Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

Featured Replies

மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-25 09:04:24| யாழ்ப்பாணம்]

மனித வாழ்வில் பணமும் பதவியுமே ‘கோடி’ பெறுமதியயன்று நினைப்பவர்கள் ஏராளம். இத் தகைய நினைப்புடையவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் எதையும் இழக்கத் தயங்க மாட்டார்கள். இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்காத விடத்து நிலைமை மிகவும் மோசமாக மாறி விடும். பதவியையும். பணத்தையும் உயர்வாக மதிக்கின்றவர்களிடம் பண்பை எதிர்பார்ப்பது முடியாத காரியம்.

அவர்கள் இலக்கை அடைவதற்காக காலிலும் விழுவார்கள். சாதித்துவிட்டால் காலை வாரியும் விடுவார்கள். இத்தகையவர்களுக்காக தமிழ் மூதாட்டி ஔவைப்பிராட்டி அருமையாக அறிவுரை கூறியுள்ளார். அன்புக்குரிய மாந்தர்களே! பணமும் பதவியுமே கோடி பெறுமதியயன்று நினைத்துவிடாதீர்கள் ‘மதியாதார் முற்றம் மதித்தொருகால் மிதியாமை கோடிபெறும்’ என்றார். மானமுள்ள மனிதர்களுக்கு ஔவை கூறிய இந்தவார் த்தை மிகவும் காத்திரமானது.

ஔவை கூறியதை இப்போது எதற்காக கூறுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் சவேந்திர சில்வா படும் மரியாதைக் கேட்டை பார்த்தபின்னர்தான். மானமுள்ளவர்களுக்கு ஔவை கூறிய தத்துவத்தை எண்ணிப் பார்த்தேன். மானமுள்ளவர்கள் தேவையான இடத்தில் தங்களுக்குக் கிடைத்த பதவிகளையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். சில இடங்களில் பதவியில் இருப்பதை விட, பதவியை தூக்கியயறிவதுதான் கோடி மதிப்பைக் கொடுக்கும். எனினும் இந்த உண்மை சவேந்திர சில்வாவுக்கு புரியவேயில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுவுக்கு சவேந்திர சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் வன்னிப் போரில் ஒரு படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா போர்க்குற்றம் புரிந்தவர். எனவே அவரை ஐ.நா. சபையின் அமைதிப்படை யின் ஆலோசனைக் குழுவில் சேர்க்கக் கூடாது என மனிதவுரிமை அமைப்புகள் முதல் பல்வேறு பொது அமைப்புகள் வரை கோரிக்கை விட்டிருந்தன. இந்த நிலையில் சவேந்திர சில்வாமானமுள்ளவராக இருந்தால் தனக்குத் தரப்பட்ட பதவியைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

அவ்வாறு அவர் செய்திருப்பராயின் அது இலங்கை நாட்டவர்களுக்கே கெளரவமாக இருந்திருக்கும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. சவேந்திரசில்வா தனக்கு வழங்கப்பட்ட பதவியைத் தூக்கி எறிந்திருப்பாராயின் அவரைப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியவர் கள் கூட சவேந்திர சில்வா மானமுள்ளவர் என்று மனதளவிலேனும் எண்ணியிருப்பர். இப்போது ஐ.நா. சபை அமைதிப்படையின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபற்ற சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்னுந்தான் சவேந்திர சில்வாவுக்கு மானம், ரோசம் வரவில்லை. அட! ஐயா! இனியா வது பதவியை தூக்கி எறி என்று அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல ஆவது கூறியிருக்கலாம். என்ன செய்வது! ரோசம் கெட்டவன் இராசா விலும் பெரியவன் என்ற தத்துவம் இலங்கையில் தாராளமாக கோலோச்சுகிறது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.