Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தெரிவுக் குழு-தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tna-leaders-100x90.jpg

சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தீர்வு காணப்பட வேண்டிய சில விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பது என்கின்ற தனது முன்னைய நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது போல் தெரிகின்றது.

அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் இருவரின் சிறிலங்காப் பயணமானது கூட்டமைப்பின் இம்மாற்றத்தில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கலாம், என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மளித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஓட்ரேரா ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவைச் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த இந்நிலையிலேயே கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் முதலில் சந்திப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது தொடர்பில் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். சிறிலங்கா அரச அதிகாரிகளுடனேயே அமெரிக்கப் பிரதிநிதிகள் முதற் சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் தொடர்புகொண்ட போது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளதால், அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகள் எம்முடன் முதலில் பேச்சுக்களை நடாத்துது சரியானதே. எமது தரப்பால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, அமெரிக்கப் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத் தரப்பிடம் எடுத்துக் கூறவேண்டும். ஆகவே இந்நிலையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் எமது பிரதிநிதிகளையே முதலில் சந்திக்க வேண்டும்” எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வகிப்பதில்லை என்கின்ற தனது நிலைப்பாட்டை கூட்டமைப்பானது தளர்த்தியுள்ளதா என பிறேமச்சந்திரனிடம் வினவியபோது, “ஏன் நாங்கள் எமது உறுதியான நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ள வேண்டும்?” என அவர் வினவியதுடன், “நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன் எமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு முதல் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தி உடன்பாடொன்றை எட்டிக்கொள்ள வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தைக் கோரியுள்ளோம். ஆனால் இது தொடர்பில் பேச்சுக்களை நடாத்துவதென அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது ஜனவரி 17,18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பேச்சுக்களை நடாத்துவதென அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட போதும் எம்முடன் பேச்சுக்களை நடாத்துவதை தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் தவிர்த்து வருவதுடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்குமாறும் எமக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாம் எமது எமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றோம்” எனவும் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

THE NATION

http://www.saritham.com/?p=50508

பதவிகளுக்காக எலும்புத்துண்டை நக்கத் துடிக்கும் சுமந்திரன் போன்றவர்களை சம்பந்தன் இணைத்திருப்பது இருவருக்கும் ஆரோக்கியமில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.thehindu.com/news/international/article2889920.ece

The U.S. announced the “successful” completion of talks between the government of Sri Lanka and the Tamil National Alliance, an umbrella organisation of Tamil parties that represents Tamils of the Northern Province. “

The U.S. supports the successful conclusion of the current dialogue between the government of Sri Lanka, and the Tamil National Alliance. And, from talking to both sides, we understand that they are not really far apart. So we hope that the dialogue can resume and can reach a successful conclusion, and then, whatever is agreed, can be discussed… in the Parliamentary Select Committee (PSC),” he said when asked if the continuation of the government- TNA talks meant that the PSC was redundant

இணைவது என்றாலும் ஐ.நா. தொடர் முடிந்த பின்னர்தான் அதை உத்தியோகபூர்வமாக இல்லை இரகசியமாக என்றாலும் வெளியில் கூறவேண்டும்.

இல்லையேல் சிங்களம் தமிழர் தரப்பு தீர்வுக்கு 'ஓம் என்று கூறிவிட்டது' என்று அங்கு வைத்து அறிவித்துவிடும். மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறிய கதையாகிவிடும் எமது நிலை :wub:

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிவுக்குழு விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு [ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] blake-ottero-2012.jpgசிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தும் விடயத்திலும், தெரிவுக்குழு விவகாரத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுட்ன் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைத்து ஆராயலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகிறது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ தெரிவுக்குழு மூலமே எந்தவொரு தீர்வுத்திட்டம் குறித்தும் பேசமுடியும் என்று கூறியுள்ளதுடன், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காதவரை அவர்களுடன் பேசப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.

இந்தநிலையில், முதலில் சிறிலங்கா அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை தெரிவுக்குழு முன்வைத்து ஆராய்வதே பொருத்தமானது என்று அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.

நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்,

“சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும்.“ என்று கூறியுள்ளார்.

அத்துடன் “சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள் நல்லமுறையில் நிறைவுபெற அமெரிக்கா உதவும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும்.“ என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆதரவு, சிறிலங்கா அரசுக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.http://www.puthinappalakai.com/view.php?20120214105578..

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.