தமிழர்கள் அழிக்கப்பட்டாலும் இலங்கைத்தழிழர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள் என்பதை மறந்து இலங்கை அரசு செயற்படுகின்றது. சீன வல்லரசை எதிர்த்து எந்த வல்லரசும் வராது என்ற எண்ணம் புரையோhடினாலும, இன்று வல்லரசுக்சூட்டுச்சதி என்று ஒன்று உள்ளது. ஒரு வல்லரசை இன்னொரு இடத்தில் இருந்து அகற்ற மற்மைய இருவல்லரசுகள் ஒன்று சேருகின்றன. அந்த வகையில் இலங்கையும் தாக்கத்தை வெகுவிரைவாக எதிர்கொள்ளப்போகின்றது. அதற்கான கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழர்கள் எதிர்பார்ப்பதுபோர் போர்குற்ற விசாரணை என்பது சந்திக்கு வராது. ஏனெனில் சர்வதேசமும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தது. இறுதியில் ராஜகபக்ஷ அகற்றப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் அதுதான்நடைபெறும். ராஜபக்ஷ எங்காவது தஞ்சமடையவேண்டிவரும். அல்லது கைதுசெய்யப்படுவார்.

சிங்கள இனவாதத்தை தக்க வைக்க இவ்வாறான கூற்றுக்களை கூறி தம்மை தக்கவைக்க வேண்டியது இந்த தலைமைகளின் இருப்பிற்கு தேவை. ஆனால், இந்தக்கருத்துக்கள் ஒரு நாள் மக்களுக்கு புளித்துப்போகும். பின்னர்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கபூர் ரோகன் ஜெனோசைட் குணரத்ன கூட தான் இப்போது ராஜபக்சே அரசை கவிழ்க்க திட்டம் போடுறான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.